பிரெடெரிக் அகஸ்ட் ஹயெக் (FA Hayek) பற்றிய ஓர் அருமையான அறிமுகப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஹயெக் எழுதியவற்றைப் படிக்கத் தொடங்குமுன் இந்த அறிமுகப் புத்தகத்தைப் படித்துவிடலாம் என்று எடுத்திருந்தேன். Eamonn Butler எழுதிய Friedrich Hayek: The Ideas and Influence of the Libertarian Economist என்ற புத்தகம் இது.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது பற்றிப் பேசும் ஹயெக், பொதுவாகவே வரலாற்றைப் பார்க்கும்போது, அரசுகள் தங்களிடம் இருக்கும் ஏகபோக அதிகாரமான பணம் அச்சிடுவதை வைத்துக்கொண்டு மக்களைக் கொள்ளையடித்து, ஏய்க்கிறார்கள் என்கிறார். அதற்கு என்ன மாற்று இருக்கிறது?
ஒரேவழி, அரசுகளிடம் இருக்கும் பணத்தை அச்சிடும் ஏகபோக அதிகாரத்தை நீக்கி, பணம் வெளியிடுவதையும் போட்டிச் சந்தைக்குள் கொண்டுவரவேண்டியதுதான் என்று படுதைரியமான யோசனையை "Choice in Currency and Denationalisation of Money" என்ற ஆக்கத்தில் முன்வைக்கிறார். இதைப் படித்த உடனேயே பிட்காயின்தான் (Bitcoin) என் நினைவுக்கு வந்தது. அதுவும் சமீபத்தில்தான் சடோஷி நாகாமோட்டோ தான்தான் என்று ஆஸ்திரேலியர் ஒருவர் சொன்னதாகச் செய்திகள் வேறு வந்திருந்தன. ஓராண்டுக்குமுன் வாங்கிப் படிக்காமல் இருந்த Nathaniel Popper எழுதிய “Digital Gold: Bitcoin and the Inside Story of the Misfits and Millionaires Trying to Reinvent Money" என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடவே, ஹயெக்-பிட்காயின் கனெக்ஷன் நமக்கே தோன்றுகிறது என்றால் இதைப்பற்றி வேறு பலரும் சிந்தித்திருப்பார்களே என்று நினைத்து இணையத்தைத் தேடினேன்.
ஃபோர்ப்ஸில் வந்த ஒரு கட்டுரையின் வழியே 2012-ல் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வெளியிட்டிருந்த Virtual Currency Schemes (pdf) என்ற ஓர் ஆவணம் கிடைத்தது.
அதில் இ.சி.பி, இவ்வாறு சொல்கிறது:
ஹயெக்கின் மிக முக்கியமான அறிவுரையே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது. பணவீக்கத்தைப் போல ஒரு நாட்டை அழிப்பது வேறு ஒன்றுமில்லை என்கிறார் ஹயெக். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க மானிட்டரி பாலிசி, அவ்வப்போது வட்டி விகிதத்தைச் சற்றே அதிகமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் இது தொழில்துறைக்குச் சிரமத்தைத் தரும். மந்தமான தொழில் நிலைமையை மாற்ற வட்டி விகிதத்தைக் குறைப்பதை ஹயெக் கடுமையாக எதிர்த்தார். தேவையின்றி வட்டிவிகிதத்தை மத்திய வங்கி குறைக்கும்போது அது எந்த அளவுக்குப் பணப் புழக்கத்தை அதிகரித்து, விரைவில் மக்களுக்குப் பயன் ஒன்றுமே இல்லை என்றாகி, பெரும் நாசத்தையும் விளைவிக்கும் என்று ஹயெக் விளக்குகிறார். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தால் அரசு பணத்தைக் கடன் வாங்கிச் செலவிடுவதால் பொருளாதாரத்தை உந்த முடியும் என்று ஜான் மேனார்ட் கீன்ஸ் சொன்னதையும் ஹயெக் கடுமையாக எதிர்த்தார்.
வட்டி விகிதம் குறையவேண்டும் என்றுதான் நானும் இதுவரை நினைத்துவந்தேன். ஆனால் ஹயெக் வட்டிவிகிதம் பற்றிச் சொல்லியுள்ளதைப் பார்க்கும்போது, நம் நோக்கம் குறைவான வட்டிவிகிதம் அல்ல, குறைவான பணவீக்கம் + அதற்கு ஏற்ற வட்டிவிகிதம் என்பதே என்பது புரிய ஆரம்பித்துள்ளது.
இதைத்தான் நம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முன்வைக்கிறார். இதைத்தான் சுப்ரமணியன் சுவாமி கடுமையாகச் சாடுகிறார். ராஜன் வட்டிவிகிதத்தைக் குறைக்காததுதான் இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கக் காரணம் என்கிறார் சுவாமி. எனவே ராஜனைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிறார் சுவாமி.
சுவாமியா, ராஜனா என்றால், ராஜன்தான் சரி என்று தோன்றுகிறது. எனவே சுவாமியின் அவதூறுகள் குறித்துக் கவலைப்படாமல் ராஜனுக்கு இன்னொருமுறையும் மோதி பதவி நீட்டிப்பு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

The theoretical roots of Bitcoin can be found in the Austrian school of economics and its criticism of the current fiat money system and interventions undertaken by governments and other agencies, which, in their view, result in exacerbated business cycles and massive inflation.பிட்காயின் அல்லது வர்ச்சுவல் கரன்சி பற்றி எனக்கு ஆர்வம் அதிகம் இல்லாமல் இருந்தது. அவை குறித்த ஓர் அச்சமும் இருந்துவந்தது. ஆனால் ஹயெக், சந்தை அடிப்படையிலான கரன்சி பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இப்போது வந்துள்ளது. இந்த வார இறுதிக்கான அசைன்மெண்ட், மேலே உள்ள அனைத்தையும் படித்து முடிக்கவேண்டும்:-)