Wednesday, July 11, 2012

குழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சுவாமி அக்னிவேஷின் உளறல்

நாட்டில் நடக்கும் எக்கச்சக்கமான பிரச்னைகளில் கடந்த சில நாள்களில் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மேற்கு வங்கத்தின் ஷாந்தி நிகேதனில் நடந்த ஒரு சம்பவம்.

ரபீந்திரநாத் தாகூர் உருவாக்கிய பள்ளி/கல்லூரி இது. ஜவாஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியைப் படிக்க அனுப்பிய பள்ளி இது.

படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள் என்பதால் பத்து வயதுச் சிறுமியை, அந்தச் சிறுநீரையே நக்கவைத்திருந்தார் அந்த ஹாஸ்டல் வார்டனான உமா போத்தார் என்பவர். விஷயம் பெரிதாகி, அந்த ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையிடம், அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் செல்கிறாயா என்று கேட்டாலே அதிர்ச்சியில் உடல் நடுங்குகிறது என்கின்றன செய்திகள்.

இதற்கிடையில் மிகவும் கௌரவத்துடன் இந்தியா எங்கும் வலம் வரும் சுவாமி அக்னிவேஷ், தன் திருவாய் மலர்ந்தருளி, அந்த ஹாஸ்டல் வார்டன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். [தி ஹிந்து செய்தி]

அதாவது, அந்த வார்டன் வாயில் சிறுநீரைப் புகட்டவில்லையாம். கழுத்தைப் பிடித்து அழுத்தி சிறுநீரைக் குடி என்று சொல்லவில்லையாம். வெறுமனே வாயால் சொன்னாராம். அந்தக் குழந்தையாக இதனைச் செய்ததாம். பெற்றோர்கள் இந்த விஷயத்தைப் பெரிதாக்குகிறார்களாம்.

இதைக் காலையில் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இதனை அக்னிவேஷ் defend செய்கிறார் என்று. பிறகு அடுத்த பத்திகள் புரியவைத்தன. அக்னிவேஷும் மொரார்ஜி தேசாய் போன்று தன் சிறுநீரைத் தானே அருந்துவாராம். அவருக்கும் படுக்கையை நனைக்கும் பழக்கம் இருந்து, தன் சிறுநீரைத் தானே அருந்துவதன்மூலம் குறைந்ததாம். எனவே இது நல்ல பழக்கம்தானாம்.

அக்னிவேஷும் மொரார்ஜி தேசாயும் என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும். ஆனால் இங்கு நடந்தது என்ன? ஒரு குழந்தை மிரட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறுநீரை நக்கவைக்கப்பட்டுள்ளது. அதன் மருத்துவ குணங்கள் (உண்மையிலேயே அப்படி என்றால்!) இங்கு முக்கியமே அல்ல. அந்தக் குழந்தையின் மனம் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஹாஸ்டல் வார்டன் அந்தக் குழந்தையின் நன்மை கருதி அதனைச் செய்தார் என்றால் முதலில் குழந்தையில் பெற்றோர்களிடமிருந்து அனுமதி பெற்றுச் செய்திருக்கவேண்டும். பெற்றோர்கள் அனுமதி தந்திருந்தாலும், இந்த யூரின் தெரப்பியை பிறருக்குத் தெரியாவண்ணம் ரகசியமாகச் செய்திருக்கவேண்டும். அப்படியெல்லாம் செய்யாமல், ஒரு குழந்தையைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே இது செய்யப்பட்டிருக்கிறது என்பது குழந்தையின் சொற்களிலிருந்தே தெரியவருகிறது.

அண்ணா ஹஸாரே போராட்டம் சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அக்னிவேஷ், இப்போது மேலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

21 comments:

 1. மனுஷ மூத்திரம் மேல ஞாயமா வர கோவம்,அதை குடிக்க சொல்றவர் மேல வர எரிச்சல் , மாட்டு மூத்திரம் தெளிக்க,குடிக்க,அதை விற்க பல கோடி செலவு செய்யும் பா ஜ க அரசுகள்,அதை புகழும் அறிவுஜீவிகள்,ஜீயர்கள் மேலும் வந்தால் நாட்டுக்கு இன்னும் நல்லது

  ReplyDelete
  Replies
  1. மனுஷ மூத்திரமும் மாட்டு மூத்திரமும் ஒண்ணாயிடுமா? ஆபாச புஸ்தகத்தை தடை பண்றாளே, ஏன் பெரியார் புஸ்தகத்தை தடை பண்ணல? ரெண்டும் புஸ்தகம் தானே?

   Delete
  2. மாட்டு மூத்திரம் நல்லது. மனித மூத்திரமும் நல்லது. இரண்டிலிருந்தும் யூரியாவைப் பிரித்தெடுக்கலாம். இரண்டையும் வயலில் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். குடிக்கலாமா வேண்டாமா என்பது தனி நபர் விருப்பத்தைச் சார்ந்தது. மொரார்ஜியும் அக்னிவேஷும் குடித்தால் எனக்குப் பிரச்னை இல்லை. என்னைக் குடிக்கச் சொன்னார்கள் என்றால் நான் நட்புடன் மறுத்துவிடுவேன். ஆனால் குழந்தைகள் படுக்கையை நனைத்துவிட்டன என்பதால் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுதல், அவர்களை அவமானப்படுத்தும்விதமாக சிறுநீரைக் குடிக்கச் சொல்லுதல் போன்ற குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் கடுமையாகக் கண்டிப்பேன்.

   பாஜகவுக்கு எதிரான எல்லாவிதமான போராட்டங்களிலும் நீங்கள் ஈடுபட்டு வெற்றி வாகை சூட என் வாழ்த்துகள். பொதுமக்கள் அனைவரும் மாட்டு மூத்திரம் குடிக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னால் அதனை மறுப்பதோடு, கடுமையாகக் கண்டிக்கவும் செய்வேன். மாட்டு மூத்திரத்தை வயலில் தெளிக்கவேண்டும் என்று சொன்னால் கட்டாயம் வரவேற்பேன்.

   Delete
  3. பூவண்ணனுக்கு பா.ஜ.க வைத் திட்டவில்லை என்றால் மூத்திரம் கூட வராது போலும்!

   பதிவுக்கும் பா.ஜ.க வுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றாலும் அதை இழுத்துவிட்டு திட்டுவதே இந்த முற்போக்கு வயிற்றுப்போக்காளர்களின் வேலையாகிவிட்டது. சீனாவில் சிறுவர்கள் மூத்திரத்தில் வேகவைத்த முட்டையை கம்யூனிஸ்டுகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். கட்டாயமாக அதை உண்பவர்கள் தான் சீனத்துக் கலாச்சாரக் கம்யூனிஸ்டுகள் என்றும் சொல்லப்படுகிறதாம். அதைப் பற்றி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு பா.ஜ.க வின் மாட்டு மூத்திரத்தைப் பற்றி பேசவரவும் திரு.மு.போ பூவண்ணன்.

   Delete
  4. சார் என் உயரதிகாரி ஒருவர் தன்னுடைய ஒன்பது வயது மகனை திடீரென்று காசியில் வேத பாடசாலையில் சேர்த்து விட்டார்.
   மிகவும் எடை குறைந்ததால் சில நாட்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் செல்லாமல் இருக்க எல்லா வலிகளோடும் தினமும் மருத்துவமனை வாசலில்
   அவனை எப்படி காப்பாற்றுவது.மெதுவாக சிறுவனை இங்கயே படிக்க வையுங்கள் என்றாலே மூக்கின் மேல் வரும் கோவத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்கள்
   குழந்தைகள் மாட்டு மூத்திரத்தை பிடிக்க ,தெளித்து கொள்ள வேத பாடசாலைகளில் எத்தனை வயதில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்.
   மாட்டு மூத்திரம் எனக்கு பிடிக்காது என்று ஒரு சிறுவன் சொன்னால் அதை ஞான மரபு வார்டன் எப்படி திருத்துவார்,தண்டிப்பார்
   இன்றும் பல ஆயிரம் பாலசன்யாசிகளும்,வேத பாடசாலை மாணவர்களும் சுய விருப்பத்தின் பேரிலா மாட்டு மூத்திரதொடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

   Delete
  5. Beautiful reply Dr.Badri; you've explained things in a simple language - very lucid.

   Mr. Poovannan, pls be reasonable. People have pretty good idea how the students are trained in Veda Padasalas. Veda Padasalas have been following certain well tested traditions which are well known to the students' parents. It is absurd to compare Veda Padasalas with other schools. Stop blindly attacking BJP or Jeeyars or the practices of our mutts. What you should see is if they are doing the right thing or not. If a young kid is not at all interested in a Veda Padasala's teachings, demands, discipline, then the kid should be told to go to his parents and pursue what he is interested in.

   Delete
  6. http://www.google.com/hostednews/afp/article/ALeqM5j7i2redcQWYr21-VT-5v3HfuoPIg?docId=CNG.5e2fe5ecc1402f42390121dcd6b078d8.201

   In a decision that sparked outrage from German Jewish and Muslim groups, the German court ruled against a doctor in Cologne who had circumcised a four-year-old Muslim boy on his parents' wishes.

   The judges ruled -- in what could set a legal precedent -- that the "fundamental right of the child to bodily integrity outweighed the fundamental rights of the parents."
   மதமும் மத குருக்களும் குழந்தைகளின் மேல் நடத்தும் வன்முறைக்கு அளவே இல்லை.சில தனி நபர் வக்கிரங்களுக்கு பொங்கும் நாம் அவற்றை பார்த்தும் பார்க்காமல் போல் இருப்பதை தான் சுட்டி காட்ட விரும்பினேன்.உங்கள் சப்பை கட்டு அந்த மனநிலையை தானே காட்டுகிறது.

   Delete
  7. Your comments indicate you have no clarity on this issue.

   Delete
  8. சாந்தினி கேத்தன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட மத நிறுவனமா ? அங்கே அந்த குறிப்பிட்ட மதகுருக்கள் பாடம் நடத்துகிறார்களா ?

   இல்லை. என்பது தான் அதற்கு பதில். எதனை எதனுடன் முடிச்சு போடுவது என்று விவஸ்தை இல்லாமல் பெனாத்துவது தான் பூவண்ணனின் முழுநேர வேலை போலும்.

   Delete
  9. ஐயா சாமி
   அக்னிவேஷ் கூறுவது உளறல் என்று புரிந்த மாதிரி மாட்டு மூத்திரத்தை குழந்தைகளின் மேல் திணிப்பதும் ,அதை ஆதரிப்பவர்களின் பேச்சும் உளறல் தானே எனபது தான் கருத்து
   இதே சுவாமி அக்னிவேஷ் எங்கள் மத,சாதி வழக்கப்படி பல நூற்றாண்டுகளாக மனித மூத்திரமான ஒமியத்தை குடிப்பது நடந்து வருகிறது.அதன் நன்மைகள் மத புத்தகத்தில் உள்ளது.இன்றைய புதுமைவாதிகளுக்கு அது புரியாததால் அதை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்று கூறியிருந்தால் அவருக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் குரல்கள் எழும்பி இருக்கும் .

   அவர் அப்படி சொல்லாமல் தனிப்பட்ட முறையில் அவருக்கு இருந்த தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நோய் பற்றியும்,மூத்திரம் குடித்த சில (கற்பனையில் இல்லாமல்) உயிரோடு வாழ்ந்த சிலரின் எடுத்துகாடுகளை கூறியதால் உளறல் ஆகி விட்டது.
   கோமியம் பிடிக்காமல் ஓடி வந்த சிறுவனுக்கு ஆதரவாக, முடிவுகளை சுயமாக எடுக்கும் வயது வரும் வரை சிறுவர்களை மாட்டு மூத்திரத்தை தொட ,வழிபாட்டு முறைகளுக்கு பயன்படுத்தவோ வைக்க கூடாது என்று சொல்ல ,அதை ஆதரிக்கும் மத குருக்களை உளறல் என்று கூற முடியுமா
   எந்த வயதில் வேத பாடசாலைகளில்,பாலசன்யாசிகளாக சிறுவர்கள் சேர்த்து கொள்ளபடுகிறார்கள்.பதினெட்டு வயதுக்கு மேலா

   Delete
 2. குழந்தைப் பருவத்தில் விடுதிகள் தேவையே இல்லை. வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும்.

  சரவணன்

  ReplyDelete
  Replies
  1. Good comment Mr.Saravanan. All the scientific studies indicate living with parents is essential for the kids growth.

   Delete
  2. விஸ்வம் சார்
   இதே தானே நானும் சொல்றேன்.மத படிப்போ,சாந்திநிகேடன் படிப்போ பெற்றோர்களுடன் தான் சிறுவர்கள் தங்கி படிக்க வேண்டும் என்று .
   மதம் என்று வரும் போது மட்டும் குழந்தைகளை பெற்றோரை விட்டு பிரிப்பது சரி/குழந்தைகளுக்கு மூத்திரம் புனிதமாவது எப்படி
   அவர்கள் என்ன சபிக்கப்பட்ட இல்லை ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளா தனியாக பார்க்க படுவதற்கு

   Delete
  3. Poovannan Sir,
   You unnecesasarily dragged Hindu mutts and made comments and stated some "facts" that were out of context. Are you sure kids are made to drink cow's urine in some mutt, I strongly doubt. Otherwise it has been scientifically shown that cow-dung and cow's urine have got lots of positive (of course non-eatable) medicinal properties.

   Delete
 3. || உண்மையிலேயே ஹாஸ்டல் வார்டன் அந்தக் குழந்தையின் நன்மை கருதி அதனைச் செய்தார் என்றால் முதலில் குழந்தையில் பெற்றோர்களிடமிருந்து அனுமதி பெற்றுச் செய்திருக்கவேண்டும். பெற்றோர்கள் அனுமதி தந்திருந்தாலும், இந்த யூரின் தெரப்பியை பிறருக்குத் தெரியாவண்ணம் ரகசியமாகச் செய்திருக்கவேண்டும். ||
  பெற்றோரின் அனுமதி பெற்று செய்தாலும் அது குழந்தைக்கு எதிரான குற்றம்தான். நம்முடைய கழிவுகளின் மீது நமக்கு இயற்கையாகவே அருவருப்பு எண்ணம் இருக்கிறது. அதைக் குடிப்பதால் அறிவியல்பூர்வமாக நன்மை இருக்கிறது என்று நிறுவினாலும், பெற்றோரின் அனுமதி பெற்றாலும், குழந்தையைக் கட்டாயப்படுத்துவது உளக் காயத்தை உருவாக்குவது குற்றமாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 4. விடுதிகளில் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு எப்படியும் ஒரு படி குறைவுதான் என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  பிள்ளைகளை வீட்டில் வைத்துப் படிக்க வைக்க முடியாத அளவிற்கு குடும்ப-சம்பாத்திய வாழ்க்கை அவலத்தில் இருக்கிறது.

  அதற்கு மேல் சாமியார்கள் வேறு. அவரவர் கருத்துகளை அள்ளித் தெளித்துக் குதறி விடுகிறார்கள். சை.

  ReplyDelete
 5. இந்த சம்பவத்தை விட அதிர்ச்சியான விஷயம் அது நடந்த இடம். கல்வி சுதந்திரமான முறையில் போதிக்கப்பட வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்திலயே இப்படி என்றால் கல்வி என்ற பேரில் வழிப்பறி நடத்திக் கொண்டிருக்கும் வணிகக் கூடங்களில் மற்றவர் சிறு நீரையும் அருந்தச் சொல்லுகிறார்களோ? இதில் வழக்கம் போல சாமியார்கள் இம்சை வேறு!
  குழந்தையும் தெய்வமும் சமம் என்பார்கள். குழந்தைகள் கல்விக்கூடங்களிலும் தெய்வம் சாமியார்களிடமும் மாட்டிக் கொண்டு திண்டாடுவது இன்றைய இந்தியாவின் சாபக்கேடு.

  ReplyDelete
  Replies
  1. அக்னிவேஷ் ஒரு ஹிந்து ஆரிய சமாஜ சாமியார் என்று சொல்லிக்கொண்டு திரியும் போலி மதச்சார்பின்மைவாதி (i.e., திருட்டுப்பயல்). ஆரிய சமாஜம் அவரை ஒதுக்கிவிட்டது.

   Delete
  2. Superb articulation, Agnivesh oru thiruttuppayal.

   Delete
 6. Dear Badri
  Why dont NHM starts an english magazine. It can be similar to old vikatan/kalki ( not the latest issues) standards. This can have few short stories, poems and other regular Indian politics. To best of my knowledge no such magazines are available now.
  This can target metros as most of the guys dont know their mother tongue. This can also target youths... This need not be specific to a state/culture. This can target indian culture and overall Indian philosophy...
  Regards
  Ganesh

  ReplyDelete
 7. AUT is not a recognized/medically accepted therapy. It cannot be promoted/offered as a solution.If someone wants to drink his/her own urine it is a personal choice.None can directly/indirectly force it or use parents to promote it.
  I dont know whether students in Veda Padasalas are forced to drink cow's urine or not. If they are forced then the govt. should intervene and put an end to that. It is true that young children may be brainwashed to do certain acts citing tradition but it is the state which should ensure that such a brainwash is not done.Cow's urine may have some positive impacts on fields or may be used as a natural fertilizer but that nothing to do with human use of the same.

  ReplyDelete