Tuesday, November 04, 2014

மதிப்புரை.காம்

நாங்கள் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் ஒரு “சமூக” வலைச் சேவை மதிப்புரை.காம். தமிழ்ப் புத்தகங்களின் மதிப்புரைகளுக்காக என்று தொடங்கப்பட்டிருக்கிறது. இது முழுவதும் வலைஞர்கள் பங்குபெற்று உருவாக்கும் தளம். சில புத்தகங்களை நாங்கள் வாசகர்களுக்குத் தரத் தயாராக உள்ளோம். அவை கிழக்கு பதிப்பகம் பதிப்பித்திருக்கும் புத்தகங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு மதிப்புரை வேண்டி வரும் புத்தகங்களும் அதில் அடங்கும். அவற்றின் பட்டியலை தளத்தில் சேர்க்கிறோம். அந்தப் புத்தகங்களில் எவையேனும் உங்களைக் கவர்ந்தால் அவற்றை வேண்டி நீங்கள் கோரலாம். எங்கள் செலவில் புத்தகத்தை இலவசமாக உங்கள் முகவரிக்கு அனுப்பிவைப்போம்.


நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். அதன் மதிப்புரையைக் குறிப்பிட்ட சில தினங்களுக்குள் எங்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். அதனை மதிப்புரை.காம் இணையத்தளத்தில் சேர்த்துவிடுவோம். புத்தகத்தை நீங்கள் வாழ்த்தலாம், திட்டலாம், என்னவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் குறைந்தபட்ச நாகரிகத்தை மட்டும் வேண்டுகிறோம். Libel, defamation ஆகியவை தவிர்த்து கருத்துகளை மட்டும் வெளியிடுகிறோம். கொஞ்சம் மொழியைச் சரிபடுத்தும் எடிட்டிங் உண்டு. அவ்வளவுதான்.

இதனை ஏன் ஆரம்பித்தோம்?

(1) பொதுவாக தமிழ் தினசரி, வார, மாத இதழ்களில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு. சில இலக்கியச் சிற்றிதழ்கள் தங்களுக்கு விருப்பமான சிலர் எழுதும் புத்தகங்களைத் தவிரப் பிற புத்தகங்களை சீண்டக்கூட மாட்டார்கள். தினசரிகள் பத்து வரிகளுக்குமேல் புத்தக மதிப்புரைகள் எழுதுவதில்லை. இன்னும் பலர் வரப்பெற்றோம் என்று பட்டியல் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

ஆனால் இணையம் கொடுத்திருக்கும் சுதந்தரமோ ஏராளம். விஸ்தாரமாக ஆயிரம் சொற்களில் நீங்கள் ரசித்துப் படித்த ஒரு புத்தகத்துக்குக் கறாராக அல்லது தாராளமாக ஒரு மதிப்புரையை எழுதிவிடலாம். அதனைப் படிக்கவும், படித்து முடித்தவுடன் அந்தப் புத்தகத்தை வாங்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள்.

(2) பல பதிப்பகங்கள் (எங்களையும் சேர்த்து) இதழ்களுக்கு தலா இரண்டிரண்டு பிரதிகள் அனுப்பி நொந்துபோயிருக்கிறோம். பெரும்பாலானவர்கள் நாங்கள் அனுப்பும் புத்தகங்களைக் கண்டுகொள்வதுகூடக் கிடையாது. அதில் மிக நல்ல புத்தகங்கள் இருந்தால் அவற்றை அள்ளி எடுத்துக்கொண்டு போக ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். இரண்டு வார்த்தை எழுதத்தான் ஆள் கிடையாது. அதற்கு இந்தத் தளம் பெரியதொரு மாற்றாக இருக்கும்.

(3) மதிப்புரைக்கான புத்தகங்களை எழுத்தாளரோ அல்லது பதிப்பாளரோ, யார் வேண்டுமானாலும் அனுப்பலாம். நாங்கள் ஒரு விஷயத்துக்கு கேரண்டி. நீங்கள் எங்களுக்கு அனுப்பிவைக்கும் புத்தகங்களின் பட்டியலை ஆன்லைனில் போட்டுவிடுவோம். அதை இந்தியாவுக்குள் யார் கேட்டாலும் எங்கள் செலவில் அஞ்சல் செய்துவிடுவோம். மதிப்புரை வந்ததும் உடனே அவற்றைப் பதிப்பித்தும் விடுவோம்.

(4) நீங்களாகப் படித்த புத்தகங்களின் மதிப்புரைகளையும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம். நாங்கள் தரும் புத்தகங்களுக்காக நீங்கள் காத்திருக்கவேண்டியதில்லை.

மதிப்புரைகள் தமிழ்ப் புத்தகங்களுக்கு மட்டுமே. மதிப்புரைகள் தமிழில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

இந்தத் தளத்தின்மூலம் உங்கள் புத்தகங்கள் சில நூறு அல்லது சில ஆயிரம் பிரதிகள் அதிகம் விற்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

22 comments:

  1. good proposal to give BOOK review by the learned and interested Tamil reder will always give abalanced write up "MADIPURAI"
    I would to participate in this மதிப்புரை.காம்.
    MV seetaraman Visakhapatnam

    ReplyDelete
  2. நலங்கிள்ளிTue Nov 04, 02:02:00 PM GMT+5:30

    நல்ல முயற்சி. கைத்தட்டி வரவேற்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல யோஜனை. பதிக்கப்படும் புத்தகங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழ் பத்திரிக்கைகள், காலேஜ், யூனிவர்சிடி நடத்தும் சஞ்சிகைகள் இவற்றின் பெரிய ஸ்கேண்டல். அது ஒரு அறிவுப்பசியின் பஞ்சத்தை காட்டுகிரது

    விஜயராகவன்

    ReplyDelete
  4. பாராட்டிற்குரிய முயற்சி ஐயா
    வரவேற்கிறேன்

    ReplyDelete
  5. No need to return the books to you ? Some courier services like bluedart take return items also. You can use that service to return the books after reading review.

    There is a risk that whoever may purchase may actually just get all the books that (s)he wants via this service and never buy the book.

    ReplyDelete
    Replies
    1. No need to return the books back to us. Keep them with you or pass them on to someone else.

      I do not think there is a big risk in a person not buying a book and simply depending on this site for getting their fix of books. We reserve the right to not give a copy to someone else. For example, we get two copies of a title and five people have asked for it. We cna only give the copies to two of them and not to the others. Likewise, we will make internal selection and send the copies to only those people who do a good job of reviewing and not to people who scribble a few words recklessly.

      Delete
  6. ராமதுரை
    இது மிகவும் வரவேற்க வேண்டிய ஏற்பாடு.தமிழில் நல்ல புத்தகங்கள் வந்தால் அவற்றை வாங்க நிறைய வாசகர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் இப்படியான புத்தகம் வந்துள்ளது என்பது தெரியாமலேயே போனால் அது எழுத்தாளர்கள் பதிப்பகங்கள், ஆர்வம் கொண்ட வாசகர்கள் ஆகிய அனைவருக்குமே இழப்பு. தாங்கள் அறிமுகப்படுத்தும் ஏற்பாட்டின் மூலம் நல்ல புத்தகங்கள் பற்றி வாச்கர்கள் அறிந்து கொள்ள வழி ஏற்படும்

    ReplyDelete
  7. நல்ல துவக்கம் ... முனைப்புள்ள பதிவர்கள் ஒத்துழைப்போம்.

    ReplyDelete
  8. நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். மதிப்புரை தளம் எல்லோருக்கும் நன்கு பயன்படும்...

    ReplyDelete
  9. Great Job in launching this site! Hopefully this becomes the rottentomatoes for the tamil books. If time permits, please add two new features, collation of reviews and a 5-star rating system. For e.g., "திரைக்கதைகள் இங்கே பழுது நீக்கித் தரப்படும்" has garnered three reviews, and if they are available in a single location (now it is not difficult, there are only a few reviews) that will be great. Thanks -Shankar Bharadwaj

    ReplyDelete
    Replies
    1. Good suggestions. We are using Wordpress for this. So whatever is allowed within Wordpress we will explore and do them. Beyond that, if it is necessitated, we will have to move to a different platform that will be more flexible.

      Delete
  10. Badri-san,

    Can people who live outside India participate?

    ReplyDelete
    Replies
    1. RV, sorry:-) It is all about the expenses we can handle. Postal expenses to other countries is prohibitively expensive and we are doing it out of our pocket.

      Delete
    2. ok, smart ass question: would you extend this process of crowdsourcing reviews to ebooks as well :) that way, people outside india can also participate.

      Delete
    3. Yes, certainly. We will enable this very soon.

      Delete
  11. நல்ல முயற்சி !

    வில்லவன்கோதை

    ReplyDelete
  12. நல்ல முயற்சி.

    ReplyDelete
  13. Hey is this India? What a refreshing idea and scheme!.Congrats Mr.Badri.This is a milestone event.Good Luck!

    ReplyDelete
  14. அருமையான முயற்சி.
    பெரும்பாலும் புத்தக மதிப்புரைகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்படும் விசனத்திற்கு அளவிருக்காது.
    இந்த ஏற்பாடு நல்ல மதிப்புரைகள் பரவலான தளத்தில் கிடைப்பதை உறுதி செய்யும்.
    என்எச்எம்' பக்கத்தில் அல்லது பதிப்பகத்தின் விற்பனைப் பக்கத்தில் அந்தந்த (சரியான) மதிப்புரைகளை வெளியிடுவதும் விற்பனை நோக்கில் பயன்தரும்.

    ReplyDelete
  15. நல்ல முயற்சி. படிக்க ஒரு வார காலம் அவகாசம் வேண்டும்

    ReplyDelete
  16. படிக்கத் தூண்டும் பாதை

    ReplyDelete