Friday, July 27, 2012

தி.நகரில் டயல் ஃபார் புக்ஸ் கடை எண் 2

நேற்று சென்னை தி.நகரில் எங்களுடைய இரண்டாவது புத்தகக் கடையைத் திறந்திருக்கிறோம். முதல் கடை, மூன்று மாதங்களுக்குமுன் தி.நகரிலேயேதான் ராமேஸ்வரம் சாலையில் திறக்கப்பட்டது.

நாங்கள் தமிழ்ப் பதிப்பாளராக (கிழக்கு பதிப்பகம்) பிப்ரவரி 2004-ல் வாழ்க்கையைத் தொடங்கினோம். கொஞ்சமாக ஆங்கிலம், மலையாளம் ஆகியவற்றில் கால் பதித்து, பிறகு இரண்டையும் நிறுத்திவிட்டோம். தமிழ்ப் பதிப்பில் பல புதிய முயற்சிகளைச் செய்துள்ளோம். தொடர்ந்து செய்துவருகிறோம்.

தமிழ் மட்டுமின்றி, பிற இந்திய மொழிகளை எடுத்துக்கொண்டாலும் புத்தக விற்பனைக்கான கட்டுமானம் மிக மோசமாக உள்ளது. வேண்டிய கடைகள் இல்லை. இருக்கும் கடைகளிலும் வேண்டிய புத்தகமெல்லாம் இருக்காது. புத்தகக் கடைக்காரர் பெரும்பாலும் பதிப்பாளர்களுக்குச் சரியான நேரத்தில் பணம் கொடுக்கமாட்டார். (பல நேரங்களில் பணமே கொடுக்கமாட்டார்!) இதன் காரணமாக பல முன்னணிப் பதிப்பாளர்களும் கையில் காசு கொடுக்காவிட்டால் விற்பனைக்குப் புத்தகம் தரமாட்டார்கள். (அதாவது கிரெடிட் கிடையாது.) இதைவிட மோசம், சில பதிப்பாளர்கள் கேஷ் என்றால் ரூபாய் நோட்டுகளை மட்டும்தான் மதிப்பார்கள். செக், டிராஃப்ட் எல்லாம் அவர்களுடைய அகராதியிலேயே கிடையாது. கட்டுக்கட்டாகக் காசை எண்ணி வைத்தால்தான் புத்தகம்.

தமிழகத்தில் விநியோகத்துக்கான கட்டுமானமும் கிடையாது. நீங்கள் சிறு பதிப்பாளராக இருந்து 10-20 புத்தகத்தைப் பதிப்பித்திருந்தால் அவற்றை ஒவ்வொரு கடைக்கும் கொண்டுசேர்ப்பதற்குள் உயிர் போய்விடும்.


நாங்கள் 2006-ல் வித்லோகா என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்து, கையைச் சுட்டுக்கொண்டோம்.அதன்பின் ரீடெய்ல் எல்லாம் வேண்டாம் என்று மூட்டை கட்டி வைத்துவிட்டோம். பின் மீண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, இணையம் வழியாகப் பிறருடைய புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். இது மிகவும் பாதுகாப்பான தொழில். ஆர்டர் வந்தால் அதன்பின் அந்தப் புத்தகத்தைப் பிறரிடமிருந்து பெற்று கஸ்டமருக்கு அனுப்பினால் போதும். பின் சென்ற ஆண்டு, ஃபோன்மூலம் புத்தகம் விற்கலாம் என்ற முடிவை எடுத்தோம். அப்படி ஆரம்பித்ததுதான் டயல் ஃபார் புக்ஸ் 94459-01234 (அ) 9445-979797. இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும், இந்த எண்களுக்கு ஃபோன் செய்து வேண்டிய புத்தகங்களை வீட்டுக்கே தருவித்துக்கொள்ளலாம்.

இணையம், ஃபோன் இரண்டின்வழியாகவும் ஓரளவுக்குக் கணிசமான விற்பனை நடக்க ஆரம்பித்தபின்னரே, தி.நகர் ராமேஸ்வரம் சாலையில் கடையை ஆரம்பித்தோம். ஏற்கெனவே லிஃப்கோ ஷோரூம் இருந்தது அங்கே. அவர்களிடமிருந்து அந்த இடத்தைப் பெற்று, லிஃப்கோ புத்தகங்களையும் சேர்த்துப் பல பதிப்பாளர்களின் புத்தகங்களையும் அங்கே வைத்து விற்றுவருகிறோம்.

முதல் இரண்டு மாதத்திலேயே நல்ல விற்பனை நடந்துள்ளது. இதனால் உந்தப்பட்டு, சென்னையில் மேலும் பல இடங்களிலும் புத்தகக் கடைகளை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். உடனடியாகக் கிடைத்தது தி.நகரிலேயே மற்றோர் இடம். ஏற்கெனவே பி.எம்.ஜி காம்ப்லெக்ஸின் கிழக்கு ஷோரூம் ஒன்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அங்கேயே ஷோரூமுக்கு எதிராகவே சற்றே பெரிய இடம் கிடைத்தது. அதில் பிற புத்தகங்களை வைத்துக் கடையை ஆரம்பித்துவிட்டோம்.


அடுத்ததாக, மைலாப்பூர், அண்ணா நகர், வேளச்சேரி போன்ற மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் இடம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

***

எங்கள் புத்தகக் கடைகளுக்கும் ஏற்கெனவே இருக்கும் புத்தகக் கடைகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?


1. எந்த புத்தகக் கடையாக இருந்தாலும் தமிழில் வெளியாகியுள்ள அத்தனை புத்தகங்களின் பிரதிகளையும் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் எங்கள் கடையில் நீங்கள் ஒருமுறை வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கேட்டுப்பாருங்கள். அது அச்சில் உள்ளது என்றால் அதைத் தேடிப் பிடித்து உங்களுக்கு வாங்கித்தராமல் விடமாட்டோம்.

பொதுவாக கஸ்டமர் சர்வீஸ் என்பதில் நமக்குப் பெரும் போதாமை உள்ளது. எப்படியாவது இதனைச் சரி செய்யவேண்டும் என்று போராடுகிறோம்.

2. தினம் தினம், சனி, ஞாயிறு உட்பட, விடுமுறை தினங்கள் உட்பட அனைத்து நாள்களிலும் புத்தகக் கடைகள் திறந்திருக்கும். காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை.

3. நேரில்தான் வரவேண்டும் என்றில்லை. ஃபோனிலும் (94459-01234 / 9445-979797) அல்லது இணையம்வாயிலாகவும் (www.nhm.in/shop) புத்தகங்களை வாங்கலாம். குறிப்பிட்ட அளவுக்குமேல் வாங்கினால், இப்போதைக்குச் சென்னையில் மட்டும் உங்கள் வீட்டுக்கு நாங்களே புத்தகங்களைக் கொண்டுவந்து தருகிறோம்.

4. கடையில் புத்தகம் வாங்கினால் டிஸ்கவுண்ட் கிடையாது. பல கடைகளில் உங்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கலாம். ஆனால் எங்கள் கடைகளில் எத்தனை ரூபாய்க்கு வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். இணையத்திலும் இனி டிஸ்கவுண்ட் கொடுக்கப்போவதில்லை. சிறப்பான சேவைமூலம் வாடிக்கையாளரைத் திருப்தி செய்வதுதான் முக்கியமே தவிர டிஸ்கவுண்ட் மூலமாக அல்ல என்று முடிவெடுத்துள்ளோம்.

5. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்குப் புத்தகங்களைத் தரும் பதிப்பாளர்களுக்கும் சிறப்பான சேவையைத் தருகிறோம். இதனை, பதிப்பாளர்கள் கடந்த சில மாதங்களில் உணர்ந்திருப்பர்.

***

இதுதவிர புத்தக விநியோக நெட்வொர்க் ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். லிஃப்கோ அகராதிகள், கவிஞர் வைரமுத்து புத்தகங்கள், மஞ்சுள் புக்ஸ், ஷிவம் புக்ஸ், டயமண்ட் புக்ஸ் (தில்லி), பாரகன் புக்ஸ் போன்ற சிலருடைய புத்தகங்களை தமிழகம் முழுதும் விநியோகம் செய்கிறோம். விநியோக நெட்வொர்க், இதனால் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு என்ன நன்மை போன்றவற்றைப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

எங்களிடம் புத்தகம் வாங்கியது குறித்த மகிழ்ச்சியான, சோகமான அனுபவம் என்ன இருந்தாலும் என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சரி செய்ய உடனடியாக முயற்சி செய்கிறேன்.

30 comments:

 1. வாழ்த்துகள் பத்ரி. இதிலும் வெற்றி பெற !!!

  ReplyDelete
 2. உங்ககிட்ட ஆர்டர் கொடுத்தா கிழக்கு பதிப்பகமா இருந்தா உடனே அனுப்பி வைக்கீறீங்க. ஆனா வேற பதிப்பகமா இருந்தா, அப்போது இருப்பு இல்லன்னா, பின்னர் அனுப்புகிறோம் ங்கிற குறிப்புக்கூட இல்லாம மத்த புத்தக்ங்களை அனுப்புறீங்க.

  அப்புறம் நானா போன் பண்ணி கேட்டததுக்கப்புறம், ஒரு தடவை பணத்தை திருப்பி கொடுத்தாங்க.... இரண்டாவது தடவை மூச்சே காணும் ;-(((

  ReplyDelete
  Replies
  1. As mentioned in Google Plus, we are looking at your order details. Will revert by Monday.

   Delete
 3. உங்கள் ஷோ ரூம் எல்டாம்ஸ் ரோட்டில் இருந்தபோது ஜெயமோகன் சிறுகதை
  தொகுப்பை தேடி அங்கு வந்திருந்தேன்.காலை ஒன்பதரை மணி அளவில்.
  பத்து மணி வரை கடை திறக்கவில்லை.பிறகு போன் செய்து கேட்ட போது
  இன்று இந்த ஏரியா முழுக்க கரண்ட் கிடையாது ஆகவே கடை விடுமுறை
  என்றார்கள்.
  அடுத்த நாள் திரும்பி வந்தேன்.அங்கு இருந்த உங்கள் உதவியாளருக்கு
  ஜெயமோகன் சிறுகதை தொகுப்பு இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.
  நீங்களே தேடிப்பாருங்கள் சார் என்றார்.தேடிப்பார்த்து விட்டு திரும்பி விட்டேன்.
  நீங்கள் மட்டுமல்ல எல்லா பதிப்பாளர்களின் நிலையும் இதுதான்.உதவியாளர்கள்
  அமைவதை பொறுத்ததுதான் உங்கள் சேவையின் தரம் இருக்க முடியும்.
  நல்ல உதவியாளர்கள் அமைய வாழ்த்துக்கள்.
  ரவி

  ReplyDelete
  Replies
  1. Dear Ravi,

   I invite you try out now. We have come a long way since then.

   Delete
 4. கிழக்கில் ஒரு பிரச்சினை (இதை பிரச்சினை என்றும் முழுமையாக சொல்லமுடியாது) நாம் பத்ரி,சத்யா ஹரண் போன்றவர்களுடன் பழகி விட்டு அவர்கள் அளவுக்கு கிழக்கு கடைகளில் வேலை செய்பவர்களுடன் இதே ப்ரொபஷனலிசம் எதிர்பார்க்கிறோம். அங்கே எதிர்பார்ப்பு பூர்த்தியாவதில்லை.அப்பொழுது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.பல முறை கிழக்கு கடைகளில் வேலை செய்பவர்கள்”சார் இந்த புக்கை வாங்குங்க நல்லாருக்கும்,எதோ இந்த ஹோட்டலில் இட்லி நல்லாயிருக்கும் என்ற அளவில் பேசுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Dear Aravindan, your expectation is perfectly valid. Stepping up to provide that sort of service is what we are striving for. We realise that there are shortcomings, but we have bridged the gap considerably. We have started working on training, but we realise we have to still go a fair way. If the employees are themselves not book readers, we do get into problems. But we expect to resolve this in the next couple of months.

   Delete
 5. Less said about your 'Dial for Books' is better. God only knows howmany times I tried both the nos from Dubai, without any response, for a book. Then I asked a friend of mine in Chennai to call you. Twice he was told that he will be called back regaridng the availability of that book. No one called him back. Finally I managed to get the tel. no of the publisher, and called him from Dubai, who gave me the details of the shop in TNagar, where the book was available. I got the book. Your DFB could not carry out this simple task. At the same time I should say you are attempting a laudable effort. Regards VViswanathan

  ReplyDelete
  Replies
  1. Dear Viswanathan, I am really sorry about the bad experience you had with our service. Culd it be possible for you to email me (badri@nhm.in) your phone number? I would like to talk to you and find out more details of what actually happened so that I can work on this problem and fix it. Though it may not be of any help to you, it can help the future customers. Thanks.

   Delete
  2. I truly appreciate your quick response and the desire to address this problem. I have mailed you my contact details. Regards Viswanathan

   Delete
  3. A staff of your office called me and took down the details. He assured me of better service/response in future. Thank you and Best Wishes - Viswanathan

   Delete
 6. "அடுத்ததாக, மைலாப்பூர், அண்ணா நகர், வேளச்சேரி போன்ற மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் இடம் தேடிக்கொண்டிருக்கிறோம்"...being Velachery resident, this is music to my ears. Hope your plans fructify soon.

  ReplyDelete
 7. Please make it user friendly at least in one place of Chennai and main cities with wheel chair accessibility for the disabled to get into the shop and to wheel between the rows and shelves and browse the books with our own eyes and hands. :)

  ReplyDelete
  Replies
  1. Good idea but let me be honest with you here. We operate on places owned by others. We merely rent a small piece of shop - 200 to 400 sq. ft. That is all. They are part of the larger shopping complexes. I cannot offer spacial reach access for disabled people. I will however keep this in mind. When we achieve the scale to build one large shop, we will work on physical access to large number of disabled people.

   Delete
 8. தமிழில் அனைத்து பதிப்ப்பாளர்களின் அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்வது மிகவும் கடினமான செயல்.அதில் துணிந்து இறங்கியுள்ளீர்கள். இது அதிக எதிர்ப்பார்ப்புகளை உருவாக்குகிறது.அது நிறைவேறாத போது வாங்குபவர் எரிச்சல் அடைகிறார்.எனவே
  ‘ எந்த புத்தகக் கடையாக இருந்தாலும் தமிழில் வெளியாகியுள்ள அத்தனை புத்தகங்களின் பிரதிகளையும் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் எங்கள் கடையில் நீங்கள் ஒருமுறை வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கேட்டுப்பாருங்கள். அது அச்சில் உள்ளது என்றால் அதைத் தேடிப் பிடித்து உங்களுக்கு வாங்கித்தராமல் விடமாட்டோம்.’
  என்று எழுதி அதீத எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம்.மாறாக
  promise something feasible and do it with perfection.
  This will make you and buyers happy than promising the
  buyers the moon.

  தமிழில் பல பதிப்பகங்கள் புத்தகம் இருப்பில் இல்லை என்று சொன்னாலும் அப்புத்தகத்தின் பிரதிகள் விற்பனையாகாமல் பல புத்தக விற்பனையாளர்களிடம் இருக்கும்.எனவே சென்னையில் கிடைக்காத புத்தகம் கோவையில் கிடைக்கும்.உங்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை, எனவே பதிப்பாளர் கூறியதை நம்பி புத்தகம் இருப்பில் இல்லை, இரண்டாம் பதிப்பும் வெளியாகவில்லை என்று சொல்லிவிடுவீர்கள்.ஆனால் அந்த புத்தகம் ஒருபுறம் கிடைக்காமல்,இன்னொரு புறம் விற்காமல்
  கிடக்கும்.இது போல் பல பிரச்சினைகள் தமிழ் பதிப்புலகில்
  உள்ளன.இதை கிழக்கு மட்டும் தீர்த்துவிட முடியாது.

  நியு புக்லாண்ட்ஸ் ஒரு முன்னோடி.இருப்பினும் அவர்களிடம் பல பதிப்பகங்களின் அனைத்து நூல்களும் கிடைக்காது.காலச்சுவடு, உயிர்மை வெளியிடும் நூல்கள் குறித்த தகவல்கள் காலச்சுவட்டில்,உயிர்மையில் வெளியாகும்.பல பதிப்பகங்கள் வெளியிடும் நூற்கள் எந்த விளம்பரமும் இன்றி வெளியாவதால்
  வாசகருக்கு அவை வெளியானதே தெரிய வாய்ப்பின்றி போகிறது.
  ஒவ்வொரு மாதமும் தமிழில் வெளியான நூல்கள் குறித்த தகவல்களை திரட்டி வெளியிட்டால் கூட அதுவும் ஒருவகையில் விளம்பரமாக அமையும்.
  உங்களிடம் கிடைக்கும் புதிய நூல்கள் குறித்த விபரங்களை உடனுக்குடன் தர ஒரு வலைப்பதிவினை துவங்கலாம்.மாத
  இறுதியில் அம்மாதம்/அண்மையில் வெளியான, உங்களிடம் கிடைக்கும் புதிய நூல்கள் பட்டியலை வெளியிடலாம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்களைத் தருவதற்கான சில திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். முக்கியமான/முதன்மை பதிப்பாளர்களுடன் கிட்டத்தட்ட தினமும் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே புத்தகங்களின் ஸ்டாக் பற்றிய தகவல் ஓரளவுக்குக் கிடைக்கும். இதில் நிச்சயமாக முன்னேற்றம் தேவைப்படுகிறது. நாங்கள் சொல்வது ஓர் ஆதர்சம். வாடிக்கையாளர் கேட்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படியாவது வாங்கித்தரவேண்டும் என்பதை ஆதர்சமாகக் கொண்டு இயங்க விரும்புகிறோம். அந்த ஆதர்சத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ, அந்த இடைவெளியை அடைக்க முற்படுகிறோம்.

   இணையம் மூலமாக தொடர்ந்து பிற பதிப்பகங்களுடைய புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். எங்களுடைய மின்னஞ்சல் பட்டியலில் உள்ளோருக்கு வாரம் மூன்றுமுறை புத்தகங்களை அறிமுகம் செய்து அஞ்சல் அனுப்புகிறோம். விரைவில் புத்தக அறிமுகம், புத்தகம் தொடர்பான கட்டுரைகள், விமர்சனங்கள், நேர்முகங்கள் ஆகியவை அடங்கிய இணைய/அச்சு இதழ் ஒன்றைக் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம்.

   நீங்கள் சொல்வதுபோல ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புதிய நூல்களை அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். வேறு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தாலும் தரவும்.

   Delete
 9. Hi Badri,I appreciate all your great efforts..

  ReplyDelete
 10. Hi,
  I've visited the Dial for books store in T nagar twice & had a good experience.The store keeper didn't intrude at all and left us to browse through the books in peace. He was also apt in responding when asked for help.
  Being a resident of Velachery, would be very happy if a shop is soon opened here.

  ReplyDelete
 11. Mr.Badri,

  What is the problem in offering atleast a 10% discount on the value of the purchase. I have been in publishing and know that 30 to 40 % discount is offered to book sellers.When you offer such discounts to middle men why dont you offer atleast a portion of the same to the enduser

  ReplyDelete
  Replies
  1. Dear Subramanian,

   Discount has to be offered to middlemen because they make the sale happen. In the retail business WE are the middlemen. That is, we get the books from the publishers and retain the discount.

   If we give a further discount from that to the customers, we need to make more sales to happen to achieve break even. For example, to achieve operating break even, we need to make 70,000 Rs. Suppose the average commission we receive is 30%. We need to hit sales of Rs. 2.3 lakh in order to simply break even on the shop. That is a sale of around Rs. 7,777 a day. If, on the other hand, I give 10% discount to every purchase, I get effective commission only of 20%. I would therefore have to make Rs. 3.5 lakh a month to effect an operating break even. Which would be Rs. 11,666 a day. That is, simply to give a discount of 105 to the customer, I need to make an additional revenue of Rs. 3,890 a day. If you are a publisher, as you say, you will know what is the extra effort we need to do and the kind of marketing spending we need to do.

   In the space we operate, a 10% discount is enormously injurious to running the business.

   We intend not to injure our business.

   Notice that we are talking about this number to merely achieve operating breakeven. Just add the cost of capex per shop, advance we pay for rent. Then on top of this, we have to plan a return on investments. After all, people who invest in this business should make at least a modest return.

   A publisher can afford to give discount - his cost structure is different. A retailer simply cannot. Therefore, we do not intend to.

   Thank you.
   Badri

   Delete
 12. நேற்று கடைக்கு வந்திருந்தேன். i was expecting a huge collection of books, atleast half the size of landmark / odyssey. But it was too small for a book shop. A neighborhood store in Vadapalani (Atrium, Rahat Plaza) has a 10 times bigger collection.
  I came to explore books from Paari Nilayam. But jus only one book was there from this publisher. (Ofcourse I bought it.) I suggest instead of having 2 shops in T Nagar, you can go for one bigger place atleast 1000sqft even if it's not in T Nagar. With some parking space. It's a suggestion. I wish i could find such a store. Book Store in Egmore museum has a bigger collection, leave the 10% discount they offer.

  ReplyDelete
  Replies
  1. Dear Thiagarajan,

   Firstly, we cannot even compete with Landmark or Odyssey. When it comes to the business practice of not paying the publisher properly, I do not even want to complete with Odyssey.

   Atrium's book collection is a total of 10 racks, with six racks of Tamil and four racks of English. Of the six Tamil racks, two are full of our books, so I know very well. They do not even have a dedicated person to look after the book section. I am surprised that you found that as a comparison to our book shop.

   We operate on 200 sq. ft. and no more. The rent per sq. ft. is going around 100 Rs there at the lowest. We cannot even think of setting up a 'half the size of Landmark' in the near future.

   If you are looking for specific books from Paari Nilayam, we get them for you. We cannot keep more than 1,500 books in stock in our shop, given the space constraints. That is not what I promising the customers as well. We aim to get you the books you are looking for. For browsing, one of these days, we may set up a large shop, hopefully with parking facilities etc.

   Egmore Museum shop is a joint initiative of Connemara public library and the book sellers and publishers association (aka BAPASI). We participate in this. Every publisher pays an annual rent for the rack we take up. We keep copies of all our books there - at our own expense. The library authorities allocate a person to manage the sales. 10% discount MUST BE offered to the customer as per the conditions. Whatever has sold, they settle the amount to us.

   It is a public service, in which the publishers and the Tamil Nady Govt. have come together to defray the costs. A pure for-profit venture like us cannot even think of offering the same, which is subsidised by multiple parties.

   We do not compete to be Egmore Museum book shop. We try to offer a different service.

   When I get to setting up a large shop, I will certainly inform all of you.

   Thanks.

   Delete
 13. When I recently came to India, I bought books thro' DFB. Service is good, all books i ordered, i got it next day itself thro' courier. Very few customer like us, like to know about the weight of the book due to weight restrictions in flight. in future, atleast for your publications, details section add weight of the book. as i said, we are very very minority % of your customers.

  I had a feeling when i browsed your NHM website for book, it can be improved a lot. For e.g, if one author books published by different publisher, i have to go and search for each publisher. Instead if i choose a author, if result comes with all his books, it will be good. I don't worry about the publisher as a buyer.

  ReplyDelete
  Replies
  1. Dear Sudhar,

   NHM Website can certainly be improved a lot. It costs a fair bit of money and we have to decide whether it is worth spending that money right now. We do hope to make some improvements over this year. Lack of good quality search is very much part of that problem. However, you can click on the Author link and it should give you all books written by that author in our database across all publishers.

   We do have the weight entered into our database. This is what we use to calculate the shipping cost. I will try to see if this can be displayed to the customer, both in the book display page as well as the final invoice. The weight is a tentative weight weighed once and entered. It will vary from print run to print run depending on the paper used by the particular manufacturer in that particular print run.

   Delete
 14. hmm, I believe "no discount" will make people to think twice before deciding the same book from your shop or some other shop. Here i mean people as common people and not NRIs and techies.

  I had stayed in hyderabad nearly 7 years. And whenever I want to buy tech book, I used to go to Koti - a place where I get 30% discount. For a 500 Rs book, I could save 150 Rs (minus 20Rs of bus tickets). Not just me, many hyderabad people prefers koti shops. A note, there is a talk, in koti some shops sell pirated books, not sure how far that is true.

  But here I mean to say, 'discount' is one of the big motivation while buying books in shops. even a 10% from good shops is really good.

  Moreover, currently i buy non-tech books from book fair. but i like trying library like anna-centenary for those books. because after one time of reading, i don't touch those history, story books.

  its just my opinion.

  regards
  senthil

  ReplyDelete
 15. திரு பத்ரி அவர்களுக்கு.
  டயல் ஃபார் புக் சென்னையையும் அதன் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் மட்டும் என்று இல்லாமல், ஏன் அதை என்னைப் போன்ற வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் விஸ்தரிக்கக்கூடாது. விகடன் மற்றும் துக்ளக் பத்திரிகைகள் அவர்களுடைய சில பல புத்தகங்களை அப்படி எங்களுக்கு பதிவு தபாலில் அனுப்புகின்றனர். எங்களுடைய ஆர்டர் தயாராவதற்குள் அவர்களுக்கு எங்களுடைய பணம் க்ரெடிட் கார்ட் மூலம் பட்டுவாடா செய்யப் பட்டு விடுவதால், பணப் ப்ரச்சனையும் இல்லை. இதை பரிசீலிக்க முடியுமா?

  அன்புடன்,
  முரளி இராமச்சந்திரன்

  ReplyDelete
  Replies
  1. முரளி, இப்போதே புத்தகங்களை அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் அனுப்புகிறோம். என்ன, போஸ்டல் செலவுதான் கொஞ்சம் அதிகம். எங்கள் இணையத்தளம் (www.nhm.in/shop) சென்று, வேண்டிய புத்தகங்களைத் தேர்வு செய்து, உங்கள் முகவரியைச் சேர்த்தால் புத்தகச் செலவு எவ்வளவு, தபால் செலவு எவ்வளவு என்று காட்டிவிடும்.

   Delete
 16. வாழ்த்துக்கள் பத்ரி.

  ReplyDelete
 17. Hi,

  Am checking some books from different vendors, i found some price difference between yours & udumalai.

  These prices i found on NHM

  ஒற்றன் - 140
  கரைந்த நிழலகள் - 60
  விடுதலை - 120

  The prices which i found on udumalai

  ஒற்றன் - 150
  கரைந்த நிழலகள் - 100
  விடுதலை - 230


  I sent the mail to nhm.in, after that today the prices have been corrected. கரைந்த நிழலகள் became 100, விடுதலை became 130.

  So the previous prices were wrong and I didnt get any reply for my Mail. A reply would have been appreciated.

  ReplyDelete
  Replies
  1. விலை மாறுதல் தொடர்பாகப் பதில் வரவில்லை என்றால் நேராக என் மின்னஞ்சல் முகவரிக்கு (badri@nhm.in) அஞ்சல் அனுப்புங்கள். கீழே குறிப்பிடப்பட்டுள்ள (இரண்டாவதாக, அதிக விலை கொண்டதாக) உள்ளவைதான் சரியான விலைகள். புத்தக விலைகள் அதிகரித்துள்ளன. எங்கள் தளத்தில் மாறவில்லை என்றால் அவற்றை மாற்றச் சொல்லிவிடுகிறேன். நன்றி.

   Delete