(சொந்தக் கதை. விருப்பம் இல்லாதவர்கள் படிக்கவேண்டாம்.)
இந்த ஆண்டு, ஒரு ஐபேடும் ஒரு ஐஃபோனும் வாங்கினேன். முதலில் வந்தது ஐபேட். அதற்கு முன்பே மூன்று வெவ்வேறு ஆண்டிராய்ட் (குறைந்தவிலை) சிலேட்டுக் கணினிகளை வாங்கிப் பயன்படுத்திப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. ஆனால் ஐபேட் (2) அப்படியல்ல. கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்தில் புகுந்துகொண்டது. இரண்டு மாதங்கள் பயன்படுத்தியபின் என் பழைய நோக்கியா E51 மொபைலைத் தூர வைத்துவிட்டு, ஒரு குறைந்த விலை ஐஃபோன் வாங்கினேன். ஏர்செல், ஒரு ஆஃபரில், ரூ. 10,000-க்கு ஐஃபோன் 3GS கொடுத்தார்கள். போதும் என்று தோன்றியது. ஃபோன் வாங்க என் பட்ஜெட் அதிகபட்சம் 10,000 ரூபாய் மட்டுமே.
ஐஃபோன் 3GS வேகம் சற்றே குறைவுதான். கேமரா சுமார்தான். ஆனாலும் என் தேவைக்குப் போதுமானதாகவே இருக்கிறது. ஐஃபோனின் 3ஜி சேவையைக் கொண்டு ஐபேடுக்கும், வேண்டிய நேரங்களில் மடிக்கணினிக்கும் இணைய இணைப்பு கொடுத்துக்கொள்ள முடிகிறது. எனவே டாடா ஃபோட்டான், ரிலையன்ஸ் போன்ற துக்கடா இணைய இணைப்புகளைத் தூர எறிந்துவிட்டேன்.
அவ்வப்போது ஐஃபோனில் ட்விட்டர், ஃபேஸ்புக் பார்க்கிறேனே தவிர அவற்றில் எழுதுவது எளிதாக இல்லை. ஆனால் படமெடுத்து Instagram மூலம் உடனேயே இணையத்துக்குத் தள்ளுவது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டாகிராம் தொடர்பாக ஏதோ பிரைவசி பிரச்னைகள் இருப்பதாகச் சொன்னார்கள். சோஷியல் மீடியாவுக்கு வருவதே பிரைவசியை இழப்பதுதான். என் கிரெடிட் கார்டுகள், இணைய வங்கிக் கணக்கு ஆகியவை தொடர்பாக எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். அதேபோல் மின்னஞ்சல் (கூகிள்) களவு போகாமல் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு வைத்துள்ளேன். மற்றவை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.
ஐபேடில்தான் இப்போது பெரும்பாலும் Powerpoint Presentations (Keynote) செய்கிறேன். முழுமையான production platform ஆக இல்லாவிட்டாலும் நல்ல, வசதியான consumption platform ஆக உள்ளது. நிச்சயமாக ஐஃபோன், ஐபேட் மூலம் productivity அதிகமாகியுள்ளதாக உணர்கிறேன்.
***
இந்த ஆண்டு காகிதப் புத்தகம் வாங்குவதைக் கடுமையாகக் குறைந்துக்கொண்டு கிண்டில் புத்தகங்களை வாங்கத் தொடங்கியுள்ளேன். படிப்பது பெரும்பாலும் ஐபேடில்தான். கிண்டிலில் கிடைக்காவிட்டால்தான் அச்சுப் புத்தகங்களை வாங்குகிறேன்.
***
நான் ஐபேடில் விளையாடும் ஒரே விளையாட்டு Solitaire. (செஸ் விளையாட்டில் அது என்னை அடித்துச் சாத்திவிடுகிறது.) உலகின் தலை சிறந்த விளையாட்டு சாலிடேர்தான் என்று நினைக்கிறேன். Angry Birds சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே அவை என் ஐஃபோன், ஐபேடில் இல்லை!
***
ஐபேடில் ஆடியோ ரெகார்டிங் செய்ய முடிகிறது. தரம் கொஞ்சம் சுமார்தான். நல்ல மேம்பட்ட ஒரு ஆப் கிடைத்தால் வாங்கத் தயார். WavePad என்ற இலவசச் செயலியைப் பயன்படுத்துகிறேன். ஆங்காங்கே தேவையற்ற ஒரு ‘டப்’ சத்தம் சேருகிறது.
***
ஐபேடில் ஸ்டைலஸ் கொண்டு எழுத, வரைய சில இலவச/இலவசமில்லா செயலிகளை இறக்கியுள்ளேன். விரைவில் இதன் விளைவுகளை நீங்கள் கண்டு களிக்கலாம்.
***
இந்த ஆண்டு Flip -க்கு ஒரு முழுக்கு போடவேண்டும். அதன் வீடியோ தரம் சுமார்தான். சிறந்த வீடியோ படம் எடுக்க, கைக்கு அடக்கமான நல்ல கருவியை யாராவது சிபாரிசு செய்ய முடியுமா? டிரைபாடில் இணைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கவேண்டும்.
***
இந்த ஆண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னர் இமயமலையும் ஏறியது சுவாரசியமான அனுபவங்கள். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க நினைத்தது முழுமையாக நடக்கவில்லை. சைக்கிள் வாங்க நினைத்தது நடக்கவில்லை. பொதுவாக உடலைக் கவனிக்கவேண்டும் என்று நினைத்தது நடக்கவே இல்லை. 2013-லாவது...
***
நேரமின்மை காரணமாக நிறைய ஹெரிடேஜ் இடங்களுக்குப் போக முடியவில்லை. வரும் ஆண்டில் நிச்சயமாக கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் சில இடங்களுக்காவது போகவேண்டும். தமிழகத்திலும்தான்.
***
இந்த ஆண்டு படித்ததில் மிக முக்கியமான புத்தகமாக நினைப்பது The Cage - Gordon Weiss. இந்த ஆண்டு ஒரே வாரத்தில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு (ஐபேடில்) படித்து முடித்தேன். வருமாண்டு சாண்டில்யனின் அனைத்துப் புத்தகங்களையும் முழுமையாக ஒரே முச்சில் - ஒரே மாதத்தில் - படித்து முடிக்கத் திட்டம். இந்த ஆண்டின் மற்றொரு முக்கியத் திட்டம் வில் தூராந்த் ‘நாகரிகங்களின் கதை’ (11 பாகங்கள்) அனைத்தையும் ஒரே மூச்சாகப் படிப்பது. முன்னது முடிந்துவிடும். பின்னது கஷ்டம் என்று தோன்றுகிறது.
***
எழுத/மொழிமாற்ற என்று இந்த ஆண்டில் ஆரம்பித்த சில, நிச்சயமாக வருமாண்டில் முடிந்துவிடும். வலைப்பதிவு எழுத அதிக நேரம் இல்லை.
***
இந்த ஆண்டு குடும்பத்துடன் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. ஏற்கெனவே பல முறை அங்கு சென்றிருக்கிறேன். ஆனால் மனைவி, மகளுக்குப் புதிய இடம். வருமாண்டு ஒரு வாரம் சீனா சென்று வரலாமா என்று யோசிக்கிறேன்.
***
தியேட்டர் சென்று சுமார் 10 சினிமாப் படங்கள் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். மிக விரும்பியது இங்கிலீஷ், விங்கிலீஷ் (இந்தி). தமிழில் மிகவும் ரசித்தது ‘நான் ஈ’, ஆங்கிலத்தில் 'Life of Pi', தெலுங்கில் ‘ரிபெல்’ (நிஜம்:-)
***
இந்த ஆண்டு கிரிக்கெட் பார்ப்பது மிகவும் குறைந்துபோயுள்ளது.

interesting record. keep it up. life IS beautiful. best wishes for a more adventurous year. gnani
ReplyDeleteKindleஇல் தமிழ் படிக்கிறீர்களா ?என்னால் முடியவில்லை .ஏதேங்கிலும் வழி உள்ளதா? என்னிடம் kindle 2 உள்ளது
ReplyDeleteஇப்போதைக்கு கிண்டிலில் தமிழ் படிக்க முடியாது... தமிழ் பிடிஎஃப் கோப்புகளால் முடியலாம்; அல்லது டிஸ்கி ஃபாண்ட் என்று ஏதெனும் செய்யவேண்டியிருக்கும். அதெல்லாம் உபயோகமில்லை.
Deleteஐஃபோன், ஐபேடில் தமிழ் பிடிஎஃப் கோப்புகளை அடோபி ரீடர் அல்லது ஐபுக்ஸ் மூலம் படிக்கலாம்.
ஆனால் மிக வசதியாகப் படிக்கவேண்டும் என்றால் epub ஃபார்மட் கோப்புகளை NHM Reader போன்ற (இனிதான் அறிமுகப்படுத்தப்போகிறோம்) செயலிகள்மூலம் படிக்கலாம்.
ஆண்டிராய்டுல moon+ reader, kobo போன்ற மென்பொருள் மூலம் தமிழில் epub பத்தகங்களை வாசிக்க முடியும்
DeleteI like your decision on buying what is needed even though most people consider them outdated or not fashionable. All the best for the activities that are close to your heart in 2013.
ReplyDeleteRecently I have come across this aadu puli aatam. Like chess, this one is a strategy game played all over tamilnadu.I have seen people playing this in villages but I tried for the first time in the computer.it is awesome and I just wanted to share.
ReplyDeletehttp://tamilpoint.blogspot.com/p/aadu-puli.html
Dear Badri,
ReplyDeleteHNY!
" அதேபோல் மின்னஞ்சல் (கூகிள்) களவு போகாமல் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு வைத்துள்ளேன்"
How?
Balaji S
HNY!
ReplyDelete" என் கிரெடிட் கார்டுகள், இணைய வங்கிக் கணக்கு ஆகியவை தொடர்பாக எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். அதேபோல் மின்னஞ்சல் (கூகிள்) களவு போகாமல் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு வைத்துள்ளேன். மற்றவை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை."
Please share some tims on how to do the above.
Thanks!
Balaji
https://www.google.com/settings/security செல்லுங்கள். அங்கே 2-step verification என்பதை enable செய்யுங்கள்.
Deleteஅதன்பின், நீங்கள் வேறு எந்தக் கணினியிலிருந்து லாகின் செய்யவேண்டும் என்றாலும் உங்கள் செல்பேசிக்கு வரும் authorisation code இருந்தால்தான் செய்யமுடியும்.
Badri,
ReplyDeleteI ve question on Iphone 3GS, I too bought Iphone from Aircel offer and got 3G connection. You said you connected (tethering) it to ipad & Laptop for browsing. I am trying to do the same. But I cannot be succesful. Can you please help me on this? How to tether using Iphone?
ஐஃபோனில் Settings => Personal Hotspot => On
Deleteஉங்கள் ஐபேடுடன் இணைத்துக்கொள்ள, இரண்டிலும் ப்லூடூத் இயங்கவேண்டும். ஐபேடின் செட்டிங்கில் சென்று ப்லூடூத் சென்று அங்கே உங்கள் ஐஃபோனின் பெயர் வருமல்லவா, அதைச் சொடுக்கினால் ஒரு பாஸ்கோட் கேட்கும்; அதை ஐஃபோன் கொடுக்கும். அதைச் செலுத்தினால் இணைந்துகொள்ளலாம். ஒருமுறை இணைந்துவிட்டால் பின் பாஸ்கோட் கேட்காது.
கணினியில் இணைப்பது வெகு சுலபம். யு.எஸ்.பி வழியாக கனெக்ட் செய்யுங்கள். Personal Hotspot => On இருந்தால் தானாகவே இணைந்துகொள்ளும். நீங்களாக வேறு ஒன்றும் செய்யவேண்டாம்.
Thanks Badri, I ll try it.
DeleteBadri,
ReplyDeleteI watched the following and I am very impressed. Looking forward for your comments.
http://www.tamilvu.org/esvck/index.htm
What is it? Can you explain more? I went there and it is asking for installing Silverlight plugin to watch some video. I do not have the time for this. If you tell me what it is about, maybe I will try, and then give you my comments.
DeleteThis is a video by V.C.Kulandaisamy(former VC of Anna University) of Tamil virtual university about minimizing number of characters in Tamil writing. He says currently 117 symbols are used in keyboard to achieve the comprehensive writing script. He argues introducing 4 new symbols, it can be achieved by mere 39 discrete symbols. It would be easy for kids learning tamil.
DeleteOh, I know about this idea of VCK. Many others have the same idea (ikara, eekaara, ukara, ookaara). I have no particular views on this. A community develops scripts and then they continuously evolve. At times, there is a violent disruption. That is how we have Tamil Brahmi, Vattezhuththu and then the modern Tamil ezuththu.
DeleteComparatively, Tamil Brahmi is a much easier script to learn than the modern Tamil script. Yet, Tamil Brahmi is dead and whereas modern Tamil script is alive. Such are the ways evolution and disruptions work.
I will stay away from this discussion.
Dear Badri,
ReplyDeleteAre there any progress in Feedle E-Books from NHM?
Regards,
Vimal