இட்லிவடை சார்பாக பத்திரிகையாளர் ஞாநியுடன் ஒரு நேர்முகப் பேட்டியை நடத்தினேன். அதன் ஒலிப்பதிவு இட்லிவடை தளத்தில் உள்ளது. கேள்விகள் அனைத்தும் இட்லிவடை பதிவின் வாசகர்களுடையது. பேட்டியை வழிநடத்திச் சென்றது மட்டும்தான் நான்.
ஒலிப்பதிவைக் கேட்க
ஒலிப்பதிவைக் கேட்க
க்ரீமி லேயர் பற்றிய ஞாநி கருத்து சரியாகப் படவில்லை. ஏன் ஓப்பன் கோட்டாவில் மட்டும் க்ரீமி லேயர் இல்லை என்று கேட்கிறார். ஓப்பனில் வருபவர்கள் முதலில் சலுகை எதுவும் கோரவே இல்லையே? சலுகை கேட்பவர்களில்தான் க்ரீமி லேயரை விலக்க வேண்டிய தேவை இருக்க முடியும். அடுத்து, ஒருவரை க்ரீமி லேயரை சேர்ந்தவர் என்று சொல்லும்போது, 'நீ ஓப்பன் கோட்டாவிற்குச் செல்' என்று சொல்வதாக அர்த்தம்; ஓப்பனிலும் க்ரீமி லேயரைச் சேர்ந்தவர் சேர முடியாது என்று எப்படிச் சொல்லமுடியும்?
ReplyDeleteசரவணன்
பொதுவாக அனானிகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. இங்கே சலுகை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. பத்ரி கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதிலிலேயே இது சலுகை அல்ல உரிமை என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இதை சலுகை என்று பார்ப்பவர்களுக்கு மேலே அனானி சொன்னது போல தவறாகத்தான் சிந்திக்கத் தோன்றும்.ஞாநி
Deleteபொதுவாக நான் அனானிகலுக்கு பதில் சொல்வதில்லை. எனினும் இந்த பதில். என்னிட்ம பத்ரி கேள்விகள் கேட்டபோதே நான் தெளிவாக இட ஒதுக்கிடு சலுகை அல்ல உரிமை என்று விளக்கியிருக்கிறேன். அதை சலுகை என்றே பார்க்கும் அனானி போன்றவர்களுக்கு மேலே சொன்னமாதிரிதான் பிழையாக சிந்திக்கமுடியும் என்பதே பிரச்சினை. உரிமை என்று பார்த்தால் ஓப்பன் கோட்டாவும் உரிமைதான். எனவே எல்லாவற்றிலும் கிரீமி லேயர் அளவுகோல் இருப்பதே நியாயம். ஞாநி
Deleteஇட ஒதுக்கீடு, அதைப் பெறுபவர்களின் உரிமையே, 'சலுகை' அல்ல என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு. மேலே என்னுடைய கமெண்டில் சலுகை என்ற வார்த்தைப் பிரயோகம் தவறுதலாகவே இடம்பெற்றுவிட்டது. மன்னிக்கவும். உண்மையில் 'ஒதுக்கீடு' என்பதே நான் குறிப்பிட விரும்பியது. படிப்பவர்கள் அவ்வாறே திருத்தி வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Delete*** பொதுவாக நான் அனானிகலுக்கு பதில் சொல்வதில்லை. ***
இது படிக்க சற்று வியப்பாக இருக்கிறது--இட்லிவடை பேட்டியில் கேள்வி கேட்டிருந்த பலர் அனானிகள் அல்லது 'கடவுள்' என்பது மாதிரி ஏதோ புனைப் பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்களே!
சரவணன்
எப்படிப் பார்த்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பிள்ளையும், அதே வகுப்பைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அல்லது சிறு வியாபாரியின் பிள்ளையும் ஒரே தட்டில் நிறுத்தப் படுவதை சமூக நீதியாக நான் நினைக்கவில்லை.
Deleteசரவணன்
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-03/india/34892690_1_tamenglong-village-motorable-road
DeleteA 2005 graduate from St Stephen's College in Delhi, Armstrong Pame is the sub-divisional magistrate of Tamenglong, his home district, and the first IAS officer from the Zeme tribe. He has, of his own volition, begun the construction of a 100-km road that would link Manipur with Nagaland and Assam
சில வருடம் கழித்து படித்து அவர்கள் குழுவில் முதலிடங்களில் வந்தாலும் இவர் மகனுக்கு இதே வேலை கிடைக்க கூடாது என்று சொல்வது சரியா.இவர் பிறந்த பழங்குடியிலிருந்து முதலில் வந்த அதிகாரி இவர்.நாளை இவர் மகன்/மகள் விட்டு கொடுத்தால்/ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டால் அந்த இடம் பழங்குடியினரில் அதிக இடங்களை பெரும் மீனா இனத்தவருக்கு செல்லாது எனபது என்ன நிச்சயம்.பெரும்பாலும் அது தான் நடக்கும்
நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்த மருத்துவரின் ,அதிகாரியின் மகனை ஒதுக்கினால் இவர் வாரிசுக்கு கிடைத்திருக்க வேண்டிய அந்த இடம் MBC பிரிவினரில் வரும் வன்னியருக்கு செல்வதால் நரிகுறவருக்கு என்ன பயன்.
1) Considering the changing social climate, Reservation should bring down to 50 % from 69 %, this will help to students who are impacted by TN reservation policy.
ReplyDeleteCurrent reservation does not address Socially advanced but educational backward families. Lets say, a student is from Other community, but their parents are not exposed to modern education to help him attain the good grade. In this situation, OC people are deprived.
Now days, cutting across the sections, parents enroll their children in private schools and tutions to provide good education, this inturn help to access professional institutions even for first time entrants in their families.
Also they can afford the capital fees due to flow of money post the industrial revolution . Why such people need to take advantage of reservation ?
2) Our reservation should also address educational backward community (first time entrants from family irrespective of community) and apply the reservation strictly to only students out from GOVERNMENT schools.
- Ganesh B
இட ஒதுக்கீடு பற்றி நிறைய குழப்பங்கள்,புரிதல் இல்லாத நிலை இன்றும் அதிகமாக உள்ளது.
ReplyDeleteஓபன் கோட்டா என்று ஒன்று எதிலும் கிடையாது.எல்லா பதவி ,படிப்புக்கும் ஏதாவது ஒரு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மக்கள் தேர்ந்தெடுக்கபடுவர்
புதுசேரியில் பல மருத்துவ கல்லூரிகள்(மாநில அரசு மருத்துவ கல்லூரி ஒன்று,மத்திய அரசு ஒன்று ,6,7 தனியார் மருத்துவ கல்லூரிகள்) அசாம் தவிர்த்த ஆறு வட கிழக்கு மாநிலங்களில் ஒரே ஒரு கல்லூரி தான் உள்ளது
பக்கத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்களுக்கு கூட தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ஓபன் கோட்டாவில் சேருவதற்கு அனுமதி கிடையாது .இங்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்,குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் படித்தவர்கள் தான் ஓபன் கோட்டாவில் சேர முடியும்.மாநிலத்தை வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீடு அது
நம்மை விட அதிக மக்கள் தொகை,அதிக மாணவர்கள் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் நம்மிடம் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் பாதி இடம் கூட கிடையாது .அவர்கள் யாரும் ஓபன் கோட்டா தானே என்று இங்கு வந்து சேர முடியாது.
மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேபாளம் ,வங்காளதேசம் சேர்ந்தவர்களும் ஓபன் கோட்டா கீழ் வந்து சேர அனுமதி கோர முடியாது
மாநில ,குடியுரிமை அடிப்படையில் மொத்த இடங்களும் இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
கோவா முதல்வர் அற்புதமாக ஆட்சி செய்து வருவாயை பெருக்கி பல ஆயிரம் அரசு வேலைகளை உருவாக்கினால் அதனால் பலன் அவர்கள் மாநிலத்திற்கு தான்.மாநிலத்தில் யாரும் BPL கீழ் கிடையாது என்று அந்த மாநில காவல்துறை,மாநில அலுவலகங்களில் உள்ள வேலைகளை BPL மக்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கோ,நாடுகளுக்கோ வழங்க முடியுமா
மாநிலவாரி இட ஒதுக்கீடு எனபது நூறு சதவீதம் அல்லது மத்திய அரசு பொது தேர்விற்கு ஒப்பு கொண்ட மாநிலங்கள் என்றால் 85 /75 சதவீதம் .இந்த ஒதுக்கீட்டை தெரியாதது அல்லது புரியாதது போல பேசுவது வியப்பு தான்
இட ஒதுக்கீட்டால் ஒரு சில பிரிவினரே அதிகம் பலன் பெறுகிறார்கள் என்றால் பாதிக்கப்படும் மற்ற பிரிவுகள் போராடி தனி ஒதுக்கீடு,உள் ஒதுக்கீடு பெறுவதும் நாடு முழுவதும் நடந்து வரும் ஒன்று தான்.சாதி ரீதியான இட ஒதுக்கீடு பெரும் குழுக்கள் யாரும் கிரீமி லேயர் பற்றி பேசுவதில்லை .அதை பெறாதவர்கள் தான் அதை பற்றி அதிகம் கவலைப்படுவது
இட ஒதுக்கீடு எனபது ஏழைகள் முன்னேற்ற திட்டம் அல்லது ஏழைகள் மறுவாழ்வு திட்டம் அல்ல
ReplyDeleteஆட்சியில் ,அரசில் அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் பங்கு இருக்க வேண்டும் ,யார் வேண்டுமானாலும் முயன்றால் வர முடியும் என்ற நிலை இருக்க வேண்டும் என்பதற்கான திட்டம் தான் அது.
ஆந்திராவில் டேலேங்கான பகுதியில் இருக்கும் கல்லூரிகளில் 85 சதவீதத்தினர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தான்.மீதி பதினைந்து தான் கரையோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவிர்க்கு .அதே நிலை தான் ராயலசீமாவில் இருக்கும் கல்லூரிகளில் அங்கு இருக்கும் மாணவர்களுக்கு
இதில் எல்லாம் கிரீமி லேயர் நுழையுமா.
மாற்று திறநாளிகள் இட ஒதுக்கீட்டில் படிப்பவர்,வேலை கிடைப்பது முக்கால் வாசி சோ called கிரீமி லேயரக்கு தான்.அது தவறா.
முன்னாள் ராணுவத்தினர் இட ஒதுக்கீட்டில் பெருமளவில் சேருபவர் அதிகாரிகளின் பிள்ளைகளா ,ஜவான்களின் பிள்ளைகளா
தாய் தந்தை பட்டதாரி இல்லை என்றால் எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஊக்க மதிப்பெண் கிடைக்கும் கலைஞர் திட்டத்தை அடித்தது நீதிமன்றங்கள் தான்
அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டையும் அடித்தது நீதிமன்றங்கள் தான்.
பள்ளி,பெற்றோரின் கல்வி தகுதியை வைத்து வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களால் இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் தலைமுறையினருக்கு முன்னுரிமை தருவது எளிது தான்.நீதிமன்றங்கள் தான் அப்படி முன்னுரிமை தரும் திட்டங்களை தடுத்து வருகின்றன
AnonymousFri Sep 28, 02:13:00 PM IST
ReplyDeleteஅப்ப்பு பூவண்ண்டு .... ரயிலு தெக்கால போவுதா வடக்கால போவுதா டிக்கட்டு எடுக்கணுமா வாணாமான்னு இதுலலாம் நல்லா லா பாய்ன்ட்டு பேசு .... ஆனா .... நல்லா எட்டு பங்களா காசு இருக்கு, சமூகத்துல நல்ல அந்தஸ்து இருக்கு ... கெவுர்மெண்டு உயர் பதவி இருக்கு .... அப்ப உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு கஸ்டப்படுற இன்னொரு பிற்பட்ட சாதிக்கு வழி விடுன்னு சொன்னா மட்டும் ... ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அது எப்புடி .... டாய் ஆரிய மாயை .... அய்யக்க்கோ சமூகநீதின்னு அலும்பு பண்ணு .... நிங்கள்ளாம் நல்லா வருவீங்கடா .... நல்லா வருவீங்க
உங்களின் ரயில் பயணத்தில் அபராதம் செலுத்திய பதிவில் என்னை தனிப்பட்ட முறையில் அனோனி ஒருவர் இட ஒதுக்கீட்டை வைத்து திட்டி இருந்தார் .அப்பதிவில் அதற்க்கு பதில் கூறி விவாதத்தை திசை திருப்பவிரும்பாததால் அங்கு பதில் சொல்லவில்லை
இங்கு சொல்கிறேன்
ஐயா அனோனி
என் குழந்தைகளுக்கு
உத்தர்கந்த் மாநிலத்தில் பிறந்ததால் அங்கு இருக்கும் கல்லூரிகளில் சேர அந்த மாநில பரீட்சைகளை எழுத அனுமதி உண்டு .உத்தர் கந்து மாநில கல்லூரிகளை மாநில இட ஒதுக்கீடு இடங்களுக்கு போட்டியிட தகுதி உண்டு -
தகுதி -அங்கு பிறந்ததால்
ஆந்திர மாநிலத்தில் நான்கு ஆண்டுகள் அவர்கள் படித்ததால் அங்கும் அந்த மாநில (கடலோர ஆந்திர கல்லூரிகளில் சேர 85%,டேலேங்கானா கல்லூரிகளில் சேர 15%சதவீத இட ஒதுக்கீடான மாநில இட ஒதுக்கீட்டில் )இடங்களுக்கு போட்டி போட தகுதி உண்டு
தகுதி -அங்கு நான்கு ஆண்டுகள் படித்ததால்
தமிழகத்தில் தான் வாக்காளர் அட்டை எனக்கு உள்ளது. இங்கும் நான்கு ஆண்டுகள் அவர்கள் பள்ளி படிப்பு படித்தால் இங்கும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு உள்ள மாநில இட ஒதுக்கீடிற்கு போட்டியிட அனுமதி கிடைக்கும்
மத்திய மாநில அரசு கல்லூரிகளில் முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள் என்ற இட ஒதுக்கீடு உண்டு
ராணுவத்திற்கு உள்ளயே ராணுவம் தனியாக பொறியியல்,சட்ட,மருத்துவ,பல் மருத்துவ ,பேஷன் டெக் .செவிலியர் கல்லூரிகள் என்று நாடு முழுவதும் பல கல்லூரிகளை நடத்துகிறது .இங்கு மொத்த இடங்களும் ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தான் .விமானபடை,கடல்படையில் பணியாற்றியவர்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது .இங்கும் அவர்கள் போட்டி போடலாம்
தகுதி -தந்தையின் வேலை
கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வந்தால் அதிலும் அவர்கள் வருவார்கள்
பெண்கள் என்பதால் அதை வைத்தும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உண்டு.கல்வியிலும் வரலாம்
வெறும் பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு பல சலுகைகள் வழங்கும் திட்டங்கள் இப்போது நடைமுறையில் வர துவங்கியுள்ளன
அதன் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வரலாம்
சாதியை வைத்து இட ஒதுக்கீடு
இதில் எது அவர்கள் பயன்படுத்த கூடாது .சாதி வழி இட ஒதுக்கீட்டில் மட்டும் பொருளாதராத்தை திணிக்க நினைப்பதன் காரணம் என்ன
நீதிமன்றங்கள் மட்டும் அனுமதித்தால், பெற்றோரின் கல்வித் தகுதி என்பது பாரபட்சமற்ற, அதிகம் சர்ச்சைக்கிடமற்ற அளவுகோலாக இருக்க முடியும். பெற்றோர் இருவரில் குறைந்த கல்வி பெற்றவர் 10-ம் வகுப்புக்குக் கீழே படித்தவர், 10-12 ம் வகுப்பு, 3-ஆண்டு பட்டம் அல்லது பட்டயம், 4-ஆண்டு பட்டம் (அ)பட்ட மேற்படிப்பு (அ) சார்டர்ட் அக்கவுண்டண்ட் போன்ற புரொஃபஷனல் தகுதி (அ) முனைவர் பட்டம் என்பதாக 4 பிரிவுகளாக வைத்துக் கொள்ளலாம். இவற்றை இப்போதுள்ள பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. போன்ற பிரிவுகளுக்குப் பதிலாகப் பயன் படுத்தலாம்.
ReplyDeleteசரவணன்
திரு.பூவண்ணன், இந்தக் கருத்தில் பிழை இருக்கிறதா?? பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சமூக அந்தஸ்தும் பணமும் உள்ள ஒருவரின் மகன் இடஒதுக்கீடு மூலம் ஒரு மெடிக்கல் சீட்டு பெறும்போது, அதே சாதியில் கஷ்டப்படும் இன்னொரு சகோதரனின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் செயல் இல்லையா?? இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதிகம் உள்ள இக்காலத்தில் , உங்கள் சாதியிலே, நீங்கள் ஒரு அந்தஸ்துக்கு உயர்ந்தபின் உங்கள் சாதியில் கஷ்டப்படும் இன்னொரு சகோதரனுக்கு வழிவிடுவதில் என்ன தவறு??? மாட்டேன் என்பதில் சாதி நலத்தையும் தாண்டிய சுயநலம் தானே இதில் வெளிப்படுகிறது? பின்னர் உங்களுக்கும் இவ்வளவு நாள் மற்ற சாதியினரை அடிமையாய் வைத்திருந்த மற்றவர்களுக்கும் என்ன வேறுபாடு ??
ReplyDeleteஉள் ஒதுக்கீடு ,தாய் தந்தை படிப்பு,படித்த பள்ளி போன்றவற்றை வைத்து ஊக்க மதிப்பெண்கள் முன்னுரிமை எனபது தானே வழி.அதை கெடுப்பது நீதிமன்றங்கள் தானே
Deleteசாதி வழி இட ஒதுக்கீடு இல்லாமல் இருக்கும் கல்லூரிகளில்,வேலைகளில், அனைத்து இடங்களும் பணக்கார வாரிசுகளுக்கு செல்லும் போது நாம் கவலைபடவில்லையே
பணம் வைத்திருப்பவர் தன வாரிசுகளுக்கு பணம் கொடுத்து இடம் வாங்காமல் இருந்தால் அந்த இடம் ஏழைகளுக்கு சென்றிருக்கும் என்று கூட வாதாடலாம்
பெண் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைத்தால் ஏழை பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு என்று எண்ணி அதையும் விட வேண்டுமா(தமிழகத்தில் 1989 முதல் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு உண்டு )
ஒதுக்கீடு உள்ள வேலைகளில் 90 சதவீதம் குரூப் 4 வேலைகள் தான்.எந்த கிரீமி லேயரும் அதற்கு போட்டி போடுவதில்லை.அதிகாரி வேலைகளில் இன்றும் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பணியிடங்கள் எந்த பிரிவினருக்கும் நிரப்பப்படவில்லை.carry ஓவர் ஆகி backlog இடங்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடந்து வருவது தான் இன்றைய நிலை
கிரீமி லேயர் எத்தனை இடங்களை பிடித்துள்ளன என்பதை ஆராய்ந்து பார்த்தால் அது ஒரு பத்து சதவீதம் கூட தாண்டாது.
பாஸ்வானின் மகனையோ,சரத் யாதவின் மகளையோ அவர்கள் குழுவை சார்ந்தவர்கள் வர கூடாது என்று நினைப்பதில்லையே .தங்களில் ஒருவராக தானே பார்க்கிறார்கள்.
திரு.பூவண்ணன். நேரடியாக பதில் சொல்லுங்கள். ஒரே ஒரு மெடிக்கல் சீட் உள்ளது. இரண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் போட்டியில் உள்ளார்கள். ஒருவர் 180 மதிப்பெண்ணுடன் அய் ஏ எஸ் ஆபீசர் பையன் . இன்னொருவர் 170 மதிப்பெண்ணுடன் அதே பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஏழை விவசாயியின் மகன். இடஒதுக்கீடின் கீழ் இந்த கல்லூரி சீட் அய் ஏ எஸ் ஆபீசர் பையனுக்குப் போவது நியாயம்தானா? உங்கள் கூற்றான சாதி வழி இட ஒதுக்கீடு இல்லாமல் இருக்கும் கல்லூரிகளில்,வேலைகளில், அனைத்து இடங்களும் பணக்கார வாரிசுகளுக்கு செல்லும் போது நாம் கவலைபடவில்லையே என்று பார்த்தால் .... அவர்கள் உங்கள் சமூகநீதிக் கொள்கையின் படி ஏற்கனவே இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள். பேசமாட்டார்கள். ஆனால் பூவண்ணன் சமூகநீதிபற்றி கவலைப்படுபவர். இப்போது சொல்லுங்கள் பணக்காரப் பையன் தன் சாதியின் ஏழை சகோதரனைத் தள்ளி வாய்ப்பு பெறுவது சமூகநீதியா??
ReplyDeleteஇருப்பது குழுக்களுக்கு ஆன இட ஒதுக்கீடு. கிரீமி லேயரின் நரி குறவர் அல்லது கேப்மாரி சாதியை சார்ந்தவருக்கு கிடைத்த இடம் அவரின் பொருளாதார நிலையால் அவருக்கு தரப்படாமல் வன்னியருக்கோ,கள்ளருக்கோ செல்வதால் என்ன பயன்.இது அருந்ததியருக்கும் ,பில் பழங்குடியினர் என அனைவருக்கும் பொருந்தும்.
ReplyDeleteதாய் தந்தையின் படிப்பு,படித்த பள்ளி இரண்டுக்கும் தலைக்கு பத்து ஊக்க மதிப்பெண் இருந்தால் தன்னால் 170 ,190 ஆக மாறி இடத்தை பிடிக்க போகிறது.அப்படி இருந்த திட்டத்தை அடித்தது நீதிமன்றங்கள் தான் .கலைஞரின் அரசு 1990 இல் பட்டபடிப்பு படிக்காத பெற்றோரின் வாரிசுக்கு ஐந்து மதிப்பெண் ஊக்க மதிப்பெண் வழங்கியது.இது அனைத்து சாதிகளுக்கும் வழங்கப்பட்டது.
படித்த பள்ளியை வைத்து 15 சதவீத இட ஒதுக்கீடு
கலைஞர் அரசால் ஆரம்பிக்கப்பட்டு ,அதிமுக அரசால் 25 சதவீதம் என்று அதிகரிக்கப்பட்டது.அதையும் அடித்தது நீதிமன்றங்கள் .
Mr. Poovannan, Mr. Gnani, & Mr. Badri,
DeleteFor many 1000s of years we were oppressed, and denied of opportunities. For 1000s of years when higher caste men & women were pursuing higher education, working as scientists, doctors, engineers, lawyers, professors, chartered- accountants, company executives etc, we were doing menial jobs.
I highly respect the father of our constitution Dr. Ambedkar who got MSc, PhD from the top universities in the world. He was considered a genius in economics, history, political science, and anthropology. Nevertheless I dislike him for one reason. Because he proposed reservation only for SC& STs for just 10 years in Parliament & Assembly seats. He never supported caste quotas in admission to educational institutions, jobs, and promotions.
We should not follow Ambedkar, but we should follow Dr.Kalaignar, Dr.Aiyaa and their great ilk.