Saturday, November 17, 2007

அமேசானின் கிண்டில் (Kindle)

அமேசான் எந்த நேரமும் கிண்டில் எனப்படும் தனது மின்புத்தகப் படிப்பானை வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கோ ஆரம்பித்த சில வதந்திகள் இந்தக் கருவி திங்களன்று வெளியாகலாம் என்று சொல்ல, அத்தனை நியூஸ்வயர் செய்திகளும் அதையே திருப்பித் திருப்பி சொல்லி, வதந்தியை உண்மையாக உரைத்தன. இப்பொழுது அடுத்த வதந்தி, இந்த மின்புத்தகப் படிப்பான் கருவி வெளியாக ஜனவரிவரை ஆகலாம் என்கிறது.

$400 என்ற விலை அதிகம்தான்.

இலியாட் எனப்படும் கருவி - லினக்ஸ் இயங்குதளம், திறமூல ஆர்வலர்களுக்கு சந்தோஷம் தரக்கூடியது - இப்பொழுது $700-க்கு விற்கிறது. அதை வாங்கி அதில் தமிழ் மின்புத்தகத்தைப் போட்டுப் பார்த்தேன்.


மேலே, அளவு ஒப்புமைக்காக ஒரு ஆடியோ புத்தகம், ஒரு அச்சுப் புத்தகம் ஆகியவற்றையும் வைத்துப் படம் எடுத்துள்ளேன்.

இலியாடில் எல்.சி.டி திரை கிடையாது. உயர்தரமான e-ink தொழில்நுட்பத்தால் உருவான திரை உள்ளது. இதனால் மின்புத்தகத்தைப் படிக்கும்போது கண்ணை உறுத்துவது கிடையாது. எல்.சி.டி திரைதான் இருக்கப்போகிறது என்றால் அமேசானின் கிண்டிலை இன்னமும் குறைந்த விலைக்குக் கொடுக்கலாம்.

இந்தியாவுக்குத் தேவை மிகக் குறைந்த விலை மின்புத்தகப் படிப்பான் கருவி. ரூ. 5,000 என்பதே இந்தியாவுக்கு அதிகம்.

10 comments:

 1. இலியாடின் விலை $700 என்று தெரியாது (USD?) அப்படியென்றால் அது அதிகப்படியாகத் தோன்றுகிறது. நான் சோனியின் PRS-500 என்ற படிப்பானை வாங்கியுள்ளேன். அதுவும் e-ink நுட்பத்துடன் வருவதுதான். விலை நான் வாங்கியபோதே $350தான். இப்போது மேலும் குறைக்கப்பட்டு $280க்கு கிடைக்கிறதாம்.

  தமிழ் புத்தகங்கள் PDF வடிவிலிருந்தால் படிக்கலாம். கல்கியின் அலை ஓசை நாவலை (chennai library தளத்திலிருந்து இறக்கி) அதில் ஏற்றிப் படித்தது ஒரு நல்ல அனுபவம். (அந்நாவலை அதற்கு முன் படித்ததில்லை.)

  ReplyDelete
 2. சில தளங்களில் $220-க்கே கிடைக்கிறது. ஆனால் சோனி ரீடரில் 20 எம்.பி இடம்தான் டீஃபால்ட்டாக வருகிறது. இலியாடில் 128 எம்.பி + 128 எம்.பி (ஆபரேட்டிங்க் சிஸ்டத்துக்காக). சோனியில் 128 எம்.பி ராம். இலியாடில் 64 எ.பி ராம் - ஆனால் லினக்ஸ் என்பதால் போதுமானது. சோனி ரீடரில் என்ன இயக்குதளம் என்று தெரியாது.

  சோனி திரை 6 அங்குலம். இலியாட் திரை 8.1 அங்குலம். இங்கு காசே திரைக்குதான் என்பதால் இலியாட் அதிக விலை. மேலும் சோனியில் ஸ்டைலஸ் வைத்து எழுதுவது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் வைத்திருப்பதால் சொல்லவும். ஸ்டைலஸ் வேண்டுமென்றால் touch sensor வேண்டும். அதற்கும் செலவு ஆகும்.

  இருந்தும் - $700 என்பது அதிகம்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

  நானும் சோனி ரீடரை வாங்கிப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  ReplyDelete
 3. Dear Badri,

  Thanks for the Info. Will there be any possiblity that New Horizone Media will make any indian version of this?

  I Know that you've already launched audio book.

  All the best.

  Viswa Nathan.D
  Chennai, Tamil Nadu, India.

  ReplyDelete
 4. 64MB + SD slot என்பதே எனது கருவியின் கொள்ளளவு வசதி. சோனியின் இடைமுகத்தைக் கடந்து உள்ளே எட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடையாது என்பதால், கருவியின் இயங்கு தளம் பயனர் பார்வைக்குத் தென்படுவதில்லை. ஆனாலும், லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட இயங்கு தளமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. தமிழ் எழுத்துரு ஆதரவு கிடையாது. PDF வடிவில் மட்டுமே யூனிகோட் ஆவணங்களைப் படிக்க முடிகிறது. stylus / mouse போன்ற உள்ளீட்டு வசதிகளும் கிடையாது. எல்லா செயல்பாடுகளும் பொத்தான்களைக் கொண்டுதான். இருந்தாலும், ஒரு அருமையான துணைதான் அது (மேசைக் கணினியைப் போன்றே) :)

  Amazon Kindleஉம் e-ink நுட்பத்துடனேயே வருகிறது என்று தெரிய வருகிறது. இந்தத் தளத்தில் மின்-படிப்பான்கள் குறித்த அனைத்து தகவல்கள், மின்நூல் வடிவமைப்பு நிரலிகள், தரவிறக்கக்கூடிய புத்தகங்கள் ஆகியவற்றைக் காணலாம் (நீங்கள் முன்பே இதைப் பார்த்திருக்கக்கூடும்).

  ReplyDelete
 5. விஸ்வா: நாங்கள் புத்தகப் பதிப்பாளர் மட்டுமே. தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரிப்பதற்கான திறமை, நேரம் கிடையாது.

  இந்தியாவில் குறைந்த விலையில் இதைப்போன்ற கருவிகளை யாராவது தயாரிக்கிறார்களா என்று பார்ப்போம். தெரிந்தால் சொல்கிறேன்.

  ReplyDelete
 6. VoW: தளச் சுட்டிக்கு நன்றி. நான் இந்தத் தளத்தை இதற்குமுன் பார்த்ததில்லை.

  கிண்டில் பற்றி நிறையத் தகவல்கள் வெளியாகிவிட்டன. கிண்டிலும் சோனி போலவே தன்னுரிமை வடிவில் புத்தகங்களை வெளியிட்டு அதனை நேரடியாக விற்பனை செய்யக்கூடியவிதத்தில் டிசைன் செய்துள்ளனர் என்று தெரிகிறது.

  இலியாட் அல்லது அதுபோன்ற திறந்த ஃபார்மட் கருவிகள்தான் நமக்கு இப்போதைக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
 7. இப்படி படிப்பான் என்று ஒன்று இருப்பதே எனக்கு இன்றுதான் தெரிய வருகிறது! நான் எந்தக் காலத்தில் வாழ்கிறேன்.

  நல்ல ஐடியாதான்...ஆனால் படுத்துக் கொண்டு படிக்க முடியுமா? அப்புறம் சுருட்ட முடியுமா?

  ReplyDelete
 8. இந்த மாதிரி ஸ்பெஷலைஸ்டு சாதனங்களையெல்லாம், ஆல் - இன் - ஒன் செல்பேசி (ஐ-போன்) விழுங்கி விடும் என்பது என் கணிப்பு.

  ReplyDelete
 9. பத்ரி

  இதை எப்படி உபயோகப்படுத்துவது வயது வரம்பு ஏதும் உண்டா குழந்தைகளின் கண்களுக்கு பாதுகாப்பானதா என எழுதுங்கள் தயவு செய்து.

  செல்வி

  ReplyDelete
 10. Amazon to Release $139 Wi-Fi Edition of Kindle eReader

  Last night, with typical Amazon timing, Amazon unveiled a $139 edition of the Kindle eReader. The "Kindle Wi-Fi" will be smaller, cheaper, and have higher resolution.

  UPDATED: eBookNewser has more Amazon news today--the bookseller has launched a Kindle Store in the UK, but UK publishers won't get to set their own prices. In addition, the president of the American Booksellers Association has criticized Amazon's deal with the Wylie Agency: "Diminishing the availability of titles and narrowing the options for readers can only harm our society in the long run."

  Finally, we live-blogged Amazon CEO Jeff Bezos' appearance on Charlie Rose last night--follow this link to read our coverage to learn more about the new Kindle (pictured above).

  ReplyDelete