Sunday, January 14, 2007

தமிழில் MP3 ஒலிப்புத்தகங்கள்

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் தமிழில் ஒலிப்புத்தகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளது.

இவை பெரும்பாலும் கிழக்கு, வரம் ஆகியவை வாயிலாக வெளிவந்த அச்சுப் புத்தகங்களின் ஒலிவடிவம். எழுத்துவடிவம் சுருக்கப்படாமல், தேர்ந்த குரல்களை உடையோரால் அப்படியே படிக்கப்பட்டு, இசை சேர்க்கப்பட்டு MP3 வடிவில் குறுந்தட்டாகக் கிடைக்கிறது.

ஒவ்வோர் ஒலிப்புத்தகமும் 2.30 மணிநேரம் முதல் 4.30 மணிநேரம் அல்லது அதற்குமேலும் செல்லும். தனித்தனி அத்தியாயங்களாக இருப்பதால் வேண்டிய இடத்துக்குச் சென்று, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து கேட்கமுடியும்.

இப்பொழுது இவை குறுந்தட்டு வடிவில் மட்டுமே கிடைக்கின்றன. விரைவில் இணையத்தில் இறக்கிக்கொள்ளுமாறும் செய்யப்படும்.

சென்னை புத்தகக் காட்சியில் F-5 அரங்கில் ஒலிப்புத்தகத்தைக் கேட்க ஆடியோ வசதி செய்யப்பட்டுள்ளது.

வரம் ஒலிப்புத்தகங்கள்

* பரணீதரனின் அன்பே அருளே
* சிரஞ்சீவி
* சுந்தரகாண்டம்
* சித்தமெல்லாம் சிவமயம் (சித்தர்கள் பற்றி)
* பாடிக்களித்த 12 பேர் (ஆழ்வார்கள் பற்றி)

கிழக்கு ஒலிப்புத்தகங்கள்

வாழ்க்கை: (அனைத்தும் சொக்கன் எழுதியவை)
* அம்பானி
* நாராயணமூர்த்தி
* லக்ஷ்மி மிட்டல்

தன்னம்பிக்கை
* நாகூர் ரூமியின் அடுத்த விநாடி
* சோம வள்ளியப்பனின் உஷார்! உள்ளே பார்!
* சோம வள்ளியப்பனின் இட்லியாக இருங்கள்!

புனைகதை
* இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
* ஆதவன் குறுநாவல்கள் (இரவுக்கு முன்பு வருவது மாலை)

வரலாறு
* மதனின் கிமு கிபி
* மதனின் வந்தார்கள் வென்றார்கள் (இரண்டு குறுந்தட்டுகள்)

அரசியல்
* பா.ராகவனின் ஹிஸ்புல்லா

இப்போதைக்கு ஏழுதான் புத்தகக் காட்சி அரங்கில் கிடைக்கும். அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் தமிழகமெங்கும் கடைகளில் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் புதுப்புது ஒலிப்புத்தகங்களும் வெளியாகும்.

5 comments:

 1. சிறந்த முயற்சி. காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி. மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 2. எவர் குரலில் ஒலிக்கிறது என்பதையும் இந்தப் பதிவில் இணைக்கலாமே.

  கலக்கல் முயற்சி & சுவாரசியமான செலக்சன். வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 3. உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  மேலும் உங்கள் பதிவுத்தளத்தில் தமிழ் விக்கிபீடியாவிற்கு ஒரு இணைப்பு கொடுங்களேன். அது அவர்களைப் பிரபலப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

  பாலாஜி.

  ReplyDelete
 4. பிரமிப்பாய் இருக்கிறது பத்ரி, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  எவ்வளவு விரைவில் இணையம் மூலம் இறக்க வசதி தர முடியுமோ செய்யுங்கள்.
  புத்தகத்தை eBook-ஆக பதிவிறக்கம் செய்து வாசிப்பதை விட, ஒலிப்புத்தகம் மிகுந்த வசதியானது, பயனுள்ளது. விரைவில் "இணையத்தில் இப்பொது கிடைக்கும்" அறிவிப்பின்போது தகவல் சொல்லுங்கள்.

  - அன்பு

  ReplyDelete
 5. நான் இலங்கையைச் சேர்தவர். தற்போது சிங்கப்பூரில் இருக்கின்றேன். கிழக்கு வழங்கும் ஒலிப்புத்தகம் அருமையான படைப்பு. எனக்கு கையில் கிடைத்த அனைத்துப் புத்தகங்களையம் படித்துவிட்டேன். அடுத்த விநாடி புத்தகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது ஆல்பா ஆகியவை என்னை வெகுவாக கவார்ந்தன. ஆல்பா பற்றி மேலும் தெரிந்துகொள்வதில் ஆவலாக உள்ளேன். எனக்காகவே வெளிவந்த ஒலிப்புத்தகம் என்றுகூட நினைக்கவைத்தது. அற்புதம். அதுபோன்றே திரு.சுந்தரராமன் ஐயாவோடும் தொடர்புகளை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளேன். அவரது மின்னஞ்சல் முகவரியைப் பெற்றுத்தர முடியூமா?

  மற்றும் உங்களது படைப்புக்கள் தொடர்ந்தும் வளர வாழ்த்துக்கள்.

  - ஹரேந்திரன்

  ReplyDelete