சில ஆண்டுகளுக்குமுன் கணிதம் தொடர்பாக ஒரு பதிவு ஆரம்பித்தேன். அதில் நான் எழுத விரும்பியது வேறு. எளிதாக தமிழில் கணிதத்தைச் சொல்லித் தருவதற்காக என்று ஆரம்பித்தேன். ஆனால் அதனை எப்படி முன்னெடுத்துச் செல்வதென்று தெரியவில்லை. வேறு திசைகளில் ஆர்வம் சென்றதால் சில பதிவுகளோடு விட்டுவிட்டேன். முதலில் கணிதக் குறியீடுகளைப் பதிவில் எழுதுவதற்கே சிரமப்படவேண்டியிருந்தது. MathML என்ற மொழியைப் பயன்படுத்தியிருந்தேன். பிறகு வேர்ட்பிரஸ் பதிவுகளில் இதற்கான வசதி இருந்ததால் என் பதிவுகளை அங்கு மாற்றினேன்.
இப்போது ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வந்திருக்கிறாள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கிறாள். அவளுக்குக் கணிதம் கற்பிக்கும்போது தோன்றக்கூடிய சில விஷயங்களைப் பற்றி இப்போதைக்கு எழுதப்போகிறேன். அதன்பின் எப்படியும் மாறலாம். பார்ப்போம்.
முதல் பதிவு - முக்கோணவியல் குறித்தது. இங்கே கிடைக்கும்.
இப்போது ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வந்திருக்கிறாள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கிறாள். அவளுக்குக் கணிதம் கற்பிக்கும்போது தோன்றக்கூடிய சில விஷயங்களைப் பற்றி இப்போதைக்கு எழுதப்போகிறேன். அதன்பின் எப்படியும் மாறலாம். பார்ப்போம்.
முதல் பதிவு - முக்கோணவியல் குறித்தது. இங்கே கிடைக்கும்.
கணித ஆசிரியர் என்ற முறையில், தங்களின் முயற்சியினை மனதார வரவேற்கின்றேன்
ReplyDeleteதொடருங்கள் ஐயா
Have you read Perelman's Entertaining Mathematics. (old Soviet Union MIR publisher book)
ReplyDeleteஎல்லாம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் ஒன்றும் புரியவில்லை. எனக்கு கணக்கில் தெரிந்த ஒரே சின், பள்ளியில் கணக்குப் சப்ஜக்டையே சாய்சில் விட்டதுதான். காஸ் என்று பார்த்தால் சாய்சில் விட்டதால் நிரலாக்கத்தில் படும் அவதி. சம்பளம் வாங்காவிட்டால், கூட்டல் கழித்தல் பெருக்கலையெல்லாம் கூட மறந்திருப்பேன்.
ReplyDeleteஆஹாஹா, சின், காஸ் பற்றியெல்லாம் பதிவு ஆரம்பித்திருக்கிறதே என்று சந்தோஷமாகப் படிக்க ஆரம்பித்தேன். "முதல் முதலாகக் கணிதம் கற்றுக்கொள்ளும் ஒரு xx வயது பெருசுக்கு" என்று மாற்றி வாசித்துக்கொண்டேன். ஆனால் அந்த பள்ளி நூலைப் படித்தால்தான் எப்படி ஆரம்பித்திருக்கிறார்கள் என்று புரியும் போல. பார்க்கிறேன்.
I sincerely appreciate your efforts in sharing knowledge and useful information with others.
ReplyDeleteசொல்வனத்தில் சில நல்ல கணிதம் சம்பந்தமான பதிவுகள் உள்ளன
ReplyDeletehttp://solvanam.com/?cat=103
பாரா ஒருமுறை உங்கள் 'கற்பித்தல்' திறனை சிலாகித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.நானும் கூட உங்களை அப்பதிவைச் சுட்டி அதைப் பற்றி எழுத வேண்டியிருந்தேன்...
ReplyDeleteஇல்லாதிருத்தலை விட இப்போது நன்று.(பெட்டர் லேட் தேன் நெவர்) :)