நீரா ராடியா “ஒலிப்பதிவுகள்” மூலம் கிடைக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணி dynamics, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமாக உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் துறைகளைப் பிரித்துக்கொள்வதில் பெரிதாக சீன் போட்டு அடித்துப் பிடித்து இடங்களை வாங்கியது திமுக. சரத் பவாரோ மமதா பானர்ஜியோ இந்த அளவுக்குச் சண்டை போடவில்லை.
திமுக இடங்கள் வாங்கியதில் என்னவெல்லாம் குழப்படிகள் இருந்தன என்பது அப்போதே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், இப்போது சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகள் இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.
1. டி.ஆர். பாலுவுக்கு எந்த அமைச்சர் பதவியையும் தருவதில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. (ஏன் என்ற கேள்வி எழுகிறது.)
2. தயாநிதி மாறன், தான்தான் திமுகவின் முக்கியமான ஆள் என்று காங்கிரஸிடம் தன்னை அற்புதமாக புரமோட் செய்துள்ளார் என்றும் அதனை காங்கிரஸ் தலைமை (சோனியா, ராகுல், அகமத் படேல், பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங்?) ஆரம்பத்தில் நம்பியிருக்கிறது என்றும் தெரிகிறது.
3. கனிமொழிதான் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஒரே interlocutor என்று புரிகிறது. ஆனால் கனிமொழி ஏதோ காரணத்தால் தன்னை முழுவதுமாக assert செய்யவில்லை என்றும் புரிகிறது. கனிமொழியின் negotiation skills மீது கருணாநிதிக்கோ கட்சிக்கோ நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.
4. ஆ.இராசாவுக்கு நிச்சயம் ஏதோ மந்திரி பதவி (ஏனெனில் தலித்...) என்பது முடிவாகியுள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு கொடுக்கப்படவேண்டுமா, கூடாதா என்பதில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, சுனில் பார்த்தி மிட்டல், ரத்தன் டாடா, அனில் அம்பானி முதல் பலருக்கு முக்கியமான கருத்துகள் இருந்துள்ளன. சிலருக்கு இராசா வேண்டும்; அப்போதுதான் தாங்கள் விரும்பியதைச் சாதிக்கலாம். சிலருக்கு இராசா கூடாது!
5. மாறனுக்கு கேபினட் என்றால் தனக்கும் கேபினட் அந்தஸ்து என்று அழகிரி அழும்பு பிடித்துள்ளார்.
6. அழகிரி ஒரு ரவுடி, ஆங்கிலம் பேசத் தெரியாதவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று தயாநிதி மாறன் காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லியுள்ளார்.
7. கருணாநிதிக்குப் பிறகு கட்சி ஸ்டாலின் கைக்கு வரும்; ஸ்டாலினை நான்தான் கண்ட்ரோல் செய்வேன் என்று தயாநிதி மாறன் தில்லியில் பலரையும் நம்ப வைத்துள்ளார் என்றும் புரிகிறது.
8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.
9. தயாநிதி மாறன் கருணாநிதியிடம், தான் கட்டாயமாக கேபினட் மினிஸ்டர் ஆக்கப்படவேண்டும் என்று அகமது படேலே (சோனியா காந்தியே) விரும்புகிறார் என்பதாகக் கதை கட்டி இருக்கிறார் என்றும் தெரிகிறது.
10. கருணாநிதி நேரடியாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் பல இருந்திரா என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, வேறு யாரையும் அழைத்துக்கொள்ளாமல், கருணாநிதி தன் மகள் கனிமொழியுடன் மட்டும் சென்றிருக்கலாம்.
11. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்திய மந்திரி போனில் கூப்பிட்டு மிரட்டினார் என்ற செய்தி வெளியானபோது, அவசர அவசரமாக, அந்த மிரட்டல் மந்திரி இராசாதான் என்று பலரையும் நம்ப வைத்து வதந்தி பரப்பியவர் தயாநிதி மாறன் என்று தெரியவருகிறது. (ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)
***
இந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன. ஆனால் நிச்சயம் இவையெல்லாம் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தெரியாமல் இருந்திருக்காது. இப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா?
கவளம்
8 hours ago
ஆடுகளத்தில் ஆடாமல் ஆப்பச்சட்டியில் ஆடி இருக்கிறார்கள்.காங்கிரசுக்கும் இலங்கை பிரச்சனையின் சூட்டின் மத்தியில் வெற்றி பெற இவர்கள் தேவை பட்டார்களே?
ReplyDeleteகடந்த உங்கள் போஸ்டில் வ்ந்த கமெண்ட்டுகளைத் தொடர்ந்து, அந்த கமெண்ட்டுகளை நம்பி, இவர்களது பேச்சில் உங்கள் பெயரும் அடிபடும் என்று நானும் தோழர்களும் எதிர்பார்த்தோம்....
ReplyDeleteYou had missed 2 important points
ReplyDelete1. Dayanidhi was propagating that karunanidhi has become senile.
2. Dayanidhi had given 600 crores to Dayalu and because of that Karunanidhi could not drop Daya and had to drop Baalu instead.
Haran
ReplyDeleteLOL):-
anon: முதல் பாயிண்ட் - செனிலிடி. அதைத்தான் கொஞ்சம் நாசூக்காக (7)-ல் தெரிவித்தேன். உங்களது இரண்டாவது பாயிண்டை நான் எங்கும் பார்க்கவில்லையே - இந்த 600 கோடி ரூபாய் தகவல் எங்கே வருகிறது?
ReplyDeleteபத்ரி, கீழ்க்கண்ட சுட்டியில் '600' என்று தேடவும் :)
ReplyDeletehttp://openthemagazine.com/article/nation/what-kind-of-story-do-you-want
நல்ல அருமையான சம்மரி! பத்து பதினைந்து பக்கங்களை படிப்பதற்குப் பதில் இது மட்டும் படித்தால் அனைத்தும் தெரிகிறது :)
ReplyDelete600 கோடி விவகாரம் விர் சங்வி டேப்களில் வருகிறது!
பத்ரி
ReplyDelete600 கோடி ரூபாய் வி(வ)காரம் ராடியா, வீர் சங்வி உரையாடலில் உள்ளது. இவையெல்லாம் இணையத்தில் பல மாதங்களாக படிக்கக் கிடைக்கின்றனவே நீங்கள் இன்னுமா படிக்கவில்லை? இவற்றையெல்லாம் படிக்காமல்தானா ராஜா யோக்யவான் என்று ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்படி எதையுமே படிக்காமல் எப்படி தடாலடியாக எழுத முடிகிறது? இவை எல்லாமே சி பி ஐ ரெக்கார்ட் செய்து வெளியிட்ட ஆவணங்கள். இவை போக விஜிலென்ஸ் கமிஷனர், என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்டரேட் என்று இன்னும் ஏகப் பட்ட டாக்குமெண்டுகள் இணையம் முழுவதும் ரெம்பி வழிகின்றன. அவற்றில் எதையுமே படிக்காமல் ராஜாவுக்கு தாசில்தார் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறீர்கள். நன்றாக இருங்கள்.
ராஜாவுக்கு இவ்வளவு தூரம் கூஜா தூக்கியதைப் பார்த்த பொழுது உங்கள் பெயரும் அடுத்த சி பி ஐ வெளியீட்டில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். ஏற்கனவே ராஜாவுக்காக இணையத்தில் லாபி செய்யும் ஆட்களை ஏகப் பட்ட ஏஜென்சிகள் ஒட்டுக் கேட்ப்பதாகக் கேள்வி. எதுக்கு செல் ஃபோனை கொஞ்ச நாள் ஆஃப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ராஜாவிடம் என்ன டீல் என்பதை மட்டும் தனியாகச் சொல்லுங்கள் :)) ஒரு கட்டுரைக்கு எத்தனை கோடி தருவார்கள்? யாரிடம் பேரம் பேச வேண்டும்? ராடியாவிடமா, வீர் சங்வியிடமா? பர்க்காத் தத்திடமா? இங்கே நிறைய பேர்கள் ஆஃபீஸ்களில் பொழுது போகாமல் இணையத்தில் வம்பளந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் ராஜா புகழ் பாட எவ்வளவு கமிஷன் என்பதைச் சொன்னால் அவர்களும் பிழைத்துப் போவார்கள். உங்களுக்குப் பாய்ந்த நீர் அப்படியே இன்னும் பலருக்கும் பாயட்டும் கருணை காட்டுங்கள் :))
r Sanghvi: Okay.
Mira: And as suggested it was Kanni only.
Vir Sanghvi: Okay.
Mira: And they had a, they are still stuck to their four formula and one independent.
Vir Sanghvi: Okay.
Mira: But these people will also think about it and let him know tomorrow morning. He is…
Vir Sanghvi: But they will not send him about the family or whatever, right?
Mira: No. He clarified everything that you had told him.
Vir Sanghvi: Okay, very good.
Mira: I think that there was no issue and there was, and there was lot of relief from this Chief Minister’s side.
Vir Sanghvi: Okay.
Mira: And he realized that, you know, this is all being done by…
Vir Sanghvi: By Maran.
Mira: …yeah. [Indiscernible] [0:00:42] But the thing is that it appears that he is still under a lot of pressure to take Maran, you know, so…
Vir Sanghvi: Where is this coming from this pressure?
Mira: It’s coming from Stalin and his sister Sylvie.
Vir Sanghvi: Okay.
Mira: So, I believe Maran has given about 600 crores to Dayalu, Stalin’s mother.
Vir Sanghvi: 600 Crores, okay?
Mira: 600 Crores, is what I’m told.
Vir Sanghvi: It’s hard to argue with that kind of pressure?
Mira: Isn’t it. So, he is…
Vir Sanghvi: Yeah.
Mira: …but no, but he doesn’t know, the father doesn’t, I mean,
Vir Sanghvi: Doesn’t realize what?
Mira: Doesn’t realize that. But this is the feedback that Alagiri has got.
Vir Sanghvi: Okay.
Mira: And …
Vir Sanghvi: So, basically what they want is a little more flexibility and posts right? They want probably more cabinets or something?
Mira: They are saying one more cabinet and Kanni was independent charge.
Vir Sanghvi: Yeah.
Mira: But if they stick to three and give independent charge, then Kanni gets her independent and then Alagiri, Balu and Raja come in?
Vir Sanghvi: That is not so bad, you know.
Mira: Yeah, so I think…
Vir Sanghvi: …unless Maran is one of the cabinet.
Mira: Yeah. But yeah, unless Maran is one of the cabinet. But I don’t think he can give it to three family members.
Vir Sanghvi: Yeah.
என்ன Mr.பத்ரி,சுருதி குறையுது?
ReplyDeleteராசா உரோசா என்றெல்லாம்
வழிந்தீர்! இப்போ திடீர்ன்னு DMK க்கு
againstஆ எழுதறீங்க?
ஒன்னும் தேறலியா?
GOD BlESS AMERICA
ReplyDelete8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.
ReplyDelete--What a joke...Epdi than ipdi ellam eludha ungalukku manasu varudho...
naamathaan niranthara kaipullaigal....
ReplyDelete//இந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன.//
ReplyDeleteThe tapes and most of related information have been in the public domain for long and I am surprised you seem to have "discovered" it now and accordingly tempered your opinion on the issue now!?
We have come to expect better than this from you Badri.
Sorry to ask again Badri?
ReplyDeleteஇதை எல்லாம் படிப்பது / கேட்பது உங்களுக்கு 'சுவாரஸ்யமாகத்தான்' இருக்கிறதா? கோபமோ, அருவெறுப்போ வரவில்லையா?
யூகத்தில் இருந்த அசிங்கமான அரசியல், உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தொடர்புள்ளவர்கள் மீதான உங்கள் கருத்துக்கள் மாறவில்லையா?
அகில இந்தியாவும் தமிழ்நாட்டைப் பார்த்துச் சிரிப்பதற்கு (அதற்காக நாமெல்லாம் வெட்கித் தலைகுனிவதற்கு) காரணமாக உள்ள நிகழ்வுகளுக்கு என்ன எதிர்வினை?
(2G அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதில் ஊழல் நடந்திருந்தால்) பீகாருக்கும், ஒடிசாவுக்கும், மணிப்பூருக்கும் போக வேண்டிய (இந்தியா முழுவதற்குமான) பணம் வேறு வடிவில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் பைக்குப் போய் தமிழ் நாட்டில் பாய்ந்திருக்கக் கூடியதன் பொருளாதார விளைவுகள் குறித்து கவலைப் படுகிறீர்களா?
மா சிவகுமார்
// :)) ஒரு கட்டுரைக்கு எத்தனை கோடி தருவார்கள்? யாரிடம் பேரம் பேச வேண்டும்? ராடியாவிடமா, வீர் சங்வியிடமா? பர்க்காத் தத்திடமா? இங்கே நிறைய பேர்கள் ஆஃபீஸ்களில் பொழுது போகாமல் இணையத்தில் வம்பளந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் ராஜா புகழ் பாட எவ்வளவு கமிஷன் என்பதைச் சொன்னால் அவர்களும் பிழைத்துப் போவார்கள். உங்களுக்குப் பாய்ந்த நீர் அப்படியே இன்னும் பலருக்கும் பாயட்டும் கருணை காட்டுங்கள்//
ReplyDeleteநீங்கள் பத்ரியை ரொம்ப உயர்வாக மதிப்பிட்டு உள்ளீர்கள். அப்படியெல்லாம் அவர்கள் பணம் கொடுக்கவேண்டிய தேவையில்லை. தரவும் மாட்டார்கள். வெற்றிகொண்டான் எவ்வுளவு சொத்து வைத்திருப்பார்? அவரைவிடவா இவர் சொம்பு தூக்கிவிட்டார்? வேணும்னா ரெண்டு ஆர்டர்? கொஞ்சம் கிழக்கை பற்றீய விளம்பரம் முரசொலியில். வேணும்னா NDTVயில் விவாதத்தில் கலந்து கொள்ள வைக்கப் பட்டிருக்கலாம்... அவ்வுளவுதான்.இனிமேல் இவர் பதிவில் வரும் மற்ற கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியதாக மாற்றியதுதான் இவர் பெற்ற வெகுமானம்.என் கணிப்பு முன்பு இணையத்தில் முன்பு வந்த அறிவிழி (இதே போல்தான் அவரும் 2G பற்றி இப்படிதான் உளறி கொண்டிருந்தார்) போல இவரும் வலைபதிவை மூடிவிடுவார் என்பது என் கணிப்பு. பார்ப்போம்.
மா.சிவகுமார்: ராடியா டேப் விவகாரத்தில் பிற்காலத்தில் நடக்கப்போகும் ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட திமுக மந்திரிகள் தொடர்பான தகவல்கள்தான் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன.
ReplyDeleteமற்றபடி, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக என் கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. ஊழல் நடந்துள்ளது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருந்தால், அது 1,000 - 2,000 கோடி ரேஞ்சில்தான் (அதிகபட்சமாக) இருக்கும். ஊழல் நடக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம். ஆனால், அதற்காக கொள்கை முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம், மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பிக்ஸட் அமவுண்டாக இருந்தால் போதும்; அதுவும் ரிலையன்ஸ், டாடா நிறுவனங்களுக்கு 2001-03-ல் கொடுத்த அதே தொகைக்கு - என்னும் என் கருத்தில் இம்மியளவும் மாற்றமில்லை.
ராஜா ஊழல் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவரும், கூட உதவியவர்களும் தண்டனை பெறுதலே சரி. கூடவே, லஞ்சம் கொடுத்த நிறுவனங்களும்கூட. டிராய் அவர்களது உரிமங்களை கேன்சல் செய்யலாம் என்று சொல்லியுள்ளது. லஞ்சம் நிரூபிக்கப்பட்டால், அந்தத் தண்டனையும் சரியானதே என்றுதான் தோன்றுகிறது.
#Barkhagate என்று டுவிட்டரில் தேடவும். இரண்டு நாட்களாக இந்தியாவில் இடைவிடாமல் டுவீட்டப்படும் buzz word இது தான்.
ReplyDeletehttp://www.dnaindia.com/blogs/post.php?postid=318
இந்த வலைப்பக்கத்தையும் பார்க்கவும்.
//.என் கணிப்பு முன்பு இணையத்தில் முன்பு வந்த அறிவிழி (இதே போல்தான் அவரும் 2G பற்றி இப்படிதான் உளறி கொண்டிருந்தார்) போல இவரும் வலைபதிவை மூடிவிடுவார் என்பது என் கணிப்பு. பார்ப்போம்//
ReplyDeleteராஜரத்தினம்.. நீங்க பத்ரியை பத்தி ஒரு முடிவெடுத்துட்டுதான் இந்தப் பதிவை படிக்க வந்ததுபோல இருக்கு! தனி ஆளா கூவிட்டு இருக்காம, புள்ளகுட்டிங்களை படிக்க வையுங்க!
//பத்ரி
ReplyDelete600 கோடி ரூபாய் வி(வ)காரம் ராடியா, வீர் சங்வி உரையாடலில் உள்ளது. இவையெல்லாம் இணையத்தில் பல மாதங்களாக படிக்கக் கிடைக்கின்றனவே நீங்கள் இன்னுமா படிக்கவில்லை? இவற்றையெல்லாம் படிக்காமல்தானா ராஜா யோக்யவான் என்று ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்படி எதையுமே படிக்காமல் எப்படி தடாலடியாக எழுத முடிகிறது? இவை எல்லாமே சி பி ஐ ரெக்கார்ட் செய்து வெளியிட்ட ஆவணங்கள். இவை போக விஜிலென்ஸ் கமிஷனர், என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்டரேட் என்று இன்னும் ஏகப் பட்ட டாக்குமெண்டுகள் இணையம் முழுவதும் ரெம்பி வழிகின்றன. அவற்றில் எதையுமே படிக்காமல் ராஜாவுக்கு தாசில்தார் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறீர்கள். நன்றாக இருங்கள். //
Mr.Badri! As a matter of fact I am not a regular visitor of your blog.While surfing various blogs I come across a few comments of others views on you and 2G.
It's unforunate that you have not gone deep into 2G and just expressed your views in a top gross analytical manner.
//ராஜரத்தினம்.. நீங்க பத்ரியை பத்தி ஒரு முடிவெடுத்துட்டுதான் இந்தப் பதிவை படிக்க வந்ததுபோல இருக்கு! தனி ஆளா கூவிட்டு இருக்காம, புள்ளகுட்டிங்களை படிக்க வையுங்க!//
ReplyDeleteஇது என்னபா கொசுக்கடி. அவரின் மற்ற அறிவியல் மற்றும் கணித பதிவுகள்தான் என்னை இங்கு வரவைத்தது. அது மட்டுமல்ல. மற்ற பதிவுகளின் நடுநிலைமை(?) கூட என்னை இந்த பதிவுகளின் பார் ஈர்த்தது. ஆனால் இவரின் தொழில் காரணமாக இப்படி அடிக்கும் ஜால்ராவினால்தான் அப்படி சொன்னேன். என் கணிப்பால் இவரின் தளத்தை மூட முடியாது. அந்த அறிவிழி தளத்தில் அவர் தீவிர திமுக ஆதரவாளர் என்பதால் 2008-2009லேயே அவர் இதைதான் உளறி கொண்டிருந்தார். அதனால்தான் இப்படி சொன்னேன். உங்க தலைவரை ஏர்போர்டில் பார்த்தேனே(டீவியில்தான்). இந்த பொழைப்புக்கு....
// உங்க தலைவரை ஏர்போர்டில் பார்த்தேனே(டீவியில்தான்). இந்த பொழைப்புக்கு....// எங்கத் தலைவர் வீரமணியோட பொழப்பு இதுதான்னு ஊருக்கே தெரிஞ்சதே!
ReplyDeleteபத்ரி எந்த இடத்துலயும் ராஜாவுக்கோ, திமுகவுக்கோ ஆதரிக்கவேயில்லையே! உங்களைப்போல உணர்ச்சியான்குஞ்சுகள்தான் கண்ணை மூடிட்டு ஆதரிக்கும்.. கண்ணை மூடிட்டு எதிர்க்கும். நீங்களே பார்த்தீங்க இல்ல! ராஜாவை பதவி இறக்கம் செய்னு கூவின ஆங்கில மீடியா தாதாக்களோட முகத்திரையை இப்பத்தான் கிழிச்சிருக்காங்க. பத்ரியோட கருத்து, முழுப் படத்தையும் பார்த்து விமர்சனம் பண்ணுங்கன்னு சொன்னதுதான். அதுக்குள்ள.. கவர்ன்மெண்ட்.. ஆர்டர்.. அது இதுன்னுட்டு.. சிறுப்பிள்ளைத்தனமா..
கீழே உள்ள சுட்டிகளையெல்லாம் படிங்க. பத்ரி ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லைன்னு தெரியும்.
ReplyDeleteகலாநிதி, அழகிரி, தொழில் ஒழுக்கம்
http://thoughtsintamil.blogspot.com/2008/06/blog-post_15.html
மன்மோகன் சிங் என்ன செய்கிறார்?
http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_4215.html
http://thoughtsintamil.blogspot.com/2008/06/blog-post_18.html?showComment=1214207940000#c4126489168445533062
ராஜரத்தினம்.. எனக்கென்னமோ உங்களைப் பார்த்தா ஒண்ணு திமுகவிற்காக திமுக எதிர்ப்பு போர்வையில் வந்து கூவுறவர்.. அல்லது தொழில் பொறமை உடையவர். ரெண்டுல ஒண்ணு மாதிரி இருக்கு!
.
ராஜரத்தினம்
ReplyDeleteபத்ரி இன்றைய தமிழ் அறிவுச் சூழலின் ஒரு அங்கமாக ஒரு சிம்பலாக இருக்கிறார். எந்த விஷயத்திலும் பத்ரி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். பத்ரி ஒரு விஷயத்தில் ஒரு கருத்துச் சொல்லி விட்டால் கடும் எதிர் கருத்துக்கள் உடையவர்கள் கூட இப்படியும் இருக்குமோ என்று யோசிக்கும் விதமாக அவருக்கு ஒரு இமேஜ் இருக்கிறது. பல நேரங்களில் அவர் சொல்வதில் விஷயமும், உண்மையும் உள்ளது. அதைப் போலவே துக்ளக் சோ, ஓ பக்கம் ஞாநி என்று இன்னும் சிலரது கருத்துக்கள் பலரையும் இன்றும் உடன் படச் செய்கின்றன. ஆகவே ஒரு வெற்றி கொண்டானோ தீப்பொறி ஆறுமுகமோ சொல்வதை விட ஒரு பத்ரி சொன்னால் அதற்கு மரியாதை அதிகம். அப்படி ஒரு சூழலில் ராஜாவும் தி மு கவும் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அடித்த பின்னும், அது பற்றிய முழுத் தகவல்களும், உண்மைகளும், ஆதாரங்களும் சுப்ரீம் கோர்ட்டிலும், பாராளுமன்றத்திலும், இன்னும் பல தளங்களிலும் சமர்ப்பிக்கப் பட்ட பின்னாலும் கூட பத்ரி வந்து ராஜாவுக்கு முதலில் ஆதரவாகப் பேசுகிறார். அடுத்து ராஜாவை விட்ச் ஹன்ட் செய்கிறார்கள் என்று பரிதாபப் படுகிறார், இறுதியாக அவர் செய்திருக்கும் ஊழல் சில ஆயிரம் கோடி இருந்தாலும் இருக்கலாம் என்று சப்பை கட்டுகிறார். இவற்றையெல்லாம் ஒரு பத்ரி சொல்லும் பொழுது அதற்கு அறிவு ஜீவிகளின் உலகத்தில், இணையத்தில் ஒரு மரியாதை கிட்டி அதன் மூலம் ராஜாவுக்கும் தி மு க வுக்கும் ஒரு சாஃப்ட் கார்னரும் ஒரு மாற்றுப் பார்வையும் ஒரு பரிதாப கோணமும் அளிக்கப் படுகின்றன. சிந்தனையாளர்களின் சிந்தனையை மாற்ற பத்ரி பயன் படுகிறார். இது ஒரு முக்கியமான விஷயம், பத்ரி தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு கருவியாக யார் கைகளிலோ பயன் படுகிறார் என்றே தோன்றுகிறது. நிச்சயம் பத்ரிக்கு இந்த ஊழல்களின் முழுப் பரிமாணமும் தெரியாமல் இருக்கவே இருக்காது. தமிழில் இது விஷயமாக ராடியா, பரக்காதத் உரையாடல்கள் வரை மிக விரிவாக அலசப் பட்ட ஒரு முழு நீளக் கட்டுரை இந்த விஷயம் வெடிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே தமிழ் ஹிந்து தளத்தில் வெளி வந்து விட்டது. அதையெல்லாம் பத்ரி படித்திருக்க மாட்டார் என்று நினைக்க முடியவில்லை. பத்ரி மிகத் தெளிவாக ஒரு கேம் ஆடுகிறார். அவர் சொல்வது போல 1.76 லட்சம் கோடி என்பது ஒரு அனுமான இழப்பேயானாலும் கூட ராஜாவின் பினாமி கம்பெனிகள் மூலமாக களவாடப் பட்ட பணத்தின் மதிப்பு மட்டுமே குறைந்தது பத்தாயிரம் கோடிக்கு மேலாக உள்ளது. இருந்தாலும் பத்ரி அதை குறைத்து மதிப்பிட்டு மழுப்புகிறார். பத்ரி இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் அறியாமல் இந்த கட்டுரையை எழுதியிருப்பார் என்பதை சிறு குழந்தை கூட நம்பாது. இருந்தாலும் இந்த விஷயத்தின் ஆரம்பம் முதலாகவே ராஜாவை ஆதரித்தே இவர் கருத்துத் தெரிவித்து தனது கருத்துக்கள் மூலமாக திட்டமிட்டு இணையத்தில் தமிழ் படிப்பவர்களிடத்தில் ஒரு வித மென்மையான எண்ணப் போக்கையும் ஆதரவையும் ஏற்படுத்தும் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார். ஒரு வேளை ராஜாவோ கனியோ அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவதோ பத்ரியைப் பயன் படுத்தியிருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் பத்ரி தன் மதிப்பையும், தன் மீது இது வரை இருந்த நம்பிக்கையையும், கருத்து நேர்மையையும், தார்மீக நிலையையும் இந்த திட்டமிட்ட ஆதரவுக் கருத்துக்கள் மூலமாக இழந்து விட்டார் என்றே கருத வேண்டியுள்ளது. எனது தீர்ப்பு இனிமேல் பத்ரி எந்த அரசியல் கருத்துச் சொன்னாலும் அதை நிறைய கடல் உப்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. அப்படி நிஜமாகவே இந்த ஊழலின் முழுப்பரிமாணத்தை அவர் அறியாமல் படிக்காமல் இந்த ஆதரவைத் தெரிவித்திருப்பாரேயானால் அது அவரது முதிர்ச்சியின்மையை மட்டுமே காண்பிக்கும், அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லாதவர் விபரம் இல்லாதவர் அல்ல பத்ரி. ஆகவே தெரிந்தே அறிந்தே ஒரு மாபெரும் ஊழலுக்கு ஆதரவாகச் செயல் பட்டிருக்கிறார் என்பதே இறுதித் தீர்ப்பு
நடிநிலைமை உடையவர்கள் இரு துருவங்களுக்கும் துவர்ப்பாகத்தான் இருப்பார்கள் என்பது பத்ரி விஷயத்தில் தெளிவாகத் தெரிகிறது.
ReplyDeleteHats off Badri!
//எந்த விஷயத்திலும் பத்ரி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். பத்ரி ஒரு விஷயத்தில் ஒரு கருத்துச் சொல்லி விட்டால் கடும் எதிர் கருத்துக்கள் உடையவர்கள் கூட இப்படியும் இருக்குமோ என்று யோசிக்கும் விதமாக அவருக்கு ஒரு இமேஜ் இருக்கிறது. பல நேரங்களில் அவர் சொல்வதில் விஷயமும், உண்மையும் உள்ளது. அதைப் போலவே துக்ளக் சோ, ஓ பக்கம் ஞாநி என்று இன்னும் சிலரது கருத்துக்கள் பலரையும் இன்றும் உடன் படச் செய்கின்றன.//
ReplyDeleteThat is why majority of the followers of Badri would have been upset with the tone of his post. I do not wish to go deeper than this. We welcome Badri in his usual style.
//பத்ரி இன்றைய தமிழ் அறிவுச் சூழலின் ஒரு அங்கமாக ஒரு சிம்பலாக இருக்கிறார்.//
ReplyDeleteபதிப்பாளராக இருப்பதாலே அவர் அறிவு சூழலின் அங்கம் என்பதெல்லாம் ரொம்ப Over.
//எந்த விஷயத்திலும் பத்ரி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்.//
Of course May be. ஆனால் நான் எப்போதுமே இவரின் கருத்துகளை அப்படி ஏற்றவனில்லை.It is obvious.இனிமேல் எப்போதும் அப்படி இல்லை.
//பத்ரி ஒரு விஷயத்தில் ஒரு கருத்துச் சொல்லி விட்டால் கடும் எதிர் கருத்துக்கள் உடையவர்கள் கூட இப்படியும் இருக்குமோ என்று யோசிக்கும் விதமாக அவருக்கு ஒரு இமேஜ் இருக்கிறது//
You are Just Overestimating him.
//நேரங்களில் அவர் சொல்வதில் விஷயமும், உண்மையும் உள்ளது.//
அந்த உண்மை அவர் படித்த விஷயங்களை பற்றி வேண்டுமானால் OK.
//அதைப் போலவே துக்ளக் சோ, ஓ பக்கம் ஞாநி என்று இன்னும் சிலரது கருத்துக்கள் பலரையும் இன்றும் உடன் படச் செய்கின்றன.//
என் மனம் திமுக மற்றும் கருணாநிதியை பற்றி வரும் எதிர்மறையான் கருத்திகளுக்கு எப்போதுமே மயங்கும். ஆனாலும் கருணாநிதி கைதை பார்த்து வருத்தப்பட்டவன் நான். கருணாநிதி ஆட்சியின் இலவசங்களை பார்த்து அவர் ஆட்சி மாறவேண்டும் என்ற மாறா கொள்கை உள்ளவன் நான்.
//ஆகவே ஒரு வெற்றி கொண்டானோ தீப்பொறி ஆறுமுகமோ சொல்வதை விட ஒரு பத்ரி சொன்னால் அதற்கு மரியாதை அதிகம்.//
I never accept this.
//அப்படி ஒரு சூழலில் ராஜாவும் தி மு கவும் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அடித்த பின்னும், அது பற்றிய முழுத் தகவல்களும், உண்மைகளும், ஆதாரங்களும் சுப்ரீம் கோர்ட்டிலும், பாராளுமன்றத்திலும், இன்னும் பல தளங்களிலும் சமர்ப்பிக்கப் பட்ட பின்னாலும் கூட பத்ரி வந்து ராஜாவுக்கு முதலில் ஆதரவாகப் பேசுகிறார்.//
நான் இதை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். அன்று ஒரு விழாவில் திமுக மாணவரணி செயலாளரை பற்றி எழுதியுள்ளார். அவர்கள் இவரிடம் இதை (Spectrum) பற்றி கேட்டால் இவரால் என்ன பதில் சொல்ல முடியும்.
இந்த ஜால்ரா அதனால்தான்.
//அடுத்து ராஜாவை விட்ச் ஹன்ட் செய்கிறார்கள் என்று பரிதாபப் படுகிறார், இறுதியாக அவர் செய்திருக்கும் ஊழல் சில ஆயிரம் கோடி இருந்தாலும் இருக்கலாம் என்று சப்பை கட்டுகிறார்.//
நிச்சயமாக இதில் சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை.
//இவற்றையெல்லாம் ஒரு பத்ரி சொல்லும் பொழுது அதற்கு அறிவு ஜீவிகளின் உலகத்தில், இணையத்தில் ஒரு மரியாதை கிட்டி அதன் மூலம் ராஜாவுக்கும் தி மு க வுக்கும் ஒரு சாஃப்ட் கார்னரும் ஒரு மாற்றுப் பார்வையும் ஒரு பரிதாப கோணமும் அளிக்கப் படுகின்றன. //
அப்படி யாருடைய கருத்தும் இவரால் மாறிய மாதிரி தெரியவில்லை.
//சிந்தனையாளர்களின் சிந்தனையை மாற்ற பத்ரி பயன் படுகிறார். //
Hey Come on man. I am tired of this opinion about Badri. You mean to say if he is publisher means he is more wise than us? Not necessary.
//நிச்சயம் பத்ரிக்கு இந்த ஊழல்களின் முழுப் பரிமாணமும் தெரியாமல் இருக்கவே இருக்காது.//
இந்த கருத்து அவர் அறிவுஜீவி என்று நீங்கள் நினைத்து கொண்டதால் வந்தது.
//தமிழில் இது விஷயமாக ராடியா, பரக்காதத் உரையாடல்கள் வரை மிக விரிவாக அலசப் பட்ட ஒரு முழு நீளக் கட்டுரை இந்த விஷயம் வெடிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே தமிழ் ஹிந்து தளத்தில் வெளி வந்து விட்டது. அதையெல்லாம் பத்ரி படித்திருக்க மாட்டார் என்று நினைக்க முடியவில்லை.//
நீங்கள் நினைத்தது போல் அவரும் தன்னை ஒரு அறிவு ஜீவி என்று நினைத்து அதற்காக ஹிந்து(Not THE HINDU) என்று வந்ததால் அந்த தளத்திற்கே போகாமல் விட்டிருக்கலாம்
//பத்ரி மிகத் தெளிவாக ஒரு கேம் ஆடுகிறார். அவர் சொல்வது போல 1.76 லட்சம் கோடி என்பது ஒரு அனுமான இழப்பேயானாலும் கூட ராஜாவின் பினாமி கம்பெனிகள் மூலமாக களவாடப் பட்ட பணத்தின் மதிப்பு மட்டுமே குறைந்தது பத்தாயிரம் கோடிக்கு மேலாக உள்ளது//
அவர்தான் சொல்லிவிட்டாரே 2000கோடிதான் என்று. அதனால் இது தவறில்லை. (ஆனாலும் இது தவறுதான் என்று எழுதிவிட்டார்)
//பத்ரி இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் அறியாமல் இந்த கட்டுரையை எழுதியிருப்பார் என்பதை சிறு குழந்தை கூட நம்பாது//
//அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லாதவர் விபரம் இல்லாதவர் அல்ல பத்ரி//
அறிவு முதிர்ச்சி சாப்பாடு போடாது. முதிர்ச்சிக்கு ஒவ்வொரு நபருக்கும் ஒரு கற்பிதம் உண்டு.
கமல் சொன்னது போல என்னை ஒரு மதத்துக்கு ஆதரவாளன் என்று சொன்னால் கூட வருத்தமில்லை. ஆனால் திமுக ஆதரவாளன் என்று சொன்னதில் மிக்க வருத்தம்.
உங்கள் மேல் சந்தேகம் எல்லாம் இல்லை பத்ரி .... ஏதோ வேலை களைப்பில் அரைத்தூக்கத்தில் இரவு 2மணிக்கு ராசா-ரோசான்னு குடை பிடித்து கருத்து சொல்லிவிட்டீர்கள் ....... ஆனால், சொல்லிவிட்டோமே என்று வம்படியாக வக்காலத்து வாங்குவதுதான் தவறு .... 1000- 2000 கோடி ஊழல் இல்லை என்பது குழந்தைக்கு கூடத்தெரியும் .... 20- 30 ஆண்டுகளுக்கு முன்னேயே விஞ்ஞானபூர்வமாக புறங்கையை நக்கியவர்கள். இன்றைய ஊழலில் "ஆர்பிட்ராஜை" நாம் பார்க்க வேண்டும் .... 1.75ல.கோடி என்பது யூக இழப்புதான். அதே தொகையை லஞ்சமாக கிறுக்கர்கள் கூட கொடுக்கமாட்டார்கள் .... (இந்த ஆர்பிட்ராஜ் கான்செப்ட் என்பது சாலை ஓரத்தில் காக்கி மாமா செய்யும் மாமூல்தான் ... லைசென்ஸ் இல்லையா அங்க ஆபீசர்ட்ட போனா 800ரூபாய் ... இங்கியே என் கிட்ட முடிச்சா 300ரூபாய்) ... யாரும் காக்கிக்கு 800ரூபாய் மாமூலாகக் கொடுப்பதில்லை ... அதே சமயம் 20ரூபாயும் குடுப்பதில்லை ... ஒரு குத்து மதிப்பாக 200ரூ வசூலித்துவிடுவார். .... அதுபோல இந்த ஊழலில் 1000கோடி என்பது காக்கியின் 20ரூ வசூல் போன்றது ... சயன்டிஃபிச் ஊழலில் டாக்டரேட் செய்துள்ள கரைவேட்டியினர் இவ்வளவு தாழ்ந்து போக மாட்டார்கள் ... எனவே ஊழல் தொகை நிச்சயம் 30ஆயிரம்- 50ஆயிரம் கோடி வரையாவது இருக்கும்... அதையும் கரைகள் மட்டுமே செய்திருக்காது ....சின்ன காக்கி பெரியகாக்கிக்கு பங்கு கொடுப்பதுபோல்... 50% வைத்துக்கொண்டு, மீதி தொப்பிக்காரர்களுக்கும் பங்கு சென்றிருக்கும் ... மேலும் புலி, கிளி, வரிக்குதிரை என்ற லெட்டர்பேடுகள் மூலம் நடைபெற்றுள்ள வேல்யுவேஷன் விளையாட்டையும், நடக்க சாத்தியமான வெள்ளையடித்த ஹவாலா பறிமாற்ற சாத்தியக்கூறுகளையும் இந்த வரிக்குதிரைகள் விஞ்ஞான பூர்வமாக பங்கு விற்று காசு பார்த்ததையும் நாம் பார்க்கவேண்டும் (கைப்புண்ணுக்கு கண்ணாடிபோன்ற இதற்கு வியாபார பூர்வமாக நீங்கள் எழுதியுள்ள கருத்துக்களைப் பார்த்தால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லை??? )
ReplyDeleteபத்ரி,
ReplyDelete//ராடியா டேப் விவகாரத்தில் பிற்காலத்தில் நடக்கப்போகும் ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட திமுக மந்திரிகள் தொடர்பான தகவல்கள்தான் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன.//
சின்ன திருத்தம். இந்த டேப் உரையாடல்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த காலத்துக்குப் பிற்பட்டவை என்று நினைக்கிறேன். UPA2 அரசு அமைப்பதற்கான விவாதங்கள் இவை.
//2ஜி ஸ்பெக்ட்ரம், மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பிக்ஸட் அமவுண்டாக இருந்தால் போதும்; அதுவும் ரிலையன்ஸ், டாடா நிறுவனங்களுக்கு 2001-03-ல் கொடுத்த அதே தொகைக்கு - என்னும் என் கருத்தில் இம்மியளவும் மாற்றமில்லை.//
மீண்டும் ஒரு திருத்தம்:
ரிலையன்சு நிறுவனத்துக்கு 2007ல் அனைத்திந்திய ஒதுக்கலும் (கொள்கை அறிவிக்கப்படும் முன்பே), டாடாவுக்கு அதற்கு பின்னரும் GSMக்கான அலைக்கற்றை ஒதுக்கப்பட்டன. 2001-03ல் CDMA சேவைதான் வழங்க ஆரம்பித்தார்கள்.
இதிலும் முரண்பாடுகள் இருந்ததாக CAG அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
http://www.hindu.com/2010/11/18/stories/2010111856191200.htm
QUOTE
the Reliance application for dual technology was processed on October 18, 2007, though the DoT made the policy announcement only a day later. Its rival, Tata Teleservices, which was the first to apply for the use of dual technology after the policy was announced, was placed lower in priority, and is still to get the GSM spectrum in all circles, while Reliance Communications was given the spectrum.
UNQUOTE
//டிராய் அவர்களது உரிமங்களை கேன்சல் செய்யலாம் என்று சொல்லியுள்ளது. //
டிராய் சொன்னது லஞ்சம் வாங்கியவர்களின் உரிமங்களை கேன்சல் செய்வது பற்றி இல்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் சேவை வழங்க ஆரம்பிக்காததால் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது.
//2ஜி ஸ்பெக்ட்ரம், மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பிக்ஸட் அமவுண்டாக இருந்தால் போதும்;//
ReplyDeleteநிர்ணயிக்கப்பட்ட தொகையில் கொடுப்பதாக இருந்தால், யாருக்குக் கொடுப்பீர்கள்? 2007ல் இருந்த (இன்றும் இருக்கும்) சந்தைச் சூழலில் இந்த உரிமங்களுக்குப் போட்டி போட நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் தயாராக இருந்தன.
இந்தத் துறையில் அனுபவம் உள்ள நிறுவனங்களா அல்லது ஏதாவது ரியல் எஸ்டேட் துறை நிறுவனத்துக்கா?
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்துக்குக் கொடுத்து, ஆரம்பக் கட்டணத்துடன் கூடவே, வருமானத்தில் பங்கும் கேட்டிருக்கலாம்.
1. குறைவான விலையில் கொடுத்தது.
2. கொடுப்பதற்கான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் அவசர நடவடிக்கைகள் (கடைசி நாளை மாற்றியது, அமைச்சருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உரிமம் கிடைத்தது).
3. அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில், கோடிக்கணக்கான பணம் வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது
4. அரசின் தணிக்கையாளர் குறைகளைச் சுட்டிக் காட்டியிருப்பது.
இவை எல்லாம் பார்த்த பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் லஞ்சம் வாங்கியிருப்பார்கள் என்ற ஐயம் வரவில்லையா?
சிபிஐ குற்ற அறிக்கை தயாரித்து அமைச்சரையும், அதிகாரிகளையும் கைது செய்து விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்க வேண்டும் என்று கேட்க தோன்றவில்லையா?
(இதை விடச் சிறிய அளவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரே பல ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாக இருக்கிறார்கள்.)
மா சிவகுமார்
Did you read the kilu kilu matter in Tata - Radia's conversation.
ReplyDeleteBadri Sir,
ReplyDelete2g ஊழல் பற்றியும் tape களில் உள்ளனவே! எப்படி காசை, வெளி நாடுக்கு கொண்டு போய், சாலாக்காக "ரவுண்டு ட்ரிப்" money -ஆக திருப்பி கொணர்ந்தனர் என.. , 2g பற்றி ஒரு கேஸ்-study தேவை - சிவாஜி பட, மொட்டை மாடி டயலாக் அபௌட் ப்ளாக் money -white money - கிரீன் money - in action
கனி சொன்னார் :-
"அப்பா சொன்னாரென
பள்ளி கூடம் சென்றேன்,
தலை வாரினேன்,
பொட்டு வைத்தேன்,
சில நண்பர்களை தவிர்த்தேன்,
....,
....,
என் முறைக்காக காத்திருக்கிறேன்.."
இப்போ மொத்தமாக அடிச்சிட்டார்.
பை தி வே,
யாரேனும், முழு tapekkumaana சுட்டி தர முடியுமா?
For Badri to see (if he has not and read it already)
ReplyDeleteFrom the write-up by Aditya Sinha, EIChief of New Indian Express titled "Cleanest PM and Dirtiest scam"
All will agree that he is better informed than all of us.
"Some experts estimate the money going to politicians from this deal was anywhere between `25,000 to `30,000 crores. A chunk of it is suspected to have found its way to a political party that would understandably need it to avoid defeat in its next state assembly elections. The rest? No prizes for guessing how high the big money went.
The talk in Delhi has been that much of the loot from the Commonwealth Games went to the same place. Such talk occasioned denials from the princeling’s advisor Kanishka Singh (son of former foreign secretary S K Singh, and a young man who apparently hopes to one day become super-PM) that he had any connection with the Dubai-based property developer Emaar-MGF, which made some serious money in constructing the CWG residential village. The point of the CWG-related corruption, however, is this: once chief organiser Suresh Kalmadi’s head rolled, the public and the media forgot about the scam. Sure, a few bureaucrats’ heads will roll (and some may even do prison-time), but without public pressure the justice system will not go near where the real money went."
i dont think badhri is so good in politics ..as he is running a company responsible for the monthly salary of peoples he may write like this as he is also a businessman.
ReplyDeleteஇப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா? --------
ReplyDeleteNothing will change. Because - so far - it has been impossible to make voters(not the netizens - but village an platform dwellers) understand the nuances of the scam So - the end result - DMK will win even more seats in 2011 elections.
We expected you to - with your articulation and balanced thoughts - to write an article on the nuances of the scam - But we also understand your position as a businessman and the need to remain diplomatic with the ruling class.
//(ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)//
ReplyDeleteஇப்ப அந்த பாழாய் போன நீதியரசரும் இப்படிதான் அபாண்டமா சொல்றாரே? அதனாலென்ன அதுக்கு என்ன சாட்சி இருக்கு அப்டீன்னு ஒரு பதிவு போட்டா போச்சு.