Friday, January 12, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 3

12/1/2007.

* அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று வந்திருந்தார். இத்துடன் அமைச்சர் குழாம் விழா நாயகர்களாக வருவது முடிவுற்றது. ஏதாவது அறிவிப்புகள் இருந்தனவா என்று கவனிக்கவில்லை.

* இன்றைய பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன் 'உலகைக் குலுக்கிய புத்தகங்கள்' என்ற தலைப்பில் பேசினார். இவர் ஈரோடு புத்தகக் கண்காட்சியை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இன்று புதிதாக மூன்று மொபைல் கழிப்பறைகள் முளைத்திருந்தன. ஆனால்... மிகக் கொடுமையாக அசிங்கம் செய்திருந்தனர் மக்கள். ஒருவேளை மக்களைச் சொல்லிக் குற்றமில்லை என்று நினைக்கிறேன். தண்ணீர் இல்லையோ என்னவோ... ஃப்ளஷ் செய்யப்படாது மோசமான நிலையில் இருந்தன.

* எழுத்தாளர் சா.கந்தசாமி தினசரி வருகிறார். அசோகமித்திரன் இன்று வந்திருந்தார். மதன் இன்று வந்திருந்தார். வேறு பல பிரபலங்களும் வந்திருக்கலாம். என் கண்ணில் படவில்லை.

Smile of the day:


மேலே இருப்பது ஆதி 'த' சாம்ராஜ் என்னும் ஒரு சாமியார்(!) குழு போட்டிருக்கும் ஸ்டால். நான்கைந்து வெள்ளைக்காரிகளை வைத்துக்கொண்டு என்ன விற்கிறார்கள் என்று பார்த்தேன். அவர்களது இணையத்தளத்தைப் படித்தால் உங்களுக்கு வரும் சிரிப்புதான் இன்றைய ஸ்மைல் ஆஃப் தி டே.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய கடவுளாவது / அவதாரமாவது கண்ணில் தென்படுகிறார். இவர்களுக்கென்றே தனியாக ஒரு கண்காட்சி போட்டுவிடலாம்.

Picture of the day:


விகடன் நிறுவனமும் பிர்லா கோளரங்கமும் இணைந்து நிறுவியிருக்கும் 'அறிவியல் விளையாட்டு அரங்கம்'. குழந்தைகளை அவசியம் அழைத்துச் செல்லவேண்டிய இடம்.

7 comments:

  1. கூடவே.. celebrity of the day வையும் சேர்த்துக்கங்க.

    மதியம் கூட்டம் அதிகமாக இருக்கிறதா? ஆர்ட்ஸ் காலேஜ் வெளியே ப்ளாட்பாரத்தில் பழைய புத்தகக் கடைகள் போல இங்கும் போட்டிருக்கிறார்களா?

    ReplyDelete
  2. ம். நிறைய பேர் இரண்டு பக்கமும் போட்டிருந்தாங்க. ஆனால் நேத்து போலீஸ் அதுல கொஞ்சம் பேரைத் துரத்திவிட்டதா கேள்விப்பட்டேன்.

    புத்தகக் காட்சியோட முக்கியமான அம்சமே தெருவோர பிளாட்பார பழைய புத்தகக் கடைகள்தான். அவை தொடரவேண்டும்.

    ReplyDelete
  3. //
    மேலே இருப்பது ஆதி 'த' சாம்ராஜ் என்னும் ஒரு சாமியார்(!) குழு போட்டிருக்கும் ஸ்டால். நான்கைந்து வெள்ளைக்காரிகளை வைத்துக்கொண்டு என்ன விற்கிறார்கள் என்று பார்த்தேன். அவர்களது இணையத்தளத்தைப் படித்தால் உங்களுக்கு வரும் சிரிப்புதான் இன்றைய ஸ்மைல் ஆஃப் தி டே.
    //

    இதைவிட அதிக சிரிப்பு வரவைக்கும் மார்க்க்ஸீயக் "கடவுள்" மாவோவை வழிபடும் சில பல கம்யூனிஸ்டுகள் நடத்தும் புத்தக கண்காட்சி ஸ்டால்கள் தான் அதிகமாக இருந்தது சென்ற ஆண்டு மதுரை புத்தகக் கண்காட்சிச்சாலையில்.

    இவர்களாவது புதிய கடவுளை உருவாக்குகிறார்கள். அவர்களோ அதே பழைய, மார்க்ஸ், மாவோ, ஸ்டாலின் லெனின் என்று போட்டு இந்தா வந்துவிடும், அந்தா வன்துருச்சு புரட்சி என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

    Both camps are laughing stocks.

    ReplyDelete
  4. அந்த தளத்துக்குப் போனேன். ஒண்ணுமே புரியலைங்க. அந்த அளவுக்கு அறிவு இல்லை போல.

    Book of the day - என சில புத்தகங்களின் அறிமுகமும் தரலாமே.

    Word Verification எடுத்து விடுங்களேன். ப்ளீஸ்.

    ReplyDelete
  5. //வேறு பல பிரபலங்களும் வந்திருக்கலாம். என் கண்ணில் படவில்லை.//

    மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார் என்று சொன்னார்கள்..

    (பிகு: திடீரென்று word verification ஏன்? )

    ReplyDelete
  6. மனுஷ்ய புத்திரன் எப்பொழுதும் அல்லது முக்கால்வாசி நேரம் காட்சியகத்தில்தான் இருப்பார். அவரது உயிர்மை ஸ்டாலில்.

    ReplyDelete
  7. trackback எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை. :-(

    எனவே,

    புது வரவுகள்: முழு விவரப் பட்டியல்

    ReplyDelete