Monday, July 16, 2012

மத அடிப்படைவாதம்

எல்லா மதங்களுக்கும் சில புனித நூல்கள் உள்ளன. சில இறைத் தூதர்கள்/கடவுளின் மகன்/அவதாரங்கள் உள்ளனர். அந்த மதத்தைப் பின்பற்றுவோர் இந்த நூல்களையும் தூதர்களின் வாக்கியங்களையும் literal-ஆக, அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் அறுதி உண்மை என நம்பும்போதுதான் பிரச்னை எழுகிறது.

கிறிஸ்தவ பழைய ஏற்பாட்டை அப்படியே லிடரலாக எடுத்துக்கொண்டு உலகமும் உயிர்களும் தோன்றியது சுமார் ஐந்தாயிரத்தி சொச்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்று நம்புவோர் பலர் இருக்கின்றனர் (Young Earth Creationsists). எத்தனை அறிவியல் சான்றுகளை அவர்கள்முன் வைத்தாலும் அதற்குப் பலன் கிடையாது. பைபிள் என்பது கடவுளின் வார்த்தை. அதில் தவறு இருக்க முடியாது.

இஸ்லாத்தைப் பற்றிப் பேச்சே இல்லை. குரானும் ஹதீஸும்தான் முதன்மை ஆவணங்கள். அவற்றுக்கு வெளியே என்ன இருந்தாலும் அவற்றை நம்பவேண்டியதில்லை. காலிபா உமர், அலெக்சாண்ட்ரியாவில் உள்ள நூலகத்தை எரிக்க ஆணையிட்டதாகச் சொல்வார்கள். அவர் சொன்னாராம்: அந்தப் புத்தகங்கள் ஒன்று குரானில் உள்ளதைச் சொல்லியிருக்கும். எனவே அவை அழிந்தால் கவலையில்லை. அல்லது குரானுக்கு எதிரானதாக இருக்கும். அப்படியானால் அதை அழிப்பது முக்கியமாகிறது.

***

இந்தப் பதிவில் நான் பேச இருப்பது மேலே உள்ளவை பற்றியல்ல. மாறாக, வைணவ மத அடிப்படைவாதிகளைப் பற்றி.

தமிழக வைணவம் ஸ்ரீவைணவம் எனப்படுகிறது. ராமானுஜர் சம்பிரதாயம். இதுவும் வேதாந்த மதம் என்பதால், இதன் ஆதார நூல்கள் பிரஸ்தானத் த்ரயி எனப்படும் மூன்றான (1) வேத உபநிடதங்கள் (2) பிரம்ம சூத்திரம் (3) பகவத் கீதை. இவற்றுக்குமேல், ஸ்ரீவைணவத்துக்கு ஆழ்வார் பாசுரங்களான நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் சேர்த்தி.

இவற்றுடன் பல்வேறு ஆசாரியர்கள் எழுதியிருக்கும் உரைகள் (ஈடு), ஸ்லோகங்கள் ஆகியவையும் சேர்ந்து மிகப் பெரிய ஆவணத் தொகுதி ஒன்று உள்ளது. உரைகளிலேயே மிக முக்கியமானது ராமானுஜர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய ஸ்ரீபாஷ்யம். இதன்மூலம்தான் ராமானுஜர் விசிஷ்டாத்வைதக் கொள்கையை நிலைநாட்டினார். அத்துடன் அவர் எழுதிய வேதார்த்தசங்கிரகம், கீதாபாஷ்யம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்கு திருக்குருகைப்பிரான் பிள்ளை, நஞ்சீயர், அழகிய மணவாள ஜீயர், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றோர் உரைகளை எழுதியுள்ளனர். இவைதவிர பிள்ளை உலகாரியர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனி போன்றோர் பல விளக்க நூல்களை எழுதியுள்ளனர். ராமானுஜருக்கு முன்னவரான ஆளவந்தார் எழுதியவையும் முக்கியமானவை.

மேலே சொல்லப்பட்ட தொகுதிதான் ஸ்ரீவைணவர்களால் இன்றுவரை படிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காலத்தால் இவற்றுக்கு முற்பட்டு, தமிழில் இயற்றப்பட்ட பரிபாடலும் ஆழ்வார்கள் காலத்துக்குப் பிற்பட்ட, ஆனால் உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட கம்ப ராமாயணமும் வைணவ உரைகளில் எங்குமே காணப்படுவதில்லை. வால்மீகி ராமாயணத்திலிருந்து பக்கம் பக்கமாக மேற்கோள் காட்டும் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்துக்கு முன்பே கம்ப ராமாயணம் இயற்றப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஒரு வரியையேனும் நீங்கள் வைணவ உரைகளில் கண்டுவிட முடியாது.

திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலிருந்து பல சொற்றொடர்களை ஆழ்வார் பாசுரங்களில் நீங்கள் காண முடியும். முக்கியமாக சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலிருந்து.

ஆனால் அவை பற்றியும் வைணவ உரைகளில் எதுவும் இருக்காது.

***

நான் எம்.ஏ வைணவம் படிக்கிறேன். இரண்டாம் ஆண்டுக்கான முதல் வகுப்பு நேற்று நடைபெற்றது. சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஒரு பாடம். அப்போது வகுப்பில் பெரிய விவாதம். வகுப்பை நடத்தும் ஆசிரியர், சிலப்பதிகாரத்தினால் ஆழ்வார்கள் உந்தப்பட்டு சில சொற்றொடர்களை அப்படியே கையாண்டுள்ளனர் என்று சொல்லிவிட்டார்.

இருக்கவே முடியாது என்று சில அன்பர்கள் வாதிட்டனர். ஆசாரியர்களால் ஏற்கப்படாத ஒரு பனுவலிலிருந்து ஆழ்வார்கள் inspiration பெற்றனர் என்று சொல்லிவிட்டால் அது ஆழ்வார்களுக்கு இழுக்கு. ஒருவர் ஒருபடி மேலே போய் திருவள்ளுவரும் இளங்கோ அடிகளும் ஆழ்வார் பாடல்களால் உந்தப்பட்டு தத்தம் பாடல்களை உருவாக்கினர் என்று ஏன் சொல்லக்கூடாது என்றார். அப்படிச் சொல்வதால் இளங்கோ அடிகளுக்கும் திருவள்ளுவருக்கும்தானே பெருமை என்றார்.

காலம் இடிக்கிறதே என்றார் ஆசிரியர்.

உண்மையில் ஆய்வாளர்கள் சொல்லும் காலம்தான் இடிக்கிறது என்றார் அந்த மாணவர். ஏனெனில் குருபரம்பரப் பிரபாவம் என்னும் பூர்வாசாரியர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின்படி, ஆழ்வார்கள் காலகட்டம் என்பது துவாபர யுகம், திரேதா யுகம் என்றெல்லாம் போகும். அதாவது பல்லாயிரம் ஆண்டுகள். அதைத்தான் ஆசாரியர்கள் நம்பினர். என்வே அதுதான் உண்மை. எனவே அதன்பின்னரே திருவள்ளுவர், இளங்கோ அடிகள் ஆகியோர் தோன்றியிருக்கவேண்டும். மேலும் நம்மாழ்வார் எந்தப் புத்தகத்தையுமே படித்திருக்க முடியாது. ஏனெனில் அவர் பிறந்ததிலிருந்தே யோக நிஷ்டையில் இருந்தார். பின் ஒரு நாளில் இறைவன் அருளால் அவருக்கு ஞானம் தோன்ற அவர் பாடத் தொடங்கிவிட்டார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி இளங்கோவையே திருவள்ளுவரையோ படித்திருக்க முடியும்? மேலும் இளங்கோவைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் எந்த வைணவ உரையாசிரியரும் ஒன்றுமே சொல்லவில்லையே? எனவே அவர்கள் எழுதியுள்ள நூல்கள் பிரமாணங்கள் ஆகா.

இந்த விவாதத்தில் மேற்கொண்டு இறங்குவது கடினம். ஸ்ரீவைணவ மரபின்படி பிரபத்தியை அடைய எம்பெருமான்மீது மகாவிசுவாசம் வேண்டும். அந்த மகாவிசுவாசத்தின் ஒரு பகுதி, ஆசாரியர்கள்மீதான விசுவாசம். அவர்கள் எக்காரணம் கொண்டும் தவறே இழைத்திருக்க மாட்டார்கள் என்னும் நம்பிக்கை.

இத்தகைய நம்பிக்கைக்கு மத்தியில்தான் பாவம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வைணவத்துறை, சிலப்பதிகாரம், பரிபாடல், கம்பராமாயணம் போன்றவற்றையெல்லாம் எம்.ஏ வைணவத்துக்குப் பாடமாக வைத்துள்ளது.

படிப்பது எம்.ஏ ஸ்ரீவைணவம் என்று பலரும் நினைத்துவிடுவதுதான் தவறே. பாடம் எம்.ஏ வைணவம்தான். வைணவம் என்பது இந்தியா முழுவதும் உள்ள பரந்துபட்ட ஒரு மதம். அதில் பல பிரிவுகள் உள்ளன. ஸ்ரீவைணவம் ஒரு பிரிவுதான். மத்வாசாரியரின் வைணவத்தில் ஆழ்வார்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கமாட்டார்கள். எந்தப் பிரிவிலும் மாட்டாத பரிபாடல் போன்ற சங்கப் பாடல்களும் கம்பராமாயணம் போன்ற காப்பியங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் படிக்க திறந்த மனம் தேவை.

வைணவத்தின் பிற பகுதிகளைப் படிப்பதற்கே திறந்த மனம் இல்லாதபோது மதங்களுக்கு இடையேயான பேதங்களை எப்படிப் படித்து, என்ன செய்து கிழிக்கப்போகிறோம்?

89 comments:

 1. நீங்கள் சொல்வது உண்மைதான்.ஞானமடைந்தவர்களுக்கு பிறகு வருகிற காலத்தவர்கள் அவர்களின் மீது புனித தன்மையை ஏற்றி (இது எல்லா பிரிவுகளிலும் மதங்களிலும்) வழிபடுகிறார்கள். வழிபடுதலில் -ஒன்றை வழிபடுதல்-சிறப்பானது. அதில் தர்க்கத்துக்கு இடமேயில்லை (ஆம்...logic மதிக்கப்படாது.) இது பக்தி மார்க்கம்.நீங்கள் சொல்கிற இவர்கள் எல்லாம் பக்திமார்க்கத்தினர். இவர்களுக்கும் லாஜிக்குக்கும் வெகுதூரம். ஆனால் இதை ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள். 'தங்கள் லாஜிக்' தான் சரி என்பார்கள். பக்திக்கு லாஜிக்குக்கும் தொடர்பு ஏற்படுத்த பக்தியாளர்களும் தர்க்கவாதிகளும்,நாத்திகர்களும் முயற்சி செய்வதோ, எதிர்ப்பதோ வீணிலும் வீணான வேலை.

  பக்தி அல்லாது இவைகளைப் படிக்க - எல்லா பிரிவுகளையும் திறந்த மனதுடன் அணுக- ஒரு பாதை உண்டு. கடந்து நூற்றாண்டுகளில் இந்தப் பாதை அதிகம் பயன்படுத்தப் படாத பாதை.ஏனெனில் பக்தியே மற்ற மதபடையெடுப்பிலிருந்து, (குறிப்பாய் புத்தமதபரவலில் இருந்து மீண்டது)மீண்டும் இந்துமதம் பரவகாரணமாய் இருந்ததினால்.

  ஆனால் இப்போது நவீன கல்வி காரணமாக இந்த தர்க்கப் பாதை மீண்டும் புத்துயிர் பெற நிறைய வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன். இதுதான் வைணவர்கள் நான் சிவன் கோவில் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற காரணம்.காலம் மாறும்.மாறவேண்டும்.மாறியே ஆகணும்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. இதுதான் வைணவர்கள் நான் சிவன் கோவில் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற காரணம்.காலம் மாறும்.மாறவேண்டும்.மாறியே ஆகணும். >> மாறாது மாறினால் வைணவம் நீர்த்து அடித்து நொறுக்கபட்ட மகிழ்ச்சி உமக்கு கிடைக்கும் என்பதில் எனக்கு ஏதும் ஐயமில்லை

   Delete
 2. எம்.ஏ வைணவம் வேறு எம்.ஏ.ஸ்ரீவைணவம் வேறுதான். சந்தேகமே இல்லை.

  ReplyDelete
 3. கம்பனில் தோய்ந்து கொண்டாடும் ஸ்ரீவைஷ்ணவர்களும் உண்டு, சங்கப்பாடல்கள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களில் பாண்டியத்யமும்,வைணவ ஆசாரியர்களின் கோட்பாடுகள்,உரைகளில் பரந்த ஞானமும் கொண்டவர்கள் உண்டு.சிலர் இவற்றை வைத்து திருமாலே தமிழரின் ஆதி,முழு முதற் கடவுள் என வாதிடுகிறார்கள். எதற்கும் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராச்சாரியர் எழுதிய உரைகளை
  புரட்டிப் படியுங்கள். ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியர்
  போன்றோர் கருத்தையும் கேளுங்கள்.உங்கள் புரிதலில் உள்ள
  பிழைகள் அப்போது புரியும்.அகில இந்திய அளவில் தமிழக வைணவத்தின் தாக்கம் பிற வைணவ பிரிவுகளில் உண்டு.அது வெளிப்படையாகத் தெரியாது.ஏனெனில் அன்று சம்ஸ்கிருதமே அறிஞர்களின் இணைப்பு மொழி, தமிழ் அல்ல.

  ReplyDelete
  Replies
  1. என் புரிதலில் என்ன பிழை என்பதைக் கொஞ்சம் எடுத்துவைக்கலாமே? ஈடு எழுதியோர் அல்லது 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய ஆசாரியர்கள் பரிபாடல், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார்களா? இதைப் படி, அது புரியும் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்கிறீர்களே, கொஞ்சம் அதைத் தாண்டி ஓரிரு வரிகள் சொல்லிப் புரியவைத்தால் தன்யனாவேன்.

   Delete
  2. ஈடு எழுதியோர் அல்லது 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய ஆசாரியர்கள் பரிபாடல், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார்களா?

   >> ஏன் எதற்க்காக பேச வேண்டும் என நினைக்கின்றீர் என்பதுவே பலரது கேள்வி.இதை தெளிவு படுத்த முடிந்தால் உமக்கே நீர் முதலில் தன்யனாக ஆவது உறுதி .. காரணம் அந்த தெளிவு உம்மை ஒரு படி உயர்த்தி இருக்கும்.அதான்.

   Delete
 4. மருத்துவமனையில் வலிக்குதே-ன்னு, பொழுது போகாம, உங்கள் பக்கத்தைத் திறந்தேன்; ஒரே சிரிப்பு:)

  சிறப்பான பார்வை! மனம் திறந்த பார்வை!
  நீங்கள் M.A வைணவம் படிப்பது ஒரு புறம்; இது போன்ற சக மாணவ அனுபவங்களைப் படிப்பது மறுபுறம்!:)

  இந்த இழைக்குள் செல்லும் முன், ஒரு சின்ன நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன்;
  அதைப் படிச்சா, இது போன்ற "அடிப்படைவாதிகள்" மனசில் ஒரு "ஷாக்" அடிக்கும்:)

  ஆசார்யர்களை மீறி, ஒரு விளக்கம் கிடையாது என்ற அடிப்படைவாதம் உடைபடும்!
  --------------------

  இராமானுசர், பல நூல்களுக்கு உரை எழுதினார் - முக்கியமா, ஆன்மீக உலகில் பெரிதும் கொண்டாடப்படும் பிரம்ம சூத்திரங்களுக்கு!

  அவரிடம், பலர் வந்து, "உங்களுக்கு மாறனும், மங்கையும் தானே மூச்சு! நீங்கள் திருப்பாவை ஜீயர் ஆயிற்றே!
  ஸ்ரீபாஷ்யம் போல், நீங்கள் ஆழ்வார் அருளிச் செயல்களுக்கும் உரை செய்ய வேணும் ன்னு கேட்டுக் கொண்டனர்"

  அப்போது இராமானுசர் சொன்ன வரிகள் இவை:
  "அடியேன் வேதாந்த சூத்திரங்களுக்கு உரை செய்தது விசேஷித்தது ஓரொருகால் எனில், அச்சூத்திரங்களுக்குப் பொருள் அவ்வளவே!

  வாரீர், ஆனால் ஆழ்வார் பாசுரங்கள் அப்படியல்ல!
  பின் வருவோர் பலருக்கும், அவரவர் அறிவுத் திறனுக்கும் பக்திச் சிறப்புக்கும் ஏற்பப் பொருள் சுரப்பன ஆழ்வார் பாசுரங்கள்!
  அதற்கு நான் உரையிட்டால் வரம்பிட்டது போல் ஆகிவிடும்! சில
  "மந்த மதிகளுக்கு" இவ்வளவே பொருள் என்று தோன்றி விடும்!

  உள்ளத்து உற்றாயெழும் ஆழ்வார் பாசுரங்களுக்கு நானே அணை கட்டல் முறையோ? அங்ஙனந் தோன்றுமிடத்து அபசாரமாம்! அதனால், பிள்ளான், நீர் ஒரு படி, திருவாய்மொழிக்கு வியாக்யானம் செய்யும்"
  -------------------

  இது இராமானுசர் சொன்னது!

  அவர் தீர்க்க தரிசனம் பார்த்தீர்களா? அவர் மட்டும் அன்னிக்கு உரை செய்திருந்தா, ஆழ்வார் பாசுரங்களுக்கு வேற எவனும் இன்னிக்கி அனுபவிச்சி பொருள் சொல்ல முடியாது; ஆசார்ய விளக்கத்துக்கு எதிர் விளக்கமா?-ன்னு தீர்த்துக் கட்டிருவானுங்க:))

  அதை அன்றே உணர்ந்து, "வரம்பு கட்டாமல்", இது போன்ற "மந்த மதிகளுக்கு" உணர்த்திக் காட்டினார்!
  உணர்வதும், உணராதததும், அவரவர் பிடிமானங்களே!:)

  ReplyDelete
  Replies
  1. அவர் தீர்க்க தரிசனம் பார்த்தீர்களா? அவர் மட்டும் அன்னிக்கு உரை செய்திருந்தா, ஆழ்வார் பாசுரங்களுக்கு வேற எவனும் இன்னிக்கி அனுபவிச்சி பொருள் சொல்ல முடியாது; ஆசார்ய விளக்கத்துக்கு எதிர் விளக்கமா?-ன்னு தீர்த்துக் கட்டிருவானுங்க:))

   >>எதன் அடிப்படையில் இந்த வாதம் நீங்களோ இல்லை உங்களுக்கு தெரிந்தவரோ பொருள் கொள்ள துனிஞ்சாங்களா அதை சிலர் ஏற்க்கலையா?.. சரி தான். ?

   Delete
 5. //தமிழில் இயற்றப்பட்ட பரிபாடலும்//

  பரிபாடல் பற்றிய குறிப்பை, ஸ்ரீபாஷ்யத்தில், ஓரிடத்தில் இராமானுசரே குறிப்பிடுவார்;

  ஆபோ வா, அமுஸ்ய தப்த ஆயதனம், ஆயதனவான் பவதி!
  = நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
  = நின் தண்மையும் சாயலும் திங்கள் உள
  என்ற பரிபாடல்! இது குறித்து, முன்பு 365paa வில் நான் இட்ட பின்னூட்டம்
  http://365paa.wordpress.com/2012/03/16/254/#comment-1825

  //உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட கம்ப ராமாயணமும் வைணவ உரைகளில் எங்குமே காணப்படுவதில்லை//

  ha ha ha!
  partly true!
  கம்பர், தன் நூலை அரங்கேற்றப் பட்ட பாடு தான் தெரியுமே! அதுவும் தில்லை மூவாயிரவர்கள் தந்த தொல்லை!:)

  ReplyDelete
  Replies
  1. ஏன் பரிபாடலுக்கும் ஸ்ரீ-பாஷ்யமும் மூலமான நூல் ஒன்று இருந்திறுக்கலாமே அதை பரிபாடலசாரியரும்.. இவரும் படித்து எழுதியிருக்கலாமே?

   கொக்கறிப்பை விட்டு இது போண்ற கோணத்தில் சிந்தனை செய்ய தடை என்ன?அறியாமையும் காழ்ப்புணற்வும் தானே!!

   Delete
  2. பரிபாடலின் ஒரு பகுதி ஸ்ரீ பாஷ்யத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது என்று எழுதுகிறார்; இத்தனை பிரயாசைப்பட்டுக் கூரத்தாழ்வானையும் அழைத்துக்கொண்டு உடையவர் காச்மீரம் சென்றிருக்க வேண்டாம். பரிபாடலே போதுமானது என்று அதை மட்டும் மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கலாம்.



   போதாயந வ்ருத்திதான் ப்ரமாணம் எனும் உறுதியே அவரை மிகக் கடுமையான தேடலை மேற்கொள்ளச் செய்திருக்கிறது. ஸ்ரீபாஷ்யம் நிலைத்து நிற்கக்காரணமே அதன் திடமான ப்ரமாண பலம்தான். 'அவஸ்திதி’ எனும்
   உடல் - உயிர்க் கொள்கை வ்யாஸ சிஷ்யரான போதாயநர் அருளிய வ்ருத்தியின் மையக் கருத்து.
   தென்னக வைணவத்தின் உயிர்நிலை அதுவே எனலாம்


   தேவ்

   Delete
  3. அதலாம் ஹேஜியாலஜி இன் அகாடமிக்ஸ் வீ ஆர் இன்ட்ரஸ்டட் இன் மோட் ஆஃப் ட்ராவல் நாட் த ரிகார்டட் ஃபாக்ட் தட் யூ ட்ராவல்ட்.

   Delete
 6. //உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட கம்ப ராமாயணமும் வைணவ உரைகளில் எங்குமே காணப்படுவதில்லை//

  பத்ரி, இதில் மற்றும் உங்களோடு சற்றே மாறுபடுகிறேன்!:)
  இதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு!

  அன்றைய கால கட்டத்தில், ஆழ்வார் பாசுரங்கள், அவ்வளவு சுளுவாக, ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை!
  சம்ஸ்கிருத கோலோச்சல் அப்படி!

  அதனால், தமிழுக்கு வடமொழிப் போர்வை போர்த்தி, வடமொழி வேதங்களைப் போலவே சந்தையா ஒலிக்கச் செய்து...
  மணிப் பிரவாளமா, வடமொழி கலந்து கலந்து,
  "அருளிச் செயலை"த் திவ்ய பிரபந்தம் ன்னு ஆக்கி = திவ்யமா இருக்கே ன்னு ஒரு effectஐ உருவாக்கித் தான், தமிழை உள்ளே நுழைக்க முடிஞ்சுது!

  அதனால் தான் உரையாசிரியர்கள் பலரும், ஆழ்வார் பாசுரங்களுக்கு, வடமொழி Book Reference காட்டினார்கள்!

  ஆனால், தமிழ் உள்ளே நுழைந்த பின், கோயில் ஒழுகிலே சட்டமாக்கிய பின், இது தளர்ந்தது! ஆனா அவ்வளவாகத் தளரவில்லை! அதான் வேதனை:(
  ------------

  ஆனால் கம்ப ராமாயண ஒப்பீடுகள், பின்னாள் உரைகளில் நிரைய இருக்கு! Lemme give u a sample!

  தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,
  கிளிமொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
  -ன்னு பாசுரம்!

  அதற்கு வியாக்யானம்:
  விளப்புற்ற என்றது, ப்ரசித்தி பெற்ற என்றபடி.
  பிராட்டியை இலங்கையிற் கண்டு பெருமாளிடம் சென்ற அனுமன் விற்பெருந் தடந்தோள் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பில், கற்பெனப் படுவது ஒன்றுங் களிநடம் புரியக் கண்டேன் (கம்பராமாயணம்) என்றனன்.
  இப்படிப்பட்ட பலவகை ப்ரஸித்திகள் இங்கு விவகூஷிதம்!

  இன்னும் நிறைய இருக்கு!:)
  இன்னொரு வியாக்யானம்:

  எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பேசி அநுபவிக்கிறார்.
  உகப்புருவன் தானே கண்டவர்கள் எல்லாரும் உகக்கும் படியான திருவுருவத்தை உடையவன் என்கை.
  தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலம் அன்ன
  தாள் கண்டார் தாளே கண்டார் என்றது காண்க.

  இப்படிச் சிலச்சில கம்பனின் வரிகள் விரவி வரும்! மகிழ்ச்சி தானே?:)

  ReplyDelete
  Replies
  1. ஆனால், தமிழ் உள்ளே நுழைந்த பின், கோயில் ஒழுகிலே சட்டமாக்கிய பின், இது தளர்ந்தது!
   ஆனா அவ்வளவாகத் தளரவில்லை! அதான் வேதனை:( மணிப்பிரவாளமே தொடர்கிறது ன்னு சொல்ல வந்தேன்....

   அதான் தமிழ்ப் பாசுரங்கள், கருவறைக்குள்ளேயே போயாச்சே!
   வேத கோஷ்டியைப் பின்னுக்குத் தள்ளி, இறைவனுக்கும் முன்னால் தமிழ் தானே ஓதி வருகிறார்கள்! - இன்னும் மணிப்பிரவாளம் எதுக்கு?? ன்னு சிந்திச்சிப் பாக்கணும்!

   இராமானுசர் செய்த "நோக்கத்தை"ப் புரிஞ்சிக்கணும்!
   வெறுமனே சடங்கு போல் ஆயீறக் கூடாது!

   வைணவம், தமிழ்க் கலையில் இன்னும் வளரணும்-ன்னா, இன்றைய கால கட்டத்தில் செய்ய வேண்டியவை:

   1. 13th-15th CE மணிப்பிரவாள உரைகளுக்கு, நல்ல தமிழில் - எளிய தமிழில் உரை காண வேணும்!

   2. சந்தையா மந்திரம் போல் தமிழை ஓதுவது ஓக்கே தான்! ஆனால் அதிலேயே நின்று விடாமல், பண்ணோடு - இசையா அரையர் சேவையை இன்னும் வளர்க்கணும்!

   3. பரிபாடல், இளங்கோ அடிகள் செய்துள்ள தமிழ் வரிகளையும், துதிகளிலே, மனமுவந்து சேர்க்கணும்!

   - இப்படிச் செய்தால்,
   அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ
   சடகோபன் "தமிழ் நூல்" வாழ
   -ன்னு வாழ்த்திய அவர்கள் உள்ளமெல்லாம் குளிரும்! இராமானுசர் முதலானோர் உள்ளமும் குளிரும்!

   "அடிப்படைவாத" மாணவர்கள் நோக்கத்தைப் பாக்கக் கத்துக்கிட்டாங்கன்னா, வீக்கத்தை விட்டுருவாக!:)))

   Delete
  2. அதான் தமிழ்ப் பாசுரங்கள், கருவறைக்குள்ளேயே போயாச்சே!
   வேத கோஷ்டியைப் பின்னுக்குத் தள்ளி, இறைவனுக்கும் முன்னால் தமிழ் தானே ஓதி வருகிறார்கள்!

   >> (பாஞ்ச-இராத்ர) ஆகமங்களில் வழிபாட்டு மூர்த்திகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் பொழுது வேதம் புராணம் நாட்டியம் கதை பாடல்கள் இசை மேள தாளம் என ஒரு பெரிய பட்டாளமே நீளமாக உண்டு இதில் பிரபந்தமும் சேர்க்க வேண்டியதின் தேவையை திருமங்கை மன்னன் முதற்-கொண்டு (மறு-முறை?)நிலை-நாட்டியதை பின்னர் வந்த ஆசாரியர்கள் வாத பிரதி வாதம் கொண்டு ஸ்திர படுத்தினர்.இதனுடன் பாஞ்சராத்திரத்தினையும் ப்ரமானமாக ஸ்திர படுத்தி ஸ்தாபனம் செய்தனர் அவ்வளவே.

   Delete
 7. //ஆசாரியர்களால் ஏற்கப்படாத ஒரு பனுவலிலிருந்து ஆழ்வார்கள் inspiration பெற்றனர் என்று சொல்லிவிட்டால் அது ஆழ்வார்களுக்கு இழுக்கு//

  Dumb Fools & Dullards:))

  ஆழ்வார்களே, திருக்குறளில் இருந்து பெய்து பொழிவார்கள்!

  ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்
  நீராக நீளும் இந்நோய்
  - இது திருக்குறள்!

  குறளை, வரி கூட மாத்தாமல், அப்படியே எடுத்தாளுவார் நம்மாழ்வார்!

  "ஊரவர் கவ்வை எருவிட்டு
  அன்னை சொல்" நீர்படுத்து
  ஈரநெல் வித்தி முளைத்த
  நெஞ்சம் அதிற் பெருஞ் செய்யுள்
  என்பது நம்மாழ்வார் பாசுரம்!
  -----------------

  தோழி கோதை, சிலப்பதிகாரத்தை அப்படியே எடுத்தாளுவா!:)

  கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்
  இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
  கொன்றை அம் தீங் குழல் கேளோமோ தோழீ
  - சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை
  - சமயப் பொறையின் திகழ்ந்த தமிழ்க் கவிஞன், இளங்கோ அடிகள் அருளிச் செய்தது

  இதை அப்படியே...
  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
  வென்று பகை கெடுக்கும் உன்கையில் வேல் போற்றி
  ன்னு பாடுவா!:)
  -----------------

  நம்மாழ்வாருக்கு "வினவாது உணர்ந்த விரகர்"-ன்னே பேரு!
  உங்க அடிப்படைவாத சக மாணவர்கள், இப்படி வினவாது "உணரணும்" போல:))

  ReplyDelete
  Replies
  1. ஆசாரியர்களால் ஏற்கப்படாத ஒரு பனுவலிலிருந்து ஆழ்வார்கள் inspiration பெற்றனர் என்று சொல்லிவிட்டால் அது ஆழ்வார்களுக்கு இழுக்கு

   >> இல்லை இதற்க்கு அகச்சான்றுகளோ புறச்சான்றுகளோ இல்லாமல் தீர்மானமாக கூற இயல்வது ஒரு வித பிடிப்பினால் தானே தவிற ஆதாரங்களில் அடிப்படையில் இல்லை. அவர் மீது சாட்டப்படும் அதே குற்றம் குறை உம்மீதும் வீழ்கிறது அவர்கள் மீது ப்ரமானம் இல்லாத எதிர்ப்பு எதற்க்கு? உம்மின் ப்ரமான பலம் இல்லாத ஆதரவிற்க்கு.

   Delete
 8. //இத்தகைய நம்பிக்கைக்கு மத்தியில்தான் பாவம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வைணவத்துறை,
  சிலப்பதிகாரம், பரிபாடல், கம்பராமாயணம் போன்றவற்றை யெல்லாம் எம்.ஏ வைணவத்துக்குப் பாடமாக வைத்துள்ளது//

  Ha Ha Ha! All the best:)
  Come out with flying colors!:)

  இளங்கோ அடிகள், திருவேங்கட மலை மேல் நிற்கும் எம்பெருமானை,
  சங்கு சக்கரங்களோடு வர்ணித்துப் பாடும் சிலப்பதிகார வரிகளை...
  ஒரு முறை திருக்கோயிலூர் ஜீயர் சன்னிதியில் அவரே பாடி, தீபம் காட்டியதைக் கேட்டேன்! "பிரமிச்சிப்" போயி நின்னேன்:)

  வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
  ஓங்குயர் மாமலை உச்சியின் மீமிசை

  பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
  தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி

  நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
  பொலம்பூ ஆடையில், பொலியத் தோன்றிய
  செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமும்!

  "நின்ற வண்ணம்" = உலகு தன்னை வாழ நின்ற நம்பி, சென்னியோங்கு தண் திருவேங்கடம் உடையாய் ன்னு...
  பெரியாழ்வார் பாடுனாப் போலவே, இந்த இளங்கோ அடிகள் பாடி வச்சிருக்காரே ன்னு வியப்போ வியப்பு!:)

  சமணத் தமிழ்த் துறவியான இந்த இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே என்னே!
  இளங்கோ அடிகள் திருவடிகளே சரணம்!

  ReplyDelete
 9. தமிழ்நாட்டிலும் ராமானுஜரால் தொடஙகபட்ட ஸ்ரீவைஷ்ணவம் மட்டும்தான் தற்கால தமிழ்நாட்டு வைணவம் என நினைப்பதும் தவறு.

  ராமானுஜர் வைணவ கோவில்களில் பஞ்சராதரம் வழிபாட்டு முறையாக்கினார். பல வைணவ கோவில்கள் பஞ்சராதரத்தை மேற்கொண்டன, அதே சமயம் சில கோவில்கள் வைகனாச முறையை விடவில்லை. வைகனாச வைணவர்கள் தமிழ்நாடு, ஆந்திராவில் இருக்கின்றனர். அவர்கள் ஆழவார்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் இல்லை.

  உதாரணமாக திருபதி கோவில் வைகநாசத்தை பின்பற்றுகிரது. தென்னிந்தியாவில் அதைப்போல் சில கோவில்கள் உள்ளன

  http://en.wikipedia.org/wiki/Vaikhanasas



  http://books.google.co.uk/books?id=pUGdEvJ5GTQC&pg=PA324&dq=axel+michaels&hl=en#v=onepage&q=axel%20michaels&f=false

  Visnu's children- Pre-Natal life cycle rituals in South India


  விஜயராகவன்

  ReplyDelete
 10. ”நின் வல வயின் நிறுத்தும்
  ஏவலுட் பணிந்தமை கூறும்,
  நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே “

  என்று மறைகளில் ஏற்கெனவே
  மொழியப்பட்டவற்றைத் தமிழில்
  தெரிவிப்பதாகவே பரிபாடல் கூறுகிறது.

  கொலைக்களக் காதையை விரிவாகக் கூறுவதாலும்,
  ஈரைஞ்ஞூற்றுவரைக் கொலை செய்ததைக் கூறுவதாலும்,
  உயிர்ப்பலியை ‘வான் பலி’ என்று சிறப்பிப்பதாலும்
  இளங்கோ அடிகளார் சமணரா என்பதே விவாதத்துக்குரியது


  ”இளங்கோ அடிகள் திருவடிகளே சரணம்!”


  தேவ்

  ReplyDelete
  Replies
  1. I differ:)

   Elango is touching kolai kaLa kaathai in detail, bcoz the drama demands it!
   Remember: Chilambu is not only literature, but Drama! That passion is needed!

   Thiruthakka Thevar, talks so much abt Sensual Pleasures and finally how cheevakan gives it up finally!
   Just bcoz, someone talks abt Sensuality in drama detail, doesnt mean, that he aint a samaNar!:) Hez a samaNar!

   SamaNars have contributed so much to Tamizh! Their inputs need to be hailed, incl Elango's!
   ---------------------

   Actually, The foll are my personal views only:

   1) We need not really do "dissection" on whether such poets are Saivas or Samanas etc etc!

   2) As long as their books arent religion oriented, we need not care abt their personal faiths! eg: vaLLuvar

   3) Only when a person writes a religion oriented work, then we can draw inference from his own book, abt his religion eg: murugaatRu padai, maNimekalai etc

   4) Otherwise, great writers making a passing reference in a non-religion book, itz futile to just read that one reference and brand him as this or that:)

   Thanks for the discussion!:)
   Doctors are scolding me, not to touch the laptop:) but to keep the feet straight!

   Delete
 11. பல வைணவ மரபுகள் இருப்பது உண்மைதான்;
  தமிழ் நாட்டிலேயே ‘ஏகாயநம்’ என்றொரு
  வைணவக் கோட்பாடு இருந்தது; பிராட்டிக்கு
  எதிலும் தொடர்பு கிடையாது. அவர் பிற
  பார்ஷதர்கள் போல என்று கூறுவர்.
  ஸ்ரீ பாஞ்சராத்ரத்தை முதன்மைப்
  படுத்தும் ஸ்ரீ வைஷ்ணவம் வலிமை
  பெற்றதும் அது வழக்கிலிருந்து
  மறைந்தது. விசிஷ்டாத்வைதத்தை
  மூலமாகக் கொண்டதுதான் குஜராத்தின்
  ஸ்வாமி நாராயண் ஸம்ப்ரதாயமும்.
  கௌடிய வைணவமும் இராமாநுசர்பால்
  மிகுந்த மரியாதை காட்டுகிறது. சைதந்ய
  மஹாப்ரபு ஆழ்வார்கள் பாடிய தலங்களில்
  சென்று வழிபட்டுள்ளார்


  தேவ்

  ReplyDelete
 12. Wrongly deleted by me. Added here from my account. -- badri

  =======

  சீக்கியரின் பத்தாம் குரு கோவிந்த் சிங் தொகுத்தவை
  ‘தசம் க்ரந்த் ’ எனும் பெயரில்தான் இன்றும்
  வாசிக்கப்படுகின்றன. அவர்களின் Main canonical text
  க்ரந்த் ஸாஹிபுடன் சேர்க்கப்படவில்லை.
  குர்முகி லிபியில்தான் அதுவும் உள்ளது.
  என்ன காரணம் ?

  அருட்பாவைத் திருமுறைகளோடு
  சேர்க்காத காரணம் என்ன ?

  அடிப்படைவாதமா ?

  R.DEVARAJAN

  ReplyDelete
  Replies
  1. Dev Sir, You got it a bit off the context:)
   * What Badri says here is: NOT to join vaLLalaar's arutpaa with thirumuRai
   * What he means is: Later day commentators/writers, must not "avoid" quoting vaLLalaar, when writing a commentary on thirumuRai!

   On the same lines, Badri asked,
   Why these "fundamentalists" avoid touching chilapathikaaram, even when, silambu hails the Lord of Seven Hills?
   Hez not asking to include chilambu in 4000:)

   Delete
  2. How can you brand them as fundamentalist? Just because they do-not really quote from the work which has nothing to with their "சம்ப்ரதாயம்"?.

   The purpose or scope of their work is not to quote from any literary work. The scope of their work includes quoting from related religious works written before.

   Delete
 13. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87)

  குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143,9)

  கன்று குணிலா கனிஉதிர்த்த மாயவன் (சிலப்பதிகாரம்)

  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி (திருப்பாவை)



  தேவ்

  ReplyDelete
 14. குணில் -
  (p. 318) [ kuṇil, ] s. A drum-stick, பறையடிக்குந் தடி. 2. A short stick or cudgel, குறுந்தடி. 3. Sling, கவண். (p.) (from Sans. Kun'a, sounding &c.)

  http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&table=winslow

  கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87)

  குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143,9).


  கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்
  (சிலப்பதிகாரம்)


  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
  (திருப்பாவை)


  தேவ்

  ReplyDelete
 15. //வைணவத்தின் பிற பகுதிகளைப் படிப்பதற்கே திறந்த மனம் இல்லாதபோது //

  வைஷ்ணவம் பக்தியை அடிப்படையாய் சரணாகதியை ஆதாரமாய் கொண்டு இருக்கிறது; அதன் மேல் உங்கள் பார்வைகளை வையுங்கள்

  தர்க்கமும் பகுத்தறிவும் எட்டா இடம் அது :) அறுத்து பகுத்து பார்த்தால் மிஞ்சப்போவது ஒன்றும் இல்லை
  --
  மற்றபடி வைஷ்ணவம் மதம் என்றெல்லாம் சொல்ல வேண்டாம் எப்பொழுதும் ஹிந்துமதத்திற் உள்ளதே அது !
  சம்ப்ரதாயம் மரபு தத்துவம் என்றெல்லாம் கூடு பாயவேண்டாம் :)

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. வைஷ்ணவம் பக்தியை அடிப்படையாய் சரணாகதியை ஆதாரமாய் கொண்டு இருக்கிறது; அதன் மேல் உங்கள் பார்வைகளை வையுங்கள்

   தர்க்கமும் பகுத்தறிவும் எட்டா இடம் அது :) அறுத்து பகுத்து பார்த்தால் மிஞ்சப்போவது ஒன்றும் இல்லை

   >> நீங்கள் வைணவத்தினை madras university philosophy department-லியோ இல்லை academics மூலமாகவோ இல்லை இரா.கி மட் நூல்கள் மூலமாகவோ இல்லை ஃப்ரான்ஸீஸ் களூனி மூலமாக கற்றவரா?

   Delete
  3. மதிப்பிற்குரிய அனானி,
   என்னை வேலிடேட் செய்து என்ன ஆகபோகிறது;

   அடிப்படைவாதம் என்று தலைப்பிட்டால் குறைஞ்ச பட்சம் அடிப்படை என்ன என்பதை நாம் எதிர் பார்க்கிறோம்
   கற்கும் மன நிலையில் இருந்தாலும் கேள்வி உண்டே அப்படி நினைத்து கொண்டு பதில் சொல்லவும் ...

   வெள்ளைக்காரன் வந்து மண்டையில் அடித்து வைத்துள்ளான் எல்லாத்துக்கும் சர்டிபிகேட் கேட்பதற்கு ..

   Delete
 16. உரை என்பது புலமையைக் காட்டுவதற்கானது அன்று;
  கோட்பாட்டைச் சான்றுகளின் அடிப்படையில் விளக்கி
  உறுதி செய்வதற்கானது. சாத்திரச் சர்ச்சைகளில் காளிதாசர்
  மொழிந்ததைச் சான்றாக எடுக்க மாட்டார்கள். தமிழிலும்
  அதுபோலவே


  தேவ்

  ReplyDelete
  Replies
  1. ஐ ஆம் லைக் இட் போஸ்ட். ஸ்பாட்ல அடி.

   Delete
 17. I am happy to see that brahmins take a research outlook about their scriptures. But, the Saiva Siddhanta people are far more castiest and opposed to any kind of different views or criticism. They will only find fault with others, especially brahmins, by using the very criticism that brahmins themselves made. And, then they will call themselves as liberals and the only people on earth who are not castiest !

  ReplyDelete
  Replies
  1. It is the most pathetic situation there is nothing to feel happy about it.The goal of the research is to let know others what the researchers are capable of achieving not what the world is capable of achieving.

   Delete
  2. unfortunately so not true.

   The goal of research is to make sense of the world! not to show who is capable of achieving what. (if it is a test of capability of researcher, it should rightfully be called as competition and not research).

   The world has no obligation to make sense of itself, but as a researcher one is obliged to do so.

   Delete
  3. வஜ்ரா I go to see the "research methodologies" as adopted by these researchers. My objections/questions are many

   Let me limit to

   1)We cannot assign any specific final dates to azhwars.Then why jump to conclusions about them?

   2)Even assuming that many azhwars dates are post sangam we cannot conclusively say they were "influenced".

   3)One can only say there are parallels between these texts and we can never conclude to say one was influenced by the other.

   4)These authors and their writing style (as found in their original text) prove that they strictly follow a methodology (i.e) a)No spurious quotes b)To add strength to your argument quote from commonly accepted sources.c)No insertion/deletion to the original texts/quotes.

   5)If a reference to a person or a text is not found in their work we can safely conclude that even though similar thoughts have been expressed in a text that was written before their work it does not mean this was "lifted" and due credit was not assigned.

   Delete
 18. Devarajan: My views are as follows.

  1. That one chooses to follow hagiographies literally, particularly with respect to dates, is one's own prerogative. But in an academic field of study, such ideas will be challenged. 'My Acharya said so' is not a valid defense.

  2. The early Sri Vaishnava Acharyas have not given right place and reverence to Paripadal and Kamba Ramayanam. One can't say Paripadal may not have been known to them. Parimelazhagar, a Vaishnava living in post-Ramanuja period (13th century AD) had written his classic commentaries on both Thirukural and Paripadal in his time. We have his Thirukural commentary intact but we have lost portions of Paripadal commentary. That Paripadal and Parimelazhakar's commentary on it were not even preserved intact during the best period of Vaishnava renaissance says something about the attitude prevalent then.

  3. Canons need not be tinkered with. But rightful place should be given to works which can be seen by neutrals as inspiration to Aazhvars. Irrespective of the religious background, Ilango's verses on Vishnu stand on par with Aazhvar paasuram. To claim that because Vaishnava Acharyas have not mentioned Ilango and that Aazhvars cannot have been inspired by such 'mortals' as Ilango smacks of literal fundamentalism.

  ReplyDelete
  Replies
  1. One can't say Paripadal may not have been known to them.

   >> This is a defensive argument of course.

   1) BUT My question to you is why must paripadal be known to them?

   2) Even if they knew it what is the necessity that they must quote them?

   3) If they do not quote them does it mean they dis-approve them?

   4) The role of sri-vaishnavas in preserving tamil is only limited to propagating azhwars and their prabandham period which includes teaching reciting and making it part of their life .Any "extra fittings" on these leads to "extra expectations" and hence wrong conclusion and debates based on mere "assumptions". This does not mean they assign secondary status to tamil.If it were so we would not see such as this "அப்பரிச்தேத்யமான ஆராவமுத கடலிலே அகஸ்த்திய பாஷையாலே அந்யோன்யம் போக்தாக்களான இருவரும்."as a M.A Vaishnava student please let me know if this is "out of syllabus/portion"

   Delete
 19. வைஷ்ணவம் பக்தியை அடிப்படையாய் சரணாகதியை ஆதாரமாய் கொண்டு இருக்கிறது; அதன் மேல் உங்கள் பார்வைகளை வையுங்கள்

  sathya vachan

  ReplyDelete
 20. வைணவ ஆசார்யர்கள் சமய வேற்றுமை பாராட்டினர் என்றால்
  ஸ்ரீ தேசிகன் முக்கியமான பகுதி ஒன்றில் வடமொழி இலக்கண
  வல்லுநரான சாகடாயநரை ஏன் சொல்லவேண்டும் ? சாகடாயநர் ச்ரமணர்.


  பிற கோசங்கள் இருக்க வைதிகர் காலம் காலமாக அமரகோசத்தையே ஏன் கட்டிக்கொண்டு அழ வேண்டும்? அமரகோசத்தை எழுதியது ஒரு பவுத்தராயிற்றே !


  கோட்பாட்டை ஒட்டிப் பேசும்போது ஒரே ஒரு
  தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றுத்தொகுதிக்கு மட்டுமே
  மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தடக்களவில்
  முடிந்து விடும். வடமொழி என்றாலும் தென்னக
  வைணவத்தில் பாகவத மஹா புராணத்துக்கு அத்தனை
  மதிப்பில்லை; என்ன காரணம் ?



  தேவ்

  ReplyDelete
 21. >>> That Paripadal and Parimelazhakar's commentary on it were not even preserved intact during the best period of Vaishnava renaissance says something about the attitude prevalent then.<<<<


  வைணவம் என்பது என்றுமே நிலைத்த பாதுகாப்பான சூழலில் இருந்தது கிடையாது; 1312ல் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு நிலைகுலைய வைத்துள்ளது. திசைக்கொரு குழுவாகத் தப்பி ஓடினர். ஸ்வாமி தேசிகனால் ச்ருதப்ரகாசிகையை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. சிதறுண்ட கோசங்களைத் திரட்டி மீண்டும் ஒழுங்கு செய்து படி எடுத்தவர் மாமுனிகள். அனைத்துக்கும்
  வைணவர் மீது பழிபோடுவது ஆராய்ச்சியை எளிதாக்கலாம்;
  ஆனால் உண்மை அதுவன்று. வைணவத் துறையிலும் ’நிகம பரிமளம்’ உள்ளிட்ட பல அரிய நூல்கள் மறைந்து
  போய்விட்டன


  தேவ்

  ReplyDelete
 22. குரானும் ஹதீஸும்தான் முதன்மை ஆவணங்கள் - and the sira too..its also a thrayee

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. sheer intellectual masturbation.

  ஸ்ரீ வைஷ்ணவ பூர்வாசாயார்கள் plagiarism ஈடுபட்டார்கள் என கூறாமல் கூறுவது ஆத்ம விசாரம் சார்ந்த அறிவை ஸாதாசாரியன் பக்கலில் இருந்து கற்க்காமல் வெறும் portions syllabi இதனுள் அடைக்கபட்டதை கொண்டு அதை கற்றாகி விட்டது என துணிந்து அதை வெளிபடுத்த முயலும் அறிவு.

  ப்ரமான பலம் இல்லாமல் இவர் முன் வைக்கும் கருத்தும் ப்ரமான பலமில்லாமல் அதை எதிர்த்த மற்றவரும் ஒரே விதம் தான்.ஆம் உள்ளங்கனி நெல்லியை போல் இன்னார் இவ்-இவ் நூல்களில் இது போல் கூறியுள்ளனர் என மேற்கொள் காட்டி தன் வாதத்தினை முன் வைப்பது போல் அல்லாமல் இவரும் அவரும் ஒரே கருத்தை கூறுகின்றனர் இவர் அவருக்கு முன்-னானவர் ஆகலால் இதை copy அடித்திருக்க கூடும் ஆனால் அதை குறிக்கவில்லை என்பதை சொன்னால் அதை ஒப்புகொள்ளாதவர் எதிர்ப்பவர் அடிப்படை-வாதிகள் அதுவும் ஆப்ரகாமீய மதத்தினர் போல் என் கூறுவது தவறு.

  ப்ரமானமில்லாம அவர் உம்மை எதிர்ப்பதும் ப்ரமான-பலமில்லாமல் ஒரு கருத்தை முன்-வைப்பதும் அடிப்படை-வாதமே.அதன் வீர்யம் தான் வேறு-பட்டிறுக்கும்.

  பிரமான-ஆகாது என அவர்கள் கூறுவது பூர்வர்கள் பிராமானமாக கொள்ள வில்லை என கொள்ள-பட வேண்டும். வேறு பொருள் கொண்டு புரிய முயற்ச்சி செய்தால் தான் மற்றதை ஒதுக்கி விட்டனர் ஆனால் copy மட்டும் செய்தனர் என பொருள் பட பதிய தேவை எழும்.

  இன்னும் பல ஒவ்வாமைகள் உள்ளன அவை-பற்றிய பதிவு விவாதத்தினை திசை-திருப்ப கூடும் என்பதால் கோடிடவில்லை.

  விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு துல்யமானவர் பலர் இத்தரப்பிலும் உள்ளனர் என்பதற்க்கு f.b யிலிறுந்து நான் இங்கு வந்து மறு-பதிப்பு இடுவதின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 25. M.A வைணவம் அதுவும் சென்னனை பல்கலைகழகத்தில். ஒரு நூல் பற்றி முன் பின் இல்லாமல் வெறும் Intellectual சுய இன்பத்திற்க்கும் பொருளுக்கும் academic excellence என்கிற போர்வையில் அங்கு கற்ப்பிக்கபடும் பாட திட்டங்கள்.கேட்டால் Portion Syllabi என கொக்கறிப்பவர். இது போண்று academics குள் இழுக்கபட்டு தனக்கு தோண்றியது தான் உண்மை என்பதை ஒரு விசாரமன்றி ப்ரமான பலமின்றி அப்படியை நிலை நிறுத்தும் ஒரு குழுமம் இதில் படித்த மானாக்கர் பல விளக்க நூல்கள் என பொத்தாம் படியாக பதிக்கிறார் .. இவைதவிர பிள்ளை உலகாரியர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனி போன்றோர் பல விளக்க நூல்களை எழுதியுள்ளனர். ராமானுஜருக்கு முன்னவரான ஆளவந்தார் எழுதியவையும் முக்கியமானவை. என பதிகிறார் இது நாலாயிரத்திற்க்கு இவர்கள் விளக்க நூல்கள் எழுதியிருக்கின்றனர் என பொருள் படியும் படியாக ஒருவன் படித்தால் வியப்பல்ல. இதெல்லாம் போகட்டும் ஆழ்வார்களோ ஸ்ரீ பாஷ்யகாரரோ ஸ்வாமி தேசிகனோ உலகாரியனோ மாமுனிகளோ எவராகட்டும் பரிபாடல் கம்ப-இராமாயனம் திருகுறள் இதிலிறுந்து மேற்கொள் எடுப்பவராயின் அவர்கள் அதே நூல்களில் குறித்திடுவர் என்பது தெரியாத போனது ஏனோ்.. ப்ரமான பலத்தின் அடிப்படையில் எதிர் கூட்டமும் இந்த "copy/plagiarism" வாதத்தினை எதிர்க்கவில்லை இவரும் தன் வாதத்தினை ப்ரமான அடிப்படையில் முன் வைக்கவுமில்லை.மேலும் ஸ்ரீ பாஷ்யத்திற்க்கு மூல நூல்கள் எவையானது பூர்வாசாரியர் எவர் என இவர் அறிந்திறுப்பராயின் இது போன்ற mere assumptions based establishment தவிர்த்து இருக்கலாம்.

  திரு கலவை வேங்கட்,திரு கல்யான-இராமன் விஷால் அகர்வால் இவர்கள் academic fraud is been committed என்றார்கள் அதே போல் என்றைக்கு ஆத்ம விசாரம் academics அக்க பட்டதோ அன்றே புரிதலும் அதன்-வெளிப்பாடும் துருபிடித்தே ஆக வேண்டும். இந்த Blog-ஐ விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு துல்யமாக போற்றுபவர் ஹிந்து மத ஸ்மப்ரதாயத்தின் நுட்பத்தினை அனுதினமும் போற்றி அதில் திளைத்து இருப்பவர் மீது காழ்ப்புண்ற்ச்சி கொண்டவர்,..இது தவிர வலை உலகில் பெரிதாக மதிக்க படும் ஒரு எழுத்தாளர் ஆச்சார வைதீக ஸ்ரீ-வைணவர் ஒருவர் இரயில் பயனத்தில் பொட்டலத்தில் வைக்கப்பட்ட போண்டா/பகோடா சாப்பிட்டார் என செய்த பதிவு படித்த பொழுது சாப்பிட்ட அந்த பார்பானுக்கும் ஆசாரத்திற்கும் உள்ள தொடர்பும் அந்த எழுத்தாள்ருக்கு ஆச்சாரம் வைதீகம் பற்றிய புரிதலின் ஆழமும் அறிந்து வியந்தேன் அதே போல் தான் இங்கும். தன் தரப்பிற்க்கு நேர் ஆதாரமில்லாமல் இவர் கண்ட வைணவர்கள் அடிப்படை வாதிகள் என கூறுவதும்.again sheer intellectual masturbation out of intellectual and english academic arrogance.

  ReplyDelete
 26. This is slightly difficult description. The day the SriVaishnava suicide bombers walk around with the bombs in their hip belt to state their beliefs strongly, we can call it fundamentalistic religious believes. As of now, the worst that has happened is that they ate yogurt rice and start this discussion / debate with you. Not sure if that qualifies.

  ReplyDelete
 27. You left the discussion about pongal puliohore ksheerannam sathumadhu etc.

  ReplyDelete
 28. There are many smarthas in TN who consider Thirumalai/Thiruvallure/Oppiliappan Koil vishnu as their kuladeivam. Though they wear vibuthi, they worship Narayana as their Kuldeivam. This Advaidik Vaishnavas are not at all considered as Vaishnavas by Srivaishnavaites.

  ReplyDelete
  Replies
  1. This blog has nothing to do with mere smarthAs and their beliefs.

   Delete
 29. இதை ‘அடிப்படைவாதம்’ என்பது தவறுதான் ; இந்து மத அல்லது மார்க்கத்தின் மரபான அணுகுமுறையை பார்த்தாலே இடதுசாரி அடைப்படைவாதிகளுக்கு அப்படி ஒரு முத்திரை குத்தும் நோகம் வந்துள்ளது.

  விகிபீடியாபடி அடைப்படைவாதம் என்பது

  http://en.wikipedia.org/wiki/Fundamentalism

  Fundamentalism is the demand for a strict adherence to specific theological doctrines usually understood as a reaction against Modernist theology, combined with a vigorous attack on outside threats to their religious culture.[1] The term "fundamentalism" was originally coined by its supporters to describe a specific package of theological beliefs that developed into a movement within the Protestant community of the United States in the early part of the 20th century, and that had its roots in the Fundamentalist–Modernist Controversy of that time.[2] The term usually has a religious connotation indicating unwavering attachment to a set of irreducible beliefs.[3] "Fundamentalism" is sometimes used as a pejorative term, particularly when combined with other epithets (as in the phrase "right-wing fundamentalists").[4][5]

  (மத) அடிப்படைவாதம் என்பது 19/20ம் நூற்றாண்டுகளில் இருந்துதான் அடையாளப்படுத்த படுகிரது, அதுவும் பொதுவாக நவீன உலகிற்க்கு ஈடு கொடுக்க முடியாமல், உள்வாங்க முடியாமல் “பழையநூல்களை” கறாராக பின்பற்றும், வன்முறையில் இறங்கும் மத மனப்பான்மை.

  உதாரணமாக இஸ்லாமிய நாடுகளில் ஆண் பெண் உறவுகளை எப்போதுமே சந்தேகத்துடந்தான் பார்த்திருந்தனர், அதை நாம் அடிப்படைவாதம் என சொல்வதில்லை. ஆனால் தற்கால பெண் உரிமை பறிப்பு சட்டம்/செயல்கள்/ பிரச்சாரம் இவற்றைதான் அடிப்படைவாதம் என்கிறோம் - உதாரணம் பாகிஸ்தானில் ஜெனரல் ஜியா புது சட்டங்கலை போட்டு உரிமகளை பறித்தல்


  இப்படியான தலைப்பு /வர்ணனை பத்ரியின் உண்மையான / ஆழமான நம்பிக்கை இல்லை எனலாம்; எதோ போட்ட தலைப்பு அவ்வளவுதான், playing to the gallery


  விஜயராகவன்

  ReplyDelete
 30. The problem arises because many fail to understand that

  The role of sri-vaishnavas in preserving tamil is only limited to propagating azhwars and their prabandham which includes teaching reciting and making it part of their life .Period.

  Any "extra fittings" on these leads to "extra expectations" and hence wrong conclusion and debates based on mere "assumptions".

  Of course this does not mean they assign secondary status to tamil.

  If it were so we would not see such as this "அப்பரிச்தேத்யமான ஆராவமுத கடலிலே அகஸ்த்திய பாஷையாலே அந்யோன்யம் போக்தாக்களான இருவரும்.

  ReplyDelete
 31. குழந்தை தனமான பதிவு என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு விசயத்தை பற்றி ஒருவர் சொல்லவில்லை என்றால் அதை அவர் மதிக்கவில்லை என்று அர்த்தமா?

  ஆப்பிரகாமிய மதப்பார்வையிலேயே அனைத்து பார்த்தால் எல்லாமே தவறாக தான் தெரியும்.

  ReplyDelete
 32. முதல் அனானி
  நான் சொல்ல வந்தது இதுதான், அது வார்த்தைகளில் சரியாக வரவில்லை.நீங்கள் மரபில்(ஸ்ரீவைஷ்ணவ) மற்றும் பழந்தமிழ் இலக்கியத்தில் தோய்ந்தவர்களிடம் இந்தக் கேள்விகளை எழுப்ப
  வேண்டும்.அத்துடன் 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வியாக்கியானங்களையும் படிக்க வேண்டும்.அவற்றில் விடை
  இருக்கலாம்.நம்முடைய பிரச்சினை என்னவெனில் எவற்றை இழந்தோம் என்பது தெரியாது.மரபின் ஒரு பகுதிதான் இன்று எஞ்சியுள்ளது.அதை வைத்துக் கொண்டு ஊகிப்பது சரி,அதையே முன்முடிபாக கொள்ள வேண்டுமா.அன்று உரை எழுதியவர்களின் நோக்கம்,யாருக்காக அவை எழுதப்பட்டன,எதற்காக எழுதப்பட்டன
  என்பதை நம்மால் ஊகிக்கமுடியும்,இதுதான் இப்படித்தான் என்று
  தீர்மானகரமாக சொல்ல முடியாது.
  உங்களுடைய கேள்வியில் உள்ள பிழை என்னவெனில் நீங்கள் வைணவத்தின் பிற பகுதிகளை படிப்பதற்கே திறந்த மனம் இல்லை என்கிறீர்கள்.இது ஒரு தரப்பாரிடம் இருக்கலாம்.அவர்களிடம் உரையாடினால் அவர்கள் தரப்பைப் புரிந்து கொள்ள முடியும்.கம்பனை ஒருவர் குறிப்பிடவில்லை அல்லது பக்தி இலக்கியமாக அவர் அதை கருதவில்லை என்றால்
  அவர் கம்பனின் எதிரி என்று எதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.அவருக்கு ஆழ்வார் ஆச்சாரியர்கள் எழுதியது போதும்
  என்பதாகக் கொண்டு அவரிடம் ஐயா கொஞ்சம் கம்பனைப் படித்துத்தான் பாருங்களேன்.வைணவ மரபில் தோய்ந்த இவரே கம்பரை கொண்டாடுகிறாரே என்று மெதுவாக சொல்லிப் பார்க்கலாம்.மனங்கள் பல சமயங்களில் மூடிக்கிடப்பது அறியாமையால்,பிடிவாதத்தால் அல்ல.

  ReplyDelete
 33. அன்றும் இன்று போல் அறிவுஜீவிகள் கொண்ட academic community இருந்திருக்கும்.ஆனால் உரைகள்,வியாக்கியானங்கள் அவர்களை குறிவைத்து எழுதப்பட்டவையா இல்லை ஸ்ரீவைஷ்ணவ சமூகத்தின் புரிதலுக்காக எழுதப்பட்டவையா. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டுப் பாருங்கள்.
  நேச்சர்,சயன்ஸ் போன்றவற்றிற்காக கட்டுரை எழுதுவதும்,வெகுஜன ஊடகங்களுக்காக கட்டுரை எழுதுவதும் வெவ்வேறுவிதமான எழுத்து நடை,விபரணைகளைக் கோருபவை. அதுபோல் அன்றைய academic communityக்கு எழுதுவது,ஸ்ரீவைஷ்ணவ சமூகத்திற்கு எழுதுவது இரண்டும் ஒரே மாதிரியாக இருந்திராது.

  ReplyDelete
  Replies
  1. அன்னிக்கு academic community க்கும் சேர்த்து தான் பல வியாக்யானங்களும் கிரந்ங்களும் பல பட்டோலை செய்யபட்டன (சொல்ல சொல்ல எழதபட்டன).. பிரபாவங்கள் படிகள் ஈடு முதலியவை local community consumption க்காக.

   Delete
 34. Very interesting topic and discussion. I am really thrilled about people posting similarities with kural and aazwars.

  Also one more thing. When a college keeps MA (vaishnavam) or any other topic at that level as syllabus, the students are expected to go around and learn more... They are not suppose to get constrainted at the syllabus level.
  Regards
  Ganesh

  ReplyDelete
 35. Narayana ..You are now like Higg Boson particle to these theoretical psychics guys....save yourself.....


  Murali

  ReplyDelete
 36. பத்ரி செக்யுலர் போஸ்ட் மாடர்ன் ஸ்ரீவைஷ்ணவத்தினை நிறுவப் போகிறார், அதற்காக ஒரு நூல் எழுதுகிறார் :).எம்.ஏ படித்த பின் அதைப் பற்றி முறையான அறிவிப்பு வரும் :).முன்பதிவு திட்டம் அதிலும் உண்டு:)

  ReplyDelete
 37. ஒருவர், தான் அடிப்படைவாதியா பல்கலைக்கழக மாணவரா என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். திரேதாயுகத்தில் ஆழ்வார்கள் வாழ்ந்ததாக நம்பிக்கொண்டு போங்கள், ஆனால் பல்கலைப் பட்ட்ம் கேட்கக் கூடாது!

  உலகம் தட்டை என நம்பும் ஃப்ளாட் எர்த் சொஸைட்டிக்காரர் அஸ்ட்ரானமியில் எம்.எஸ்.சி. பட்டம் கேட்டால் எப்படி இருக்கும்?!

  சரவணன்

  ReplyDelete
 38. The view that only Sri Ramanuja brought divyaprabandam to temples is wrong. There are epigraphs of Chola prior to Sri Ramanuja on grants for reciting Thiruvaimozhi in temples. In Rajendra Chola period the "Thiruvarasu" of Kulasekara Azhawear at Mannarkoil was built and his hymans were sung.

  There are lot of references of Divyaprabandam recital in temples much before Sri Ramanuja.

  ReplyDelete
 39. திரேதாயுகத்தில் ஆழ்வார்கள் வாழ்ந்ததாக நம்பிக்கொண்டு போங்கள், ஆனால் பல்கலைப் பட்ட்ம் கேட்கக் கூடாது!.. >>அய்யா சரவணரே பல்கலை கழக பட்டம் கொடுங்கன்னு சொல்லலை.அரசாங்கம் மத தொடர்பான ஒரு துறையில பாட திட்டம் நடத்துது அதில போய் சேர்றாங்க பாருங்க அவங்கள சொல்லனும்.. இதை ஆராய்ச்சி துறைன்னு மட்டுமே வச்ச்கிறுந்தா சரியா இருந்திருக்கலாம் எதுக்கு பாட திட்டம் course மன்னாங்கட்டி?

  ReplyDelete
 40. திரு பத்ரி!

  //இஸ்லாத்தைப் பற்றிப் பேச்சே இல்லை. குரானும் ஹதீஸும்தான் முதன்மை ஆவணங்கள். அவற்றுக்கு வெளியே என்ன இருந்தாலும் அவற்றை நம்பவேண்டியதில்லை. காலிபா உமர், அலெக்சாண்ட்ரியாவில் உள்ள நூலகத்தை எரிக்க ஆணையிட்டதாகச் சொல்வார்கள். அவர் சொன்னாராம்: அந்தப் புத்தகங்கள் ஒன்று குரானில் உள்ளதைச் சொல்லியிருக்கும். எனவே அவை அழிந்தால் கவலையில்லை. அல்லது குரானுக்கு எதிரானதாக இருக்கும். அப்படியானால் அதை அழிப்பது முக்கியமாகிறது.//

  மேலே சொன்ன உங்களின் கூற்றுக்கு அதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. http://www.roger-pearse.com/weblog/?p=4936

   Delete
  2. Who destroyed Alexandria Library?
   http://servantofthelight.com/content/view/158/117/

   Delete
 41. //
  மேலே சொன்ன உங்களின் கூற்றுக்கு அதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா?
  //

  டியர் சுசினப்பிரியன்,

  குரானின் ஏதாவது ஒன்று தவறாக சொல்லப்பட்டுள்ளது என்று யாராவது சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா ?

  இல்லையென்றால், இட் இஸ் யூ! யூ ஆர் தி ஆதாரம். போயி கண்ணாடியைப் பார்த்துக்கொள்ளவும்.

  ReplyDelete
  Replies
  1. அனானிமஸ்Wed Jul 18, 05:58:00 PM GMT+5:30

   [[இட் இஸ் யூ! யூ ஆர் தி ஆதாரம். போயி கண்ணாடியைப் பார்த்துக்கொள்ளவும்.]]

   அப்படியின்னாக்க, இது மிஸ்டர் பத்திறி ச்சேசாத்ரியே சுயமா சொந்தமா யோசிச்சு விட்ட பீலா சரடு என்று சொல்றீகளா? செமை தமாசுங்க. இவைக உமருக்கு பக்கத்துத் வூட்டு காரவுக போல.

   Delete
  2. லூசு,

   இஸ்லாத்தில் அடிப்படைவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் உரையாடலே லேது. ஒன்று நீங்கள் ஏற்றுக்கொண்ட அடிப்படைவாதி. இல்லாட்டி நீங்கள் மார்க்கத்தில் இருந்து விலகிய காஃபிர். அது தான் அந்த பத்தியின் சாரம்.

   அதற்கு ஆதாரம் அனைத்து இஸ்லாமியர்களும் தான். சுசினப்பிரியன் உட்பட.

   Delete
 42. hello mr.badri,

  neenga start pannina topicikku bible & kuran ethukku?
  neenga puthisaliya irukkalam. but thevaiya mattum sollunga. padikkaradhu vaishnavam.

  ReplyDelete
 43. //”மேலே சொல்லப்பட்ட தொகுதிதான் ஸ்ரீவைணவர்களால் இன்றுவரை படிக்கப்பட்டு வருகிறது.”//
  ஸ்ரீவைஷ்ணவ பனுவல் தொகுதி பெரியது என்று சொல்லிவிட்டு உடனேயே அதனைத்தையும் படித்துவிட்டதுபோல
  //”திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலிருந்து பல சொற்றொடர்களை ஆழ்வார் பாசுரங்களில் நீங்கள் காண முடியும். முக்கியமாக சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலிருந்து.

  ஆனால் அவை பற்றியும் வைணவ உரைகளில் எதுவும் இருக்காது.”// என்கிறீர்கள். சிலப்பதிகாரம் திருவாய்மொழியின் பல உரைகளில் மேற்கொளிடப்படுள்ளது. உ வே சா-வினுடைய சிலப்பதிகார உரையில் இச்செய்தியை காணலாம்.
  //”மேலே சொல்லப்பட்ட தொகுதிதான் ஸ்ரீவைணவர்களால் இன்றுவரை படிக்கப்பட்டு வருகிறது. ”// இதை விட்டால் ஸ்ரீவைணவர்களுக்கு வேரெதுவும் தெரியாது, பாவம் என்ற ஒரு தொணி இருக்கிறதே! சங்க இலக்கியம், குறிப்பாக அகத்துறை, தெரியாமலா நாலாயிரத்திற்கு உரை எழுதிவிட முடியும்? அப்படி எழுதினால்தான் அது இவ்வளவு ஆண்டுகள் நிலைக்குமா?
  தங்கள் வகுப்பில் இருப்பதுபோல வீராப்பு வசனம் பேசும் கத்துக்குட்டிகள் நிறைய உண்டுதான். அதை மறுப்பதற்கில்லை.
  //”இந்த விவாதத்தில் மேற்கொண்டு இறங்குவது கடினம். ஸ்ரீவைணவ மரபின்படி பிரபத்தியை அடைய எம்பெருமான்மீது மகாவிசுவாசம் வேண்டும். அந்த மகாவிசுவாசத்தின் ஒரு பகுதி, ஆசாரியர்கள்மீதான விசுவாசம். அவர்கள் எக்காரணம் கொண்டும் தவறே இழைத்திருக்க மாட்டார்கள் என்னும் நம்பிக்கை.

  இத்தகைய நம்பிக்கைக்கு மத்தியில்தான் பாவம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வைணவத்துறை, சிலப்பதிகாரம், பரிபாடல், கம்பராமாயணம் போன்றவற்றையெல்லாம் எம்.ஏ வைணவத்துக்குப் பாடமாக வைத்துள்ளது.”//
  இவை, ஸ்ரீவைஷ்ணவம் தர்சனம்-மதம் (loosely ஞானம்-அனுஷ்டானம்) ஆகிய இரு பரிணாமங்களும் முழுதாக அமயப்பெற்றது என்பதனை சரிவர புரிந்துகொள்ளாத, பொதுவெளியில் நிலவிவரும், ஒரு தோராயிரமான புரிதலிருந்து வரும் சொற்கள். ஸ்ரீவைஷ்ணவம் ஒரு தீர்க்கதரிசி மதம் அல்ல. ஆச்சாரியர் மீதான மஹாவிஸ்வாசத்தைக் கோரும் அதே ஸ்ரீவைஷ்ணவ பனுவல்கள், பிள்ளை லோகாச்சாரியர் மற்றும் வேதாந்த தேசிகர் ஆகியோர் எழுதியுள்ளவை, அதன் ரஹஸ்ய க்ரந்தங்களில் ஆச்சாரியனை எப்படி அனுகுவது முதல் ஆச்சார்யன் தவறிழைத்தால் எவ்வாரு நடந்துகொள்வது என்பது வரை அனைத்தையும் பேசுகின்றனவே! கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் கோரும் விஸ்வாசத்திற்கும் இதற்கும் என்னென்ன வேறுபாடுகளுள்ளன என்பதனை புரிந்துகொண்டு பேசுகிறீர்களா? அல்லது மேலோட்டமாக பார்த்துவிட்டு ஒப்பிடுகிறீர்களா?

  //”ஆனால் காலத்தால் இவற்றுக்கு முற்பட்டு, தமிழில் இயற்றப்பட்ட பரிபாடலும் ஆழ்வார்கள் காலத்துக்குப் பிற்பட்ட, ஆனால் உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட கம்ப ராமாயணமும் வைணவ உரைகளில் எங்குமே காணப்படுவதில்லை. வால்மீகி ராமாயணத்திலிருந்து பக்கம் பக்கமாக மேற்கோள் காட்டும் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்துக்கு முன்பே கம்ப ராமாயணம் இயற்றப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஒரு வரியையேனும் நீங்கள் வைணவ உரைகளில் கண்டுவிட முடியாது.”//
  கம்பராமாயணத்தை உரைகளில் மேற்கோள் காட்டாதது ஏன் என்று விமர்சனபூர்வமாக எண்ணியுள்ளீர்களா? அல்லது தங்கள் க்ரந்தங்களைத் தவிற பாவம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு வேரெதுவுமே தெரியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டீர்களா? பரிபாடலையும் கம்பராமாயணத்தையும் ஏன் உரைகளில் சேர்க்க வேண்டும்? ஒரு எம் ஏ படித்து முடிப்பதற்கு முன்பே ஸ்ரீவைஷ்ணவம் தன் உரைகளில் என்னென்ன நூல்களை மேற்கோளிட வேண்டும் என்ற கருத்தெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள்!

  ReplyDelete
 44. வடகலை-தென்கலை சர்ச்சையில்லாமலே இத்தனை பின்னூட்டமா. ஒங்குக வடகலை-தென்கலை ஒற்றுமை (இங்காவது) :)

  ReplyDelete
 45. Here is a mail from PA Krishnan:

  Dear Badri,
  The fireworks in your site is visible right here in Delhi!
  I agree with you that the Shri Vaishnavas neglected Kamban. My father, who can't be accused of bias against Shri Vaishnavism, used to lament the fact that traditional Sri Vaishnava scholars did not care to read Kamban. He used to speak of the 'fights' he had had with his father - another formidable scholar in Sanskrit and Prabandham - on this issue. My grandfather's excuse was that Kamban was not extensively quoted by the commentators and hence his work could not be used as an authority. The Poetic quality of Kamban was simply not enough for diplomatic recognition!

  In these bouts of intellectual wrestling, Bhakti and poetic excellence quietly retire to backseats and the front seats are all occupied by those who hold aloft the spectacular banners of sectarianism.

  Incidentally, if my memory is correct, Periyavachan Pillai quotes Kamban on rare occasions. One such poem is 'EEkkal Vandodu Moyppa', if I am not wrong.

  ReplyDelete
 46. பத்ரி,

  (i)நாம் தலைமுறை தலைமுறையாக, எழுதுபவரையும் எழுத்தின் காலத்தையும் மட்டுமே வைத்து அந்த எழுத்தின் கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கும் குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வருகிறோம். எனவேதான் நமக்கு ஒரு எழுத்தின் பொருளை விட அந்த எழுத்தின் "பின் புலம்" பெரிதாக தெரிகிறது. அந்த "பின் புலத்தை" நாம் ஜாதி ரீதியாகவோ, மத ரீதியாக சார்ந்திருந்தால், தனி மனிதாக நமக்கு ஒரு தகுதி இருக்கிறதோ இல்லையோ, அந்த சார்பின் மீது அர்த்தமற்ற பெருமையும் படிந்து விடுகிறது. அதன் பின், ஆழமான புரிதல் இன்றி, விசாலமான தேடுதல் வேட்கை இன்றி, என் குருவே சிறந்தவர், என் ஜாதி / மதமே உயர்ந்தது என்ற அறிவீனம் நம்மை ஆட்கொள்கிறது.

  (ii)பக்தி இலக்கியங்களை "ஒருங்கிணைத்து" ஆன்ம மேம்பாட்டை மட்டுமே குறிக்கோளாக்கி அனைத்து பிரிவு மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒருவரும் நம்மிடையே இல்லை. இனி தோன்றுவாரா என்பதும் சந்தேகமே. வைணவம் இருக்கட்டும். எந்த சமயம் சார்ந்த கல்வியும் வகுப்பறையில் வாசித்து வாராது என்பது என் கருத்து. தண்ணீர் தாகம் தீர்க்கும் என்பதை மற்றொருவருக்கு எவ்வாறு விளக்க இயலும்? தானாக குடித்துப் பார்த்தால்தான் உண்டு. வகுப்பறை, தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று வேண்டுமானால் அறிமுகம் செய்யலாம்.

  (iii)உங்கள் வைணவ வகுப்பில் எத்தனை வைணவர் அல்லாதோர் "படிக்கிறார்கள்"? அவர்கள் எந்த குறிக்கோளுடன் இந்த வகுப்புகளுக்கு வருகிறார்கள்? எந்த அளவு மாற்று கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன?
  ராமானுஜர் அறிவில் சிறந்தவராக இருந்தால் என்ன? வள்ளுவர் சிறந்தவராக இருந்தால் என்ன? எவரால் எவருக்கு பெருமை வந்தால் என்ன? இது குறித்து வகுப்பில் வகுப்பில் வாக்குவாதம் என்று நீங்கள் சொல்வதை கேட்டு சிரிப்பு வருகிறது. "வைணவத்தை" புரிந்து கொள்ள நாம் இந்த வகுப்பில் இருக்கிறோம் என்று இந்த வாதத்தை சரியான பாதைக்கு இட்டுச் செல்வது தானே ஆசிரியரின் பக்குவம்?

  (iv)வைணவமோ, சைவமோ அல்லது வேறு எதுவோ, உண்மையான தேடல் கொண்டவன் ஒரு பாசுரத்தை படித்தால் அதன் சாற்றின் சுவை வேறு எந்த பாடலில் இருந்தாலும், அது தேவாரமோ, குரானோ, அதிலும் மூழ்கித் திளைப்பான். திருவாசகத்துக்கு உருகியவன், "அன்பே தகழியாய்" என்பதிலும் உருகுவான். யார் சிறந்தவர், எது சிறந்தது என்று அர்த்தமில்லாமல் பேசி எதன் மதிப்பும் குறையச் செய்ய மாட்டான்.

  (v)ஒரு கேள்வி: எந்த அடிப்படையில் இந்த வகுப்பில் சேர்க்கை அளிக்கப்படுகிறது? ஒருவர் வைணவராக இருந்தால் போதுமா? அவரின் சமய சிந்தனை எந்த அளவில் இருக்கிறது என்று ஏதேனும் தேர்வு இருக்கிறதா? எதை கற்றுக் கொள்ள இந்த வகுப்பு என்ற தெளிவு இருக்கிறதா?

  ReplyDelete
 47. - I fail to understand how srivaishnava acharyas not quoting from kambaramayanam shows them as fundamentalists !

  - We should first understand the context well before passing any comment. SriRamanuja systematized the vedantha and put
  forth the Vishishtadvaitha concept as the essence of vedas and upanishads. The Vedas and Upanishads were the acceptable
  pramanas in those days by and large by all vaidikas. Srivaishnava acharyas considered the works of the alwars also on
  par with the sanskrit vedas and upanishads.That is why the frequent quotes from Vedas, Upanishads and SriRamayana are seen in their
  commentaries. ( SriRamayana is very special for Srivaishnavas and considered equally important pramana)

  - Here we have the Srivaishnava Acharyas , who were all Brahmins, who had a mind to accept the works of alwars on par with
  Sanskrit Vedas, glorified them as 'dravida vetha' and went one step ahead to consider Nammalwar who was not a brahmin
  as their main and first acharya in this world and wrote several commentaries to explain the essence of the dravida vetha
  and established it on par with all accepted Sanskrit pramanas of those days - and we have someone calling them as fundamentalists !

  - About the timelines of acharyas - it is true that the guruparamparai says they are from a much earlier period while historians
  say they are from later period. Let us say for the moment that Kural and some other works were written earlier to Alwars and Alwars
  were inspired by them and used those in their works . Now, does this change the essence of Alwars works ?!

  - Alwars works are not just simple works of poetry for Srivaishnavas. They have deeper philosophical meanings and this is well learnt
  with the help of the commentaries of Acharyas and also learning about the life of Alwars.

  - Badri starts this posting by talking about fundamentalism and it appears he is equating Srivaishnavism with Christianity and Islam. Can you show
  the methods used by Srivaishnava Acharyas to convert others to their fold ? And what they did ( or do ) to people who do not accept their views ?

  - There is nothing wrong in one having a set of belief - however stupid that may be - what is important is whether he realises the same freedom to
  have another ( stupid) view is available for others !

  - It is not true that Srivaishnava scholars have never questioned the timelines of guruparamparai or considered certain inaccuracies in them. Please
  read works of Srivaishnava Sri Krishnamachariar in this context. He runs a publication and monthly magazine from Srirangam. Incidentally, to answer to
  another comment in this blog, both Srivaishnavasri and Puthur Swamy have written several successful translations in chaste Tamil of the manipravala
  commentaries of purvacharyas on Alwars works.

  - I would suggest to Badri to first learn more about Srivaishnavam - not only from the M.A course but also from learned acharyas and then comment on them.
  That would be the difference between 'Niraikudam' and 'Kuraikudam'

  - Rangarajan

  ReplyDelete
  Replies
  1. Beautiful Rangarajan, quite refreshing to see people with reason and clarity.

   Delete
 48. முன்பு நான் சொல்லியிருந்ததில் ஒரு தகவல்பிழை. உ வே சா-வினுடைய “குறுந்தொகை” உரையில், முகவுரையில், குறுந்தொகையை 36000படி மற்றும் 12000படி உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்கள் என்கிறார் உ வே சா.

  மற்றபடி “திருவாய்மொழிப் பேருரையாளர் நம்பிள்ளை உரைத்திறன்” – முனைவர் இரா அரங்கராஜன் (பெய்யப்பன் தமிழாய்வகம் சிதம்பரம்) என்ற நூலில் ”ஈட்டில் தமிழ்நூல் மேற்கோளாட்சி” (பக் 176) என்ற அத்யாயத்தில் என்னென்ன தமிழ் நூல்களை ஈட்டில் மேகோளிட்டுள்ளார் என்பதனை விளக்குகிறார் ஆசிரியர். குறள், சிலப்பதிகார அரும்பதவுரை, கம்பராமாயணம் மற்றும் பல அதில் அடக்கம்.

  நம்மாழ்வாரின் பாடல்கள் poetic excellenceகாக மட்டும்தான் வைணவத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டதா? நம்மாழ்வார் கூரும் பக்திதான் பொதுவாக நாம் புரிந்து வைத்துக்கொண்டுள்ளதுபோன்ற பக்தியா? பக்தி பற்றிய எளிமைபடுத்தப்பட்ட புரிதலிருந்து வருகிறதுதான் இது. 4000 ஏதோ கவிநயமாக பாடி பக்தியெல்லாம் வளர்க்கிறது என்பது வெரும் பள்ளிகூட வரலாற்று பாடபுத்தக தகவல். ஆறு அங்கங்களோடு செய்யப்படும் சரணாகதியை நம்மாழ்வார் பாடியுள்ளார். அதனை அவரே முதலில் செய்து ஒரு குருபரம்பரையை தொடங்கினார். அதானால் திருவாய்மொழிக்கு ஏற்றம். கம்பராமாயணத்தை முழுதும் கற்று இவையனைத்தும் அதில் உள்ளனவா/இல்லையா என்பதை தெரிந்துகொண்டு பேசுவது வேறு, இரண்டுமே திருமால் பெருமையை பேசுகின்றன ஆகையால் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று தோராயிரமாக சொல்வது வேறு.

  நம்மாழ்வாரே கவிநயம் என்ற ’ஒன்றுக்காக மட்டும்’ ஏற்றுக்கொள்ளப்படாதபோது ”கம்பனிடம் இவ்ளோ கவிநயமிருந்தும் உரைகளில் எடுத்துக்கொள்ளப்படவில்லையே” என்பதில் பொருளே இல்லை. கம்பன் மீதான ஈடுபாட்டினால் ஒருவர் அப்படி சொல்வாரெனில், அது வேறு. 4000 உரைகளில் ஏதோ போதாமை இருப்பதை கண்டுபிடித்தாற் போலவும், அதனை கம்பனை வைத்து இட்டு நிறப்பிவிட முடியும் என்று கண்டுபிடித்துவிட்டது போலவும் பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது. 4000 உரைகளே பிரதானமாக பாசுரங்களின் கவிநயங்களை விவரிப்பவை அல்லவே! சங்க இலக்கியங்களுக்குள்ள உரைகள் போல இவையும் ஒரு “உரை” அல்ல. அங்கு எப்படி ஒரு நூலின் உரையில் மற்ற நூல்கள் மேற்கோளிடபடுகின்றனவோ அப்படி தமிழ் செவ்விலக்கிய உச்சியான கம்பராமாயணம், குறள், சிலம்பு ஆகியவை தமிழ் பாசுரங்களான 4000 உரையில் சுட்டப்பட வேண்டும் என்பது தவரான புரிதல்.

  ReplyDelete
  Replies
  1. ஹரனையும் ஹரியையும் இணைவைக்கும் கம்பன் ஓர் அத்வைதியாகவே கருதப்படுகிறான். மேலும் தம் மகனுக்கு அம்பிகாபதி என்று பெயர் வைத்து அவனை சாக்தனாய் வளர்த்ததும் வழிவழிவரும் கதை.

   பின்னாளில் ஸ்ரீவைஷ்ணவர்கள் கம்பனை அதீதமாய்ப் போற்றி உச்சி முகர்ந்தால் அவரின் மேற்கண்ட நிலைப்பாட்டையும் நியாயப்படுத்த வேண்டியிருக்கும் என்றே கம்பராமாணத்தில் பட்டும் படாமலும் நின்றிருக்கலாம்.

   திருக்குறளையும் இதே கோணத்தில் அணுக வேண்டும்.

   ஸ்ரீராமானுஜர் ஏன் திவ்யப்ரபந்தத்துக்கு உரையெழுதவில்லை என்பதற்கு மேலே ஒருவர் சொல்லியிருக்கும் விளக்கம் பொருந்தவில்லை. அது குறித்து பின்னர்..

   - அத்தாமலகன்

   Delete
 49. உரை ஆசிரியர்கள் வைணவம் மற்றும் அல்லாது விசிஷ்டாத்வைதக் கண்ணோட்டடதொடுதான் உரை எழுதியுள்ளார்கள். இளங்கோ அடிகள் விஷ்ணுவை மட்டும் அல்லாது கொற்றவை, முருகன், சிவன் மற்றும் அருகன் ஆகியோரையும் சமமாகப் புகழ்கிறார்.. பரிபாடல் முருகனையும், கொஞ்சம் சிவனையும் பாடும் நூல். கம்பர் சடகோபர் அந்தாதி எழுதி இருந்தாலும் அலங்கலில் தோன்றும் பொய்மை அரவம் என்ற பாடல் மூலம் அத்வைதம் கூறுபவர். எனவேதான் உரை ஆசிரியர்கள் இவர்களை குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து.

  சங்கர நாராயணன் ( பெயரோடு இட வரவில்லை. எனவே அனானியாக பதிகிறேன்)

  (When one is unaware of Reality, one perceives the body, vital principle of life, mind, intellect etc. Full realization of Truth comes only when occasional sparks of bliss arise beyond the above material/immaterial perceptions. Thus Sri Krishna has stated, in the ultimate stand of the seer, as follows "I pervade the whole universe. All things are resting in Me, but I am not in them." If an ignorant person had looked upon the garland as the snake, how can one say, in reality, that the snake was inside the garland or that the garland was inside the snake? Kambar, the great Tamil poet and composer of the Classic Kamba Ramaayanam has stated as follows:

  Alangalil Thondrum Poymai
  Aravu Enapp Pootham Aidum
  Vilangiya Vikaarap Paattin
  Veruppaadutra Veekkam
  Kalanguva Devaraik Kandaal
  Avar Enbar Kaivil Endi
  Elangaiyil Porudaar Andre
  Maraigaluk Kirudhi Yaavaar
  (Sundara-Kaandam)

  The illustration of garland appearing as snake in the dusk is again referred to here. Similarly the inflated feeling of difference (between the universe and us) appears on account of the mixture of the five elements. This differentiation or dual appearance (of the world and the individual) is not true. If He is known by whom all these appearances will disappear, then as in the garland-snake example, the delusion will go and the garland, namely the Supreme God will be perceived. That absolute reality as declared by the Vedas (Holy Scriptures) is Sri Rama who fought Ravana in Sri Lanka. The universe is made of the five elements. Its substrate is Sri Rama. If the appearance goes or is reduced, then, what remains is only the truth of the Supreme Self. This is the gist of Kambar's statement in this poem

  As a follower of the Vaishnava (worshipper of Vishnu) sect, Kambar might have subscribed to a different theory. But here Kambar has enunciated clearly the principle of Advaita (non-duality).)

  ReplyDelete
 50. ஹிந்து மத அடிப்படை புரிதல் உங்களுக்கு இல்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இப்படி வெளிப்படையாக எழுதி நீங்கள் ஒரு ஏட்டு சுரைக்காய் என்று மீண்டும் நிருபிக்க வேண்டியது இல்லை.

  எல்லோரும் எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் என்பதும், எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இயற்கைக்கு எதிரானது.

  இது ஒரு ஆப்பிரகாமிய கோட்பாடு. உங்கள் மூளையிலும் ஆப்பிரகாமிய தாக்கம் தான் முழுமையாக ஆட்டிப் படைத்து கொண்டு இருக்கிறது.

  ஸ்ரீவைஸ்ணவம் எதற்காக தமிழில் எழுதியவற்றையும் மேற்கொள காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

  அவரவர் அவரவர் வாழ்க்கை முறைப்படி வாழ்ந்து கொள்கிறார்கள். இதை எப்படி மதவாதம் என்று சொல்வீற்கள்.

  மத அடிப்படை வாதம் என்பது தன் கருத்து மட்டுமே சரி, அடுத்தவன் கருத்து எல்லாம் தவறு என்று சொல்லக் கூடியது. ..

  என்னை போன்ற சாதாரணமானவர்களுக்கு புரிந்தது கூட அதிபுத்திசாலியான உங்களுக்கு புரியாமனல் போனது எனோ? ஒரு வேலை அறிவின் மமதையாக கூட இருக்கலாம்.

  சிம்பிளா சொன்ன ஒருவருக்கு வெங்காய தோசை தான் பிடிக்கும். அடுத்தவருக்கு மசாலா தோசை பிடிக்கும். அதற்காக வெங்கா தோசை சாப்பிடுபவர்க்கு மசாலா தோசை பிடிக்காது என்று அர்த்தம் அல்ல....

  அப்புறம் முக்கியமான விசயம்... உங்க தலையில நிறைய MEMORY இருக்கு ஆனா PROCESSOR தான் காணோம்.....

  ReplyDelete
 51. பத்ரி, இந்த விவாதத்தை இப்போது தான் கவனிக்கிறேன். சுருக்கமாக எனது கருத்துக்கள் -

  1. ஆசிரியருடன் சண்டைக்குப் போன சக மாணவர்கள் குறித்த உங்களது மதிப்பீடு முற்றிலும் சரியானது. முதலாழ்வார்கள் காலம் குறித்து ந்மக்கு தெளிவாக கிடைக்கும் வரலாற்று, கல்வெட்டு, இலக்கிய செய்திகள் அனைத்தையும் புறந்தள்ளி, அவர்கள் கிருத,திரேதா,துவாபர யுகத்தில் வாழ்ந்த ஐதிகத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சாதிப்பது, அதுவும் ஒரு பல்கலைக் கழக வகுப்பில் சாதிப்பது - இது அடிப்படைவாதமே. (அடிப்படை வாதம் என்பது கருத்தளவிலும் இருக்கலாம், அந்த சொல்லைப் பயன்படுத்துவதாலேயே அது வன்முறையுடன் தொடர்புடையது என்று அர்த்தமல்ல - இங்கு மறுமொழியிடும் பலரும் அப்படி எண்ணிக் கொள்வதாகத் தெரிகிறது, தயவு செய்து அகராதியைப் பாருங்கள் நண்பர்களே).

  வரலாற்றில் வாழ்ந்த மாந்தர்கள் குறித்த ஐதிகங்களை வரலாற்று ஆதாரங்களுடன் இணைத்து கற்பதே சரியான அறிவியல் பூர்வமான, சரியான வழிமுறை. கல்விப்புலத்தில் பின்பற்ற வேண்டியதும் அதுவே. ஆதிசங்கரர் கி.மு. காலத்தில் வாழ்ந்தார் என்று சாதிக்கும் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் இக்கருத்தையே நான் பதிவு செய்துள்ளேன் - http://www.tamilhindu.com/2010/12/dating-adi-sankara-history-a-view/

  2. கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் பரிபாடலையும் ஏன் வைணவ உரையாசிரியர்கள் எடுத்தாளவில்லை, அவற்றுக்கு வைணவ கிரந்த வரிசையில் இடம் தரவில்லை என்பதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. காவியம் என்பது பண்டைய இந்தியாவில் அறிவுத் துறைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப் பட்டு எல்லா குருகுலங்களிலும் பயிப் பட்டது. காவியங்கள் சத்தியத்தின், வாழ்க்கை குறித்த பேருண்மையின் தரிசனத்தைக் காட்டுகின்றன என்ற கருத்தும் ஆழமாக இருந்தது. ஆனால் கறாரான தத்துவ,சமய கோட்பாட்டு நூல்களில் காவியங்கள் பிரமாணங்களாக எப்போதுமே ஏற்கப் படவில்லை. அந்தந்த சமய மரபின் ஆதார நூல்களிலும், அவற்றுக்கு வழிகாட்டிய ஆசாரியர்களின் மொழிகளுமே ஏற்கப் பட்டன.

  ஒரு ஒப்பீடு சொல்கிறேன், கம்பன் காவியத்தை விட பல மடங்கு பாரத நாடங்கும் பிரபலாமாக இருந்தவை / இருப்பவை காளிதாச காவியங்கள். கம்பன் காவியத்திற்கு ஒரு பழந்தமிழ் உரை கூட இல்லை, காளிதாச காவியங்களுக்கு 25க்கு மேற்பட்ட உரைகள் உள்ளன. ஆயினும், அக்காவியங்கள் எந்த பிரதான வேதாந்த உரைகளிலும் எடுத்தாளப் படவில்லை. உரைகளை விளக்குவதற்காக எழுதப் பட்ட வார்த்திகங்களில், ஒரு சில இடங்களில் உதாரணங்களாகக் கூறப் படுகின்றன, அவ்வளவே. காளிதாச காவியங்களே இப்படி என்கையில் கம்பனை ஏன் சேர்க்கவில்லை என்பது அர்த்தமற்றது. பரிபாடலும், சிலம்பும் இதற்கு இன்னும் வெளியே உள்ள வட்டத்தில் தான் வரும். வால்மீகி ராமாயண விஷயம் வேறு. அது ஆதிகாவியம் என்பதாக மட்டுமல்ல, வேதத்திற்கு நிகரானது (”புண்யம் வேதைஸ்ச சம்மிதம்”) என்று புனித நூலாகவே கருதப் பட்டது, அதனால் உரையாசிரியர்களால் எடுத்தாளப் பட்டது.

  இதில் ஆரிய/திராவிட வாதம், பார்ப்பனீயம் போன்றவற்றையெல்லாம் நுழைப்பது தத்துவ அறிமுகமற்றவர்களின் வெற்றுக் கூச்சல் அன்றி வேறில்லை. அந்தக் கருத்துகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது.

  ReplyDelete
 52. இரண்டாவது விஷயம் குறித்து இன்னொரு ஒப்பீடும் தருகிறேன். சிலப்பதிகாரமும், சிந்தாமணியும் சமண காவியங்கள்.. ஆனால் சமண சமயத்தின் எந்த புனித நூல்களில், உரைகளில் அவை எடுத்தாளப் பட்டுள்ளன? ஒன்றிலும் இல்லை.

  மாறாக, சமண புனித நூல்களில் சொல்லப் பட்ட தத்துவக் கருத்துக்களைத் தான் இவை காவியத்தின் போக்கில் சொல்கின்றன.

  இது அப்படியே கம்பனுக்கும் பொருந்தும். நம்மாழ்வாரை குருவாக ஏற்ற கம்பன், அவரது தத்துவப் பார்வையையே தன் காவியம் முழுமையும் எடுத்துரைக்கிறான் என்று கொள்ளலாம். திருவாய்மொழியிலும், மற்ற திவ்யப் பிரபந்த பாசுரங்களிலும் உள்ள சில சொல்லாடல்களையும் கூட அப்படியே எடுத்தாண்டிருக்கிறான்.

  ReplyDelete
 53. Dear 'Jatayu'

  I accept your view point. Timelines of alwars need to be studied critically. We need not accept guruparamparai version as final in this.

  Regarding the word fundamentalist used here, what is the reason to mention christianity and islam and then follow with vaishnavism ?

  ReplyDelete
 54. முதலாழ்வார்கள் காலம் குறித்து ந்மக்கு தெளிவாக கிடைக்கும் வரலாற்று, கல்வெட்டு, இலக்கிய செய்திகள் அனைத்தையும் புறந்தள்ளி // இதெல்லாம் காண துடிக்கின்றோம் ஜடாயு அவர்களே!!முதாலாழ்வார்கள் என்பவர்கள் பொய்கை பூதத்து பேயாழ்வார்கள் என்பவர் (என்பது தங்களுக்கு தெரிந்ததே என்கிற நினைப்பின் அடிப்படையில்.)

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள அனானி, வரலாற்று ஆதாரம் என்றால் ஒவ்வொரு விஷயமும் திட்டவட்டமாக ஆதியோடந்தம் கிடைக்க வேண்டும் என்றல்ல. கிடைக்கும் தரவுகளை வைத்துத் தான் கட்டமைக்க வேண்டும். உதாரணமாக, பூதத்தாழ்வார் கடல் மல்லையில் பிறந்தார் என்ற குறிப்பு உள்ளது, மல்லை என்ற பெயர் அவர் பாடல்களில் உள்ளது. இதை வைத்து அவரது காலத்தின் முன்-பின் எல்லைகளை நிர்ணயிக்க முடியுமல்லவா? (அது கட்டாயம் கிருத-திரேதா யுகமாக இருக்க முடியாது) அதே போல, "நின்றார் இருந்தார் கிடந்தார் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு" என்ற பாடல் காஞ்சிபுரத்தில் இக்கோயில்கள் எழுந்த காலகட்டத்தின் போது தான் அருளப் பட்டிருக்க வேண்டும் என்று நிறுவலாம் அல்லவா? ஆய்வாளர்கள் ஏற்கனவே இது போன்ற பல்துறை சான்றுகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இது ஒன்றும் புதிய விசயம் அல்ல.

   Delete
 55. It feels wonderful to learn Madras University has M.A. in Vaishnavism. After reading your blog I checked the university home page, and found that the department of Vaishnavism has just one faculty member, Dr. M.A.Venkatakrishnan. Although I'm bit unhappy about the faculty strength, I'm really rejoiced to learn about the courses in a state which has been governed by people who abuse the religion of 80 % of the population and make mockery of their faith. Scholars all over the world who study Vaishnavism recognize that the works are intellectual marvels. I just wish people who run our institutions have the wisdom to establish Vaishnavam schools in all our universities, which would enable people learn, and study the profound philosophy, and teachings and enrich our society.

  ReplyDelete
 56. ***வைணவ ஆச்சாரியார் "நம்பிள்ளை" பற்றிய குறிப்புகளை தேடும் போது இந்த பதிவை படிக்க நேரிட்டது .***

  இது பல நாட்களுக்கு முன்பு விவாததிக்கபட்டு இருந்தாலும் , இதில் என்னுடைய கருத்தை பகிர விரும்புகிறேன்.

  அந்நாட்களில் சமஷ்கிருத மொழியில் அமைந்த வேதங்களை மட்டும் ஆதாரமாகிய கருதிய மக்களுக்கு , ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் வேதத்திற்கு ஒப்பானவை( தமிழ் மறை) என்பதை நிருபிக்க அவ்வேதங்களில் இருந்து மேற்கோள் காட்ட வேண்டியது அவசியமாய் இருந்தது.

  சில உதாரணங்கள்

  1) ஒரு சமயத்தில் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை, தமிழ் பிரபந்தம் என்பதனால் சிலர் ஒதுக்கிய போது , தமிழ் மறைகள் வேதத்திருக்கு நிகரானவை என்பதை "ஆச்சாரிய ஹிருதயம்" என்ற நூல் மூலம் உணர்த்தினார் அழகிய மணவாள பெருமாள் நாயனார்...

  2) இராமனுஜர் பிரம்ம சூத்திரதிற்கு ,திருவாய்மொழியின் துணை கொண்டு உரை இயற்றினார்.

  3) மணவாள மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினத்தில் " ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும் தாழ்வாக நினைப்பவர்கள் நரகில் வீழ்வர்காள் என்று அவர்பால் சென்று அணுக கூசித் திரி". என்று அருளி உள்ளார். அவர்கள் காலத்திலும் அருளி செயல்களை ஏற்காவதர்கள் உள்ளனர் என்பதை உணர்த்திகிறது .


  இதன் முலம் அந்த கால சூழ்நிலையில் தமிழ் பிரபந்தங்களக்கு வேதத்திற்க்கு உண்டான மேன்மையையும் அர்த்த விஷேங்களும் குறைவின்றி இருப்பதை உணர்த்த , வேத வாக்கியங்களிருந்தும்,இதிகாச புராணங்களில் இருந்தும் மேற்கோள் காட்டியுள்ளனர்.இருப்பினும் நம்பிள்ளை போன்ற ஆச்சாரியார்கள் நன்நூல்,திருக்குறள் இருந்தும் மேற்கோள்கள் காட்ட தவறவில்லை.


  ஏன் முன்பு நடக்கவில்லை என்று ஆராவாய்வதை விட, இதனை ஆக்க பூர்வமாக கொண்டு சென்றால் தமிழும்,தமிழரும் மற்றும் வைணவமும் பயன் பெறும் .

  1) பாட திட்டத்தில் "பழந்தமிழரும் வைணவமும்" பற்றிய நூல்களை சேர்க்க பரிந்துரை நடவடிக்கைகளை செய்யலாம்..
  2) இது சம்பந்தமாக ஆராய்சி கட்டுரைகளுக்கு வித்திடலாம்..
  3) பட்ட படிப்பிக்கு மட்டும் இல்லாமல் , தமிழ் நூல்களில் உரைத்த "பழந்தமிழரின் வைணவ வழிபாட்டு முறை" உலகறிய செய்யலாம். வரலாறும் திருத்தி எழுதப்படும்......

  ReplyDelete