நண்பர்களே,
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்து உரையாட, ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை 31-5-2014 அன்று கிழக்கு பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது குறித்து என் பதிவில் எழுதியிருந்தேன். மொத்தம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்வதாக முதலில் முடிவெடுத்திருந்தோம். இப்போது அதனைச் சற்றே நீட்டித்து 60 என்று ஆக்கியுள்ளோம். இதற்கும்மேல் போனால் கூட்டத்தை நிர்வகிப்பது கடினம் என்பதால்.
என் பதிவை அடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து எக்கச்சக்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. ஆனால் மேலே சொன்னதுபோல 60 பேரை மட்டுமே (எங்கள் அலுவலகத்தின் 5 பேரையும் சேர்த்து) அனுமதிக்க முடியும் என்பதால் அவர்களுக்கு மட்டும் தனி மடல் அனுப்புகிறோம். நிகழ்ச்சியின் அனைத்து அமர்வுகளும் கலந்துரையாடலும் ஒளிப்பதிவு செய்யப்படும்; இணையத்தில் சேர்க்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளால் பயன் இருப்பதுபோலத் தெரிந்தால், மீண்டும், சற்றே விரிவாக, 150 பேர் வரை கலந்துகொள்ளக்கூடியதாகக்கூட ஏற்பாடு செய்யலாம்.
நன்றி.

இணையத்தில் ஏறப்படும் ஒளிக்கோப்பிற்குக் காத்திருக்கிறேன்.
ReplyDelete