Sunday, June 30, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு

செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என்ற புத்தகம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதோடு, செந்தில் மள்ளர்மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டு அவரைத் தேடி வருகிறார்கள் என்ற செய்தியை ஒருவேளை நீங்கள் செய்தித்தாளில் படித்திருக்கலாம்.


நேற்றி லயோலா கல்லூரியில் கருத்துரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் என்ற நிகழ்வு நடைபெற்று, தமிழக அரசின் தடை கண்டிக்கப்பட்டது. நானும் ஒரு பேச்சாளராக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கலந்துகொண்ட பிறரை மேலே உள்ள போஸ்டரில் பார்த்துத் தெரிந்துகொள்க.

எந்தப் புத்தகத்தையுமே ஓர் அரசு தடை செய்யக்கூடாது என்பது என் கருத்து. சட்டம் ஒழுங்கு என்பதைக் காரணம் காட்டி, சமூகங்களுக்கு இடையே கலவரம் மூண்டுவிடும் என்று சொல்லி சில புத்தகங்களை மட்டும் தடை செய்தல் நியாயமற்றது. இன்று தமிழில் வெளியாகியுள்ள எண்ணற்ற புத்தகங்களில் பலப்பல, குறிப்பிட்ட மதத்தோருக்கும் சாதியினருக்கும் எதிராக, மிகக் கேவலமான, கீழ்த்தரமான வசை மொழியில் எழுதப்பட்டுள்ளவை. பல மாத, வார இதழ்களேகூட அப்படிப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றன.

கண்டன இலக்கியம் என்பது இந்து, கிறிஸ்தவ மத பிரசாரகர்களால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவை எதிர் மதத்தோரை, எதிர்க் கருத்துள்ளோரை நிச்சயமாகக் கடுமையாகத் தாக்கியும் அவர்கள் மனம் புண்படுமாறும்தான் எழுதப்பட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே இருந்துவரும் இதுபோன்ற புத்தகங்கள், இன்றும் வெளியாகின்றன என்பதுதான் உண்மை. அமைதிப் பூங்காவாகத் திகழும் புத்தகப் பதிப்புலகில் செந்தில் மள்ளரின் புத்தகம் மட்டும் திடீரென்று அமைதியைக் குலைத்துவிடும் எண்ணம் கொண்டதாக அவதரித்துள்ளது என்பதுபோல் தமிழக அரசு தோற்றுவிக்கும் எண்ணம் நியாயமற்றது. அதைவிட, இப்படிப்பட்ட புத்தகத்தைத் தடை செய்ததுமட்டுமின்றி, அதனை எழுதியவரை தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்று சொல்லிச் சிறை பிடிக்க முற்படுவது அராஜகமானது.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பலவும் கிட்டத்தட்ட 500 புத்தகங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்கள்தாம் என்று நேற்று பேசிய ஒரிசா பாலு சொன்னார். கூடவே சில புத்தகங்களைக் கையில் கொண்டுவந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்துத் தான் பேசியதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய இருவர் - எழுகதிர் பத்திரிகையாசிரியர் அருகோ என்பவரும் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சக்திவேல் என்பவரும், மற்றும் பொதுவாகவே கூட்டத்துக்கு வந்திருந்த பெரும்பான்மை மக்களும் ஒரு கருத்தில் உறுதியாக இருந்ததுபோல் இருந்தது. புத்தக ஆசிரியர் செந்தில் மள்ளர், தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் ‘வடுக வந்தேறிகள்’ என்று தன் ‘என்னுரை’யில் சொல்கிறார். இவ்விருவரும் கூட்டத்தினரும் வடுக வந்தேறிகள் என்று தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் சாதியினரைச் சொல்கிறார்கள். அந்த வார்த்தை பயன்படுத்தப்படும்போதெல்லாம் கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

புத்தகத்தின்மீதான தடையைக் கண்டித்த அதே நேரம், மேடையிலேயே, ‘வந்தேறிகள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் அதனைக் கூட்டம் கை தட்டி வரவேற்றதையும் நான் கடுமையாகக் கண்டித்தேன்.

வந்தேறிகள் என்ற வார்த்தையைக் கொண்டு பார்ப்பனர்கள், முஸ்லிம்கள் என்று ஆரம்பித்துப் பலரைக் கைகாட்டி இனத் தூய்மைவாதம், கலாசார தேசியம் ஆகியவற்றைப் பேசுவோரது அரசியல் எனக்கு ஏற்புடையதல்ல. அதில் இப்போது சேர்ந்துள்ளது ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம். அவர்கள் கண்டுபிடித்துள்ள எதிரி ‘வடுகர்கள்’. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் இதைப்பற்றியது அல்ல. அப்படி அந்தப் புத்தகத்தைக் குறுக்கிவிட முடியாது, கூடாது. ஆனால் அந்த இழையோட்டமும் அப்புத்தகத்தில் இருப்பதும், அதே கருத்தைக் கொண்டோர் அக்கருத்தை மேடைமீது கூறுவதும் பொதுவான அறிவியக்கத்துக்கு எதிரானவை.

இவற்றைத் தாண்டி, அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை தமிழக அரசு தடை செய்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்தகத்தின்மீதான தடை நீக்கப்படவேண்டும். புத்தக ஆசிரியர்மீது போடப்பட்டிருக்கும் அபாண்டமான வழக்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.

13 comments:

  1. விஸ்வரூபம் துவங்கி மீண்டெழும் பாண்டியர் வரலாறு வரை, அரசின் அசமஞ்சமான முடிவுகள், சம்பந்தப் பட்டவர்களுக்கு கூடுதல் விளம்பரத்தையும், வியாபாரத்தையுமே கொண்டு தருகிறது.

    ReplyDelete
  2. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு ,
    மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்திற்கு அரசு தடைவிதித்திருப்பது தவறானது என்ற தங்களது பதிவுக்கு தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது .
    மேலும் வந்தேறி என்ற வார்த்தை பிரயோகம் நீங்கள் குறிப்பிட்டது போல் அல்லாமல் வடுகர்கள் என்று அழைக்கப்படுகின்ற தெலுங்கர்களை மட்டுமே குறிப்பிடும் சொல்லாகவே நங்கள் பயன்படுத்தினோம் அதுவும் சமீப கால கட்டாயத்திற்காக மட்டுமே தவிர ,அவர்கள் இங்கு வாழ்வதில் எங்களுக்கு விருப்பமில்லாமல் இல்லை .ஆனால் , எங்களை அதிகார துஷ்ப்ரயோகம் செய்யவதும், நமது வாழ்வாதாரங்களை அழிப்பதும். தொடர்ந்து இங்குள்ள தமிழ் சமூகங்களை ஒன்றோடொன்று மோத விட்டு அன்னாரை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்வது அதில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்வது, தாங்கள் மட்டும் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நம் வீட்டிலேயே இருந்து கொண்டு நம் வீட்டையும் பராமரிக்காமல் நம்மையும் அடிமையாக்க நினைக்கும் போக்கு . .இது போன்ற விஷயங்கள் தான் எங்களின் இந்த வார்த்தை பிரயோகதிர்க்கான காரணம் .
    சரி அது விவாதத்திற்குரியது திருதிக்கொள்ளவேண்டியது என்று வைத்துக்கொள்வோம் .
    சில காலம் மட்டுமே நாங்கள் சொல்லும் இந்த வந்தேறி என்ற வார்த்தை வலிக்கிறது என்று சொன்னால் .கடந்த பலநூறு வருடங்களாக எங்களை தலித் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் தொலைக்காட்சிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் எங்களை அழைக்கும்போது எங்களுக்கு எப்படி வலிக்கும் ? எங்கள் குழந்தைகள் கூனிக்குறுகி நிற்கும்போதும் அதைப்பற்றிய கேள்விகளை எங்களிடம் கேட்கும்போது பதில் சொல்லத்தெரியாமல் நெஞ்சடைதுப்போய் நங்கள் படும் வேதனையை அனுபவித்தால் தான் தெரியும் .
    வெயிலிலும் மழையிலும் பாராது உழவுத்தொழிலால் அனைவரையும் பசியாற்றும் எங்கள் சமூகம் எப்படி தாழ்த்தப்பட்ட சமூகமாகும் என்று உங்களைப்போன்ற சகோதரர்கள் கேட்டால் தானே எங்கள் விடிவு பிறக்கும் .
    வந்தேறி என்ற வார்தைக்கு கண்டனம் தெரிவித்ததுபோல் மனிததன்மையற்ற இழிவான வார்த்தைகளால் இவர்களை புண்படுத்தாதீர்கள் என்று எழுதுங்கள் . ஊடகங்களில் சொல்லுங்கள் . குறிப்பாக தமிழனுக்கு சொல்லுங்கள் .
    நன்றி !
    பி .ராமநாதன் . சென்னை .

    ReplyDelete
    Replies
    1. வந்தேறிகள் என்ற வார்த்தை வலிக்கவில்லை. அது அநாகரிகமான வார்த்தை. ஒடுக்கப்பட்டவர்களாக நினைக்கும் ஒரு மக்கள் சமூகம் தங்களை இழிவிலிருந்து வெளியே எடுக்க முனையும்போது தவறான போர்ப் பாதையை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

      மற்றபடி நீங்கள் சொல்லும் அனைத்து இழிவான வார்த்தைகளையும் முற்றிலுமாக நீக்குவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இவ்வுலகில் யாருமே தலித்தாக, தாழ்த்தப்பட்டவர்களாக, தீண்டத்தகாதவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

      Delete
    2. ராமநாதனுக்கு. நீங்கள் சொல்லும் வந்தேறிகள் அல்லாத பகுதிகளில் உள்ள சாதி பிரச்சனிக்கு யார் காரணம்.வந்தேறிகள் என்று சொல்வச்தும் ஒரு வகையான சாதி இழிவாக பேசுவது போலதான். அணைத்து வழிகளிலும் பிரித்து குளிர் காய்ந்து மத பிரசாரத்தை மேற்கொல்ல்வரின் வேலை தான் வந்தேறிகள் என்ற கண்டு பிடிப்பு, இதற்கு தமிழரின் மொழி பற்றை பகடை காயாக மத பிரசரர்கால் பயன்படுத்த படுகிறது
       பயன்படுத்தபடுகிறது
      http://www.jeyamohan.in/29681?utm_medium=twitter&utm_source=twitterfeed#.VYGqwPlViko

      தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள் தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த தமிழர்கள் முன்வருவார்களா? அதே போன்று இரவுக் காவல் காக்கும் நேபாளத்து கூர்காக்கள், தச்சு வேலை செய்யும் ராஜஸ்தானத்து தொழிலாளர்கள், காங்கிரீட் கலவை போடும் தெலங்கு தொழிலாளர்கள், சாலையில் குழி பறிக்கும் கன்னட தொழிலாளர்கள், உணவகங்களில் மேசையை துடைக்கும் வடகிழக்கு தொழிலாளர்கள் என்று இவர்களது வேலையை தமிழன்தான் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்க முன்வருவார்களா என்ன?

      அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள். அதே போன்று இன்று தமிழகம் சாப்பிடும் சோறு, காய்கள், மளிகைப் பொருட்களில் கணிசமானவை அண்டை மாநிலங்களிலிருந்து வருவபைதான்இன்று தமிழக வளத்தை அப்படியே கொள்ளையடிப்பவர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அல்லர். பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான் நம் வளத்தை சுருட்டிக் கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இன அடையாளம் ஏதுதமில்லை. ரிலையன்ஸ், ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபெய்ன் முதலான நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு இந்த தமிழினவாதிகள் வருவார்களா? மாட்டார்கள். மாறாக டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை விரட்ட வேண்டுமென்று துள்ளிக் குதித்து வருவார்கள்.தவிர, தூத்துகோடி, மதுரை மணல், க்ராநிடே கொள்ளை அடித்து தமிழகத்தின் எதிர் கால் சந்தடியனற்கு கணிணம வளம் இன்றி மொட்டை அடித்தது யார்.சேயும் தவறுகளை மறைக்க வந்தேறிகள் கோசம் போட்டு , மக்களை தெசை திருபூவதில் , ஒரு கும்பல் முமொரமாக ஈடுபட்டுள்ளது.

      Delete
    3. mr. ramanathan,
      http://whenareyougoingtowakeup.blogspot.in/2009/07/blog-post_12.html

      Delete
    4. உண்மை.தெளிவான பதில்

      Delete
  3. உங்கள் கருத்தின் ஆழத்தை உணருகிறேன். உங்கள் உள்ளத்தை அறிகிறேன். ஆயினும் சில விளக்கங்கள் தேவை என்று நினைக்கிறேன்.
    "பார்ப்பு + அனன் = பார்ப்பனன்" - பார்ப்பு என்பது பறவை. பறவையைப் போன்றவன் பார்ப்பனன். முட்டைக்குள்ளிருக்கும் போது ஒரு உயிர், முட்டை ஓடு நீங்கப்பெற்று வெளியே வந்தபின் இன்னொரு உயிர். உபநயனம் என்ற சடங்கு நடக்கும் வரை முட்டைக்குள்ளிருக்கும் குஞ்சுபோலவும், உபநயனம் ஆன பின் அறியாமை என்ற ஓடு நீங்கப் பெற்றபின் இன்னொரு உயிர் பெறுகிறான். ஆகவே இருபிறப்பாளன். த்விஜன் என்று வடமொழி கூற்று. இப்பதத்தை வள்ளுவர் முதற்கொண்டு பயன்படுத்தியுள்ளனர். "மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் " என்று கூறுகிறார். ஆகவே பார்ப்பான் என்பது உயர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை பூணூல் போட்டுக்கொள்வதனால் மட்டுமே ஒருவன் அடைந்துவிட முடியாது.
    பார்ப்பான் என்பது இழிச்சொல் அல்ல. திராவிட இயக்கத்தார் அவ்வாறு திரித்துக் கூறி புனைவு செய்துவிட்டனர்.
    அது ஒரு புறம் இருக்க, "வந்தேறிகள்" என்பதும் ஒரு இழிச்சொல் அல்ல. "குடியேறிகள்" என்பது சிங்கப்பூரில் அதிகாரபூர்வமாகப் பயன்பாட்டில் உள்ளது.

    ReplyDelete
  4. அப்படின்னா "வந்தேறிப் பாப்பான்" என்று தெளிவாக கூறினால் தான் ஆரியர்களை குறிக்குமோ ?

    ReplyDelete
  5. அனானி: திராவிடர், ஆரியர் யார்?

    ReplyDelete
  6. எங்க சுத்தினாலும் தமிழ் இலக்கியவாதிகளின் பேச்சு கடைசியில் பார்ப்பனன் என்ற வார்த்தையில்தான் முடிகிறது. அதைத்தாண்டிய சிந்தனை என்று அவர்களுக்கு வருமோ அன்றே அவர்களது எழுத்தும் தமிழ்நாட்டைத்தாண்டிப் போகும்.
    மற்றபடி வந்தேறி எனும் வார்த்தை ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. காடுகளாய் இருந்த பூமியில் அனைத்து மனிதர்களுமே வந்தேறிகள்தா.

    ReplyDelete
  7. பள்ளர்/மள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள்( சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் உட்பட) இலங்கை இந்தியா உட்படப் பல இடங்களில் உண்டு.ஆதலால் மள்ளர் குலத்தவர்கள் கண்டபடி அலட்டிக்கொள்வதில்லை.
    பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் ( கல்வெட்டு இலக்கம். 432/1914) பாணடியன் உக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை வண்வட்டக் குடை கெராடி பகற்பந்தம் பாவாடை இரட்டைச்சிலம்பு இரட்டைக்கொடுக்கு நன்மைக்குப் பதினாறு கால்பந்தல் துண்மைக்கு இரண்டு தேர் பஞ்சவன்(பாண்டியன்) விருது பதினெட்டு மேளம் வளங்கி அன்றுதொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர்.

    ReplyDelete
  8. Adhanda ungala srilankala vandheri nu solli konanunga...

    ReplyDelete