Friday, October 18, 2013

சிறுநீரகக் கோளாறு, டயாலிசிஸ் தொடர்பாக

நேற்று மருத்துவர் புரூனோவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். விவாதத்தின் சுருக்கத்தைக் கீழே தருகிறேன். என் புரிதலில் தவறுகள் இருந்தால் புரூனோ அவற்றைச் சரி செய்துவிடுவார் என நம்புகிறேன்.

நாங்கள் முக்கியமாகச் சந்தித்தது, டயாலிசிஸ் பற்றிப் பேச. ஞாநி தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். இந்தியா முழுவதிலும் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் தேவைப்படுவோர் சுமார் 1.5 லட்சம் பேர் என்றும் எழுதியிருந்தார். அதே நிலைத்தகவலில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒரு டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 6,000 பேர் இந்நிலையில் உள்ளதாக புரூனோ சொன்னார். இனி வருவதெல்லாம் தமிழகம் தொடர்பானது மட்டுமே.

* இந்த 6,000 பேரில் சுமார் 1,000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துகொள்கின்றனராம். கேடாவேர் டிரான்ஸ்பிளாண்டேஷன் என்ற முறையில் ‘மூளை இறந்த’ மனிதர்களின் உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மாற்றிவைப்பதன்மூலம் சுமார் 600 பேருக்கு ஓராண்டில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தமுடிகிறதாம். இன்னொரு 1,000 பேர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்ள முடிவெடுப்பவர்கள். மீதமுள்ள 4,000 பேர் மாற்று சிகிச்சைகள் என்ற பேரிலும் சிகிச்சைகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் உயிருக்கு ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

* க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் உள்ளவர்கள், டயாலிசிஸ் செய்துகொண்டால்தான் வாழ்க்கையைத் தொடர முடியும். வாரத்துக்கு இருமுறை செய்துகொள்ளவேண்டும். மாதம் 8 முறை. ஒரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ள ரூ. 1,000 ஆகிறது. எனவே ஒரு மாதச் செலவு என்பது கிட்டத்தட்ட ரூ. 10,000 ஆகிவிடும். டயாலிசிஸ் என்பது தாற்காலிகமே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் ஒரே வழி.

* சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு, சிறுநீரகம் தானம் செய்வோர் வேண்டும். அது மூளை இறந்தோரிடமிருந்து கிடைக்கலாம்; உறவினர்களிடமிருந்து கிடைக்கலாம் அல்லது ‘திருட்டு வழிகளில்’ சிறுநீரகத்தை விலைக்கு வாங்குவதிலிருந்து கிடைக்கலாம். இதில் மூன்றாவது வழிமுறையை தமிழக அரசு கடுமையான சட்டங்கள்மூலம் தடுத்திருக்கிறது. ஆனால் மூளை இறந்தோரிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவது அதிகரித்தால்தான், தேவைப்படும் அனைவருக்கும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த முடியும்.

* ஸ்பெயின், அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளில் மூளை இறந்தோரிடமிருந்து பெறுவது மிக அதிகம் - ஒவ்வொரு மில்லியன் மக்கள் தொகைக்கும் சுமார் 25-35 பேரிடமிருந்து உறுப்புகள் பெறப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 0.05-க்கும் குறைவான அளவிலேயே உறுப்பு தானம் கிடைக்கிறது.

* அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை. இருக்கும் கருவிகள், தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன.

* மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்தினால், மாதத்துக்கு 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியும். இந்த அமைப்பை ஏற்படுத்த ஒருமுறை செலவாக ரூ. 55 லட்சம் ஆகும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புச் செலவு, சம்பளம் என்று சுமார் ரூ. 20 லட்சம் தேவை.

* இப்போதைக்கு தமிழகத்தில் 4,000 பேருக்கு டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றால், இதில் ஒரு ஆயிரம் பேருக்காவது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யவேண்டும் என்றால் மொத்தம் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள் தேவை.

* அரசு இப்போதைக்கு இதில் முதலீடு செய்யும் என்று சொல்ல முடியாது. எனவே தனியார்கள் சேர்ந்து இந்த இயந்திரங்களை வாங்கிக்கொடுத்தால் அரசு மருத்துவமனையில் அவற்றைப் பொருத்திக்கொள்ள அரசு இடம் கொடுக்கும்.

* ஆனால், இதனை இயக்குவதற்கான பணியாளர்கள், இந்த இயந்திரத்தைப் பராமரிக்கத் தேவையான செலவு ஆகியவற்றையும் தனியார்தான் செய்யவேண்டும். (என்னென்ன தேவை, எவ்வளவு செலவாகும் என்று அனைத்தையும் புரூனோ அனுப்பியுள்ளார்.)

மாதம் சுமார் ரூ. 10,000 செலவழித்து டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது மேல் நடுத்தர மக்களுக்கு மட்டுமே சாத்தியம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது இன்றைய தேதியில் தேவையான அனைவருக்கும் சாத்தியமில்லாததாக உள்ளது. அரசிடமிருந்து டயாலிசிஸ் இலவசமாகச் செய்வதற்கான தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை.

எனவே நாம் என்ன செய்யலாம்?
  1. ஓர் அறக்கட்டளை தொடங்கி, பணம் வசூலிக்கலாம்.
  2. இந்த அறக்கட்டளை, தமிழக அரசுடன் ஒரு MoU போட்டுக்கொள்ளவேண்டும். அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை இந்த அறக்கட்டளை ஏற்படுத்தும்.
  3. இடத்தை தமிழக அரசு தரும்.
  4. இயந்திரங்களை இயக்க டெக்னீஷியன்களை அறக்கட்டளையே வேலைக்கு எடுக்கும்.
  5. டயாலிசிஸ் தேவைப்படுவோர் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  6. ஆண்டுச் செலவுகளுக்கான பணத்தையும் அறக்கட்டளை தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இது தொடர்பாக உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.

25 comments:

  1. மூன்று மெஷின்கள் கொண்ட ஒரு அமைப்பு மூலம் மாதம் 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியுமென்றால், ஒருவருக்கு 8 முறை, அதாவது 240 டயாலிசிஸ் என்று கணக்கிலெடுக்கிறேன். தனியாரில் இவ்வாறு செய்வதற்கே வருடத்திற்கு 30*8*12 = ரூ.28,80,000/- தான் செலவாகிறது. இப்படி இருக்கும் போது அரசுடன் MOU போடுவது எல்லாம் அவசியமா? அல்லது TANKER FOUNDATION போன்ற NGO உடன் சேர்ந்து தனியார் முறையிலே சிகிச்சை தருவது சிறப்பாக இருக்குமா?

    அரசுடன் சேருவது ineffeciencies & corruption அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதும், ஆரம்பிப்பதிலும் செயல்படுத்துவதிலும் பல முட்டுக்கட்டைகள் தோன்றும் என்பதே என் கருத்து.

    ReplyDelete
  2. Desanthri sir

    I respect your opinion
    I support your right to say your opinion

    But

    Your opinion is based on assumptions
    your opinion is wrong

    ReplyDelete
  3. //அல்லது TANKER FOUNDATION போன்ற NGO உடன் சேர்ந்து தனியார் முறையிலே சிகிச்சை தருவது சிறப்பாக இருக்குமா? //

    advantages with government setup are

    1. Nephrologist available
    2. attached with hospital reaching large number of patients
    3. patients with Co morbid illness are not usually managed at such isolated centres.
    4. For scalability, government helps
    5. Government is transparent. Lack of transparency in private

    ReplyDelete
  4. சிறிது நேரத்துக்குமுன் ஞாநியிடம் பேசினேன். சில விஷயங்களைச் சொன்னார்.

    (1) ஒரு டயாலிசிஸுக்கு 1,000 ரூபாய் என்பது குறைவு. 1,500 முதல் 2,000 ரூபாய் ஆகிறதாம்.
    (2) ரூபாய் 500-க்கு சில தொண்டு நிறுவனங்கள் டயாலிசிஸ் செய்கிறார்கள். ஆனால் scalability இல்லை.
    (3) ஒரு வாரத்துக்கு இரு முறை அல்ல, பலருக்கும் மூன்று முறை தேவைப்படுகிறதாம்.

    எனவே ஒவ்வொரு தனி நபருக்கும் செலவு என்று பார்த்தால் மேலே சொன்னதைவிடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்குகூட ஆகும்போலத் தெரிகிறது.

    தேசாந்திரி:

    எல்லா முறைகளையும் யோசித்துப் பார்க்கவேண்டும். அதற்குத்தான் இந்த உரையாடலே. அரசு என்றாலே ஒட்டுமொத்தமாக ஒதுங்கவேண்டும் என்பதல்ல. அரசு என்பது நாம் உருவாக்கியுள்ள இயந்திரம்தானே.

    புரூனோ: சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிசிஸ் அல்லது அல்லோபதி தவிர மாற்று மருத்துவ முறைகள் எப்படிப்பட்டவை, அவற்றால் பலர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே, அது குறித்து நாம் விவாதிக்க முடியுமா? தமிழக அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மாற்று மருத்துவ முறைகளை முயன்று பார்க்கின்றன?

    ReplyDelete
  5. Dear Badri,
    Noble cause. A worthy cause for you to champion. I pledge my support and assistance. Pl. let me know when you start.
    One suggestion though: Instead of starting one more organisation , why dont you consider utilising the resources of an existing one after carefully vetting it. One that springs into my mind is 'SAPIENS HEALTH FOUNDATION' run by Dr. Ravichandran, a leading nephrologist.
    Regards,
    Jayakanth.
    Abu Dhabi.

    ReplyDelete
  6. 'ORGAN DONATION" is yet to pick up in Tamilnadu.On Augusat 6th the ORGAN DONATIONDAY The Times of Indai much publised as hey are doing every effort to arrange for organ donation adn even publlish a Web Site and I have myself Registered for Donation of my Entire Body on my death. a READYMADE REPLY RECEIVED FROM TIMES O INDIA SAYING THAT SOME NGO WOULD CONTACT ME AND ISSUE REGISTRtion card AND TOEK; bUT i AM YET TO HEAR FROM THEM.IF ANY WHISTLE BOWLER WOULD START A MOVEMENT FOR PROPER REGISTRATION HUNDRED OF PERSONS LLIKE ME ARE RERADY TO EONATE EVEN THE ENTIRE BODY ONDEATH; Why you should not take this as as a strting for such a ting early;

    ReplyDelete
  7. Natural Healing Solutions

    There are many good diuretic and nephritic or kidney-oriented herbs available today that cleanse and purify, tone, strengthen, revitalize, rejuvenate, and revivify the kidneys. Theses herbs include:
    Agrimony
    Uva Ursi
    Cornsilk
    Juniper Berries
    Buchu
    Gravel Root (Queen of the Meadow)
    Celery Seed
    Pelitory of the Wall
    Tribulis
    Cleavers
    Water Eryngo
    Horsetail, and
    Nettle

    Dietary Intervention

    Drink fresh vegetable juice, especially with parsley and celery, two potent and reliable natural diuretics. These vegetables will nourish the kidneys in addition to build the kidneys.

    Drink bitter and unsweetened cranberry juice to help cleanse the kidneys and urinary-genital tract. If the taste is too strong, try diluting the juice with water.

    Drinking alkaline water will greatly neutralize the effects of acid in the body and will also cause the tissues of the body to throw off toxins. If alkaline water cannot be found, distilled water will do. It is so important to drink water so as to flush the body out.

    Other dietary intervention strategies are:
    Limit intake of salt-no fast food, no processed foods, no cheese, no canned or dehydrated soups, etc.
    Limit intake of high-potassium foods such as bananas, oranges, tomatoes, spinach and potatoes
    Choose low phosphorous foods such as corn, rice and green beans
    Limit protein intake-avoid meats, eggs, milk, cheese.
    Avoid dairy products, nuts, peanut butter, dried beans and peas, hot chocolate and beer.
    Source: http://dherbs.com/news/4636/4669/Dialysis/d,ai.html#.UmEnCVCsiSo

    ReplyDelete
  8. Yes, it goes upto rs.2000 per dialysis and two times a week is the minimum average.
    Regarding alternative medicine for Chronic Renal failure,there is no any concrete data or studies,as for as i know.Some of my patients, who were not able to pay for the allopathic treatment,tried alternative ways.But these were isolated cases.

    ReplyDelete
  9. நான் சுட்டும் கட்டுரை டயாலிஸிஸ் தொடர்பானது இல்லையென்றாலும், டாக்டர் புருனோ சர்க்கரை நோய் குறித்து (ஹிந்துவில் வெளியான ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக) தெளிவாக எழுதியிருப்பதை பலரும் வாசிக்க வேண்டும் என்பதற்காக அவரது கட்டுரை லிங்க் இங்கே:
    http://www.twitlonger.com/show/n_1rpv3gq

    ReplyDelete
  10. Dear Badri,

    I agree and would like to support this. Thanks!

    Regards
    Rajarajan D
    rajarajan.dakshinamoorthy@gmail.com

    ReplyDelete
  11. //
    'ORGAN DONATION" is yet to pick up in Tamilnadu.On Augusat 6th the ORGAN DONATIONDAY The Times of Indai much publised as hey are doing every effort to arrange for organ donation adn even publlish a Web Site and I have myself Registered for Donation of my Entire Body on my death. a READYMADE REPLY RECEIVED FROM TIMES O INDIA SAYING THAT SOME NGO WOULD CONTACT ME AND ISSUE REGISTRtion card AND TOEK; bUT i AM YET TO HEAR FROM THEM.IF ANY WHISTLE BOWLER WOULD START A MOVEMENT FOR PROPER REGISTRATION HUNDRED OF PERSONS LLIKE ME ARE RERADY TO EONATE EVEN THE ENTIRE BODY ONDEATH; Why you should not take this as as a strting for such a ting early;
    //

    Organ Donation is Different
    Cadaver Organ Donation is Different
    Whole Body Donation is different

    What do you want to do

    ReplyDelete
  12. Daily dose of baking soda affects kidney function: Study
    Published on September 27, 2010 at 2:27 AM · No Comments

    inShare

    A daily dose of sodium bicarbonate—baking soda, already used for baking, cleaning, acid indigestion, sunburn, and more—slows the decline of kidney function in some patients with advanced chronic kidney disease (CKD), reports an upcoming study in the Journal of the American Society of Nephrology (JASN). "This cheap and simple strategy also improves patients' nutritional status, and has the potential of translating into significant economic, quality of life, and clinical outcome benefits," comments Magdi Yaqoob, MD (Royal London Hospital).

    The study included 134 patients with advanced CKD and low bicarbonate levels, also called metabolic acidosis. One group received a small daily dose of sodium bicarbonate in tablet form, in addition to their usual care. For this group, the rate of decline in kidney function was greatly reduced—about two-thirds slower than in patients. "In fact, in patients taking sodium bicarbonate, the rate of decline in kidney function was similar to the normal age-related decline," says Yaqoob.

    Rapid progression of kidney disease occurred in just nine percent of patients taking sodium bicarbonate, compared to 45 percent of the other group. Patients taking sodium bicarbonate were also less likely to develop end-stage renal disease (ESRD) requiring dialysis.

    Patients taking sodium bicarbonate also had improvement in several measures of nutrition. Although their sodium levels went up, this didn't lead to any problems with increased blood pressure.

    Low bicarbonate levels are common in patients with CKD and can lead to a wide range of other problems. "This is the first randomized controlled study of its kind," says Yaqoob. "A simple remedy like sodium bicarbonate (baking soda), when used appropriately, can be very effective."

    The researchers note some important limitations of their study—there was no placebo group and the researchers were aware of which patients were receiving sodium bicarbonate. "Our results will need validation in a multicenter study," says Yaqoob.

    Source: http://www.news-medical.net/news/20100927/Daily-dose-of-baking-soda-affects-kidney-function-Study.aspx

    Search in google -You can find more info

    ReplyDelete
  13. //சுமார் 600 பேருக்கு ஓராண்டில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தமுடிகிறதாம்.// 100 - 150 per year
    755 from 2008 to 2013

    ReplyDelete
  14. //* அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை. இருக்கும் கருவிகள், தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன.//


    * அரசு மருத்துவமனைகளில் - chronic renal failure நோயாளிகள் தொடர்ந்து பல வருடங்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை.

    ReplyDelete
  15. //
    புரூனோ: சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிசிஸ் அல்லது அல்லோபதி தவிர மாற்று மருத்துவ முறைகள் எப்படிப்பட்டவை, அவற்றால் பலர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே, அது குறித்து நாம் விவாதிக்க முடியுமா? தமிழக அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மாற்று மருத்துவ முறைகளை முயன்று பார்க்கின்றன?
    //

    As far as I know, no one has been cured of end stage renal disease through medicine

    Acute Nephritis, ARF can be reversed

    ReplyDelete
  16. ஆனால்

    மாற்று மருத்துவமுறைகளை கடைபிடித்தவர்களுக்கு அதிக அளவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது

    ReplyDelete
  17. http://islamicexorcism.files.wordpress.com/2010/10/kalonji-black-seeds-benefits.pdf

    ReplyDelete
  18. http://www.youtube.com/watch?v=hnDN7EuBD68 Top 10 Superfoods For Healthy Kidneys & Kidney Disease

    ReplyDelete
  19. அனைவருக்கும் இனிய வணக்கம்,

    https://www.facebook.com/I.luv.Tamilnadu/photos/a.179761968765151.43688.179604478780900/533105833430761/?type=1

    கோவை திரு. பி.சுப்பிரமணி அவர்கள், ஒரு உன்னத மனிதன், வெகு சிலரே இவர் போல...

    கோயமுத்தூர் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது.

    அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே .

    கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது , சாந்தி கியர்ஸ் திரு. பி.சுப்பிரமணி அவர்கள்.

    தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.

    அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :

    1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)

    2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)

    3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.

    4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.

    5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.

    மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் , ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.

    இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

    http://www.shanthisocialservices.org/index.html

    திரு.ஞானி அவர்கள் கோவையை சார்ந்தவர் என்றால் இன்னும் நல்மே...

    ReplyDelete
  20. The botanical name of Black Cumin Seeds is Nigella sativa or Cuminum cyminum and belongs to the buttercup family or Umbelliferae. In Tamil, it is called as Karunjeeragam. Other common names include black cumin, black seed, Kalonji, fennel-flower, black caraway or nutmeg flower. They are also referred to as “Love in the Mist”. In Middle East countries, it is called as “Habbat al Barakah” meaning blessed seed.

    The oil extracted from the seeds is called as Black Cumin oil. The other names include black seed oil or black oil. http://rajanjolly.hubpages.com/hub/Kalonji-Black-Seed-Or-Nigella-Sativa-Seed-And-Its-Health-Benefits

    ReplyDelete
  21. KIDNEY TROUBLE, INFECTION IN THE KIDNEYS: Take half tea spoon of Kalonji oil; add 2 grams Akar khara Powder, mix one spoon honey with one cup of water and drink. This treatment is also useful for chronic cough (Purani Khansi). Treatment may continue 21 days.

    ReplyDelete
  22. திரு.பத்ரி அவர்களுக்கு,

    அரசு என்றால் மோசம் என்ற மனநிலை எனக்கில்லை. 108 போன்ற சிறப்பான சேவை அரசு உதவியுடன் தானே செயல்படுகிறது. அதைப்போல, இந்த ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்காக நீங்கள் சொல்லும் திட்டம் வளர வாழ்த்துகிறேன். ஒரு அன்பர் சொல்லியிருப்பது போல ‘உறுப்பு தானம்’ செய்வதிலும் எனக்கு மகிழ்ச்சியே. கமல் ரசிகன் என்ற முறையில் நான் பல வருடங்களுக்கு முன் ‘லயன்ஸ் கிளப்’ மருத்துவமனையில் அதற்காக பதிவு கூட செய்து கொண்டேன். அதன் நிலைமை என்னவென்று இப்போது தெரியாது.

    ReplyDelete
  23. "மூன்று மெஷின்கள் கொண்ட ஒரு அமைப்பு மூலம் மாதம் 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியுமென்றால்" - மாதம் 30 பேருக்கு தானா?

    ReplyDelete
  24. Srimatha Cancer care in Chennai started giving free dialysis along with cancer care for deserving.

    http://srimathacancercare.com/about.html

    //In addition to this service poor cancer patients we have also installed two dialysis machine with a view to provide totally free dialysis for deserving poor kidney patients.//

    ReplyDelete
  25. good idea it is high time people sholud have social responsibility

    ReplyDelete