Thursday, October 31, 2019

தமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்

சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லுவேன்.

இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இதைப்பற்றி பி.ஏ.கிருஷ்ணன் ஏற்கெனவே சில இடங்களில் சொல்லியிருக்கிறார்.

சங்க இலக்கியத்தின் தரம் எல்லாம் வேண்டாம், இன்றைய அரசியல் கட்சிகளின் பிழைகள் மலிந்த சுவரொட்டிகளைவிட மோசமான தமிழில்தான் அனைத்து தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் இருக்கின்றன. உருப்படியான, தேறக்கூடிய, பிழையற்ற, தெளிவான தகவலைத் தரக்கூடியதாக இந்த 96 கல்வெட்டுகளில் ஒன்றுகூட இல்லை. மேலும் இவை எவையும் இரண்டு வரிகள்கூடத் தாண்டுவதில்லை.

பானையோடுகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவற்றில் ஆள் பெயர் தாண்டி, தொழில்பெயர் தாண்டி ஒன்றுமே இல்லை.

அரசனின் காசுகளை எடுத்துக்கொண்டால்கூட கொஞ்சம் நீளமாக வரும் சாதவாகனக் காசில் உள்ள பிராகிருதம்கூட இலக்கணசுத்தமாக உள்ளது, தமிழ் தடவுகிறது.

ஏன் இப்படி?

மொழிரீதியாக, தமிழின் முதல் உருப்படியான கல்வெட்டு என்பதே பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டு(கள்)தாம். அவற்றில்தான் தமிழின் இலக்கணத் தன்மையுடனான வாக்கியங்கள், கிட்டத்தட்டப் பிழைகளின்றி அமைகின்றன. அவையோ, பொயு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

மாறாக, அசோகனின் நாடுமுழுதுமான கல்வெட்டுகளாக இருக்கட்டும், காரவேலனின் கண்டகிரி ஹாதிகும்ஃபா கல்வெட்டாக இருக்கட்டும், ருத்ரதாமனின் கிர்னார் கல்வெட்டாக இருக்கட்டும், சாதவாகனர்களின் கல்வெட்டுகளாக இருக்கட்டும், அவையெல்லாம் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் சமகாலத்தைச் சேர்ந்தவை, ஆனால் விரிவானவை, இலக்கண சுத்தமானவை, தகவல் செறிவு மிக்கவை.

உண்மையில், அசோகனின் நீண்ட நெடிய கல்வெட்டுகள் இருந்திராவிட்டால், எழுத்தமைதியில் அவற்றுக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திராவிட்டால் நம்மால் தமிழ் பிராமியைப் புரிந்துகொண்டிருக்கவே முடியாது.

4 comments:

 1. Absolutely right. If you say this you will be branded

  ReplyDelete
 2. உள்ளீடோ தரவுகளோ அற்ற வெறும் வெட்டிப் புல்லரிப்புகளிலேயே புளகாங்கிதம் அடையும் முட்டாள் கூட்டம், இம்மாதிரி உண்மைகளைச் சொன்னால் உர்ரென்று கோபம்தான் அடையும்.

  இந்த உலுத்தர் கும்பலுக்கு படிப்புண்டா வாசனையுண்டா சிரத்தையுண்டா தரமுண்டா?

  நீங்கள் சொல்வது 100% சரி.

  1891ஆம் ஆண்டு வாக்கிலிருந்து, ஏஎஸ்ஐ அமைப்பு  சார்பில் 'கார்பஸ் இன்ஸ்க்ரிப்ஷனம் இண்டிகாரம்' (பாரத கல்வெட்டு/குறிப்புத் தொகுப்புகள்) எனப் பலப்பல தலையணையளவு தொகுதிகளைத் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறார்கள். (நீங்கள் குறிப்பிட்டதுபோல, நம் ஐராவதம் மஹாதேவன் அவர்கள், (அதற்கும்முன்னால் வெங்கடேச(?) ஸாஸ்த்ரி போன்றவர்கள்) தமிழ் குறித்த ப்ராம்மி கல்வெட்டுச் சான்றுகளைத் தொகுத்துக்  கொணர்ந்ததும் குறிப்பிடத் தக்கது - அது  மிகப் பின்னர் வந்தது)

  அதில் அறிமுகக் கட்டுரையின் ஒரு பகுதியில் கீழ்கண்டது வருகிறது...

  "Indian inscriptions - more so even than those of any other country - are the real archives of the annals of its ancient history, the contemporaneous witnesses of the events and of the men whose deeds they hand down; and their authenticity renders them most valuable for the historian and deserving of careful record. They supply important bearing on the chronology, geography, religious systems, affiliations of families and dynasties, taxes, land tenures, magistrates, customs, manners, organization of societies, language and systems of writing of ancient times. Hence the great need for collecting and publishing them with the best translations and comments that modern scholarship can supply..."

  தமிழகம் தவிர, பிற பிரதேசங்களில் மேற்கண்டது உண்மை. அவற்றில் ஆயிரம் விவரணைகள், மிகக் கோர்வையாக இருக்கின்றன. (நான் உத்திரமேரூர் வகை, மிகப்பிற்காலக் கல்வெட்டுகளைப் பற்றி, அவற்றின் விவரணைகளைப் பற்றிச் சொல்லவரவில்லை - 'தமிழ்' ப்ராம்மி வகையைத்தான் சொல்கிறேன். வெட்கக்கேடு. ஆனாலும் என் தமிழ் எனக்குப் பிடிக்கும்)

  'தமிழ்' ப்ராம்மி எனச் சொல்லி நாம் பெருமைப்படுவதற்கு ஒரு முகாந்திரமும் இல்லை. இனிமேல் அதில் வரையப்பட்டு அதிசய விஷயங்கள்/குறிப்புகள் கிடைக்கவும் பெரிய வாய்ப்புகள் இல்லை.

  அக்காலங்களில் இருந்தே நம் தமிழர்களுக்கு, பேசிப்பேசியே வேலைவெட்டியற்று ஒரு உபயோகமுமில்லாத போராளித்தனம் செய்தே பழக்கம்போலும்... அதனால்தான் பாவம், அவர்களுக்குக் கல்வெட்டுகள் அமைத்து உருப்படியாக எழுத நேரம் கிடைக்கவில்லை போலும்!

  ...பரவலாகத் தெரிந்த ஹாதிகும்ஃபே, கிர்நார் கல்வெட்டுகளையே விடுங்கள் - பெரிதாகத் தெரியவராத ஆனாலும் மிகமிக அழகான, ஆச்சரியபபடத்தக்க  ஷாபாஸ்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட அசோகனின் பனிரெண்டாம் கல்வெட்டுகள் (பொதுயுகத்துக்கு முன் மூன்றாம் நூற்றாண்டு சமயம்) குறிப்பிடும் பலதரமான விஷயங்கள் - இதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, அதே சமகால (ஏன், அதற்குப் பின் 700-800 ஆண்டுகள் வரை நம் தமிழகத்தில் இல்லை) கல்வெட்டுகளில் அல்லது பானைக் கிறுக்கல்களில் இல்லை...

  இந்த அழகில் "வைகை கரைதனிலே பானைகள் வைப்போம்" என உளறிக்கொட்டி, நமக்கு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள், நம் பாவிகள்...

  https://twitter.com/othisaivu/status/1187704370072150016

  ReplyDelete
 3. பானையில் இருப்பது தீற்றல்கள்தானே வரிவடிவங்கள் இல்லையே. ஐராவதம் மகாதேவன் புத்தகம் எந்த வருடம் பதிப்பக்கப் பட்டது? புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்கள் உண்டா? அசோகர் கல்வெட்டுகள் empire sponsored. ஆனாலும் தொல்லியலாளர் அமர்னாத் தமிழ் கல்வெட்டுகளை சிலாகித்தாரே..ஆனால் பதிப்பாளர் நியாயம் தொனிக்க வேறு தீர்ப்பு எழுதுகிறாரே. நம்புவோமாக

  ReplyDelete
 4. கண்டுபிடித்த கல்வெட்டுக்களை வைத்து அதனை எடைபோடக்கூடாது. ஏனனில், நாம் வாழும் காலங்களில்
  கண்ட காவாலிகளால் மதவடிச்சுவர்களில் நிறைய வாசங்கள் எழுதப்பட்டிருக்கும்  வரலாறுதான் முக்கியம்.

  ReplyDelete