பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. 37வது சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 10 முதல் 22 வரை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் தொடங்க உள்ளது குறித்து.
# வாசலிலிருந்து கண்காட்சி இடம் வரை செல்ல இலவச வாகன வசதி
# கணினி டிக்கெட் வசதி
# மொபைல் எண் கொடுத்தால், தினமும் அந்தந்த நாள் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் தரப்படும்
# புத்தகக் கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் உட்கார்ந்துகொள்ள இடவசதி
# கண்காட்சி வளாகத்தின் உள்ளேயே ஒரு ஏ.டி.எம் வைக்கப்படும். அதில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
# ஸ்டால் அலோகேஷன் கணினிமூலம் செய்யப்பட்டது
# சிறுகதைப் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும் கதைகளை பபாசியே பதிப்பிக்கும்
# 1500 கார்கள் நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள மிலிடரி மைதானத்திலும் கார்களை நிறுத்திக்கொள்ளலாம்.
# நம்ம ஆட்டோவுடன் இணைந்து உள்ளேயே மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம்
# கழிப்பறை வசதிகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன
# கழிப்பறை வசதிக்காகக் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
# உள்ளரங்கில் எழுத்தாளர்-வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
# ஏழு லட்சம் இலவச டிக்கெட்டுகள் பள்ளி மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது
# சென்னை புத்தகக் காட்சிக்கு ஆப்பிள் ஐ ஓஎஸ், ஆண்டிராய்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளன
# மருத்துவ வசதி உள்ளேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது
# மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர இருக்கை ஏற்பாடு செய்துள்ளார்கள்
# புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு அமைச்சர்கள் வருகிறார்கள்
# புதிய லோகோ அறிமுகம்
# நுழைவுக் கட்டணம் ரூ. 10. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டோருக்கு டிக்கெட் கிடையாது
# சென்ற ஆண்டு சுமார் 3.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன
# இம்முறை, சென்ற ஆண்டைவிட 50% அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
# வேலை நாட்களில் 2-9, விடுமுறை நாட்களில் 11-9 நேரம்
# சென்ற ஆண்டு 10 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது, இந்த ஆண்டு 15 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று எதிர்பார்ப்பு
# 800 அரங்குகள், 400 பங்கேற்பாளர்கள், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, வட மாநிலங்களிலிருந்து பதிப்பாளர்கள் பங்கேற்பு. இரண்டு லட்சம் சதுர அடி.
# பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, சிறுகதைப்போட்டி.
அருமையான முயற்சிகள். பாராட்டுகள். லோகோ.... என்பிடி கடந்த புத்தகத் திருவிழாவில் பயன்படுத்திய வடிவத்தை சற்றே உல்டா செய்திருக்கிறார்கள்.
ReplyDeleteவாசலிலிருந்து கண்காட்சி இடம் வரை செல்ல இலவச வாகன வசதி - என்பது நிகழ்ந்துவிட்டால் ஆண்களில் வயதானவர்களும், தாய்மார்களும் பாராட்டுவார்கள்.
ReplyDeleteசாப்பாடு, காண்டீன் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே :-)
ReplyDeleteநுழைவுக் கட்டணம் 50 ரூபாய் என்று வைத்து, அதில் 40 ரூபாயைப் புத்தகங்கள் வாங்கும்போது பயன்படுத்தக்கூடிய (ரெடீம்) கூப்பனாகத் தரலாம். கார் பார்க்கிங் கட்டணத்தைவிட நுழைவுக்கட்டணம் குறைவாக இருக்கத் தேவையில்லை. 40 ரூபாய்க்குக்கூடப் புத்தகம் வாங்கும் எண்ணமே இல்லாதவர்களின் கூட்டம் குறையும். காணும் பொங்கல் (ஜன 16) நுழைவுக் கட்டணம் ரூ. 100 என்று இருக்க வேண்டும். அன்று யாரும் எதையும் பார்க்கவோ, வாங்கவோ முடியாத வகையில், ஊழியர்களும் எதையும் கவனிக்க முடியாத வகையில் ஒரேயடியாகக் கூட்டம் குவிவது நல்ல விஷயம் அல்ல.
ReplyDelete(இத்தனை லட்சம்பேர் குவிந்தார்கள் என்பதைவிட, குறைந்த எண்ணிக்கையில், அதிகமாகச் செலவழிக்கக் கூடியவர்கள் வருவதே பதிப்பாளர்களுக்கு அதிகம் பயன்படும் என்று நினைக்கிறேன். கணக்கெடுத்துப் பார்த்தால் இப்போது வருபவர்களில் 10% பேர்தான் 90% மதிப்புக்குப் பத்தகங்களை வாங்கியிருப்பார்கள். மிச்சம்பேர் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி இத்யாதிகளை வாங்கியிருப்பார்கள். அந்த 90% பேர் வரவே தேவையில்லை என்று நினைக்கிறேன்.)
அடுத்து, 'டோர் டெலிவரி' சர்வீஸ் என்று ஒன்று ஆரம்பிக்க வேண்டும். விருப்பம் உடையவர்கள் ரூ. 100 செலுத்தி முகவரியைப் பதிந்துகொண்டால், அவர்கள் வாங்கும் புத்தகங்கள் 'டோர் டெலிவரி' என்ற ஆப்ஷனைக்கொடுத்துவிட்டால், ஒட்டுமொத்தமாக ஒரே பொதியாக வீட்டில் (உள்ளூரில்தான்) டெலிவரி செய்யப்படவேண்டும். (மேக்ஸிமம் எண்ணிக்கை வைத்துக்கொள்ளலாம்). இதற்கு ஒரு வாரம்கூட எடுத்துக்கொள்ளலாம். அன்றே படிக்க விரும்பும் ஓரிரு புத்தகங்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு வந்துவிடலாம். மற்றவற்றைச் சுமக்க வேண்டாம். குறிப்பாகக் கார் எடுத்து வராதவர்களுக்குப் பயன்படும்.
சரவணன்
நண்பரெரே!!!! என்.ஆர்.ஐ ஆட்கள் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமா? விவரம் தர முடியுமா?
ReplyDeleteIN THE BOOK FARE TOILETS ARE WORST CANTEEN FOOD PRICES
ReplyDeleteARE EXORBITANT. PLEASE INSTAL AMMA CANTEENS INSIDE. NO CONVEYANCE FROM THE GATE TO THE FAIR. ONLY PEOPLE COMING BY CARS ARE HAPPY, ONE GETS TIRED VERY EASILY NAVIGATING THE STALLS. ONLY CONSOLATION IS WE CAN GET VARIETY OF BOOKS ALL UNDER ONE ROOF AND THE 10% DISCOUNT