வன்னி வானொலி நிலையத்தில் இலங்கை விமானப்படை வீசிய குண்டுகள், இணைய வானொலியில் வந்த நேரடி ஒலிபரப்பைத் தடுக்கவில்லை. இப்பொழுது pdf கோப்பாக தமிழ்நெட்டில் கிடைக்கிறது.
சில உடனடிக் கருத்துகள்:
1. புதிதாக இந்தப் பேச்சில் ஒன்றுமில்லை.
2. இந்தியாவுடன் சுமுகமான உறவுக்கு வழிகோலும் வகையில் இந்தப் பேச்சு இருப்பதாகத் தெரியவில்லை. ‘இந்தியாவின் தவறு' பற்றி பிரஸ்தாபம் நிறைய உள்ளது. இந்தியாவின் உதவியைப் பற்றி பிரபாகரன் அதிகமாக யோசிப்பதில்லை என்றே தோன்றுகிறது.
3. அமெரிக்காவைப் பெயர் சொல்லிக் குற்றம் சொல்ல பிரபாகரன் தவிர்த்திருக்கிறார். “எம் மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.”
4. தமிழ்ச்செல்வன் கொலைக்கு சர்வதேச நாடுகளே காரணம் என்ற அபத்தமான கருத்து. “சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது. .... சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான்.”
5. “பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.” - இந்த வாக்கியத்தை கவனமாக வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம். “எமக்கென ஒரு நாடு” என்பது இந்த எண்பது மில்லியன் தமிழர்களுக்குமான ஒரு நாடு என்ற பொருளில் இருந்தால் அது இந்தியாவில் எவ்வாறு திரிக்கப்படும் என்பதைப் புரிந்து வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம்.
“உலகம் முழுதும் வாழும் தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்கு உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு” வேண்டும் பிரபாகரன், அதற்கான நடவடிக்கைகள் சிலவற்றையும் எடுக்கலாம்.
2005 மாவீரர் தின உரையை ஒட்டி நான் எழுதியது
பாலையில் முளைத்தல்
1 week ago

