Monday, October 25, 2010

சிலேட்டு கம்ப்யூட்டர்


ipad
ஆப்பிள் ஐபேட்
Tablet PC என்ற பெயரில் விளையாட்டு சாமான்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. காசுள்ளவர்கள் ஆப்பிளின் ஐபேட் சிலேட்டை வாங்கலாம். மற்றவர்கள் பிற பிராண்டட் பொருள்களை வாங்கலாம். காசு குறைவாக உள்ளவர்கள் வாங்க எண்ணற்ற சீன, கொரிய, தாய்வானியப் பொருள்கள் சந்தையை ஆக்ரமிக்கப்போகின்றன. இந்த குறைந்தவிலைப் பொருள்கள் கூகிளின் ஆண்டிராய்ட் இயக்குதளத்தைக் கொண்டிருக்கும். தொடுதிரை வசதி உடையதாக இருக்கும். திரை, 7 இஞ்ச் அகலம் (அல்லது உயரம்) கொண்டதாக இருக்கும். கிரவுன் 1/8 புத்தகத்துக்கும் டெமி 1/8 புத்தகத்துக்கும் இடைப்பட்ட சைஸ். (இதற்கு அடுத்து 10 இஞ்ச் திரை.)



apad
சீனா பொருள்
இந்த சிலேட்டுகள் வைஃபை இணைய இணைப்பு கொண்டவையாக இருக்கும். சில வடிவங்களில் 3ஜி இணைப்புக்கும் வழி இருக்கும். சில ஈதர்நெட் இணைப்புக்கும் வழி கொடுக்கலாம். மினி யுஎஸ்பி போர்ட் இருக்கும். சிலவற்றில் ஒரு கேமரா (குறைந்தது 1.3 மெகாபிக்சல்) இருக்கலாம். இவற்றில் குரோம் உலாவியின் உதவியுடன் இணையத்தில் உலவலாம். ஆடியோ, வீடியோ கேட்க/பார்க்க வசதி உண்டு. நிச்சயமாக யூட்யூப் பார்க்கமுடியும். எம்பி3 பாடல்களைக் கேட்கமுடியும். கைக்கடக்கமாக இருக்கும் இதில் மின்புத்தகங்கள் படிக்கலாம். பல வண்ணத் திரை. 4-5 கிகாபைட் இடவசதி; 256 மெகாபைட் மெமரி. இதன் வேகம், தமிழ் படிக்கக்கூடிய திறன் ஆகியவற்றில் சந்தேகம். ஏனெனில் ஆண்டிராய்ட் இன்னமும் காம்ப்லெக்ஸ் யூனிகோட் வசதியைக் கொள்ளவில்லை. நிச்சயம் குறைவான விலை சிலேட்டு என்றால் அதன் வேகம் குறைவாகவே இருக்கும்.

ஆனாலும், இன்று இந்தியாவில் இது வெறும் ரூபாய் 7,000-க்குள் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அந்த ஒரு காரணத்துக்காகவே, கம்ப்யூட்டரைவிட இந்தப் பொருளுக்கு அதிக கிராக்கி இருக்கும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கீழ்நடுத்தரக் குடும்பத்துக்கு இதுவே போதுமானது. ஒன்று ஆர்டர் செய்துள்ளேன். அடுத்த இரண்டு நாள்களில் கைக்குக் கிடைக்கும். சோதனை செய்துவிட்டு எழுதுகிறேன்.

அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் இந்தியாவில் இந்தவகை கணினிகள்தான் மேசைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றைவிட மிக அதிகமாக விற்கப்போகின்றன.

10 comments:

  1. நன்றி! நல்ல தகவல்!

    நீங்கள் வாங்கும் சிலீட்டு என்ன பிராண்ட், சரியாக என்ன விலை, எங்கு கிடைக்கும் என்பதையும் குறிப்பாக எழுதினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  2. மேலும், இவர்களின் இந்த முயற்சி பற்றியும் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    http://www.notionink.com/

    ReplyDelete
  3. 7000 ரூபாய்க்கெல்லாம் கிடைத்தால் செல்ஃபோனைவிட சீப்பாக இருக்கே.

    ஆண்டிராய்டு ஓடும் சிலேட்டுக் கம்பியூட்டர்களில் வீடியோ சாட் செய்ய வசதி எப்படி உள்ளது என்பதை உங்கள் கணினி வந்தவுடன் பரிசோத்த்துச் சொன்னால் நல்லா இருக்கும்.

    ஆப்பிள் ஐபேடு பற்றி நல்ல விசயங்களை மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. மிகுந்த ஆவலோடு நீங்கள் சொல்லப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  5. நானும் சில நாட்களுக்கு முன் ஒரு சீனா A Pad வாங்கியுள்ளேன். மிகவும் பயனுள்ளது. Ethernet இணைப்பு மூலமாக வலைத்தளங்களை மேய்ந்திருக்கிறேன். இன்னும் 3G இணைத்து பார்க்கவில்லை. Android மென்பொருள் சிலவற்றையும் முயற்சித்துள்ளேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

    அன்பன்,
    மு.பாரிவேள்

    ReplyDelete
  6. Parivel,

    Can you post some details on where /how u got it.

    ReplyDelete
  7. பத்ரி,இதில் gprs வசதியும் செய்யலாம்.embdede tech இதற்க்கான ஆராச்சியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன்.இதை பயன் படுத்தி marketing சமபந்தமான நிறைய செய்யமுடியும்

    ReplyDelete
  8. ஏனெனில் ஆண்டிராய்ட் இன்னமும் காம்ப்லெக்ஸ் யூனிகோட் வசதியைக் கொள்ளவில்லை

    personal q?

    is it possible to download and instal NHM in android mobile for tamil fonts(sony Xperia X8)?

    ReplyDelete
  9. write about your brand and make for the benefit of cyber(கம்ப்யூட்டர் அறிவில் சூன்யம்) people like me

    ReplyDelete
  10. நன்றி! நீங்கள் வாங்கியவுடன் பயன்பாடு பற்றியும் விலை தரமானது எங்கு வாங்கலாம் என்றும் சொல்ல முடிந்தால் நாங்களும் பயன் அடைவோமே!

    ReplyDelete