Tuesday, April 15, 2014

மோதியை ஆதரிப்பவர்கள் யார் யார்?

தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி கணிசமான வாக்குகளைப் பெறும். எவ்வளவு இடங்களைப் பெறும் என்பது தெளிவாக இல்லை. 5 முதல் 7 இடங்கள் இருக்கலாம் என்று கணிக்கிறேன்.

எப்படி இருந்தாலும் மிகக் கணிசமான, இதுவரை இல்லாத அளவு அதிகமான வாக்குகள் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும். இது தேமுதிகவின் வாக்குகளா, பாமகவின் வாக்குகளா அல்லது மதிமுகவின் வாக்குகளா? என் கருத்தில் கிடைக்கப்போகும் பெரும்பான்மை வாக்குகள் நரேந்திர மோதிக்காகக் கிடைக்கப்போகும் வாக்குகளே.

இவையெல்லாம் இந்துத்துவ வாக்குகளா என்றால் கட்டாயமாக இல்லை. சொல்லப்போனால் இந்த வாக்குகளை அளிக்கப்போகும் பெரும்பான்மை மக்களுக்கு இந்துத்துவம் என்றால் என்னவென்றே தெரியாது.

இணையத்திலும் எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர் அவர். அவர் பெயரைக் குறிப்பிடுவதில் அவருடைய இமேஜுக்கு சிக்கல்கள் நேரலாம். சேலத்தில் இளநீர் விற்கும் பாட்டி, ஆட்டோ ஓட்டுபவர் ஆகியோரெல்லாம் மோதிக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார். ஏன் என்பதற்கு பதில், ‘மோதி வந்தால் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்படும்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையா, நிஜமாகவே நல்ல மாற்றம் ஏற்படுமா என்பதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது. ஆனால் தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் பலரும் இதை நம்ப ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் செய்தியே. பத்திரிகைகள் ஊதிப் பெருக்கியதாலோ வேறு எதனாலோ இது இப்படி ஆகியிருக்கலாம். ஆனால் இவை வாக்குகளாகவும் மாறப்போகின்றன என்பதுதான் நிதர்சனம்.

நான் கடந்த பல நாட்களாகச் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் நபர்களிடமெல்லாம் இது குறித்துப் பேசிவருகிறேன். மோதிக்கு வாக்களிக்கவேண்டும் என்று விரும்பும் பொதுவான மக்கள் குழுக்கள் இப்படிப்பட்டவையாக இருக்கின்றன:

(1) முதல்முறை வாக்காளர்கள்: கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஆண்கள். இவர்கள் மோதியின் வருகையால் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும், தங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று உள்ளூர நம்புகிறார்கள். ஒரு பொறியியல் கல்லூரியில் பேசும்போது மேடையில் இருந்தபடியே யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதற்கு, மோதிக்கு என்று மிக அதிகமானோர் கை தூக்கினர். பத்து பத்து பேராகத் தனியாகப் பேசும்போதெல்லாம், அதில் ஐந்து பேருக்குமேல் மோதிக்கு வாக்களிக்கப்போவதாகச் சொன்னார்கள். கல்லூரி செல்லும் பெண்களிடம் பேசுவதற்கு எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்வே அவர்கள் எப்படி வாக்களிக்கப்போகிறார்கள் என்பதுகுறித்து அறுதியாகச் சொல்ல முடியாது.

(2) மத்திய வர்க்க மாதச் சம்பளக்காரர்கள்: சாதி வித்தியாசம் பாராமல், பல புதிய வாக்குகள் இந்தப் பகுதியில் மோதிக்குக் கிடைக்க உள்ளது. வேறு வாய்ப்புகள் இல்லையென்றால் இவர்கள் மாறி மாறி திமுக, அஇஅதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடியவர்கள். ஆனால் இம்முறை இதில் பலர் மோதி (எனவே பாஜக கூட்டணி) என்று முடிவெடுத்துள்ளனர்.

(3) அடிமட்ட நிலையில் இருப்பவர்கள்: இதுதான் எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்தது. இவர்கள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வண்டி ஓட்டுநர்கள், கறிகாய் விற்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று சிலரிடம் பேசிப் பார்த்ததில் கிடைத்த பதில் ஆச்சரியமாக இருந்தது. பாரம்பரியமாக திமுக, அஇஅதிமுக கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் நிறையப் பேர் அப்படியே தொடர்ந்து செய்யப்போகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் இம்முறை தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கப்போவதாகச் சொன்னார்கள். அதாவது அவர்கள் பரிசோதனை முயற்சியாகத் தங்கள் வாக்குகளை மோதிக்குத் தருவதாக முடிவு செய்துள்ளனர்.

இதனாலெல்லாம் தமிழகத்தின் பாஜக கூட்டணியின் எண்ணிக்கை பெரிதாக மாறிவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பெரியார் மண், அது இது என்றெல்லாம் தரப்படும் பில்ட்-அப் எந்தவிதத்திலும் வேலை செய்யப்போவதில்லை. மக்கள் governance மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மோதி ஆட்சிக்கு வந்தால் governance உருப்படியாக இருக்கும், பொருளாதாரம் வளம் பெறும், அதன்மூலம் தங்களுக்கும் வளம் கிடைக்கும் என்று ஏதோ ஒரு வகையில் அவர்கள் நம்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மக்கள் நினைப்பது ஒருவேளை நடக்கலாம் அல்லது மக்கள் ஏமாற்றம் அடையவும் செய்யலாம். ஆனால் தேர்தலுக்குமுன் மக்கள் தங்களுடைய இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் கருதவில்லை.

இன்னும் எட்டு நாட்கள்தான் பாக்கி.

33 comments:

 1. இவ்வளவு வாக்காளர்கள் மாறி விட்டார்கள் என்று எழுதி பின்னர் 7 இடங்கள் வரலாம் என்பது பாஜக தனியாக நின்றிருந்தால் சரி... இவ்வளவு பெரிய கூட்டணிக்கு 7 இடங்கள் கொஞ்சம் பழைய ஒட்டுக் கணக்கிலேயே வர வாய்ப்பிருக்கிறது... நீங்கள் சொல்லியிருக்கும் மாற்றம் வாக்காக மாறுமென்றால் சீட்டுக்கணக்கில் இல்லையென்றாலும் ஒட்டுக்கணக்கிலாவது பாஜக அணி இரண்டாமிடம் பிடிக்கவேண்டும்...இல்லையென்றால் உங்கள் கணிப்பு என்பது ஒரு பிரச்சாரயுத்தி என்றே சொல்லலாம்...

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்வது, பாஜகவுக்கு என்றே இப்போது புதிய வாக்குகள் பல சேர்ந்துள்ளன என்பதுதான். அவை எத்தனையாக இருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. ஏற்கெனவே இந்தக் கூட்டணிக்கு இருக்கும் வாக்கு வங்கியை விட இப்போது கணிசமாக அதிகமாக வாங்குவார்கள். வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் சாத்தியமே.

   Delete
  2. These are swing votes like it happened in 1998 and 1999. Even if BJP comes to power, after frustration they may fall back to congress, admk or dmk in the next election. They are not a dedicated vote bank of BJP. These set of voters are going with public sentiment and may not have strong ideological backing to justify their vote. The percentage of such voters may not be > than 5 or 6%, these are the folks who add to the % of votes cast and cause surprise wins.

   Delete
 2. 1) மோடி வந்தால் அது நடக்கும், இது நடக்கும் என்றெல்லாம் கொடுக்கப்படும் பில்ட் அப்போடு ஒப்பிடும்போது பெரியார் பிறந்த மண், அது இதுவென்று கொடுக்கப்படும் பில்ட் அப் மிக மிக மிக மிகக் குறைவு.

  2) நரேந்திர மோடி, 'குஜராத் மாடல்', திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தையும்மீறி தமிழகத்தில் பெரியாரின் தாக்கம் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றே நினைக்கிறேன். மற்றபடி, தனி நபர்களின் தாக்கம் காலாகாலத்துக்கும் நிலைத்திருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. காந்தியின் தாக்கம் அவர் வாழ்ந்த காலத்திலேயே தேய்ந்து மறையத் தொடங்கிவிட்டது. அம்பேத்கரின் தாக்கம் அவர் மறைவுக்குப் பிறகு பலம்பெற்று வளரத் தொடங்கியது. யாருடைய சிந்தனைகள் முக்கியம் என்று நாம் நினைக்கிறோமோ, யாருடைய தேவை இன்னமும் நீடிக்கிறது என்று கருதுகிறோமோ அவருடைய தாக்கம் மறைந்துவிடாமல் இருக்க நாம் முயற்சி செய்யவேண்டும்.

  3) நீங்கள் குறிப்பிட்டபடி பலரும் மோடிக்கு ஆதரவாகப் பலரும் பேசி வருவதை நானும் பார்க்கிறேன். தேர்தலைக் குறி வைத்தே இந்த அலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதால் தேர்தல் வரை இது நீடிக்கவே செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. பெரியாரின் தாக்கம் எவ்வளவு என்பது குறித்து கருத்துப் பூர்வ விவாத முறையில் அன்றி, அறிவியல் பூர்வ, கள ஆய்வுகள், புள்ளியியல் விவரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சி ஏதாவது மேற்கொள்ளப்பட்டுதா? உதாரணமாக, 1914 இல் தமிழகத்தில் எத்தனை பிள்ளையார் கோவில்கள் இருந்தன, மக்கள் தொகை என்ன? இன்று தமிழகத்தில் எத்தனை பிள்ளையார் கோவில்கள் உள்ளன, மக்கள் தொகை என்ன? அதாவது "per capita Pillaiyar kovil index" என்பது பெரியாரின் தாக்கத்தில் எவ்வளவு குறைந்துள்ளது?

   Delete
 3. // காந்தியின் தாக்கம் அவர் வாழ்ந்த காலத்திலேயே தேய்ந்து மறையத் தொடங்கிவிட்டது. ///

  இன்று அரப் ஜாஸ்மின் ரெவல்யூஷன் போன்ற இயக்கங்களில் காந்தியின் தாக்கம் அவர் வாழ்ந்த காலத்தைவிட அதிகமாகவே இருக்கிறது!

  ஆனால் மோடியைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள பிம்பம் தேர்தலுக்குப் பின் அவருக்கு எதிராகவே போகும். புதிதாக பாஜக-வுக்கு மோடிக்காக வாக்களிப்பவர்கள் அவர் வந்தவுடனே மின்வெட்டு, தண்ணீர் பிரச்சினை, பெட்ரோல் வில் ஏற்றம் முதல் மீனவர் பிரச்னை வரை எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறார்கள். அவர்கள் மிக விரைவில் ஏமாற்றமடைவார்கள். மோடி திறமைசாலியாகவே இருந்தாலும் நாடு முழுவதும் மாற்றங்களை மிக மெதுவாகவே கொண்டுவர முடியும். அதற்குள் வாக்காளர்கள் பொறுமை இழந்துவிடுவார்கள். மேலும் நரேகா போன்ற 'ஊதாரி' திட்டங்கள் நிறுத்தப்பட்டால் விளைவு உடனடியாகவும் கடுமையாகவும் அடுத்து வரும் தேர்தல்களில் பிரதிபலிக்கும்!

  மோடி பற்றிய புகழ்ச்சிகள் உண்மையில் நவீன் பட்நாயக், நிதிஷ் குமார், மனோகர் பாரிக்கர், சிவ்ராஜ் சிங் சௌஹான், ஏன் அன்றைய ராஜசேகர ரெட்டி என்று பல கட்சிகளைச் சேர்ந்த பலருக்கும் பொருந்தும் என்பதே உண்மை. அவர்கள் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு ஊடக பிம்பம் கட்டமைக்கப்படவில்லை, அவ்வளவே.

  சரவணன்

  ReplyDelete
  Replies
  1. ‘Maut ka saudagar’ என்று ‘அன்னை’ சோனியா அவர்கள் முழங்கினார்கள். ‘ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை தனிப்பட்ட முறையில் கொன்று குவித்த இந்து’ என்று மோடியைத் தாக்கி, கான்’கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்துக்களைக் குற்ற உணர்வு கொள்ள வைத்து வோட்டுப் பெற முயன்றார்கள். அரசியல் ரீதியாக எதிர்க்க இயலாத மோடியை, தனி மனிதத் தாக்குதல் மூலம் வீழ்த்த நினைத்தார்கள். இந்தச் சேவையை ஆரவாரத்துடன் இந்தியா மட்டுமின்றி, அகில உலகத்திலும் பரப்புவதை ஒரு தொண்டாகச் செய்து முடிக்க பத்திரிக்கைகளும், டிவி சானல்களும், NGOக் களும், ‘அறிவுஜீவி’ களும் களம் இறங்கினார்கள். - திரு மோடி அவர்கள் பிரபலமானது இப்படித்தான்.

   ‘மோடி ஒரு தேவ தூதர்’ என்பது குஜராத் அரசு மட்டுமே செய்யும் ஊடகப் பிரசாரம். அதன் reach மற்றும் தாக்கம், அகில இந்திய ‘கான்’கிரஸ் மற்றும் கூட்டணிகளின் ஊடகப் பலத்துக்கு முன் வெறும் ஜுஜுபி. மோடி கவனிக்கப் பெற்றது எதிரிக்கட்சிகளின் வெறுப்புப் பிரசாரத்தினால் மட்டுமே.
   அப்படி இந்த மனிதர் என்னதான் பாவத்தைச் செய்து விட்டார்? என்று இந்தியாவின் இதரப் பகுதியிலிருந்த மக்கள் விசாரிக்க ஆரம்பித்த போதுதான் குஜராத்தின் கட்டமைப்பு வசதிகளில் இருந்த மேம்பாடு தெரிய வந்தது. மோடி ஒரு அரக்கன் என்ற மீடியா பிம்பம், ‘அதெல்லாம் கிடக்கட்டும், சோத்துக்கு வழி சொல்லு!’ என்கிற பெரும்பான்மை நடைமுறை மனிதர்களிடம் மக்களிடம் எடு படவில்லை.

   மோடி இப்போதும் தோற்கலாம். அதன் காரணம் அவர் ‘அரக்கர்’ என்பதால் அன்று. நட்பு வட்டங்களில் நடப்பு விஷயங்களை விவாதித்து, பொது நன்மைகளை ஏற்றுக் கொண்டாலும், வோட்டுப் போடும்போது தம்மை உடனடியாகச் சார்ந்த விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு வோட்டளிப்பது பெரும்பான்மை இந்தியர்கள் வழக்கம். தம் மொழி, இனம், மதம், ஜாதி என்ற அடிப்படையில் மட்டுமே வோட்டளிப்பார்கள். உணர்ச்சிபூர்வமான விஷயங்களுக்காக தங்கள் வாழ்வையும், தங்களையும் பறிகொடுத்து வோட்டளிப்பார்கள். கட்சிகளின் திட்டங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, இதுவே அனைவரின் வருங்காலத்துக்கும் நல்லது என்று வோட்டுப் போடுவது பெரும்பான்மையினர் வழக்கம் அன்று.
   தாங்கள் குறிப்பிடும் மோடியின் பிம்பம் என்பது பெரும்பான்மை ஊடகங்களின் வெறுப்புப் பிரசாரம் மட்டுமே.

   Delete
 4. அய்யா மருதன், ரஷ்யாவிலேயே ஸ்டாலின் தாக்கம் குறைந்ததையும் சேர்த்து கொள்ளலாம்.

  ReplyDelete
 5. bjp = max 1
  admk = max 39 min 35
  dmk = max 2
  that s all . . .

  ReplyDelete
 6. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க வேண்டிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாம், மக்கள் கருத்துக்கு மாறாக, மோதியை, அவரது தனிப்பட்ட வாழக்கை உட்பட குறை கூறி அவதூறு பரப்பி வருவது எவ்வளவு திட்டமிட்ட செயல் என்று வெளிப்படையாக தெரிகிறது. எவ்வளவு வேணா அவதூறு செய்யுங்க சார்.. இந்த முறை மோதி சர்க்கார் :)

  ReplyDelete
 7. 1)
  பத்திரிகைகள் ஊதிப் பெருக்கியதாலோ ...

  இதுல ஊதிங்கறதுக்கு அர்த்தம் பொய் சொல்லி, ஜோடித்து, மிகைபடுத்தி, இப்படி நிறைய இருக்கு. உண்மையை சொன்னதற்கு நன்றி.

  2)
  மக்கள் நினைப்பது ஒருவேளை நடக்கலாம் அல்லது மக்கள் ஏமாற்றம் அடையவும் செய்யலாம்..

  இந்த வரிகள் எதற்கு? நாளைக்கு நான்தான் சொன்னனே ஏமாற்றம் அடையவும் செய்யலாம்ன்னு சாக்கு போக்கு சொல்றதுக்கா? சொல்ல வருவதை, ஆணித்தரமாக சொல்லவும்.

  ReplyDelete
 8. மருதன்...மோடி வராவிட்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்...அட்லீஸ்ட் வயித்துல அசிடிட்டி குறைந்து இரவில் தூக்கம் கொஞ்சம் வரும்...

  ReplyDelete
 9. காந்தியின் தாக்கம் இல்லையா? நல்ல காமெடி. மோடியா ஆட்சிக்கு வந்தாலும் “இந்ததுத்துவ” ஆட்சி நடத்த முடியாது. காரணம் இன்னமும் இங்கு காந்தியின் தாக்கம் இருப்பதால்தான். காந்தி ஒரு மாநிலத்திற்கோ தேசத்திற்கோ இனத்தோ உரியவர் அல்ல மாறாக உலகத்துக்கோ பொது இன்னும் சரியாகச் சொல்வதானால் தனிமனுதனுக்கானவர். (Wait and read Ram Guha's to be book written book about how World inspired by Gandhi)

  ReplyDelete
  Replies
  1. Ram guha periya arivali than... What is exactly "Hindutva Rule" sir?

   Delete
  2. What is that "Hindutva Rule" sir? When did it prevail in india?

   Delete
  3. ராமச்சந்திர குஹா மூலம் காந்தியை எடை போடும் நீங்கள் ஒரு புரட்சிக் கலைஞர்! அதென்னது 'இந்த துத்துவா, அந்த துத்துவா?' ஒரே தத்துப் பித்துவா!

   Delete
 10. தனி மனிதர்களின் கொள்கைகள் அவர்கள் காலம் வரை, அல்லது அவர்களக்கு பிறகு சிறிது காலம் வரை இருக்கும். காந்தி, அம்பேத்கர், பெரியார் இவர்களெல்லாம் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள். காந்தியோ, அம்பேத்கரோ அல்லது பெரியாரோ தேர்தலில் போட்டியிட்டு மந்திரிகள் ஆகவில்லை. அவர்கள் பெயரை சொல்லி பலர் மந்திரிகள் ஆனார்கள். மோடி அப்படி இல்லை. மோடிக்கென்று எந்த தனிப்பட்ட கொள்கையும் கிடையாது. அவர் சார்ந்த கட்சிக்கு வேண்டுமானால் கொள்கை இருக்கிறது. வரும் தேர்தலில் மோடிக்கு விழப்போகும் வாக்குகளெல்லாம் ஹிந்துத்வா கொள்கையினால் விளைந்தன்று. மோடி மக்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்வார் என்ற பட்சத்தில் மட்டுமே. மோடியும் மக்களின் நாடி துடிப்பை நன்கு உண்ர்ந்திருக்கிறார். அஹிம்சாவாதி என்றோ, திராவிடன் என்றோ, தலித்துகளின் தலைவர் என்றோ ஒரு சிறிய வட்டத்திற்குள் இருந்துகொண்டு 140 கோடி மக்களையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தில் உட்கார முடியாது. அந்த காலமெல்லாம் எப்பொழுதோ மலையேறிவிட்டது. இனிமேலெல்லாம் செய்லபாடுதான் (Performance) எதிர்பார்க்கப்படும். எல்லோருக்கும் பயன்படும் வகையில் பொது மக்களுக்கு என்ன செய்தாய் என்று கேள்விதான் பிரதானமாக இருக்கும். மக்களின் அடிப்படை தேவைய எவன் பூர்த்தி செய்யகிறானோ அவனே தலைவன் என்று அங்கீகரிக்கப்படுவான். கொள்கை அளவில் தலைவராக இருக்கலாம் பிரதமராக இருக்க முடியாது. குண்டு சட்டிக்குள் இருந்து கொண்டு குதிரை ஓட்டுகிற காலமெல்லாம் மலையேறி போய்விட்டது என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 11. அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் பி.ஜே.பி கட்சிகாரகள் இல்லை. அவர்கள் ம.தி.மு.க, பா.ம.க மற்றும் தே.மு.தி.க கட்சி காரர்களாக இருக்கலாம். இந்த கூட்டணி பி.ஜே.பி கூட்டணி இல்லை. தே.மு.தி.க கூட்டணி. 7 இடங்களில் போட்டியிடும் பி.ஜே.பி எப்படி இந்த கூட்டணிக்கு தலைமை ஏற்க முடியும்.

  ReplyDelete
 12. வரும் தேர்தலில் கொடி இல்லாமல், சின்னம் இல்லாமல் இருக்கும் "நோட்டா" கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை அள்ளிவிடும் என்று எங்கள் ஊர்களில் பேசிக்கொள்வதை கேட்கமுடிகிறது.
  உங்கள் ஊர்களில் இன்னும் "நோட்டா" கட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கூறுங்கள்.

  ReplyDelete
 13. இந்தியா முழுவதிலும் காங்கிரஸின்பால் ஏற்பட்டிருக்கும் ’வெறுப்பே’ நரேந்திரமோதியின்பால் ’ஆதரவுப்பேரலை’ என மக்களை விருப்புக் கொள்ள வைத்திருக்கிறது என்பதுதான் அறிவுப் பூர்வமான உண்மை.

  நரேந்திர மோதியின் வெற்றி என்பது காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மற்றும் குடும்பச் சர்வாதிகாரச் சுரண்டலின் தோல்வி என்றுதான் அமையப்போகிறது.
  சொல்லப்போனால் இந்தியா முழுவதிலும் உள்ள கட்சிகள் ஊழலுக்கு எதிராக, நியாயமான நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஓரணியில் ஒன்றுபடவில்லை என்பதும் உண்மையில் காங்கிரஸுக்கு எதிரான அலையைத் தங்கள் ஓட்டு வங்கிக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டுச் சுயநல நோக்கோடுதான் அணி சேர்ந்திருக்கின்றன என்பதும் வெட்கப்படவேண்டிய ஒன்று.

  தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் நரேந்திர மோதியை மையப்படுத்தி பி.ஜே.பி தனித்து நின்றிருந்தால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி மற்ற கட்சிகளைவிட அதிக வாக்குகள் பெற்றிருக்கும்.

  ஆனால் இங்குள்ள பி.ஜே.பித் தலைவர்களின் சுய நலமும் பழக்கப்பட்ட அவர்களுடைய வாக்கு வங்கி குறித்தான அச்சமும் மோதியை நம்புவதற்குப் பதிலாக மக்களின் வெறுப்புக்கு ஆட்பட்ட கட்சிகளின் தயவை நோக்கித் தவம் கொள்ள வைத்து மோதியின் தனிப்பட்ட செல்வாக்கைத் தடுத்திருக்கிறது. இதைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்தான் உணர முடியும்..

  இதன் மூலம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த மோதியின் அலை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடைபட்டுப்போனதுடன், கூட்டணிக்குள் குழப்பமும் நம்பகத்தனமை கெட்டும் மக்கள் ஆதரவு மேலும் வளரமுடியாமல் போயிருக்கிறது.

  நரேந்திர மோதியை மட்டும் மையமாக்கி தமிழ்நாட்டு பி.ஜே.பி தனித்து நின்று தேர்தலில் அரைகூவல் விட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டுக் கட்சிகளிடம் மக்கள் கொண்டிருந்த வெறுப்புக்களும் தேசிய நீரோட்டத்தில் மக்கள் காட்டுகின்ற அக்கறையும் மெஜாரிட்டி ஓட்டுக்களாக மாறி இருக்கும்.

  பிற கட்சித் தலைவர்களிடம் புரையோடிப் போயிருக்கும் பதவி ஆசை தமிழக பி.ஜே.பித் தலைவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதன் விளைவே இங்கு ஏற்பட்டிருக்கும் குழப்பல் கூட்டணி.

  இதையும் மீறி தமிழ்நாட்டில் பி.ஜே.பி வியப்பான வெற்றியைக் காட்டும்,மோதி என்ற மந்திரச் சொல்லால்.

  ReplyDelete
 14. நலங்கிள்ளிWed Apr 16, 02:25:00 PM GMT+5:30

  \\பெரியார் மண், அது இது என்றெல்லாம் தரப்படும் பில்ட்-அப் எந்தவிதத்திலும் வேலை செய்யப்போவதில்லை.\\

  பத்ரியின் பெரியார் எதிர்ப்பு மனநிலை தெளிவாக வெளிப்படுகிறது, ஏதோ பெரியாருக்குப் பெரும் தோல்வி வந்து விட்டதாகப் பெரியார்ப் பகைவர்கள் பலரும் மனத்துள் மகிழ்வது உண்மையே. ஹெட்கேவர், கோல்வால்கர் முதலிய தங்கள் பிதாமகர்களின் பார்ப்பனிய ஆதரவுக் கோட்பாடுகளைச் சொல்லி மோடி தமிழகத்தில் வாக்குக் கேட்கட்டும், பிறகும் அவர் வென்றால் பெரியார் தோற்றதாக ஏற்றுக் கொள்ளலாம். அது வரை இந்தப் பெரியார் எதிர்ப்பாளர்கள் மனங்குளிர்வதில் குறையொன்றுமில்லை.

  ReplyDelete
  Replies
  1. பெரியார்மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை என்னுடன் பேசியுள்ள நண்பர்கள் அறிவார்கள். என் மேற்கண்ட வார்த்தைகளுக்கு மிகத் தெளிவான பொருள் தெரிந்தும் தெரியாததுபோல் நடந்துகொள்பவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘தமிழகம் பெரியார் மண்; இங்கே பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்’ என்று பலர் சொன்னார்கள். இணையத்தில் தேடிப் பார்த்தாலே அந்தத் தகவல் கிடைக்கும். அப்படியான பில்ட்-அப் உண்மை இல்லை; மாறாக தமிழர்கள் மோதி என்பவருக்கு (அவர் யார், அவர் இந்துத்துவரா இல்லையா, அவர் குஜராத்தில் என்ன செய்துள்ளார் அல்லது செய்யவில்லை என்பதைப் பற்றி முழுதாக, ஆழமாக அறிந்துகொள்ளாமலேயே) வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பது என் புரிதல். அது உண்மையா, இல்லையா என்பதை உங்களைச் சுற்றியுள்ள மக்களிடம் பேசி நீங்களே அறிந்துகொள்ளலாம்.

   Delete
  2. ஈ வெ ரா அவர்களின் கொள்கை என்பது பிராமண எதிர்ப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த 'பெரியார் கொள்கை' என்னும் தத்துவத்தை - இன்னும் ஓரளவாவது உயிரோடு தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆற்றலும், பெருமையும் திரு. கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. அவரது மஞ்சள் துண்டு முடிவிலிருந்தும், அவரது வாரிசுகள் தங்கள் பிரச்சாரங்களைக் கோவிலில் இருந்து துவக்குவதைக் கண்ட பின்னும், ஈ வெ ரா அவர்கள் இன்னும் தோற்கவில்லை என்று தாங்கள் மனங்குளிர்வதில் குறையொன்றுமில்லை!

   Delete
 15. Hi,
  This is one of the opinion poll result of a Facebook group belongs to Nilgiris.
  (This is before the BJP candidate disqualification)

  Bharatiya Janata Party (BJP) +24

  AIADMK +9

  DMK +3

  Staying far away and cannot vote +3

  49-O option +2

  Not interested in voting, so wont go +2

  Congress +1

  ReplyDelete
 16. ஜாதி , மதம் பார்க்காமல் நாம் ஓட்டு போடலாம் .. ஆனால் பிஜேபி அரசு அப்படி இருக்குமா? மதம் பார்க்காமல் சேவை செய்யுமா?

  ReplyDelete
 17. BY SEEING THE DRIED UP WATERBEDS OF CAUVERY RIVER THE FARMERS OF TAMILNADU ARE FRUSTRATED..BOTH CONG AND BJP
  GOVTS IN KARNATAKA HAVE DENIED WATER TO TAMILNADU AS PER
  THE TRIBUNALS ORDER. ON WHAT BASIS WE WILL VOTE FOR
  BJP AND CONG.? SO THE CHOICE NARROWS DOWN TO EITHER
  DMK OR ADMK .FOR ABETTING THE CRIMES AGAINST
  SRILANKAN TAMILS BY CONG DMK SHOULD BE REJECTED. SO
  THE VOTE GOES TO AIADMK AS THERE IS NO OTHER GOOD
  CHOICE AVAILABLE.

  ReplyDelete
 18. ஜனனி ரமேஷ்Wed Apr 23, 09:55:00 PM GMT+5:30

  மோடிக்கு ஆதரவாக அல்லது எதிராகப் கருத்துக்கள் பதிவாகும் போது அவருடன் சம காலத்தில் வாழ்பவர்களுடன் ஒப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். மகாத்மா காந்தி, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் காலம் தந்த கொடைகள். பெரியாரின் தாக்கம் அவர் மறைந்த பிறகும் பலம் பெற்று வளர்வதற்கான காரணி அவரின் கொள்கை என்பதுடன் அவரைத் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு மகத்தான ஆதரவுடன் பின்பற்றும் செல்வாக்குள்ள தொண்டர் பலமுள்ள ஆட்சி அதிகாரம் பெற்ற திராவிடக் கட்சிகள். அம்பேத்கரின் பின்புலம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு, அல்லல்பட்டு அவரால் இன்றைக்கு விடியலைக் காணும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பிரிவினர். ஆனால் மகாத்மாக காந்திக்கு என்று யாருமில்லை. கட்சியும் இல்லை. தொண்டர்களும் இல்லை. அவர் மறைந்த போது கொள்ளி வைக்கக் கூட வராமல் பிறந்த 4 பிள்ளைகளும் மூலைக்கு ஒருவராக பிரிந்திருந்தனர். அவருடைய தாக்கம் அவர் வாழ்ந்த காலத்திலேயே மறைந்து விடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தாக்கம் இன்றைக்கும் தொடர்ந்தால்தான் அதிசயம். இம்மூவருக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை. இவர்கள் மூவருமே (பெரியாருக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் கூட) வாரிசு அரசியலை ஊக்குவிக்கவில்லை. இவர்கள் சுயநலமற்ற உத்தம புருஷர்கள். தங்களுக்காக சொத்து, பதவி, சுகம் எதையும் தேடிக் கொள்ளாதவர்கள். ஆகவே மோடியுடன் ஒப்பிடத் தக்கவர்கள் சோனியா, ராகுல், முலாயம், லல்லு, கருணாநிதி, ஜெயலலிதா, சரத் பவார் உள்ளிட்ட சமகாலத் தலைவர்கள்தான் / ஜனனி ரமேஷ்

  ReplyDelete
  Replies
  1. காந்தி, தன்னை நல்லவராக உலகம் போற்றுவதற்காக , இந்துக்களைத தியாகம் செய்யத் தூண்டினார். அம்பேத்கர், தன் இன மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கருதியதால் (இதில் ஓரளவு நியாயமும் உண்டு) இந்துக்கள் எக்கேடு கேட்டால் என்ன என்று செயல்பட்டார். ஈ வெ ரா வுக்குப் பிராமணர்கள் அழிந்தால் போதும். Collateral damage ஆக மற்றவர்கள் அழிந்தாலும் வருத்தம் ஒன்றும் இல்லை! இதில் கொடை, புண்ணாக்கு என்ற சொல்லாட்சிகள் என்னத்துக்கு? நடை முறை வாழ்வின் கட்டுக்கள் தெரியாத வெட்டி ஒப்பனைக் கருத்து!

   Delete
  2. பெரியார் தன் புதுப்பொண்டாட்டி கையில் கட்சியைக் கொடுத்ததால் தானே அண்ணா வெளியேறினார். திராவிட வாரிசு அரசியலின் தந்தை பெரியாரே.

   Delete
 19. BJP front will get 5+ seats. But i believe BJP will not get single seat except Kanyakumari but that is also doubt. As you said I expect BJP will get more vote share not seat.

  ReplyDelete
  Replies
  1. "5+ seats" - since you know the no. of seats, can you please name them?

   Thanks,
   Chan.

   Delete
 20. @Mr. Badri,
  Sorry for the off-topic.

  Before two-three years, there was one stock clearance sale at NHM titled as 'Special Offer' After this, no stock clearance sale/offers were conducted. I'll be happy to see such offers again. Is there any possibility for this in the near future?

  ReplyDelete
 21. மோடியின் வளர்ச்சி என்பது டாடாவுக்கும், அதானிக்கும், அம்பானிக்கும்தான், உழைக்கும் மக்கள் மீதும், நடுத்தர வர்க்கம் மீதும் அது பெரும் சுமையாக இறங்கும் என்பதை மறைத்து ‘ஆட்டோ ஓட்டுபவர்களும், இளநீர் வெட்டுபவர்களும், ஐ.டி துறையினரும் என சாதாரண மக்கள் பெருவாரியாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்‘ என நடுத்தர வர்க்க வாசகர்களை நம்பவைக்க முயன்ற கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி இப்போது ரயில் கட்டண உயர்வு குறித்தோ, 2-ம் வகுப்பு ஒழிப்பு என்ன சொல்வார்? வெப்ப மண்டல நாடான இந்தியாவில் இனி வெக்கையின்றி ஏசியில் ‘மக்கள்’ பயணம் செய்யலாம், வேர்வையின் கஷ்டங்கள் இல்லை என எழுதுவாரோ?

  ReplyDelete