Monday, August 27, 2012

டயல் ஃபார் புக்ஸ் எண்கள் - சிறு தடங்கல்

[இந்தப் பதிவை எழுதியபின் அதனைப் படித்துவிட்டு பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் இதுவரையில் எங்களை அழைத்துப் பேசிவிட்டனர். என் பதிவில் நான் பி.எஸ்.என்.எல் மீது குற்றம் சாட்டுவதுபோலக் குறிப்பிட்டது எனக்குச் சரியான புரிதல் இல்லாமையால். நாங்கள் மென்பொருள் சேவையைப் பெறும் நிறுவனம் வேறு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் லைன்களைக் கொண்டு இயங்குகிறது. எங்களிடம் இருக்கும் பி.எஸ்.என்.எல் எண்களிலிருந்து நேராக மற்றோர் நிறுவன எண்ணுக்குத் தானாகவே அழைப்புகளை மாற்ற இயலாதாம். இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் பொருந்துமாம். எனவே எங்கள் வசதிக்காகவே பி.எஸ்.என்.எல் எண்ணை, மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றுகிறோம். கீழே எழுதியிருப்பதில் மாற்றங்களைச் செய்துள்ளேன். இணையப் பதிவுகளைப் படித்து உடனடியாக எங்களைத் தொடர்புகொண்டு விளக்கம் தந்தது கண்டு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்மீது என் மதிப்பு அதிகரித்துள்ளது.]


டயல் ஃபார் புக்ஸ் என்னும் தொலைப்பேசிமூலம் புத்தகம் வாங்கும் சேவையை நாங்கள் கடந்த சில மாதங்களாகச் செய்துவருகிறோம். அதற்காக இரண்டு எண்களைப் பதிவு செய்திருந்தோம்: 94459-01234 மற்றும் 9445 979797 ஆகியவை. அழைப்பவர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது (நல்லதுதான்!). எனவே சேவையைச் சிறப்பாக்க, அழைப்புகளை முறையாகப் பதிவு செய்து, அழைப்போரை மீண்டும் தொடர்புகொள்ள வசதியாக சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சில வசதிகள் கிடையாது என்று சொல்லிவிட்டனர். எனவே ஒவ்வோர் எண்ணாக மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மாற்றும் வேலையில் உள்ளோம்.

இன்னும் ஓரிரு நாள்களுக்கு 94459-01234 வேலை செய்யாது. (இப்போது இந்த எண் மீண்டும் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.) ஆனால் 9445 979797 எண் தொடர்ந்து வேலை செய்யும். முதல் எண் வேலை செய்யத் தொடங்கிய சில நாள்களில் இரண்டாம் எண்ணையும் மாற்றும் வேலை ஆரம்பித்துவிடும். ஓரிரு நாள் தடங்கலுக்குப் பின், அந்த எண்ணும் வேலை செய்யத் தொடங்கிவிடும்.

இந்தத் தடங்கலுக்காக முன்கூட்டியே வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.

5 comments:

  1. இன்று பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸில் டயல்... கடையில் 5 புத்தகங்கள் கேட்டேன். ஒன்று மட்டுமே கிடைத்தது. ஐந்துமே ஓர் ஆண்டுக்குள் வெளிவந்த மிகப்பிரபலமான புத்தகங்களே. அவை

    1) தாயார் சந்நிதி - சுகா
    2) சிலிக்கான் கடவுள் - ராமன் ராஜா
    3) என் சரித்திரம் - உ.வே.சா.
    4) பாம்புத்தைலம் - பேயோன்
    5) ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்

    இதில் எண் 3 மட்டுமே கிடைத்தது. சொல்வனம், ஆழி, உயிர்மை ஆகியவை டயலுடன் வணிகத்தொடர்பு கொண்ட பதிப்பகங்களே. ஸ்டாக் இல்லை என்ற பதில் ஏமாற்றம். என் வழக்கமான நடைமுறைப்படி அந்தந்தப் பதிப்பகங்களுக்கே அலைச்சலைப் பார்க்காமல் சென்றுவிடுவதே சரி போலும்!

    ReplyDelete
    Replies
    1. ஆண்பால் பெண்பால் புத்தகம் இப்போது கிடைக்கிறது. உங்கள் தகவலுக்காக.

      Delete
    2. தகவலுக்கு நன்றி! இருந்தாலும் தைலமும், பாலும் நானும் ஏற்கனவே வாங்கிவிட்டேன்!

      Delete
  2. தாயார் சந்நிதி, சிலிக்கான் கடவுள் இருப்பில் இல்லை. என் சரித்திரம் இருந்திருக்கும். பாம்புத்தைலம் - ஆழியின் புத்தகங்களை இன்னும் வாங்கி வைக்கவில்லை. அவர்களது கேட்டலாக் ரெடியானதும் எங்களிடம் தொடர்புகொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆண்பால் பெண்பால் - நீங்கள் சென்ற கடையில் இல்லை. ஆனால் இன்னொரு கடையில் (திநகர் ரெயில்வே நிலையம் அருகில் இருந்த கடை) இருக்கிறது என்று கடைக்காரர் சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன். நீங்கள் அங்கே சென்று வாங்கிக்கொள்வதாகக் கூறியதாகக் கடைக்காரர் கூறினார். (அது நீங்கள்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.)

    நிற்க.

    எல்லாப் புத்தகங்களையும் இருப்பில் வைக்கமுடியாது. ஆனால் நீங்கள் சொல்வது எல்லாமே தற்போது வந்த முக்கியமான புத்தகங்கள்தான் என்பது உண்மைதான். அவற்றிலும் சில சமயம் சில புத்தகங்களை வைக்க முடியாது. கடைக்காரர் உங்கள் தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி, புத்தகம் வந்ததும் சொல்வதாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அதைச் சொல்லாமல், உங்கள் தொலைபேசி எண்ணை மட்டும் வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

    உங்கள் தொலைபேசி எண் மற்றும் நீங்கள் வாங்க விரும்பி, தற்போது கிடைக்காமல் போன புத்தகங்களின் பட்டியல் டயல் ஃபார் புக்ஸுக்கு அனுப்பப்படும். அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். ஒருவேளை உங்கள் தொடர்பு எண்ணை வாங்காமல் விட்டிருந்தால், அது எங்கள் தவறே.

    கடைக்கு வந்து புத்தகம் கேட்டு, அப்புத்தகம் இல்லை என்றால், அவரது தொடர்பு எண்ணைப் பெற்று, புத்தகத்தை வாங்கி அனுப்புவதுதான் டயல் ஃபார் புக்ஸின் முக்கிய நோக்கமே.

    வேறு ஏதேனும் யோசனைகள் இருந்தாலும் சொல்லவும். நன்றி.

    ReplyDelete
  3. விரிவான பதிலுக்கு நன்றி!

    ReplyDelete