Thursday, August 30, 2012

புத்தக அறிமுக/விமர்சன வலைப்பதிவு(கள்)

பல்வேறு செய்தித்தாள்களிலும் இதழ்களிலும் தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றையும் அறிமுகம் செய்கிறார்கள். அவற்றை ஒருசேரத் தொகுப்பது என்ற வேலையில் இறங்கியுள்ளோம். அவற்றை இந்த வலைப்பதிவில் காணலாம். இவை அனைத்தும் எங்களிடம் விற்பனைக்குக் கிடைக்கும் என்று சொல்லமுடியாது.

டயல் ஃபார் புக்ஸ் சார்பில் நாங்கள் அவ்வப்போது ஒரு புத்தகத்தை எடுத்து அவற்றின் தகவல்களை விவரமாக வெளியிடுகிறோம். வாரம் மூன்று புத்தகங்களையாவது இப்படிச் செய்கிறோம். இவை அனைத்தும் எங்களிடம் கட்டாயம் கிடைக்கும். இந்தப் புத்தகங்கள் குறித்த தகவலைகளை இந்த இடத்தில் காணலாம்.

ஆம்னிபஸ் என்ற தளத்தில் புத்தகங்களை அறிமுகம் செய்து எழுதுகிறார்கள். அந்தத் தளத்துக்கான சுட்டி இங்கே.

அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் பல்வேறு இலக்கியவாதிகளை அறிமுகம் செய்து அவர்களுடைய சிறுகதைகளை முழுமையாகத் தருகிறார்கள். அந்தத் தளத்தின் சுட்டி இங்கே.

வலைப்பதிவுகள், இணைய இதழ்கள் என்று எங்களுக்குத் தெரியாத பல இடங்களில் தமிழ்ப் புத்தக அறிமுகம் அல்லது விமர்சனம் இருந்தால் அவை குறித்த தகவல்களை dialforbooks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தம் புத்தகங்கள் குறித்த விமர்சனங்களை பதிப்பாளர்கள் மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால் அவற்றையும் தொகுத்து வைக்கிறோம். ஸ்கேன் செய்யப்பட்ட படங்களாக அல்லாமல், அனைத்தையும் யூனிகோடு குறியீட்டில் டைப் செய்து வைப்பதால், கூகிள்/பிற தேடுபொறிகள் மூலம் தேடுவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இது சார்ந்த வேறு கருத்துகள் இருந்தாலும் மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம்.

4 comments:

  1. அழியாச்சுடர் அருமையான பணியை செய்கிறது . தமிழ் சிறுகதை உலகின் அழியா முத்திரைகளை ஒரே இடத்தில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றிகள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் அளித்துவந்த வீடியோ விவாதம் வழியான புத்தக அறிமுகங்கள் மூன்று, நான்கிற்கு மேல் வராமல் நின்றுவிட்டதே, ஏன்?

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. அதற்கு ஆகும் நேரம்தான் பிரச்னையே. ஒரு புத்தக அறிமுகத்துக்கே வீடியோ பிடித்தல், பிறகு எடிட் செய்தல், பிறகு அப்லோட் செய்தல் என்று நிறைய நேரம் பிடிக்கிறது. பார்க்கலாம்... மீண்டும் செய்யவேண்டும்.

      Delete
  3. அழியாச்சுடர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பத்ரி

    ReplyDelete