Friday, December 13, 2013

தமிழ் ஊடகங்களின் அழும்பு

(எச்சரிக்கை: சில்லி அவுட்ரேஜ் பதிவு)

நான் கிரிக்கின்ஃபோவில் பணி புரிந்தபோது இதுகுறித்து நிறைய அனுபவம் உண்டு.

ஆரம்பகாலத்தில் கிரிக்கின்ஃபோவிலிருந்து ஸ்கோர்கார்டுகளை எடுத்துப் பதிப்பிப்பார்கள். இங்கிருந்துதான் எடுத்தோம் என்று சொல்லவே மாட்டார்கள். பின்னர் கண்ணுக்கே தெரியாத ஃபாண்டில் “Source: Cricinfo" என்று போடத்தொடங்கினார்கள். கொஞ்சம் பெரிய ஃபாண்டாகப் பொட்டு, அது எங்கள் கண்ணில் பட்டுவிட்டால் நாங்கள் காசு கேட்டுவிட்டால் என்ன ஆவது என்ற பயம். சில பிரிட்டிஷ் ஊடகங்கள் எங்களை "Internet" என்றுதான் அழைத்தன. கிரிக்கின்ஃபோ கமெண்ட்ரியிலிருந்து மேற்கோள் காட்டும்போது, ‘இணையத்தில் எழுதும் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். “இணையத்தில் எழுதும்”? அதற்கு பதில், “இந்த உலகத்தில் வசிக்கும் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்” என்று சொல்லியிருக்கலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிரிக்கின்ஃபோ பெயரை தைரியமாக எழுத ஆரம்பித்தார்கள்.

இதற்கு ஒரு காரணம் உண்டு. தங்களால் கிரிக்கின்ஃபோவுக்கு எந்த ஆதாயமும் “இலவசமாக” போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான் அந்தக் காரணம். கிரிக்கின்ஃபோவிலிருந்து வேண்டிய எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். அது பிரச்னை இல்லை. ஆனால் கிரிக்கின்ஃபோவுக்கு எந்த இலவச விளம்பரத்தையும் கொடுத்துவிடக்கூடாது. பின்னர் இந்த விளம்பரங்கள் எல்லாம் இல்லாமலேயே கிரிக்கின்ஃபோவுக்குக் கூட்டம் கூடுகிறது என்றதும் அடங்கிவிட்டனர்.

அதே பாணியில்தான் இன்றைய தமிழ் மீடியாவும் இயங்குகிறது.

2002-லிருந்து - அதாவது கிழக்கு பதிப்பகம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே தொலைக்காட்சிகளில் அவ்வப்போது முகம் காட்டி வருகிறேன். பெரும்பாலும் கிரிக்கெட் பற்றிப் பேசத்தான் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அப்புறம் கொஞ்சம் டெக்னாலஜி. இப்போது அரசியல், சமூகம் குறித்த பல விஷயங்களைப் பற்றிப் பேச அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கு “கிரிக்கெட் விமர்சகர்” என்ற அடைமொழிதான். கிரிக்கின்ஃபோ பெயர் வராது. (அது விளம்பரமாம்!) பின்னர் மற்ற விஷயங்கள் குறித்துப் பேசும்போது கிழக்கு பதிப்பகத்தை ஆரம்பித்திருந்தேன். அது குறித்து எதையும் சொல்ல மாட்டார்கள். “சமூக ஆர்வலர்” போன்ற பஜனையான அடைமொழியெல்லாம் கொடுத்திருப்பார்கள். இப்போது ‘எழுத்தாளர்’ என்றுவேறு சொல்கிறார்கள். சில இடங்களில் இப்போது ‘பதிப்பாளர்’ என்று சொல்வது உண்டு. எந்தப் பதிப்பகம் என்பதைச் சொல்ல, பாவம், அவர்களுக்குப் பெரும்பாலும் இடம் இருப்பதில்லை.

ஆனால் நான் விடுவதில்லை. எங்கே போனாலும் நம்ம பிராண்ட் கிழக்கு டி-ஷர்ட்டைப் போட்டுக்கொண்டு போய்விடுவது. லைவ் டிவியில் அதையெல்லாம் அழிக்கமுடியாதில்லையா?

செய்தித்தாள் அல்லது வார/மாத இதழ் என்று யார் கேட்டாலும், என்னால் எழுதக்கூடிய விஷயம் என்றால் பொதுவாக எழுதிக்கொடுத்துவிடுவேன். பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. (பெரும்பாலும்) அவர்கள் கேட்கும் காலத்துக்குள், எத்தனை வார்த்தைகளோ அத்தனை வார்த்தைகளுக்கு அருகில் வருமாறு, அவர்களுக்கு எடிட்டிங் சிக்கல் இல்லாமல் எழுதிக் கொடுத்துவிடுவேன். அவர்களும், எழுத்தாளர், பதிப்பாளர், சமூக ஆர்வலர் (அல்லது ஒன்றுமே போடாமல் வெறும் பத்ரி சேஷாத்ரி என்று போட்டு) பதிப்பித்துவிடுவார்கள். சில சமயங்களில் ஸ்டாம்ப் அளவுக்கு முகம் இருக்கும்.

சில நாள்களுக்குமுன் குங்குமம் தோழியிலிருந்து எனக்கு சமையல் செய்யத் தெரியுமா என்று கேட்டு அழைப்பு. தெரியும் என்றேன். உரையாடல் எல்லாம் முடிந்ததும் நான் சமைப்பதைப் படம் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதற்காக நாள் குறித்து, ஒரு ஃபோடோகிராபர் வந்திருந்தார். வந்தவுடனேயே ‘சார், இந்த டி-ஷர்ட் போட்டிருக்கிறீர்களே, வேறு ஏதாவது பளிச்சென்று சட்டை போட்டுக்கொள்ளலாமே’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் நான் எப்போதும் போட்டுக்கொண்டிருக்கும் சட்டை, ஜீன்ஸ். இதிலேயே இருக்கிறேன்’ என்றேன். பொறுமையாக காய்கறிகளை வெட்டி, சமையல் முழுதையும் முடிக்கும்வரை படங்கள் எடுத்துக்கொண்டார்.

பதிப்பிக்கும்போது கவனமாக ஃபோட்டோஷாப்பில் எடுத்துக்கொண்டுபோய் அனைத்து கிழக்கு பதிப்பக லோகோக்களையும் அழித்துவிட்டுத்தான் பதிப்பித்திருக்கிறார்கள். ஒரே ஒரு படத்தில் அதை சரியாக அழிக்கவில்லை.


சிரிப்பாக வந்தது. இந்த லோகோவை உங்களுடைய பத்திரிகையில் வருவதாலா, எனக்குப் பிரமாதமான விளம்பரம் வந்து, என் பதிப்பகப் புத்தகங்கள் விற்று நான் கோடி ரூபாய் சம்பாதித்துவிடப் போகிறேன்? இந்த சட்டை போட்டிருந்தால் அதைப் படமாகப் போட உங்கள் நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் அனுமதிக்காது என்றால் அதை என்னிடம் சொல்லியிருக்கலாமே? நானும் விரும்பியிருந்தால் வேறு சட்டை போட்டிருப்பேன், அல்லது உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். அல்லது நீங்களும் என் பிடிவாதத்தைப் பார்த்து, நீயும் வேண்டாம் உன் சமையலும் வேண்டாம் என்று சொல்லியிருப்பீர்கள். நான் பாட்டுக்கு ஏதோ புத்தகத்தைப் படித்துக்கொண்டு என் நேரத்தை நல்லபடியாகச் செலவழித்திருப்பேன். (சமையலும் செய்திருப்பேன். ஏனெனில் வீட்டில் அனைவரும் சாப்பிடவேண்டும் அல்லவா? ஆனால் ‘இங்கே முகத்தைக் காண்பி, அங்கே முகத்தைக் காண்பி’ என்று உங்களுக்காக போஸ் கொடுத்து நேரத்தை வீணடித்திருக்க மாட்டேன்.)

இனி ஒரு முடிவு எடுத்துவிட்டேன். என் பெயரை ‘பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்’ என்று போட்டால்தான் கட்டுரை எழுதித்தருவேன். இல்லாவிட்டால் தயவுசெய்து என்னை அணுகவேண்டாம். அதேபோல, தொலைக்காட்சிகளில் பேச அழைத்தால், கேப்ஷனில் ‘பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்’ என்று போடவேண்டும். இல்லாவிட்டால் என்னைக் கூப்பிடாதீர்கள். உலகில் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கிறார்கள்.

42 comments:

  1. அடக்கொடுமையே!

    ReplyDelete
  2. ‘பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி.

    உமக்கு எமது வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

    ReplyDelete
  3. சார், இது அநியாயமான கட்டுப்பாடு. இதனால் நான் தான் அதிகம் பாதிக்கப்படுவேன். தயவுசெய்து எனக்கு மட்டுமாவது கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் :-(

    ReplyDelete
  4. பத்ரி...நெத்தியடி ..

    ReplyDelete
  5. கிழக்கு என்றால் பத்ரி, பத்ரி என்றால் கிழக்கு என்று ஒரு பஞ்ச்லைன்னையும் சேர்த்தே எழுதலாமே:)

    ReplyDelete
  6. கிழக்கு பதிப்பகம் பத்ரிசேஷாத்ரி அவர்களுக்கு வணக்கம்

    நம்முடைய தமிழ் ஊடகங்களுக்கு நல்ல எண்ணங்கள் ! அவர்களை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  7. நல்ல பதிவு!.......நன்றி...பத்ரி! (இதெல்லாம் இப்ப வரதில்லையே!)

    You should put your foot down! நாம் கொஞ்சம் அதட்டினால், பயந்துவிடும் ஜென்மங்கள்!

    ReplyDelete
  8. 13டிசம்பர்2013
    திருப்பூர் 1

    அனுப்புதல்:
    ஜெ.விநாயகமூர்த்தி
    1/3 பூவாத்தாள் காம்பவுண்ட்
    கல்லம்பாளையம்
    திருப்பூர் 1
    அலைபேசி : 9894056810

    பெறுதல்:
    உயர்திரு பத்ரி சார் அவர்கள்
    சென்னை

    மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம். தினமலர், மாலைமலர் இதழ்களில் முழுநேர செய்தியாளராக பணியாற்றியுள்ளேன். தற்போது தினத்தந்தியிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் திருப்பூர் மாவட்டத்தில் பகுதி நேர செய்தியாளராக உள்ளேன். 13வருட அனுபவம் உள்ளது. இந்தியாவின் எப்பகுதியிலும் பணியாற்ற தயாராக உள்ளேன். குறும்படங்களை இயக்கி பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளேன்.
    எம்.ஏ.(தமிழ்), இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் டிப்ளமோ முடித்துள்ளேன். எம்.பில்.,(தமிழ்) பயின்று வருகிறேன்.
    களம்திரைத்தளம் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி திரைப்பம் குறித்த ரசனையை மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 30க்கும் மேற்பட்டோரை குறும்பட இயக்குநர்களாக உருவாக்கியுள்ளேன். இதெல்லாம் இலவசமாக செய்து கொண்டே இருக்கிறேன். அவ்வப்போது நான் பரிசுகளை பெறும்போது அதை மிகவும் எச்சரிக்கையாக (!) நாளிதழ்களில் வெளிவராமல் பார்த்துக்கொள்ளும் கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளது. விளம்பரமாகி மிகவும் புகழ் பெற்று விடுவோமாம்(!).. அதேபோல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகப்படம் குறும்படம் திரையிடல் நிகழ்ச்சிகளை வேறு யாராவது செய்தால் அதை படத்தோடு பெரிய அளவில் கட்டுரையாக வெளியிடும் இந்த ஊடகங்கள், அதே துறையில் பணியாற்றும் ஒருவனை அங்கீகாரம் செய்ய மறுப்பது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. உங்கள் கட்டுரையை படித்தவுடன் உங்களிடம் இதை பதிவு செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆனால் இவர்கள் இப்படியெல்லாம் செய்யும்போது ஒருநாள் நான் இவர்களால் தடுக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இவர்களே நாளை என்னை தேடி வந்து பேட்டி எடுக்கும் அளவுக்கு உயர்ந்து காட்ட வேண்டும் என்று மனதிற்குள் உறுதி மொழி எடுத்துக்கொள்வேன்.. உங்களுக்கு வாய்ப்பிருந்தால் பதில் எழுதுங்கள். எனக்கு ஊக்கமாகவும், என் செயல்பாடுகளுக்கு ஆக்கமாகவும் இருக்கும்.
    என் தன் விபர குறிப்பை இத்துடன் இணைத்துள்ளேன். வாய்ப்பிருப்பின் பார்க்கவும்.
    நன்றி,
    தங்கள் உண்மையுள்ள
    ஜெ.விநாயகமூர்த்தி
    9894056810

    ReplyDelete
  9. உங்க பேரையே கெஸட்டில் 'கிழக்கு பதிப்பகம் பத்ரி' என்று மாற்றிவிடுங்கள்...என்னதான் பண்ணிவிட முடியும் அதுக்கு மேல...

    ReplyDelete
  10. சரியான அடி கொடுத்திருக்கிறீர்கள். இந்த மாதிரி அல்பத்தனத்தை அம்பலபடுத்த உங்கள் மாதிரி யாராவது எழுதினால் தான் உண்டு.பெரிய பத்திரிகைகள் கூட இதைச் செய்கின்றன. டிவிக்காரர்களும் தான்
    இதற்கு நேர்மாறாக நடப்பதும் உண்டு. ராமசாமி என்று போட்டு விட்டு தமிழக மாலை நேர சிந்தனையாளர் சங்கத் தலைவர் என்றோ கிருஷ்ண்சாமி செயலர் உயர் நோக்கு சிந்தனையாளர் சங்கத் தலைவ்ர் என்றோ விலாவாரியாகப் போடுவார்கள்.
    இந்த ஊடகங்களின் போக்கே அலாதி

    ReplyDelete
  11. "தமிழ் வலைப்பதிவுகளின் இன்றைய நிலை" கட்டுரையாளராகிய நீங்கள் தமிழ் மணம் என்ற பெயர் வராமல் கட்டுரை எழுதியதெல்லாம் மறந்துவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கு? எப்போது? சுட்டி தரமுடியுமா?

      Delete
    2. என்ன கொடுமை சரவணா ?

      Delete
    3. நன்றி. படித்துவிட்டேன். அந்தக் கட்டுரையில் நான் எந்தத் தளத்தையுமே குறிப்பிடவில்லை. அந்தக் கட்டுரையின் நோக்கத்தில் யாரையும் சுட்டவேண்டியதாக நான் கருதவில்லை. வேறு சிலரைச் சொல்லி, தமிழ்மணத்தை மறைக்கவேண்டியிருந்தால் உங்கள் குற்றச்சாட்டு நியாயமானதாக இருந்திருக்கும்.

      Delete
    4. 2003 இல் விரல்விட்டு எண்ணக்கூடிய வலைப்பதிவர்களாக இருந்து, 2004 இல் தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணிக்கூடியமைக்குக் காரணம் முதலாவது தமிழ் வலைப்பதிவுத் திரட்டியான தமிழ்மணம்தான். இதனை 2003 முதல் வலைப்பதிவுலகில் உள்ளவர்கள் பலரும் மனதார அறிவர். வலைப்பதிவு எவ்வாறு தொடங்குவது என்பது தொடங்கி அத்தனை விடயங்களும் தமிழ்மணம் ஊடாகவே புதியவர்களுக்குக் கிடைத்தன. அனைத்துச் சாமானிய வலைப்பதிவர்கள் பலரும் தயக்கமின்றி மற்றைய வலைப்பதிவாளர்களுடன் தமிழ்மணமூடாக ஒன்றுகூடிய காரணமே உண்மையான வளர்ச்சிக்கு காரணம்.

      Delete
    5. > வலைப்பதிவு எவ்வாறு தொடங்குவது என்பது தொடங்கி அத்தனை விடயங்களும் தமிழ்மணம் ஊடாகவே புதியவர்களுக்குக் கிடைத்தன.

      இது உங்கள் எண்ணமாக இருக்கலாம். ஆனால் நான் (அப்போதைய பொழுதுக்கு புதியவன்) தமிழ்ப் பதிவர்கள் பலரையும் அறிந்து கொண்டது blogroll என ஒவ்வொருவர் பிறருக்குத் தரும் சுட்டிகளின் வழியாகவும், கூகிள் ரீடரில் பகிரப்படும் சுட்டிகளின் வாயிலாகவும் மட்டுமே.

      தமிழ்மணத்தின் வழியாக நானோ எனது வயதொத்த என் நண்பர்களோ யாருடைய பதிவைப் பற்றியும் அறியவில்லை, யாரும் என் வட்டத்தில் தமிழ்மணம் மூலம் பதிவு உருவாக்க கற்றுக்கொள்ளவும் இல்லை.

      Delete
    6. சங்கர்,

      உங்கள் நண்பர்களின் Blog Profile / வலைப்பதிவு இணைய முகவரிகள், நீங்கள் எல்லோரும் அப்போது எழுதிய பதிவுகள் போன்ற விபரங்களைத் தந்து தொடருங்கள்.

      Delete
  12. வாழ்க பத்ரியின் நேர்மை....அடுத்தவனின் அறிவார்ந்த உழைப்பு வேண்டும்..ஆனால் அவனுக்கோ அவனின் நிறுவனத்திற்கோ சிறிதளவோ கூட ‘பெயர்’ வந்துவிடக்கூடாது...இந்த ஊடக வளமையில் அனைவரும் ஒன்றுதான்.....சாதாரண கிராமத்து விவசாயியான நான் இதை புரிந்து பல காலம் ஆகிவிட்டது....அத்துடன் திறமைசாலிகளை வளரவிடுவதில்லை.அடிவருடிகளையும்...காக்கா கூட்டமும்தான் மேலே வருகிறது

    ReplyDelete
  13. அதற்கு தான் தேசிகன் மாதிரி பேர் மாத்திகனும் !!! @desikan Narayanan சுஜாதா தேசிகன்

    ReplyDelete
  14. பத்ரியின் அறச்சீற்றம் நியாயமானதே! இன்னும் கொஞ்சம் கூட போட்டு சாத்தி இருக்கலாம், தப்பே இல்லை!

    ReplyDelete
  15. பொன்.முத்துக்குமார்Fri Dec 13, 10:43:00 PM GMT+5:30

    பத்ரி, மிகச்சரியான முடிவு, காலம் தாழ்த்தி எடுத்திருந்தாலும் :)

    ReplyDelete
  16. I once requested for coverage in THE HINDU, DINAMALAR, DINATHANTHI, DINAKARAN about Tamil books and growing online store selling it and wanted to include my site as well.

    they never wrote anything about tamil books. even the tamil dailies didnt favour.

    இவர்கள் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டுவிட்டு என் வேலையை பார்த்துகொள்கிறேன்.

    இவர்கள் தான் இப்படி என்றால், yourstory.in, nextbigwhat.com கண்டுக்கவே மாட்ராங்க...

    But all these people publish news about amazon, flipkart etc.

    ReplyDelete
  17. அற்புதம் பத்ரி. அல்பத்தனத்தின் உச்சம் தமிழ் ஊடகங்களின் நிலைப்பாடுகள். அதை அருமையாக கண்டித்திருக்கிறீர்கள். கோபிநாத் என்ன சொல்லுகிறார்?

    ReplyDelete
  18. They spend on ads, have a PR budget, you don't have one. Simple.

    ReplyDelete
  19. With respect to News media, more particularly Tamil News media, I see it as a way they themselves can protect their biases.

    I never knew Kumeresan of 'Theekathir' as a leftie, because PT always titled him 'Social activist'. It doesn't really take much brains to detect he is leftie, but still our media tries to subtle it down because there are people who will probably not be able to realize he is a leftie.

    Media's main aim is to form public opinion as per their wish and not really caring for attribution, which is why most news are published according to 'sources'. The original aim of protecting the source is only valid when there is a valid reason to do so. But its become defacto now.

    2 Questions.

    1. Do you get paid for TV appearances. If so they have the right to ask you not to promote something else. This is akin to dress code at workplaces. Would a reliance workplace admit someone wearing Aam admi TShirt?

    2. Do you spend on advertisements on these media outlets? I am assuming that if you spend, they will start reciprocating with giving you 'free' publicity on your appearances because that's like a discount on ad sales. This is why all directors / producers are always introduced / interviewed along with banner name.

    ReplyDelete
  20. you should give cover to write about your website. That is the secret . :-D

    ReplyDelete
  21. almost beginning to sound like Charu Nivedita!! Either your are open source/free software stuff or you decline your offers where you get "non quantitative intangible benefits "

    ReplyDelete
  22. இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நீங்கள் வெறும் பதிப்பாளர் மட்டும்தான்

    ReplyDelete
  23. " தங்களால் கிரிக்கின்ஃபோவுக்கு எந்த ஆதாயமும் “இலவசமாக” போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான் அந்தக் காரணம். கிரிக்கின்ஃபோவிலிருந்து வேண்டிய எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். அது பிரச்னை இல்லை. ஆனால் கிரிக்கின்ஃபோவுக்கு எந்த இலவச விளம்பரத்தையும் கொடுத்துவிடக்கூடாது."

    செம! :-) நான் நிறைய முறை யோசித்து இருக்கிறேன். நீங்கள் கூறுவது போல பல ஊடகங்கள் Credit தருவதில்லை. தன்னை விட பெரிய ஆள் என்றால் மட்டுமே Credit கொடுப்பார்கள்.

    துவக்கத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன்.. தற்போது எங்கு இருந்து எதை எடுத்தாலும் Credit கொடுத்து விடுகிறேன். Google போன்ற ரொம்ப பிரபல தளம் என்றால் Google என்றும் மற்ற தளங்களுக்கு முழு முகவரியையும் கொடுத்து விடுகிறேன்.

    ReplyDelete
  24. பத்ரியின் கட்டுரை சொல்லவரும் கருத்தில் எனக்கு ஒப்புதலே. ஆனால் outrageக்கு எடுத்துக்கொண்ட உதாரணம் சரியல்ல. கிழக்கு டீஷர்ட்க்கு பதிலாக, பத்ரி ஒரு அணில் சேமியா டீஷர்டோ, பாபுலர் அப்பளம் டீஷர்டோ, நிஜாம் பாக்கு டீஷர்டோ அணிகிறார் என வைத்துக்கொள்வோம். அது Odd-ஆக இருக்காது..குங்குமம் தோழி கட்டுரையின் நோக்கம் வேறொரு துறையை சார்ந்தவர் சமையலிலும் கலக்குவது என்பது போல் தான் தெரிகிறது. அதில் ஏன் கிழக்கு டீஷர்ட் வரவேண்டும்? ஒரு குட்டிஸ் சுட்டீஸ் டைப் கட்டுரை வருகிறது என வைத்துக்கொள்வோம். என் இஷ்டம், என் குழந்தையை யுனிஃபார்மில் அனுப்புவேன் என சொல்ல முடியுமா?

    ஃபோரம் யாருதோ, இடம் யாருதோ, அந்த இடத்துக்கு நாம் ஒத்துத்தான் போகவேண்டும், வேறு வழியில்லை.

    ஆனால், அதே சமயம், கிழக்கை மறைத்து ‘சமூக ஆர்வலர்’ டைப் பஜனைகளை நான் எதிர்க்கிறேன். இந்த குங்குமம் தோழி சரியான உ.தா இல்லை, அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ எல்லாம் தெரிஞ்சா நாட்டாமை சிறீராம் அவர்களே .... உங்க நாயம் புல்லரிக்க வெக்குது .... பத்ரி ஒண்ணும் எனக்கு சான்ஸ் குடுங்கன்னு அவங்க கிட்ட கேட்டுப் போவல .... அந்தப் பத்திரிகைக் காரங்க .... அவங்க பக்கத்தை இலவசமா ரொப்பிக்க கொஞ்சமேனும் புகழுடைய பத்ரியை உபயோகப்படுத்திக்கறாங்க .... அவுங்க இவரை விலையில்லாமல் உபயோகிக்கும்போது, எனது நிறுவன லோகோவை டீசர்ட்டில் போட்டுக்கொள்வேன் இன்று இவர் கூறுவது மட்டும் நாயமில்லையா ???? மேலும் சமைக்கும்போது டீசர்ட்டு போடுவதில் என்ன தப்பு ?? இவரு என்ன புராண நாடகத்துல ராஜா வேசமா கட்டுறாரு ??? அப்பிடி டிரெஸ் கோடு முக்கியமுன்னு அந்தப் பத்திரிகை நெனச்சிச்சினா... சாரி ... உங்க பேட்டி வேணாமுன்னு சொல்லிட வேண்டியதுதான ????? மீடியாவ வுட நாட்டுல இந்த எல்லாம் தெரிஞ்ச நாட்டாமைங்க தொல்ல தாங்கலடா !!

      Delete
  25. Hi Badri, Ovvoru pathirigai alladhu tholaikaatchikkum sila standard vidhimuraigal undu enbadhu thaangal ariyadhadha enna? ellammae oru kattathil "Aanaikku airram endral kudhiraikku kurram" kadhai dhan. Sambandhapatta thozhilalalargal,namakku enn vambu ena pala samayangalil usharaga seyalpattu viduvargal. reporter marandhalum editorial irukkiradhu...layout dept irukkiradhu...ella idathaiyum meeri nadandhal adhu ungal luckudhan... andhandha pathirigaiyin dharala alladhu restricted policydhan karanam. enakennavo idharagkaga neengal ivvalavu kadumaiyaga react pannuvadhu sariyillai ena thondrugiradhu. padhipaalar endru pottalum social activist endru pottalum, Badhri seshadhri endra peyar kaetta mathirathileya makkal adhai Kizhakkudan connect seiya maatargala enna? so, i think u need not not be so strict about these conditions. it is still my personal opinion only.

    ReplyDelete
  26. என் தாழ்மையான கருத்து -

    'குங்குமம் தோழி'யிலிருந்து அந்த நிகழ்ச்சிக்காக
    பத்ரி க்கு 'காசு' எதாவது கொடுத்தார்களா
    இல்லையா என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது
    இந்த விஷயத்தின் - நியாயமும் அநியாயமும்..!

    அவர்கள் 'காசு' கொடுத்திருந்தால் -
    அவர்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது.

    'காசு' எதுவும் கொடுக்கவில்லையென்றால் -
    பத்ரி கூறுவதில் நியாயம் இருக்கிறது.

    சரி தானே பத்ரி சார் ?

    (அது சரி நியாயம் யார் பக்கம் -அதையும்
    கூறி விடுங்களேன் - சஸ்பென்ஸ் எதற்கு ?)

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்
    (என் வலைத்தளத்தின் பெயரைப் போடவில்லை ..!)

    ReplyDelete
  27. Dear Badri sir,
    i cant accept ur decision whole heartedly though it is bold. i think no one can fit you into such a narrow label (though kizhakku has no match) since your AMBIT is much much wider.

    ReplyDelete
  28. நானெல்லாம் கிழக்கு பத்ரி, காலச்சுவடு கண்ணன், தமிழினி வசந்தகுமார், விஜயா வேலாயுதம் என்றுதான் பேசியும் எழுதியும் வருகிறேன். ஸ்டாலுக்கு வரும் சமயம் கூடுதலாக 5% கழிவு தர முடியுமாவென யோசிக்கவும் :-)

    ஜோக்ஸ் அபார்ட், இந்த ஃபோட்டா ஷாப்பில் லோகோ அழித்தது ரொம்ப சில்லித்தனமாகவும், சில்லறைத்தனமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  29. நீயா நானா விருது வழங்கும் விழாவில் கிழக்கு பதிப்பகம் பத்ரி என்று குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான முன்னெடுப்பு. வாழ்த்துகள் !

    ReplyDelete