சென்ற வாரக் கடைசியில் நான் ஆர்டர் செய்திருந்த சிலேட்டுக் கணினி வந்துசேர்ந்தது. நான் ஆர்டர் செய்தது Ebay-யில், game_mastr என்ற வியாபாரியிடமிருந்து. முன்னர் பெயர் குறிப்பிடாததன் காரணம், பொருள் எப்படி இருக்கும், கைக்கு வந்து சேருமா என்று தெரியாததால். வந்து சேர்ந்ததனால், இப்போது சுட்டி... குறிப்பிட்ட காலத்துக்கு முன்னமேயே வந்து சேர்ந்தது. இது ஒரு சீனத் தயாரிப்பு. விலை ரூ. 6,990/- தபால் செலவு இலவசம்.
ஆண்டிராய்ட் புரிபட கொஞ்சம் காலமானது. சாம்சங் போன்றவர்கள் நேற்று 38,000 ரூபாயில் டேப்ளட் பிசி வெளியிட, இந்த 7,000 ரூபாய் சமாசாரத்தில் என்ன கிடைக்கும் என்று சிலர் நினைக்கலாம். என் கருத்தில் போட்ட பணத்துக்கு நன்றாகவே உழைக்கிறது.
wifi இணைய இணைப்பு உள்ளது. எனவே இதைக்கொண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் வேலை செய்யமுடிகிறது. ஈதர்நெட் இணைப்பும் உண்டு.
கருவியுடன் வந்த உலாவியில் இணையத்தளங்கள் அனைத்துக்கும் செல்ல முடிகிறது. ஆண்டிராய்ட் 1.6 தான் உள்ளது. அதனால் பிளாஷ் வேலை செய்வதில்லை. ஜாவா வேலை செய்யாது. ஆனாலும் பொதுவாக நான் போகும் அனைத்து ஆங்கிலத் தளங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆபரா போன்ற உலாவியை இன்னும் இதில் நிறுவிப் பார்க்கவில்லை.
யூட்யூப் வேலை செய்ய தனியான ஒரு செயலியை நிறுவவேண்டும் - ஆப் ஸ்டோரில் youtube என்று தேடினால் கிடைக்கிறது. அதில் யூட்யூப் வீடியோ சிறப்பாகவே செயல்படுகிறது. அவ்வப்போது செயலி அப்பீட்டாகி வெளியேறிவிடுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாக பெர்ஃபார்மன்ஸ் மிகத் தேவலாம். ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் பிரச்னையே இல்லை. கூகிளின் பொதுவான தேடல், விக்கிபீடியா எல்லாம் சுபம்.
தமிழ் - இப்போதைக்கு கட்டம் கட்டம்தான்.
3ஜி என்று சொன்னார்கள். ஆனால் அதை எப்படி இயங்கவைப்பது என்றெல்லாம் தெரியவில்லை. அதைப் பின்னர்தான் பார்க்கவேண்டும்.
சில படங்கள்:
அகலவாட்டில் படிப்பது சுலபம்.
ஆனால், சிலேட்டைத் திருப்பினால் தானாகவே திரை நேராகிக்கொள்கிறது. படங்கள் இல்லாத, எழுத்து அதிகம் இருக்கும் தளங்களைப் படிக்க இந்த வாட்டம் உதவியாக இருக்கும்.
கணினித் திரை...
பின்பக்கம். எந்த நிறுவனம் என்ற பிராண்ட் பெயர் எதுவும் கிடையாது.
ஆஃப் செய்தபின்.
ஒரு கிரவுன் 1/8 புத்தகத்தைவிடச் சற்றே அகலமும் உயரமும் அதிகம்.
யூட்யூப் வீடியோ.
காதுகளில் மாட்டிக்கொள்ள இயர் ஃபோன் ஜாக் உள்ளது. இயர் ஃபோன் நீங்கள்தான் தனியாக வாங்கிக்கொள்ளவேண்டும்.
பேட்டரி சுமார்தான். சீக்கிரமே போய்விடுகிறது. அவ்வப்போது சார்ஜ் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
இன்னும் நான் செய்யவேண்டியது ஒரு நல்ல பிடிஎஃப் ரீடரைத் தேடுவதுதான். அது கிடைத்துவிட்டால் பி.டி.எஃப் வடிவிலான தமிழ், ஆங்கில ‘மின் புத்தகங்கள்’ படிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் நல்ல ரீடர் ஏதும் கிடைக்கவில்லை. (ஆண்டிராய்ட் 1.6 என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனை 2.1 வெர்ஷனுக்கு மாற்றுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம். எனவே இப்போதைக்கு அதில் நான் இறங்கப்போவதில்லை.)
Good read. I have used Aldiko eBook Reader in my Android 1.6 mobile. It is very good. You may try: http://www.aldiko.com/
ReplyDeleteபத்ரி - நான் இதை இன்னும் பார்க்கவில்லை. நான் ஆப்பிள் ஐபேட் வைத்திருக்கிறேன். இரண்டையும் பார்த்த என் நண்பியை இது கவரவில்லை ($455-ஐபேட் vs $150-சைனா ஐபெட் அல்லது அ-பேட் விலை வித்தியாசம் இருந்தபோதும்). முக்கிய காரணம் 128 MB RAM. விடியோ பார்க்க இது திணறுகிறது என்று சொன்னா ள். 3-ஜி சரியாக வேலை செய்வதில்லை என்பதும்; அடிக்கடி தொடர்பு அறுந்துபோகிறதா ம். ஆண்ட்ராய்ட் 1.5 குப்பை (செல்பேசியில் இயக்கிப் பார்த்திருக்கிறேன்). ஆனால் 2.05 பரவாயில்லை. இருந்தபோதும் காமெரா, 3ஜி (ஆபத்திற்கு உதவும்), ஆப்பிளிடம் கைகட்டி நிற்கத் தேவையின்மை, இதெல்லாம் இதன் சாதகங்களாகத் தோன்றுகின்றன. என் பையனுக்கு கிறிஸ்துமஸ்க்கு வாங்கிக் கொடுக்கலாமா என யோசிக்கிறேன்.
ReplyDeleteIf you can do something to upgrade Android OS to 2.x it should be definitely worth it. - Venkat
தட்டு கணினி அறிமுகம் அருமை.
ReplyDeletethanks for the follow-up update
ReplyDeleteஈபேயில் இதை 4500 ரேஞ்சில் கூட சில மாதங்கள் முன் பார்த்தேனே...?
ReplyDeleteநானும் ஒரு காரியம் செய்திருந்தேன். ரூ. 1200க்கு ஒரு நெட்புக் வாங்கினேன். யூட்யூப் எல்லாம் இன்பில்ட் சப்போர்ட்டுடன் இருக்கிறது இந்த ஆசஸ் நெட்புக். WIFI, எதர்நெட் இரண்டிலுமே இணையத்தைப் பார்க்கலாம். சிம்பிளாக எக்ஸல், வேர்ட் போன்றவற்றுக்குச் சமமான மென்பொருட்கள் கூட இருக்கின்றன.
ஆனால் கட்டுரைகள், வலைப்பதிவுகள் டைப் பண்ணுவதற்கு அவ்வளவாகத் தேறவில்லை.
பத்ரி: தகவலுக்கு நன்றி. பாட்டரி எவ்வளவு நேரம் வருகிறது? Amazon Kindle patch ஏதேனும் உள்ளதா?
ReplyDeletehttp://www.naaptol.com/online-store/WO-product-W839367O-shopping-mall-W1435O/Hot_Deals_Store/Laptops/Accord_@pad.html
நான் மேலே குறிப்பிட்டுள்ள தொடுதிரை மேட்டருக்கு ஆர்டரிட்டுள்ளேன். இரண்டு நாளில் வருமாம். உம் தகவல்களிலிருந்து வித்தியாசம் இருந்தால் பதிவிடுகிறேன். உபயோகமாகலாம்.
அருண்
Thanks for sharing.
ReplyDeleteவெங்கட்: என்னுடையதில் 256 MB RAM. வீடியோவில் திணறல் ஏதும் இல்லை. சொல்ல மறந்தது MP3, MP4 எந்தப் பிரச்னையும் இல்லாமல் வேலை செய்கின்றன. இந்தியாவில் 150$ - 450$ என்பது மிகப்பெரிய விலை வித்தியாசம். நிச்சயமாக இதனை ஆண்டிராய்ட் 2.1-க்குக் கொண்டுசெல்ல முடியும். ஆனால் அதற்கான திராணியும் நேரமும் என்னிடம் இல்லை. இப்போதைக்கு நான் தேடுவது ஒரேயொரு பி.டி.எஃப் படிப்பான் மட்டுமே. ஆனால் அலுவலகத்தில் நாகராஜன் ஏதேனும் செய்தால் உண்டு.
ReplyDeleteஎன் மகள் இதை மிக எளிதாகப் பயன்படுத்துகிறாள்.
க்ருபா: ரூ. 1,200-க்கு நெட்புக்கா? கபில் சிபலை விட பஜனை அடிக்கிறாயே? ஒரு சைபர் விட்டுவிட்டாயா?
ReplyDeleteரூ. 4,500-க்கு பயன்படுத்திய பொருள்கள்தான் இப்போதைக்குக் கிடைக்கும். புதிது கிடைக்காது. மார்க்கெட் எம்.ஆர்.பி, இது 150 டாலர் - 175 டாலர் - இப்போது. ஆனால் விரைவில் 100 டாலருக்குக் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
அருண்: நீங்கள் சொல்லும் டிவைஸ், எந்தவிதத்திலும் நான் வாங்கியதைவிட வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவில்லை; ஒருவேளை ஆண்டிராய்ட் வெர்ஷன் 2.x என்றி இருக்கலாம். ஏனெனில் கூகிள் குரோம், ஈபுக் ரீடர், வேர்ட், எக்ஸல் எடிட்டர் ஆகியவை உள்ளதாகச் சொல்கின்றனர். நிச்சயம் பயன்படுத்திவிட்டு தகவல் சொல்லுங்கள்.
ReplyDeleteபத்ரி: ஆமாம், நான் சொல்ல மறந்துவிட்டேன். நான் வாங்கிய Ausus netbook கொஞ்சம் பழையதுதான். பழையது மட்டுமின்றி, மேலே கொஞ்சம் உடைந்தும் இருக்கும் ;-) அதனால் ரூ. 1200.
ReplyDeleteஆனால் இதை வாங்கும் முன்பு (சுமார் 3 மாதங்கள் முன்பு) aPad என்று தேடும்பொழுது நிறைய <$100ல், சற்றேறக்குறைய போஸ்டேஜுடன் கிடைத்தது. இப்பொழுது பார்த்ததில் $107 என்று ஆரம்பிக்கிறது.
அதைவிட, நான் நெட்புக் வாங்கியதன் முக்கிய காரணம் அதில் .NET Framework இருக்கும் (Windows 5 CE) என்பதால்தான். ஆனால் ausus புண்ணியவான், எந்த ப்ரோக்ராமையும் இன்ஸ்டால் செய்யமுடியாதவாறு முடக்கியதால், அப்படியே பயன்படுத்தவேண்டியதாக இருக்கிறது. hello world rangeல் J2ME எழுதி நிறுவ முயன்றாலும் முடியவில்லை. அதனால் தமிழில் எழுத கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது (browser பயன்படுத்தலாம், IE 4.0).
நம்ப ஊர் ரிச்சி ஸ்ட்ரீட்டிலேயேதான் நெட்புக் 6000-7000க்கு கிடைக்கிறதே.
மற்றபடி PDF கோப்புகளைப் படிக்க iText லைப்ரியை அடிப்படையாகக்கொண்ட நிறைய ஜாவா அப்ளிகேஷன்கள் இருக்கின்றன அல்லவா? அதில் ஒன்றைப் பயன்படுத்த முடியவில்லையா? அப்படியே கணிப்பொறியில் தெரிவது மாதிரியே தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால் வெறும் எழுத்துக்களை மட்டும் படிப்பதென்றால் சுலபமாகச்செய்துவிட முடியும்.
எந்த மாதிரியான பிடிஎஃப் கோப்புகள் உங்களுக்குப் படிக்கவேண்டும்? பிடிஃப் ரீடரிலேயேதான் திறந்து படிக்கவேண்டுமா, அல்லது மேட்டர் மட்டும் படிக்கமுடிந்தால் போதுமா? ஒரு விபிஸ்க்ரிப்ட் எழுதி pdfஐ htmlஆகவோ, வேர்ட் டாக்குமெண்ட்டாகவோ மாற்றித்தரும்படி automate பண்ணினால் போதுமா? :-)
தமிழ் - இப்போதைக்கு கட்டம் கட்டம்தான்.
ReplyDeleteஎன்னிடம் அண்ட்ராய்ட் கைபேசி இருக்கிறது அதிலும் இதே பிரச்சனை தான். நான் cyanogen mod என்ற அண்ட்ராய்ட் 2.2 திறந்த மென்பொருளை நிறுவினேன் அதில் அனைத்து வசதிகளும் உண்டு. Ipad, Iphone போன்று படங்களை கிள்ளும் வசதி உண்டு. அதை தவிர அண்ட்ராய்ட் மார்க்கெட்டில் நிறைய செயலியை உள்ளது. உங்களுக்கு அமேசான் கிண்டல் மிகவும் பயனுள்ளத இருக்கும்.கிண்டலில சில நல்ல புத்தங்கள் இலவசமாக கூட உண்டு. அதே போல 3G க்கு ஒரு சிம் கார்டை கத்தரித்து போடவேண்டும்.
http://nexus404.com/Blog/2010/05/01/ipad-3g-teardown-available-already-ipad-wi-fi-3g-in-stores-yesterday-dismantled-today/
மேல கொடுக்க பட்ட தளத்தை ஒரு முறை பார்க்கவும். நன்றி
எனது ட்ராயிட்-எக்சில் ( Android 2.2 ) ஆபெரா உலவியில் தமிழ் எழுத்துக்களை படிக்க முடிகிறது . Had to enable use of bitmap fonts for complex scripts. iOS 4.0 அளவுக்கு எழுத்துரு அழகாக இல்லாவிட்டாலும், தெளிவாகவே உள்ளது.
ReplyDelete-Sreeni
நன்றி!
ReplyDeleteI ordered this device like a week ago from the guy you bought and not yet received it. All stupid reasons like shipment is not cleared from customs etc. he is saying. If he doesn't have stock in hand, I don't know why he took my order.
ReplyDeleteAs Badri mentioned about the battery usage, I think thats where Ipad scores.
ReplyDeleteIf it comes 2 hrs then it is good enough to try it out.
500 டாலர் ஐபேடுக்கு பதில் 7000 ரூவா ஏபேடா ? இந்த டிசம்பர் ரிச்சி ஸ்டிரீட்டில் ஒரு ரவுண்டு பார்க்கப்போகிறேன்.
ReplyDeleteசாம்சங்கில் ஒன்று போடுகிறார்கள். அதுவும் கிட்டத்தட்ட 400 டாலர் வருகிறது. ஐ பேடுக்கு இப்பொழுது தான் போட்டியே ஆரம்பித்திருக்கிறது. ஆனால் யாருமே ஆப்பிள் போல் 9 இஞ்சு கொடுப்பதில்லை. 6-8 இஞ்சு தான். அதில் சைடு பட்டி வேறு தடிமனாக இருக்கிறது.
Why is everyone, including yourself, in your comments and main blog section are so pretentious about using Tamil as main medium? WHen you use words like "seyali" "padippaan" etc, why cant you use tamil words for simple english words like "performance" "earphone" etc.
ReplyDeleteWhile using a flashy word like "thoduthirai" for a touchscreen, why is the hypocrat saying "matterkku orderittullaen"?
two personal ques. help needed!
ReplyDeleteஎன்னுடைய andriod மொபைலில் தமிழ் பொன்ட் வர என்ன செய்யவேண்டும் ?
zip wrar பைலை androidil ஏற்ற முடியவில்லை .apk பைலை மட்டுமே ஏற்றுகொள்கிறது . wrar ஜிப் பைலை apk ஆக மாற்றுவது எப்படி ?
" Ipad, Iphone போன்று படங்களை கிள்ளும் வசதி உண்டு"
ReplyDeleteAppadinna enna? Namitha padathil iddupai killum vasadhiya? Just kidding:-)
I assume that you are talking about zoom in / out, which is possible even with Android 2.1 which is what I have (and may be even prior version) and you don't need 2.2.
Hi Badri,
ReplyDeleteAre u talking about Apple IPAD? how come it is so cheap like Rs.7000? here it costs nearly SGD 1,300