Monday, October 06, 2014

ராஜபாட்டை - தந்தி டிவி - நேர்காணல்கள்

நான் தந்தி தொலைக்காட்சியில் வாராந்திர நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறேன். இதுவரை ஐந்து பேருடன் பேசியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் யூட்யூபில் கிடைக்கின்றன.

அனைத்தையும் தொகுத்து என் வலைப்பக்கம் ஒன்றில் வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

சுப்பிரமணியன் சுவாமி, சத்குரு ஜக்கி வாசுதேவ், சரத்குமார், க்ரேஸி மோகன், விக்கு விநாயக்ராம் ஆகியோர் முதல் ஐந்து வாரத்தின் விருந்தினர்கள்.

நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை செல்லும். கடந்த வார நிகழ்ச்சிகள்  சனி மதியம் மறு ஒளிபரப்பாகும்.

10 comments:

 1. திரு பத்ரி
  இவற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். கிரேஸி மோகன் அவர்களுடனான நிகழ்ச்சி நகைச்சுவையுடன் மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்திருந்தது,
  வித்வான் விக்கு விநாயகராமுடன் நடைபெற்ற நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. பேட்டி காணப்பட்ட விதமானது அவருடைய திறன், ஆளுமை என பல அம்சங்களையும் வெளிக் கொணர்வதாக அமைந்தது. அவருடைய எளிமை மனதைத் தொட்டது. பானை உடைந்த சமாச்சாரம் போன்றவற்றை சுவைபட எடுத்துக் கூறினார்.
  கடம் -- அதாவது பானை தான் உலகின் மிக மூத்த வாத்தியமாக இருக்க வேண்டும்.
  அந்த எளிய, பழம் பெரும் வாத்தியத்தைக் கொண்டு உலக நாடுகளை வியக்க வைத்த வித்வான் வினாயகராம் அவர்களின் சாதனை மெச்சத்தக்கது.
  அவரைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சன் டிவிக்கும் அதனை நடத்திய தங்களுக்கும் பாராட்டுகள்.
  ராமதுரை

  ReplyDelete
 2. uncle, congrats on becoming the latest JOKER on low-class tm tv.

  u r totally UNFIT FOR TV.

  U CANNOT TALK, WALK, SIT, OR DRESS PROPERLY FOR TV.

  SO STOP THIS NAUTANKI.

  AND STOP MOONLIGHTING AS A JOURNALIST ON TV.

  U R TOTALLY A FLOP SHOW AS ALWAYS ON TV.

  ReplyDelete
 3. மேலே உள்ளதில் சன் டிவி என்பதை தந்தி டிவி என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 4. Just started watching interview with S.Swamy. Very interesting. Your interview helped to see Mr.Swamy from a different perspective than the one portrayed by local media. Questions were very good and it covered various disiciplines and subjects. As for as "Youth" is concerned there appeared to be a mis-understanding. Unfortunately there were no questions for youths who seek direction on "What should I do now? What kind of thought process should I develop? How do I implement them locally? etc". Overall, very satisfactory. Well done.

  ReplyDelete
 5. விக்கு வினாயகராமின் நிகழ்ச்சி மட்டுமே பார்த்தேன், தாங்கள் சற்று தயக்கத்துடன் கேள்விகள் கேட்பது போல் உள்ளது, இன்னும் தயக்கம் ஏதுமின்றி சரளமாக பேசினால் சிறப்பாக இருக்கும். மற்றபடி சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 6. பேட்டி காணப்படுபவர் எது சொன்னாலும் அப்படியே கேட்டுக்கொள்கிறீர்கள்; மாற்றுத்தரப்பு கருத்து பற்றி அவர்களைக் கேட்பதில்லை. உதாரணமாக சரத்குமார், தான் கட்சி ஆரம்பித்திருப்பதன் நோக்கம் அரசியல் என்றாலே கேவலமாக நினைக்கும் இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வருவதே என்றார். இதை ஒரு கேஜரிவால் சொல்லியிருந்தால் நம்புகிற மாதிரி இருந்திருக்கும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சட்டசபையில் அவர்கள் தலைவியின் புகழ்பாடிக்கொண்டு இந்த நோக்கத்தை எப்படி நிறைவேற்ற முடியும் என்று புரியவில்லை. இது பற்றி நீங்கள் எதுவும் கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் கட்சி ஒரு சாதிக்கட்சியா என்றுகூடக் கேட்டிருக்கலாம். சுப்பிரமணியன்சுவாமி பேட்டியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சர்ச்சைக்குரிய அவரது கருத்துகள் (முஸ்லிம்கள் தங்கள் இந்து மரபை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஓட்டுரிமை தரக்கூடாது என்றது முதல், நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார் சொல்லப்பட்டதை 2ஜி வழக்கு தொடர்பான சதி (அபாண்டம்!) என்றது வரை, ஜெயலலிதாமீது வழக்கு தொடர்ந்துவிட்டு சில மாதங்களில் கூட்டணி வைத்தது, மதுரையில் இட்லிக் கடை கோர்ட் சீலை உடைத்து உள்ளே புகுந்தது வரை ஏராளமாக உள்ளன.)

  சேகர் குப்தாவின் வாக் த டாக் போல மென்மையான பேட்டிகள் என்று எடுத்துக்கொண்டாலுமே சப்பென்று இருப்பது போலவே தோன்றுகின்றன. நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஒருவர் இருக்கலாம்; இதில் அவரது தவறும் இருக்கிறது.

  சரவணன்

  ReplyDelete
 7. Interesting so far. Watched crazy and vik sir episodes. Some time i thought you and guest walking for the sake of walking. Please break that. You can seat with them in those beautiful locations and chat , then again you can continue walking.

  ReplyDelete
 8. கண்டிப்பாக உங்களுக்கு coat, suit ஆகவில்லை. coat அணிவதை நிறுத்தவும். கேள்வியை பளிச் பளிச் என்று நேரடியாகவும், சுருக்கமாகவும் கேட்கவும். பதில் சொல்பவர் வேண்டுமானால், சுற்றி வளைத்து சொல்லலாம். ஆங், பேட்டிகள் நன்றாக இருக்கின்றன! இன்னும் கொஞ்சம் improve செய்யலாம் :)

  ReplyDelete
 9. இதுவரை வந்த உங்களுடைய ராஜபார்ட்டைகளில் இன்று இடம்பெற்ற ட்ராபிக் ராமசாமி நிகழ்ச்சி மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி

  ReplyDelete
 10. அன்புள்ள திரு பத்ரி

  வணக்கம்

  இன்றைய ராஜபாட்டை (கங்கை அமரன்) நிகழ்ச்சியில் ஒரு தகவல் பிழை உள்ளது .

  கங்கை அமரன் "அந்தப்புரத்தில் ஒரு மகராணி " பாடலுக்கான வரிகள் முன்பே எழுதியது எனவும் பின்பு தீபம் படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார். இந்தப் பாடலை எழுதியது பாடலாசிரியர் புலமைப்பித்தன் . தீபம் திரைப்படம் ஜனவரி 1977ல் வெளியானது .

  இதே உரையாடலில் கங்கை அமரன் முதன் முதலில் 16 வயதினிலே (செப்டம்பர் 1977 வெளியானது) படத்தில் செந்தூரப்பூவே என்ற பாடலை எழுதி, பாரதிராஜா அறிமுகப் படுத்தினார் என்றும் கூறியுள்ளார் .

  கங்கை அமரன் பாடல் எழுதிய முதல் படம் 16 வயதினிலே - இது சரி .
  அந்தப் புரத்தில் ஒரு மகராணி - இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன் அல்ல .

  ReplyDelete