Friday, November 23, 2007

விடுதலைப் புலிகள், காங்கிரஸ், திமுக

இன்றைய தி ஹிந்து கருத்துப் பத்தியில் ஹரீஷ் கரே எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:
... Mr. Antony was not in favour of the AICC resolution taking a critical note of the eulogy of LTTE cadres. (This was an indirect reference to the Tamil Nadu Chief Minister’s recent paean to a slain LTTE activist). His argument was that the Tamil Nadu Congress had already voiced its objection. Where was the need for the AICC to rub it in once again against a critical ally?
விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் இருவரான தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் இறந்ததற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து ஒரு கவிதை பாடியிருந்தார். உடனே அவர் என்னவோ உலகிலேயே பெரிய தப்புக்காரியம் செய்ததைப் போலவும் இந்திய இறையாண்மையைச் சீர்குலைத்ததுபோலவும் ஜெயலலிதா கருணாநிதியைச் சாடினார்.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் கருணாநிதி செய்தது தவறு என்பது சிலரது வாதம். அதுவும் அவர் தனிப்பட்ட முறையில் இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பதவியில் இருப்பவர் என்பதால் என்கிறது இந்த வாதம்.

விடுதலைப் புலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் தருவதாகத் தோன்றவில்லை. அப்படிப்பட்ட சில அமைப்புகளைக்கூட இந்தியா இதுவரை தடை செய்யவில்லை. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தியா புலிகள் அமைப்பைத் தடைசெய்வதை ஒரு சடங்காகச் செய்துவருகிறது. யாரும் இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதில்லை. உள்துறை அமைச்சகம் ரப்பர் ஸ்டாம்ப் அடிப்பதோடு சரி.

காங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வருத்தம் இருப்பது நியாயமே. அதுவும் முக்கியமாக தமிழக காங்கிரஸுக்கு இது மனவருத்தத்தைத் தரக்கூடிய விஷயம் என்பதிலும் சந்தேகம் இல்லை. இதில் மேற்கொண்டு சோனியா காந்திக்கு என்ன நிலை என்பதை அறியவேண்டியது அவசியம். சோனியா காந்தி வெளிப்படையாக விடுதலைப் புலிகள் விவகாரத்தில் என்ன நிலை எடுக்க விரும்புகிறார் என்று எங்கும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அவரைச் சந்தோஷப்படுத்தவென்றே தமிழக காங்கிரஸ்காரர்கள் சிலவற்றைச் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி சற்று தீவிரமாக சோனியாவின் மனத்தை அறிய முயற்சி செய்யவேண்டும். ஒரு ஸ்டேட்ஸ்மேன் சொந்த சோகத்தைத் தாண்டிச் செயல்படவேண்டும். கட்சி, நாடு, அண்டை நாடு, அங்குள்ள மக்கள் படும் அவலம் ஆகியவற்றைப் பற்றி யோசிக்கவேண்டும்.

இந்நிலையில் ஏ.கே.அந்தோனியின் கருத்து கவனிக்கப்படவேண்டும். முக்கியமாக திமுக, இலங்கையில் தமிழர்கள் நிலைமீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்குமா என்று நாம் பார்க்கவேண்டும்.

5 comments:

 1. I fully agree with the views said in this column. The actual issue is not whether LTTE has to be supported or banned. The actual issue is what we can do something for the people of Tamils in Srilnaka. In India anyone who approaches the issue of Srilankan Tamils approach it from their won standpoints of party, ideology, movement etc. Nobody wants to approach it from the standpoint of sufrering tamils and in what way we can bring about peace. The actual fact is that whether one supports LTTE or not no solution can be brought without their consent. They also have to some extent won the support of the majority Tamils there. So, we have to look at this issue practically instead of taking a stern stand against either for or against LTTE. Morevoer COngress's stand on LTTE is not based on any policy but just on the sentiment that LTTE has killed Rajiv.They have to also move beyond and look at the issue in terms of policies,ideologies and above all the welfare of Tamils

  ReplyDelete
 2. neengal yen sonia-vayum, statesmanship-ayum orey pathiyil payanpaduthiyulleer??

  are they in any way connected?

  ReplyDelete
 3. //விடுதலைப் புலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் தருவதாகத் தோன்றவில்லை.//

  What are you trying to prove by this? Is Rajiv Gandhi assasination is not against the sovereignity of Idnia?

  You may have your own reasons to appease some groups. But dont try to mention blatant stupid comments like this in your blogs. Please!

  ReplyDelete
 4. //காங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வருத்தம் இருப்பது நியாயமே//

  Why only Congress party?

  He is not a former PM of this largest democracy?
  He is not an Indian?

  ReplyDelete
 5. Indian feels (4th comment) that an Indian has been killed and so he feels sorry as an Indian. Yes sure. may I ask a simple question, 7000 tamils in Srilanka were killed by During IPKF presence in Srilanka. Who caused that? does not he feel sorry for them? So,instead of going on arguing like this we have to take stock of the situation today and look for peaceful solutions

  ReplyDelete