Wednesday, October 27, 2010

தமிழ் பேப்பர்

தமிழ் பேப்பர் என்ற வரிவிலக்கு பெறக்கூடிய சிலாக்கியமான பெயரில் ஓர் இணைய இதழை நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ளது. பா.ராகவன் அதன் எடிட்டர். தொடங்கி இன்னும் ஒரு மாதம்கூட நிறைவுபெறவில்லை.

அதனை ஒரு நடை எட்டிப்பார்த்து, உங்கள் கருத்துகளை அங்கேயே பின்னூட்டப் பெட்டியில் விட்டால் மகிழ்வேன்.

28 comments:

  1. ///வரிவிலக்கு பெறக்கூடிய சிலாக்கியமான பெயரில்//

    LOL:)))))))))))))))

    ReplyDelete
  2. தமிழ் பேப்பர் என்று தேர்ந்தெடுத்த இந்த பெயரைத் தவிர வடிவமைப்பு முதல் மற்ற விசயங்கள் வரைக்கும் எல்லாமே சரியாகத்தான் இருக்கு. எப்போது போல வாசிப்பவர்கள் படுத்தி எடுக்கக்கூடாது என்ற தற்போது உருவாகிக் கொண்டுருக்கும் புதிய புரட்சிகர கொள்கையின் படி ஆங்கில வார்த்தைகள் அதிகமாகவே கலந்து கட்டிய கட்டுரைகள்.

    பல்பொருள் அங்காடிக்குள் செல்பவர் ஏதோ ஒன்றை தேந்தெடுக்கும் சூழ்நிலையைப் போல நிச்சயம் ஏதோவொரு கட்டுரை பிடிக்கும்.

    அங்கே அந்தந்த கட்டுரைக்குளுக்குத் தானே விமர்சனம் கொடுக்க முடியும். தனிப்பட்ட விமர்சனம் அளிக்க வாய்ப்பில்லையே?

    ReplyDelete
  3. கமென்ட் எழுதாவிடினும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம் . ஆ . நீயின் கட்டுரைகள் நல்லா இருக்கிறது

    ReplyDelete
  4. பத்ரி!
    செய்தியோடையில் வாசிக்கும்போது அனைத்து இடுகைகளுக்கும் ஆசிரியர் பெயர் அட்மின் என்றே வருகிறது. மற்றபடி ஜென் கதைகள், சுப்புடுவின் பத்தி, நாராயணன், அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைகள் செறிவாகவே உள்ளன. மற்றுமுள்ள (unread) 66 கட்டுரைகளையும் வாசித்து விட்டு மிச்சம் சொல்கிறேன்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  5. Would be good to have little more structure.
    as we expect same type of stories in the same location...

    ReplyDelete
  6. தொடர்ந்து படித்து வருகிறேன், குறையொன்றுமில்லை.

    ReplyDelete
  7. //செய்தியோடையில் வாசிக்கும்போது அனைத்து இடுகைகளுக்கும் ஆசிரியர் பெயர் அட்மின் என்றே வருகிறது.//

    இதை மட்டும் சரிசெய்தால் கட்டுரைகளை உடனுக்குடன் படிக்கலாமா வேண்டாம என முடிவெடுக்க வசதியாக இருக்கும்.நன்றி

    ReplyDelete
  8. this is intolerable.Please switch over your valuable time in other area

    ReplyDelete
  9. reading from the very first day and very interesting. since i do`t know how to type in tamil i used eng

    ReplyDelete
  10. stop all these tamil medium activities rite now.

    think the name says it all - dull and boring - and i dont think its any different or special - same stuff found in all the publications - both online and print

    get rid of tat company first and do something useful in life - like i said bfore - organic farming

    ReplyDelete
  11. 1) அரவிந்தன் நீலகண்டன் பத்தியை தினம் ஒன்றிலிருந்து இரண்டு நாளுக்கு ஒன்றாக மாற்றுங்கள். அவர் தினம் “சிந்தனை” செய்வதால் தமிழ் ஹிந்து/இட்லி வடை வாடை நிறைய அடிக்கிறது. மற்ற பத்தியாளர்களெல்லாம் (என்னையும் சேர்த்து) ஒரு வாரத்துக்கு ஒன்று தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். இப்போதே அவர் கட்டுரைகளுக்கு வரும் அகண்ட இந்திய-இந்து தேசியவாத (தமிழ் தட்டச்சத் தெரியாத) ரசிகக் கண்மணிகள், நிரம்பி வழிந்து பிற கட்டுரைகளின் பின்னூட்டப் பக்கங்களையும் டாமினேட் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வேண்டுமானால், ஹிட்ரேட்டுக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் போகப் போக இண்டெர்நெட் ஹிந்துத் தளம் என்ற முத்திரை விழுந்த பின், அந்த கும்பலைத் தவிர யாரும் வரமாட்டார்கள். இங்கு எழுதுவதால் இப்போதே என்னை எப்போது சாஃப்ராண் கட்சியில் சேர்ந்தாய் என்று சிலர் கேட்கிறார்கள்

    2) அ. நீ பத்திக்கு மாறுதலாக இன்னொருவரும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எழுதவேண்டும். அதற்காக ஹசன் கம்ரூதின்/நாகூர் ரூமியிடம் கொடுத்து கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம். (ஜென் கதைகளை கணக்கிலேயே சேர்த்த வில்லை)

    3) பெண்மனம் கட்டுரையில் கிழவி படம் பதிலாக குமரி படம் போடுகிறேன் போன்ற அசட்டுத் தனமான வேலைகள் வேண்டாம். கேவலமாக இருக்கிறது

    4)சினிமா விமர்சனங்களை எந்திரனுக்குப் பிறகு காணவில்லை

    5)அறிவியல் கட்டுரைகள் நோபல் சீசனோடு நின்று விட்டன. மேலும் பல வரவேண்டும்

    6)விளையாட்டு பற்றி கட்டுரைகள் வேண்டும்.

    ReplyDelete
  12. //
    இங்கு எழுதுவதால் இப்போதே என்னை எப்போது சாஃப்ராண் கட்சியில் சேர்ந்தாய் என்று சிலர் கேட்கிறார்கள்
    //

    கேட்டால் பதில் சொல்லவேண்டியது தானே. ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை.

    காவி கட்சியாக இருத்தல் என்பதை ஓப்பனாகச் சொல்வது கூட கேவலமா ? என்றிலிருந்து இப்படி இருக்கிறது ?

    உங்களை அப்படி கேட்டவர்களை நீங்கள் சிவப்பு சட்டை கட்சியா ? நீங்கள் தான் மாவோயிஸ்டு மடையர்களுக்கு பணம் அனுப்பும் தேசவிரோதிகளா என்று கேட்கவேண்டியது தானே ?

    ReplyDelete
  13. திரு பாலா அவர்களே

    //இங்கு எழுதுவதால் இப்போதே என்னை எப்போது சாஃப்ராண் கட்சியில் சேர்ந்தாய் என்று சிலர் கேட்கிறார்கள்// இதுதான் உங்கள் பிரச்சினை என்றால் நீங்கள் எழுதுவதை நிறுத்திவிடலாமே? அரவிந்தன் நீஇலகண்டன் குருட்டாம்போக்கில் ஹிந்துத்துவவாதம் பேசவில்லை. தான் பேசுகிற ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரம் அளித்துப் பேசுகின்றார். அவர் பேசுவதெல்லாம் தவறு என்றாஅல் நீங்களும் ஆதாரங்களுடன் மறுத்து எழுதலாமே? அதைவிட்டுவிட்டு அவரை எழுதவேகூடாது என்பது உங்களைப் போன்ற அராஜகவாதிகளின் போலித்தனத்தைத்தான் தொலுரிக்கின்றது. நான் இந்துத்துவா இல்லை. ஆனால் எல்லா தரப்பினரினுடையதுமான கருத்துக்களை எதிர்கொள்வதில் பிரச்சினை கிடையாது. நாகூர் ரூமி போன்ற பண்பட்ட பேராசிரியர்கள் அறுவருப்பான கமெண்ட் எழுதினால்கூட சகித்துக்கொள்வீர்கள், நாகரீகமான கட்டுரைகளை ஆதாரப்பூர்வமக எழுதுபவரை ஒடுக்கச் சொல்வீர்கள் என்றாஅல் இது என்னவிதமான அறிவுஜீவித்தனம் என்று புரியவில்லை.

    வருத்தங்களுடன்
    எஸ்.ஜெ.

    ReplyDelete
  14. >>கேட்டால் பதில் சொல்லவேண்டியது தானே. ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை.காவி கட்சியாக இருத்தல் என்பதை ஓப்பனாகச் சொல்வது கூட கேவலமா ? என்றிலிருந்து இப்படி இருக்கிறது ?

    நான் காவிக்கட்சிக்காரன் இல்லை. திடீரென்று பல பேர் நீ காவிக்கட்சியா என்று கேட்டால் இல்லை இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்ல எரிச்சலாக இருக்கிறது. காவிக்கட்சியை ஒரு கேவலமான கூட்டமாகக் கருதுவதால் எரிச்சல் கூடுகிறது. ஆக நான் செய்யக்கூடியன இரண்டு - ஒன்று தமிழ்பேப்பரின் எழுதுவதை நிறுத்துவது, இல்லை தமிழ்பேப்பர்காரகளிடம் காவிச் சாயல் விழுகிறது, கவனம் என்று சொல்வது. இரண்டாவதைச் செய்கிறேன். மேலும் தொடர்ந்து நடந்தால் முதலாவதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

    >>உங்களை அப்படி கேட்டவர்களை நீங்கள் சிவப்பு சட்டை கட்சியா ? நீங்கள் தான் மாவோயிஸ்டு மடையர்களுக்கு பணம் அனுப்பும் தேசவிரோதிகளா என்று கேட்கவேண்டியது தானே ?

    அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று unsolicited அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் கேட்டேனா? பத்ரி கேட்கும் ஃபீட்பாக்கைக் கொடுக்கிறேன். அவ்வளவு தான். காவிக்கட்சியுடன் தொடர்புபடுத்தப்படுவதை கேவலமாகக் கருதும் ஆட்களைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் எரிகிறது?

    ReplyDelete
  15. பாலா: கொள்கை வித்தியாசம் உடையவர்கள் பலரையும் ஒரே இடத்தில் எழுத வைக்கத்தான் நாங்கள் விரும்புகிறோம். அரவிந்தனின் எழுத்து ஃப்ரீக்வன்சியைப் பற்றி... நீங்கள் அதிகம் எரிச்சல் படவேண்டியதில்லை. அவராலுமே தொடர்ந்து தினம் ஒன்று எழுத முடியாது. எவராலுமே முடியாது. இந்த தினம் ஒரு கட்டுரை என்ற தொடர், ஒரு மாதத்துக்கு மட்டுமே. அதன்பின் ஃப்ரீக்வன்சி குறையும்.

    நீ எழுதினால் நான் எழுதமாட்டேன், அவனை எழுதச் சொன்னால் என்னை எழுதச் சொல்லாதே என்றால் பதிப்பகமான நாங்கள் என்ன செய்வது? :-) அதன்பின் பதிப்பகங்கள் பல்வேறு கலர்களில் மட்டுமே இருக்கும். சிவப்பு, காவி, பச்சை என்று.

    ReplyDelete
  16. பத்ரி,
    >>கொள்கை வித்தியாசம் உடையவர்கள் பலரையும் ஒரே இடத்தில் எழுத வைக்கத்தான் நாங்கள் விரும்புகிறோம். அரவிந்தனின் எழுத்து ஃப்ரீக்வன்சியைப் பற்றி... நீங்கள் அதிகம் எரிச்சல் படவேண்டியதில்லை.

    இது எனக்கு புரிகிறது. உங்கள் நிலையை அறிவேன். கொவிச்சுகிட்டு ஓடிப்போயிருவேன்னு நான் சொல்லை :-). எனது பயம் கொஞ்ச நாள் கழித்து தமிழ் ஹிந்து போல் ஆகிவிட்டால் என்ன செய்வது என்பது தான்.

    ReplyDelete
  17. பத்ரி!
    மற்றுமொரு ஆலோசனை, வகைகளை சொடுக்கினால் அதில் பதியப்பட்டிருக்கும் அனைத்து இடுகைகளும் பட்டியலிடப்படுவது போல், இடுகையில் ஆசிரியரின் பெயர் ஒரு தொடுப்பாகவும், அதைச் சொடுக்கினால் தமிழ்பேப்பர்.காம் இல் அவரின் அனைத்து படைப்புகளும் பட்டியலிடபட்டால் நன்றாயிருக்கும் (சொல்வனம் போல)

    மற்றபடி சேத் காடினின் இடுகைகளை அவரின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்ப்பது பற்றியும் யோசிக்கலாம்.

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  18. எஸ். ஜே,

    >>அதைவிட்டுவிட்டு அவரை எழுதவேகூடாது என்பது உங்களைப் போன்ற அராஜகவாதிகளின் போலித்தனத்தைத்தான் தொலுரிக்கின்றது. நான் இந்துத்துவா இல்லை. ஆனால் எல்லா தரப்பினரினுடையதுமான கருத்துக்களை எதிர்கொள்வதில் பிரச்சினை கிடையாது.

    ஆஹா என்னே திரித்தல். நான் அவரை எழுதவே விடாதீர்கள் என்று சொன்னேனா?. நன்றாகப் படித்துப் பாருங்கள் அ. நீ எழுதும் பல கருத்துகளுடன் எனக்கு மறுப்புண்டு. அவர் கட்டுரை ஒன்றிலும் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். அவரும் என் கட்டுரைகளில் பின்னூட்டம் இட்டிருக்கிறார். பெரும்பாலும் அவர் கூறியதை எதிர்த்திருக்கிறேன்.

    அவர் எழுதும் எதையும் போடாதீர்கள் என்று சொல்லவில்லை. அவர் எழுதும் ஃபிரீக்க்வென்சியைத் தான் குறைக்கச்சொன்னேன். அதுவும் இரு நாட்களுக்கு ஒரு முறை. daily column என்பதை இன்னொருவருடன் மாறி மாறி வரும்படி. நன்றாகப் படித்துப் பாருங்கள். இதில் என்ன நான் போலித்தனத்துடன் அராஜகம் செய்தேன் என்று தெரியவில்லை.

    >> நாகூர் ரூமி போன்ற பண்பட்ட பேராசிரியர்கள் அறுவருப்பான கமெண்ட் எழுதினால்கூட சகித்துக்கொள்வீர்கள், நாகரீகமான கட்டுரைகளை ஆதாரப்பூர்வமக எழுதுபவரை ஒடுக்கச் சொல்வீர்கள் என்றாஅல் இது என்னவிதமான அறிவுஜீவித்தனம் என்று புரியவில்லை

    ஹசன் கம்ரூதீன் கட்டுரையின் திரிப்புகளில் மிக அப்பட்டமான ஒன்றை சான்றுகளுடன் சுட்டிக்காட்டி “ஏன் இப்படி கதை விடுகிறீர்கள்” என்று பின்னூட்டம் இட்டவன் நான். (முதல் ஐந்திற்குள் இருக்கும்); நாகூர் ரூமியின் கேவலமான பதிலுக்கு, நேரடியாக மறுமொழி இட்டவனும் நான் (மட்டறுத்தலுடன் பதிவாகியுள்ளது). போய் அந்தக் கட்டுரையில் “பாலா” என்று வந்துள்ள இரு பின்னூட்டங்களைப் படித்துப்பாருங்கள். அதிலும் தெளிவாக ரூமி, கம்ருதீன் பொன்றவர்களிடம் கொடுக்கவே வேண்டாம் என்று வேறு மேலே சொல்லியிருக்கிறேன்.

    யாரைப்பற்றி என்ன எழுதுகிறோம் என்பதை நன்றாக யோசித்து எழுதுங்கள். don't jump to conclusions

    ReplyDelete
  19. முதல் நாளில் இருந்து தமிழ் பேப்பரை வாசிக்கிறேன்.இணையத்தில் சிறந்த முயற்சி.வாழ்த்துகள்.ஆனால் நாள்தோறும் அப்டேட் தேவை.இல்லாவிட்டால் தினமும் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும்.

    ReplyDelete
  20. //
    அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று unsolicited அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
    //

    தோடா....நானா அறிவுரை சொன்னேன்.

    1,2 ன்னு நம்பர் போட்டு கோரிக்கை மாதிரி அறிவுரை சொல்லிட்டு நான் அன்சொலிசிட்டட் அறிவுரை சொன்னேனாம்...

    //
    காவிக்கட்சியுடன் தொடர்புபடுத்தப்படுவதை கேவலமாகக் கருதும் ஆட்களைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் எரிகிறது?
    //

    காவிக் கட்சியைக் கேவலம் என்று கருதுவது ஒரு கேவலமான வியாதி. தீண்டாமையைக் கடைபிடிப்பது போன்ற ஒரு ஜாதிவெறி மனநிலை. நோய்கூறு மனநிலை என்று கூட சொல்லலாம்.

    சொறி, சிரங்கு பிடித்தவர்களை பார்த்தால் டாக்டரிடம் போய் வைத்தியம் பார்த்துக்கொள் என்று தான் சொல்வார்கள். அது அறிவுரை அல்ல, அந்த வியாதி மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளக்கூடாது என்ற சமூக அக்கறை.

    ReplyDelete
  21. அரவிந்தனின் ஆதாரங்களுடன் கூடிய ஆராய்ச்சிமிகு கட்டுரைகள், அவருக்கு கம்ருதின் போன்றவர்களின் மொக்கையான பதில்கள், நாகூர் ரூமி போன்றவர்களின் தங்களின் உண்மை சொரூபத்தைக்காட்டும் பின்னூட்டங்கள், பாலா போன்றவர்களின் வயிற்றெரிச்சல் கமெண்டுகள், அனைத்தும் தமிழ் பேப்பரின் வெற்றியையே பறைசாற்றுகின்றன. வாழ்த்துக்கள் பத்ரி. பாரா மற்றும் ஹரன் பிரசன்னாவுக்கு பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பணி.

    உண்மையான இந்த “தமிழ் பேப்பர்” அச்சில் வர ஆண்டவன் அருளட்டும்.

    - அஞ்சனாசுதன்

    ReplyDelete
  22. கிழக்குப் பதிப்பகத்தில் இருந்து முஷராஃபின் வாழ்க்கை வரலாறு புத்தகம் போட்டார்கள். அப்போது, பத்ரி ஜிகாதிகளுக்கு ஆதரவாகப் புத்தகம் போடுகிறார் என்று சில இந்துக்கள் சொன்னார்கள். அதை எனக்குத் தெரிந்த ஒருவர் மறுத்தார்.

    “ஒரு பதிப்பாளர் ஒரு குறிப்பிட்ட கருத்திற்கு ஆதரவான புத்தகம் மட்டும்தான் போடவேண்டும் என்று சொல்லுவது மோசமான மனநிலை. அனைத்துக் கருத்துக்களும் உரையாடி, சமூகமும் தனிமனிதர்களும் கற்றுக்கொள்ளுகிற ஒரு சுதந்திரமான தளத்திற்குப் பெயர்தான் இந்து மதம். எனவே, ஒரு பதிப்பகம் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று சொல்லும் உரிமை நமக்குக் கிடையாது. அது அதர்மம். அந்த வகையில் பார்த்தால் சில புத்தகங்களைத் தடை செய்ய சிவசேனை கோரிக்கை விடுப்பதுகூட இந்துத்துவம் இல்லை” என்று அவர் கூறினார்.

    அவர் திண்டுக்கல்லில் ஒரு குக்கிராமத்தில் பணி செய்துகொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்.

    நாசரேத்தில் எனது நண்பரின் திருமணம் நடந்தது. அது கிருத்துவர்களுக்கு உள்ளேயே நடந்த கலப்புத் திருமணம். பையன் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கிருத்துவர். மணப்பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். இரு வீட்டுப் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஆனால், பையனின் மாமா ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்குத் தெரிந்தவர்கள் அவரிடம் இதைப் பற்றிக் கேட்கிறார்கள். அவமானமாக இருக்கிறது என்று அவர் கூறினார். அந்தப் பெண் உன் வீட்டிற்கு வந்தால், நான் உனது வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். வேண்டுமானால், மாப்பிள்ளைப்பையன் அந்தப் பெண்ணை தனிவீடு பார்த்து வைத்துக் கொள்ளட்டும். ஆனால், மாதம் இரண்டு முறைக்கு மேல் அந்த வீட்டிற்கும் போகக் கூடாது என்று சொன்னார்.

    இது அப்பட்டமான மிரட்டல். ப்ளாக் மெயில். பையன் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர். அந்த மிரட்டலுக்கு அவர் அஞ்சவில்லை. அந்தப் பெண்ணை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டார்.

    பாலா, உங்களையும் உங்கள் நண்பர்கள் ப்ளாக் மெயில் செய்கிறார்கள். எனது நண்பரின் மாமாவுக்கு இருந்தது சாதி வெறி என்றால், உங்களது நண்பர்களுக்கு இருப்பது அடக்குமுறை வெறி. அந்த வெறிக்குப் பணிந்து, அவர்களது ப்ளாக் மெயிலை வெற்றி பெறச் செய்வதா இல்லையா என்பதை ஒரு நல்ல சிந்தனையாளர் யோசிக்க வேண்டும்.

    அப்படிச் சிந்திக்காமல், அவர்களது ப்ளாக் மெயிலுக்குப் பணிந்து, அவர்களது மிரட்டலை பத்ரிக்கு ஒருவர் சொன்னால் அவரும் ப்ளாக்மெயிலரே.

    அந்தப் பெண்ணை சின்ன வீடாக வைத்துக்கொண்டு, மாதம் இரண்டு முறை மட்டும் போக அனுமதிக்க வேண்டும் என்று நண்பரின் மாமா கேட்டார். ஒரு பதிப்பகம் எதை வெளியிட வேண்டும், எப்போது வெளியிட வேண்டும் என்பதை பதிப்பகத்துக்குச் சம்பந்தம் இல்லாத எனது நண்பர்கள் முடிவு செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லுகிறீர்கள்.

    பாலா அவர்களே, மீண்டும் ஒரு முறை சொல்லுகிறேன். தீண்டாமை என்பது ஒரு மனநோய். அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் வரும்.

    ReplyDelete
  23. பாலா

    நீங்கள் பத்திரிகையாளரா? இந்து ராம், கரண் தப்பார், ராஜ்தீப் சர்ந்தேசாய், அருந்ததி ராய், வகையறா பத்திரிகையாளர் போலிருக்கிறது. அரவிந்தன் என்ற பெயர் வந்தவுடனேயே ஓடி வந்து ப்ளாக் மெயில் செய்து நிறுத்து என்று மிரட்டும் தோரணையில் இருந்தே தெரிந்து விடுகிறது. முடி உள்ளவன் கொண்டையும் போடலாம் அவிழ்த்தும் விடலாம் உங்களைப் போன்ற இடதுசாரி அல்லக்கைகளுக்கு எழுதவும் வராது அதற்கு வக்கும் இல்லை அறிவும் இல்லை ஆனால் எழுதுபவனை அதிலும் கொஞ்சம் அறிவுபூர்வமாக எழுதுபவனைக் கண்டால் வயித்தெரிச்சல். உடனே எங்கே நிறுத்தச் சொன்னேன் என்று பம்மாத்து செய்ய வேண்டாம். உங்கள் மிரட்டம் வெகு தெளிவாகவே உள்ளது. அரவிந்தன் எழுதுவதில் கருத்து வேறுபாடு இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தைப் பதியலாம், அல்லது தனியாக கட்டுரை எழுதி அனுப்பலாம் அதை விட்டு அவரை தினம் தினம் எழுத விடாதே நான் சொல்லும் பொழுது எழுதச் சொல்லு மாதம் ஒரு முறை எழுதச் சொல்லு என்று உத்தரவிட நீர் என்ன அண்ணாவி? அரவிந்தன் எழுத ஆரம்பித்ததில் இருந்தே இந்த மிரட்டல் இடதுசாரி கும்பல்களிடமிருந்தும், இஸ்லாமியத் தீவீரவாதக் கும்பலிடமிருந்தும் அதிகமாக வருகிறது. நீங்கள் எந்தக் கும்பலின் கைக்கூலி என்பது தெரியவில்லை. நிச்சயம் இந்தப் புல்லுருவிகளில் பாசிஸ்டுகளின் ஏதோ ஒரு வகை ஏஜெண்ட் என்பது மட்டும் புரிகிறது. அரவிந்தன் எழுதும் இடத்தில் உங்களுக்கு எழுத விருப்பம் இல்லா விட்டால் தாராளமாக நிறுத்திக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் என்ன இது வரை எழுதிக் கிழித்து விட்டீர்கள் என்பது தெரியவில்லை. அதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு “குரங்குப் பீயை மருந்துக்குக் கேட்டால் மரத்தில் ஏறிக் கொள்ளுமாம்” என்று அதை நிரூபித்திருக்கிறீர்கள். இப்படி தீண்டாமை பாவிப்பதற்கும் குரோதம் பாராட்டுவதற்கும் வெட்க்கமாக இல்லை? அருவருபாக இல்லை? எனக்குக் கூடத்தான் உங்களைப் போன்ற போலிகளைப் பாருக்கும் பொழுது வெறுப்பாகவும் அருவருபாகவும் கேவலமாகவும் உள்ளது அதற்காக நான் பத்ரியிடம் போய் பாலாவை எழுத விடாதே என்று மிரட்ட முடியுமா? அல்லது பாலாவை வருடம் ஒரு முறை மட்டும் எழுத விடவும் என்று எச்சரிக்கை செய்ய முடியுமா? அசிங்கமாக இல்லை. இதில் பத்திரிகையாளன் என்ற பட்டம் வேறு. அரவிந்தன் எழுதுவதில் சூழலியல் இருக்கிறது, சமூகவியல் இருக்கிறது, பண்பாடு, வரலாறு எல்லாம் இருக்கிறது. அதைப் போல தினமும் வேண்டாம் வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது முதலில் எழுதப் பாருங்கள் அதற்கான அறிவு இல்லாவிட்டால் எங்காவது குட்டிச் சுவர் பார்த்து முட்டிக் கொள்ளுங்கள். ஒரு பத்திரிகை யாரை அனுமதிக்க வேண்டும் எப்பொழுது எழுத விட வேண்டும் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை தகுதி உள்ளது? நான்கு பேர்களிடம் சாமான்களைக் கொள்முதல் செய்து ஒரு வியாபாரி கடை நடத்துகிறான் என்றால் அதில் ஒருவர் மட்டும் அவன் உனக்கு சாமான் கொடுத்தால் நான் கொடுக்க மாட்டேன் அவன் தினமும் உனக்கு விற்கக் கூடாது நான் சொல்லும் நாளில் நான் சொல்லும் சாமானை மட்டுமே விற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியுமா? நான் அந்தக் கொள்முதல் வியாபாரியாக இருந்தால் போடா நீயும் உன் சாமானும் என்று விரட்டி விடுவேன். அப்படி நீங்கள் எதுவும் நோபல் பரிசு வாங்கிய எழுத்தாளராகவும் தெரியவில்லை. அட்ரஸ் இல்லாத ஆளுக்கே இந்தத் திமிரா? இவ்வளவு மிரட்டலா?

    உங்கள் மனைவி கோவிலுக்கு போகும் வழக்கம் உள்ளவர் என்று வைத்துக் கொள்வோம். இன்று உங்களை கேள்வி கேட்கும் உங்களது அதே ”முற்போக்கு” நண்பர்கள் நீயெல்லாம் பகுத்தறிவு வாதியா கோவிலுக்குப் போகும் மனைவியுடமா குடித்தனம் நடத்துகிறாய் என்று கேட்டால் மனைவியை துரத்தி விரட்டி விடுவீர்களோ? அப்படிச் செய்யும் சுயமாக சிந்திக்க வக்கில்லாத மனிதர் போலத்தான் தெரிகிறது.

    நீங்கள் செய்திருப்பது பச்சையான ஒரு மிரட்டல். கேவலமான ஒரு ப்ளாக்மெயில். முதலில் சுயமாகச் சிந்தனை செய்யக் கற்றுக் கொண்டு அப்புறமாக அறிவுரை சொல்ல வாருங்கள். அரவிந்தன் எழுதுவதைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் மூளை வேண்டும். அது இல்லாத ஆசாமிகள் மிரட்டல் செய்யவே வருவார்கள்.

    ச.திருமலை

    ReplyDelete
  24. -ஜென் கதைகள் நன்றாக உள்ளன, அனால் overdose, எண்ணிக்கையை சற்றே குறைத்தால் நலம். 4 per page is too much.

    - attempt to explain the nobel prize for physics and chemistry in depth in tamil is nowhere to find. Excellent, can dedicate some more articles in this kind. some science-basics for kids instead of a jen story, in faq style ??

    what is missing:

    - a book reviewer. can start with pulitzer and
    nobel prize winning books

    முக்கியமாக எல்லா தரப்பு சினிமா,ஸ்போர்ட்ஸ், கலை, இலக்கியம் என அனைத்தையும் நிரப்பாமல் தங்களுக்கு கிடைத்த experts வைத்து
    அவர்களுக்கு என்ன வருமோ அதை எழுத செய்தல் நலம். சுருக்கமாக QUALITY (விஷய ஞானம்) ரொம்ப,ரொம்ப முக்கியம், என்பது என் கருத்து.

    -mj

    ReplyDelete
  25. தமிழ் பேப்பரில் வரும் பின்னுட்டத்தை விட இங்கே அதிகமாக இருக்கே . நாட்டாமை ( பத்ரி சார்) சட்டு புட்டுன்னு ஒரு தீர்ப்பை சொல்லி பஞ்சாயத்தை முடிச்சு வையுங்க !!!

    ReplyDelete
  26. பத்ரி,

    தமிழ் பேப்பர் தளத்தில் வரும் டெக்னாமிக்ஸ் மிகவும் உபயோகமான ஒரு தொடர்.

    தொழில் முனைவோருக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம். தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் முனைவோராவதில் தயக்கம் இருக்கிறது. பயம் இருக்கிறது.

    இவை தவிர, ஒரு தொழிலில் வெற்றிபெறத் தேவையான ஒழுக்கம், கவனக்குவிப்பு போன்றவற்றைப் பெற ஆவல் இருக்கிறது.

    நீங்கள் ஒரு வெற்றிகரமான பதிப்பகத்தை நடத்துகிறீர்கள். அத்துடன், தொழில் தவிர மற்ற விஷயங்கள் குறித்தும், உதாரணமாக அறிவியல், கணிதம் போன்றவை குறித்தும் சொந்த ஆர்வம் காரணமாகப் படிக்கிறீர்கள்.

    இந்த இரண்டு விஷயங்களையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள்? விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் வெற்றிகரமாகத் தொழில் நடத்த உங்களது மனத்தை எப்படிக் கையாளுகிறீர்கள்?

    இவை பற்றிய தொடர் ஒன்றுகூட ஆரம்பிக்கலாம்.

    மற்றபடி அருமையான முறையில் தளம் செல்லுகிறது. எல்லாவிதமான கருத்துக்களுக்கும் இடம் தருவதாக இருப்பது மிகவும் முக்கியம்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. களிமிகு கணபதியின் ஆலோசனையை முழுமையாகவும், பாலாவின் கருத்தை ஓரளவிற்கும் சார்ந்துள்ளேன். பக்க வடிவமைப்பு குறித்து சில கருத்துக்கள் உண்டு. தனி மடலில் தமிழ் பேப்பருக்கே எழுதுகிறேன். மற்றபடி வரவேற்கதக்க நல்ல முயற்சி.
    ந மு ந ப/பா
    -ஜெகன்.

    ReplyDelete
  28. முகப்பில் கட்டுரையின் தலைப்பும், முதல் பாராவின் சில வரிகளும் தெரிகின்றன. அத்துடன், கட்டுரை ஆசிரியரின் பெயரும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete