Wednesday, June 12, 2013

பாஜகவின் கூட்டாளிகள்

இட்லிவடையில் நான் நேற்று எழுதிய பதிவு

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைக் குறிவைத்து பாஜக நகரத்தொடங்கிவிட்டது. காங்கிரஸ் இதைப்பற்றி அவ்வளவு கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் பாஜகவுக்கு உண்மையிலேயே அவசரம். அதனை அவர்கள் பல வாரங்களாக உணராமல் இருந்தார்கள். அதன்பின் மூன்று முக்கியமான விஷயங்கள் நடந்தேறியுள்ளன.

(1) நிதின் கட்காரி கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். ராஜ்நாத் சிங் அந்த இடத்துக்கு வந்தார்.
(2) ஒருவர்பின் ஒருவராக நரேந்திர மோதிதான் கட்சியின் தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லச் சரியான நபர் என்று முடிவெடுத்தனர். கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவி அவருக்குத் தரப்பட்டது. தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக இவர் ஆகியுள்ளார்.
(3) ராஜினாமா என்று அழிச்சாட்டியம் பண்ணிய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அடக்கிவைக்கப்பட்டுள்ளார்.

மோதி முதலில் பாஜக உட்கட்சிப் பிரச்னைகளைச் சமாளிக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள் பல நோக்கர்கள். உட்கட்சி விஷயம் பெரும்பாலும் முடிவாகிவிட்டது. அடுத்த சிக்கல் தேசிய ஜனநாயக முன்னணி என்ற நாமகரணம் சூட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் பற்றியது.

பாஜகவின் இன்றைய கூட்டாளிகள் யார் யார்?
 1. பிகாரின் நிதிஷ் குமார், அவருடைய ஐக்கிய ஜனதா தளம்.
 2. மகாராஷ்டிரத்தின் சிவ சேனை, இப்போது பால் டாக்ரேயின் மகன் உத்தவ் டாக்ரே கட்டுப்பாட்டில்.
 3. பஞ்சாபின் ஷிரோமனி அகாலி தளம், பிரகாஷ் சிங் பாதல் தலைமையில்
 4. இதுதவிர இங்கே ஒன்று, அங்கே ஒன்று என்று உருப்படியில்லாத கட்சிகள்.
முதல் மூவரிடமும் சேர்ந்து 35 எம்.பிக்கள் இருக்கின்றனர். பிற கூட்டாளிகள் சேர்ந்து 5 எம்.பிக்கள்.

இதுதவிர, பாஜக ஒரு மதவெறிக் கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு சேராமல், அதே சமயம் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையிலும் இருக்கும் சில கட்சிகள் உள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவை. இதுதவிர, ஜெயலலிதாவின் அஇஅதிமுகவும் நேரடியாக தேசிய ஜனநாயக முன்னணியில் இல்லை. தெலுகு தேசமும் பிஜு ஜனதா தளமும் காங்கிரஸ் கூட்டணியில் ஒருபோதும் இருக்காது. ஆனால் அதே நேரம் பாஜகவை நேரடியாக ஆதரித்தால் முஸ்லிம் வாக்குகள் போய்விடுமோ என்ற தேவையற்ற பயமும் உண்டு. எனவே பாஜகவால் இவர்களை நம்ப முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் ஆதரவு தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு இருக்கும். அதேபோல உத்தரப் பிரதேசத்தின் சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜவாதிக் கட்சியும் தேர்தல் நேரத்தில் பாஜகவையும் ஆதரிக்க மாட்டார்கள்; காங்கிரஸையும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் தேர்தலுக்குப்பின், இப்போதைப்போல் காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவார்கள். பாஜகவுக்கு அதுவும் தர மாட்டார்கள்.

சரி, இருக்கும் கூட்டாளிகளைப் பார்ப்போம் என்றால், ஐக்கிய ஜனதா தளம் இன்றோ நாளையோ கூட்டணியிலிருந்து வெளியேறிவிடும் என்று தெரிகிறது. நிதிஷ் குமாருக்கு மோதியைப் பிடிக்கவில்லை. அதற்கு பாஜக ஒன்றும் செய்ய முடியாது. நிதிஷ் குமார் வெளியேறட்டும் என்று விட்டுவிடவேண்டியதுதான். பாஜக ஆட்சியிலிருந்து விலகினாலும் நிதிஷ் குமாரால் ஒரு மைனாரிட்டி ஆட்சியை பிகாரில் தரமுடியும். அங்கே உள்ள மொத்த இடங்கள் 243. ஐக்கிய ஜனதா தளத்தின் கையில் இருக்கும் இடங்கள் 115. பாஜக 91. ஐக்கிய ஜனதா தளத்தின் தேவை 122. எனவே மேற்கொண்டு தேவைப்படும் 7 இடங்களை காங்கிரஸ் (4), கம்யூனிஸ்ட் (1), மீதம் சுயேச்சைகள் என்று ஒப்பேற்றிவிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பிகாரில் பாஜகவின் வாய்ப்புகள் குறையும்.

மகாராஷ்டிரத்தில் சிவ சேனை, பால் டாக்ரே மறைவுக்குப்பின் வலு குறைந்துபோயுள்ளது. உத்தவ் - ராஜ் டாக்ரே குடும்பச் சண்டையும் காரணம். மகாராஷ்டிரத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்கென்று ஒன்றும் பெரிதாகச் செய்யவும் இல்லை.

பஞ்சாப் கூட்டாளி தேவலாம். ஏதோ மோதியின் தேர்வைப் பெரிய பிரச்னையாக ஆக்கவில்லை என்பதால். ஆனால் பஞ்சாபில் உள்ள இடங்கள் மிகவும் குறைவு.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காங்கிரஸ் தன் ஆட்சியைத் தக்கவைக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொண்டுவர நரேந்திர மோதி மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். சொந்தமாகவே 200-210 இடங்கள் வருமாறு வேலை பார்க்கவேண்டும். இது மிக மிகக் கடினமான வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மார்ஜினல் தொகுதிகள் அனைத்தையும் பாஜக வசம் சாய்க்கவேண்டும். அதற்கு இன்றிலிருந்தே ‘தீயாக’ வேலை செய்யவேண்டும்.

நரேந்திர மோதி இதனை எப்படிச் செய்யப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்கள் முக்கியமாக அமையும். இங்குதான் பாஜகவுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர, சில போனஸ் மாநிலங்களாக ஆந்திரம், ஒரிஸா, மேற்கு வங்கம் ஆகியவை இருக்கலாம். 3-4 இடங்கள் இந்த ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கிடைத்தால் ஒரு பத்து தேறலாம். நிதிஷ் குமாரை எப்படியும் இழக்கப்போவதால் பிகாரில் பின்னடைவு ஏற்படும். ஆனால் மோதியை முன்னிறுத்தி அதிகபட்சமாக எவ்வளவு இடங்களை அங்கே கைப்பற்ற முடியும் என்பதைப் பார்க்கவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நான் கேள்விப்படுவதுவரை பாஜகவின் கட்டமைப்பு மிக வலுவற்றதாக உள்ளதாம். எப்படி அதனைக் கொண்டு அந்த மாநிலத்தில் பெரும் மாற்றத்தை மோதியால் ஏற்படுத்த முடியும் என்பதையும் பார்க்கவேண்டும்.

9 comments:

 1. Badri sir.. the equation for BJP to get good numbers is simpler.
  In 2009, BJP did poorly in Rajasthan, MP, Delhi, Gujarat.
  MH, around Mumbai seats were lost due to MNS split. UP was very poor.

  now with Modi at top,
  they will gain in Rajasthan, MP,GJ, MH, Delhi, Haryanan(few seats), Uttar pradesh. but little loss in KA and possible loss in Bihar might be a little setback for him.

  ReplyDelete
 2. உண்மையில் பாஜக ஜெயிக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு..முதலில் மோடியை குஜராத்தில் உள்ள 26 இடங்களையும் 100% ஜெயிக்க சொல்லுங்கள்..இதுவரை அங்கே அதிகபட்சம் 15 இடங்கள்வரை மட்டுமே பாஜக ஜெயிதுள்ளது...

  வங்கம் - 42 , ஆந்திரா - 42 , தமிழ்நாடு - 40 , கேரளா - 20, வடகிழக்கு மாநிலங்கள் என்று சுமார் 160 இடங்களில் ஒன்றும் கிடைக்காது..

  UP, பீகார், ஓடிஸா, கர்நாடகா போன்று மும்முனை போட்டி நடைபெறும் இடங்கள் சுமார் 215..இவற்றில் ஒரு 25% இடங்கள் கிடைத்தால் அதிகம்...

  இப்போதைக்கு கூட்டணி உள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப்பில் உள்ள 60 இடங்களில் 50% இடங்கள் கிடைக்கும்

  பஜாக முதல் இரண்டு இடங்களில் உள்ள ராஜஸ்தான், குஜராத் MP போன்ற மாநிலங்களில் உள்ளவை சுமார் 110, இதில் சுமார் 65% இடங்களை பாஜாக வென்றாலும் கிடைக்கும் இடங்கள் 83.

  பாஜக அதின் கூட்டணி கட்சிகளுடன் வெல்லும் இடங்கள் சுமார் 160க்குள் தான் இருக்கும்....மெஜாரிட்டிக்கு தேவை 275, எப்படியும் 100 இடங்களுக்கு மேல் பற்றாகுறை இருக்கும்...

  ReplyDelete
 3. badhri,
  please tell yes Or No to this question
  Does Modi played any role in Gujarat Riots?

  ReplyDelete
  Replies
  1. Kumaran,
   please tell yes or No to this question
   If a group of thugs join and torch a bogey of train with 50 people to charcoal,should they be punished or been 'embraced' with 'secularism' or 'minority protection' wings in the hat?

   Delete
 4. Badhri,
  Eagerly waiting for your reply, for WriterCSK thoughts.

  www.writercsk.com/2013/06/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. சம்பவம் 2:
   இன்னொருவர், எங்கள் நிறுவனத்தில் பணியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிவர், திருமணம் செய்து கொள்ளவிருந்த சமயத்தில் ஏதோ பிரச்னை என்றும் அவசரமாக 5000 ரூபாய் வேண்டும் என்றும்,இல்லாவிட்டால் திருமணம் நின்று விடும் என்றும் கெஞ்சி ப்ரோநோட்டு எழுதிக் கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டு சென்றார்(சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னரான 5000 ரூபாய்).திருமணமும் நடந்தது. பிறகு ஒரு வருடம் கழிந்து அவர் எங்கள் நிறுவனத்தை விட்டு விலகி வேறு பணியிடம் சென்று விட்டார்.
   பிறகு பலமுறை கேட்டும் அந்தப் பணம் வரவில்லையாதலால், அவர் மேல் வழக்குத் தொடுத்து போது, அந்த ப்ரோநோட்டில் கையெழுத்துப் போட்டது அவரேயில்லை என்று சாதித்து வழக்கு தள்ளுபடியானது!

   அந்தப் பணியாளர் ஒரு முஸ்லீம்.!

   சம்பவம் 3:

   எங்களுக்குச் சொந்தமாக ஒரு தங்கநகை நிறுவனம் உண்டு.எங்களையும் எங்கள் குடும்பத்தையும் சுமார் 30 வருடங்களாகத் தெரிந்த ஒருவர் தனது மகள் திருமணத்திற்காக சுமார் 15 சவரன் நகை ஆர்டர் கொடுத்திருந்தார். கிராம் 500 ரூபாய்க்கும் குறைந்த விலையில் தங்கம் இருந்த அந்த நேரத்தில் மொத்த ஆர்டரான 60000 ரூபாயில் 30000 கொடுத்து விட்டு மீதம் நகையை வாங்கும் போது கொடுத்து விடுவதாக உறுதி கூறிச் சென்றார்.திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர் வரைக்கும் நகையை வாங்க வராத அவர், திருமணத்திற்கு முதல் நாள் வந்து நகையைக் கொடுக்கும் படியும்,எதிர்பார்த்த பணம் வரவில்லையாதலால்,திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குள் பணத்தை அளித்து விடுவதாகவும், நாங்கள் நகையைக் கொடுக்க மறுத்தால், திருமணம் நின்று போகும் நிலைகூட வரும்,பெரியமனதுடன் நகையைத் தந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டியவுடன், என்னுடைய தந்தை நகையைக் கொடுத்து விட்டார்.
   அதற்குப் பின்னர் கடந்த 9 வருடங்களில் பலமுறை கேட்டும் அந்தப் பணம் வரவில்லை; சென்ற முறை கேட்கச் சென்ற போது இனிமேல் பணம் கேட்டு அவரைப் பார்க்கச் சென்றால்,மரியாதை கெட்டுப் போகும் என்கிறார் அந்த மனிதர்.

   அவரும் ஒரு முஸ்லீம்..
   _______________________________

   இந்த சம்பவங்கள் தனி மனித முஸ்லீம்களின் யோக்கிய தாம்சங்கள், குணநலன்கள், சமூகத்தில் புழங்கும் விதம் குறித்த அனுபவங்கள்..

   இந்த முஸ்லீம்கள் கூட்ட மனோபாவத்தில் என்னென்ன செய்ய வல்லவர்கள் என்று சிறிது நீட்டித்துச் சிந்தியுங்களேன்..

   மோடி போன்ற ஒருவர் செருப்பாலடித்ததால்தான் இந்த அளவாவது முஸ்லீம்கள் அடங்கி இருக்கிறார்கள். அவர்களை அடக்கி வைப்பது பொது சமூகத்தின் அமைதியான வாழ்வுக்கான அவசியத் தேவைகளில் ஒன்று.!!!!!!!!

   Delete
  2. Do you meant to say these kind of atrocities are never done by non-muslims?

   Tragic that Badhri allows these comments. :(

   Delete
  3. திரு அனானி,
   நான் சொல்ல முயல்வது இதுதான்..
   இன்றைய இந்தியாவில் அநியாயத்தைக் கூட, அதை மூஸ்லீம்கள் செய்யும் போது, தட்டிக் கேட்க இயலாத அளவு 'செகுலரிசம்' பொங்கி வழிகிறது; மற்றவர்களும் ஏமாற்றலாம்..ஏமாற்றுவார்கள்..

   ஆனால் எங்களுக்கு சுமார் 90 ஆண்டு வியாபார அனுபவம் மூன்று தலைமுறைகளாக இருக்கிறது.வியாபாரம் என்றால் சும்மா பொரிக்கடை இல்லை; ஒரு நாளைக்கு சுமார் 200 கஸ்டமர்களையாவது நாங்கள் சந்திக்கிறோம்.

   அந்த அனுபவத்தில் விளைவில் சொல்வது என்னவெனில், முஸ்லீம்கள் கிஞ்சித்தும் துணுக்கம் இல்லாது ஏமாற்றுவார்கள் என்பது.அதன் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை மதத்தின் பெயரால் அவர்கள் எதிர் கொள்கிறார்கள் என்பது.அதை எதிர்கொள்ள மத ரீதியான கூட்டத்தைக் கூட்டுகிறாரகள்.

   ஒரு வியாபார நேர்மையற்ற செயலை ஆதரிக்க அவர்களின் ஜமாத் கூடும்;கூடுகிறது.அதுவும் பாதிக்கப்பட்ட வியாபாரி இந்துவாக இருந்தால்,இந்த கூட்டம் உற்சாகத்துடன் நடக்கிறது.

   இந்த மாறுபாடு கடந்த 25 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.

   இந்த வித செயல்பாடை இந்திய சமூகத்தில் அனுமதிக்காது ஒடுக்கிய முதல் அரசியல்வாதி மோதி.

   நான் ரௌடித்தனம் செய்வேன்,நீ பேசாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய முஸ்லீம்களின் நிலை;சட்டம் அனைவருக்கும் பொது, அதில் 'செகுலரிச' கருமாந்திரங்கள் எதுவும் இல்லை என்று சொல்லி,'நீ ரௌடித்தனம் செய்தால் நானும் உன்னை மண்டையில் அடித்து அடக்குவேன் என்று காட்டிய முதல் மனிதர் மோதி.

   இதை வெளிப்படையாக சொல்லும் சூழல் கூட இந்திய இந்துக்களுக்கு இன்று இல்லை.அவர்கள் கோடிக்ககணக்கான பேர் இருக்கிறார்கள்.

   அவர்களின் வோட்டு மோதி பிரதமராகப் போதும்!

   Delete
 5. சில சம்பவங்கள்..சிறிது நீண்டதுதான்,பரவாயில்லை படியுங்கள்..

  சம்பவம் 1:

  நான் எங்கள் ஊரில் ஓரளவு அறியப்பட்டதும் மதிக்கப் படுவதுமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன்.இந்த மதிப்பு எனது தாத்தா மற்றும் அப்பாவின் குணம் தங்கள் தொழிலில் நடந்து கொள்ளும் முறை எளியவர்களிடம் இயன்ற அளவு இரக்கத்துடன் நடந்து கொள்வது போன்றவற்றால் கிடைத்தது.

  சென்ற வாரத்தில் ஒரு நாள் ஒரு மருத்துவரைக் காண்பதற்காக நானும் எனது அம்மாவும் சென்றோம்;மருத்துவர் இன்னும் கிளினிக்கிற்கு வந்திருக்கவில்லை.முதலில் நான்தான் சென்றிருந்தேன்,அங்கு காத்திருந்தோம்,எனக்குப் பின்னர் சில பெண்கள் வந்தார்கள், கிட்டத்தட்ட கடைசியாக ஒரு 60 வயது மதிக்கத் தக்க நபர் சுமார் 13 வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணுடன் வந்தார்.

  எல்லோரும் மருத்துவருக்குக் காத்திருக்க, மருத்துவர் வந்து கிளினிக்கில் நுழைந்தார். அவர் அறையின் கதவைத் திறக்க எல்லோரும் காத்திருக்க,கதவைத் திறந்து கொண்டு அவர் உள்ளே செல்ல, கடைசியாக வந்த பெரியவர் பின்னாலேயே நுழைந்தார்.

  காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த நான், நான் காத்திருப்பதையும் வரிசைப் படி வருவதை மறந்து அவர் செல்கிறார் என்று நினைத்து அந்தப் பெரியவரைக் கூப்பிட்டேன். அவர் திரும்பவே இல்லை. எழுந்து ஒரு எட்டு எட்டி முன்னால் சென்ற அவரது தோளைத் தொட்டுக் கூப்பிட்டேன்;அப்போதும் அவர் திரும்பவில்லை.திரும்பவும் தோளைத் தட்டும் நோக்கத்தில் அவரைக் கூப்பிட்ட போது எனது இரண்டு விரல்களால் அவரது முதுகுப் பக்கம் சட்டையை சிறிது பிடித்தவுடன் அவர் நின்று திரும்பினார்.

  நான் காத்திருக்கிறேன் என்பதைச் சுட்டியவுடன் முறைத்துக் கொண்டே, சரி சரி போங்க என்றார். மருத்துவரும் இந்தப் பேச்சைக் கவனித்தவர், சரி வாருங்கள் சார்..என்று என்னைக் கூப்பிட்டு கவனித்த பின் அனுப்பி விட்டார்.

  நானும் அம்மாவும் இன்னும் சில இடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினோம்.வீடு திரும்பியவுடம் என்னுடைய தந்தை மிகுந்த பதட்டத்துடன் 'கிளினிக்கில் என்ன பிரச்னை' என்று என்னைக் கேட்டார்..எனக்கோ ஒன்றும் புரியவில்லை. விசாரித்ததில் அந்தப் பெரியவர் அரைமணி நேரத்திற்குள், இன்னும் ஒருவரைக் கூட்டிக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டிருக்கிறார்!
  வந்தவர் 'உங்க மகன் என் சட்டையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தி விட்டார்.அவரைக் கூப்பிடுங்கள்,அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று குதித்திருக்கிறார். என்னுடைய தந்தை, நான் அப்படிச் செய்பவன் இல்லை என்றும், பொதுவாகவே நாங்கள் அனைவரிடமும் மரியாதையுடனே நடக்கும் குடும்பத்தவர் என்பது அவருக்கும் தெரியும்தானே என்றும் சமாதானப் படுத்தியிருக்கிறார்-உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாத நிலையிலும்.சமாதானம் அடைந்தது போலத் திரும்பியிருக்கிறார் பெரியவர்.
  நாங்கள் வீட்டுக்கு வந்த பின்னர் நான் விளக்கிய பின்னர்,அப்பாவும் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை என்று சமாதானாமடைந்தாலும், எவரிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும், ஊரில் பெரும்பாலோருக்குத் தெரிந்த குடும்பமாக இருக்கும் நிலையில் நம்முடைய நடவடிக்கைகள் மேன்மையாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் பத்து நிமிடப் புத்திமதி சொன்னார்.
  நான் அன்றைய பொழுது விடிந்த விதத்தை எண்ணியபடியே நொந்து போனேன்.

  மறுநாள் காலை 6.30 மணிக்கு கதவடித்த சப்தம் கேட்டு எழுந்து திறந்தால், மூன்று நடுவயது நபர்கள் நிற்கிறார்கள். என்னவென்றால்,'உங்கள் மகன்,'கைக்குழந்தை(?)'யை டாக்டரிடம் கூட்டிப் போன என் அப்பாவை, சட்டையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்.அவரைக் கூப்பிட்டுங்கள்..இந்த விவகாரத்தை பைசல் செய்யத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்' என்கிறார்கள்.

  பின்னர் எனது பெற்றோர் கால் மணி நேரமும் நான் பத்து நிமிடமும் பேசி, அவர்கள் வருந்த வேண்டாம் என்று சமாதானம் செய்து அனுப்பினோம்.

  அந்தப் பெரியவர் ஒரு முஸ்லீம்!

  இதுதான் இன்றைய இந்தியாவில் 'இந்துப் பெரும்பான்மை' இருக்கும் நாட்டில் 'சிறுபான்மை முஸ்லீம்களின்' வாழ்க்கை முறை !

  ReplyDelete