Wednesday, February 21, 2007

மரண தண்டனைக்கு எதிராக...

செல்வனின் பஸ்ஸை எரித்த பகத்சிங்குகள் என்ற பதிவில் அப்சல் போன்றோரின் மரண தண்டனைக்கு எதிராக வாதிட்டவர்கள் இன்று தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்றி அதிமுகவினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையையும் எதிர்ப்பார்களா என்று கேள்வி கேட்டிருந்தார்.

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் சில இடங்களில் எதிர்க்கவும் சில இடங்களில் ஆதரிக்கவும் முடியாது என்பதுதான் உண்மை. என் கருத்து: மரண தண்டனை என்பது இருக்கவே கூடாது. அப்சல் ஆனாலும் சரி, நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், முனியப்பன் ஆனாலும் சரி, மரண தண்டனை கொடுக்கக்கூடாது.

செல்வன் பதிவுக்கு நான் இட்டிருந்த பின்னூட்டத்துக்கு பதிலாக "விமான கடத்தல் நடத்தி தீவிரவாதிகளை விடுதலை செய்தால் என்ன செய்வது? தீவிரவாதிகளை கோடிக்கணக்கில் செலவு செய்து ஜெயிலில் வைத்திருந்து, உயர் பாதுகாப்பு கொடுத்து அப்புறம் தனி விமானத்தில் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டி அல்லவா வரும்?" என்று கேள்வி கேட்டிருந்தார்.

சில கொள்கைகளுக்காக ஓர் அரசும் மக்களும் சில விலைகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. உதாரணம் தனி மனித சுதந்தரம். தனி மனித சுதந்தரத்தைப் பாதுகாக்க, பல நாடுகளில் தனியார் பேச்சுவார்த்தைகளை ஒட்டு கேட்க முடியாது. ஆனால் பல நேரங்களில் 'நாட்டு நலனை முன்னிட்டு' என்ற காரணத்தைக் காட்டி தொலைபேசியை ஒட்டு கேட்பது பல நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது. இதை ஆள்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு எதிர்க்கட்சியினரையும் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் பழிவாங்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தனிமனித சுதந்தரத்துக்குப் பங்கம் வரும் வகையில் பல உலக நாடுகள் இன்று இயற்றியிருக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டங்கள் இப்படியானவையே.

இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மரண தண்டனை வழங்கலாம். இவ்வாறு இருக்கும்வரை 'rarest of the rare cases' என்று எந்த வழக்கையும் சுட்டிக்காட்டி, கீழிருந்து மேல்வரையான நீதிபதிகள் தண்டனை வழங்குகிறார்கள். மரண தண்டனைக்கு எதிரானவர்கள் முதலில் இந்தச் சட்டத்தை அரசியல் அமைப்பிலிருந்து நீக்க முயற்சி செய்யவேண்டும். அதுவரையில் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொண்டு மட்டும்தான் இருப்போம்.

===

தீவிரவாதிகளையும் சட்டத்துக்கு உள்ளாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுக்கு என்று தனியான சட்டங்களைப் பிறப்பித்து (உதாரணம் TADA, POTA ஆகியவை), அவை எந்த அளவுக்கு மோசமாக வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் போன்ற சாதாரணர்கள்மீது பிரயோகிக்கப்பட்டன என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

கடுமையான சட்டங்கள், கண்டதும் சுடும் உத்தரவு ஆகியவற்றால் தீவிரவாதத்தை எந்நாளும் அடக்க முடியாது. அதிகரிக்க மட்டுமே முடியும்.

17 comments:

  1. Badri sir,

    I am afraid that your stand point is not practical.It might be ideal,but not all ideals are practical.Some idelas can never be practical(eg:Death is preferred than telling a lie)

    Abolishment of capital punishment should be an end, not means.

    /சில கொள்கைகளுக்காக ஓர் அரசும் மக்களும் சில விலைகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. உதாரணம் தனி மனித சுதந்தரம்./

    முற்றிலும் உண்மை. நேருவின் பஞ்சசீல கொள்கைக்கு மிகப்பெரும் விலையை இந்தியா கொடுத்தது. சோஷலிச கொள்கைக்கு மிகப்பெரும் விலையை ரஷ்யா கொடுத்தது.இந்த மாதிரி தவறான கொள்கைகளுக்கு பெரும் விலையை தேசங்களும் மக்களும் தரவேண்டியிருக்கிறது.

    இந்தியமக்கள் தீவிரவாதத்துக்கு பெரும் விலையை கொடுத்துக் கொண்டுள்ளனர்.இனியும் அவர்கள் இம்மாதிரி கொள்கைகளுக்கு எத்தனை உயிர்களை விலையாக கொடுக்க முடியும்?

    /கடுமையான சட்டங்கள், கண்டதும் சுடும் உத்தரவு ஆகியவற்றால் தீவிரவாதத்தை என்னாளும் அடக்க முடியாது. அதிகரிக்க மட்டுமே முடியும். //

    பஞ்சாபில் இப்படி எல்லாம் செய்துதான் தீவிரவாதத்தை அடக்கினார்கள். காஷ்மிரில் இந்த முறைதான் வேலை செய்கிறது.

    ReplyDelete
  2. ///
    கடுமையான சட்டங்கள், கண்டதும் சுடும் உத்தரவு ஆகியவற்றால் தீவிரவாதத்தை என்னாளும் அடக்க முடியாது. அதிகரிக்க மட்டுமே முடியும்.
    ///

    எல்லாருக்கும் புரிந்த ஆனால் உணர மறக்கும்(மறுக்கும்) உண்மை.

    தவறுகளை தவறுகள் சரி செய்யாது.

    ReplyDelete
  3. பத்ரி, உங்கள் கருத்தோடு 100% ஒத்துப்போகிறேன்...

    கோகிலவாணியை ஒரு குடும்பம் இழந்துவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் தெரிந்தே ஒரு குடும்பம் அதன் குடும்ப தலைவரை இழக்கப்போகிறதே ?

    இந்த மூவரையும் தூக்கிலிட்டு கொன்றால் அந்த மூன்று மாணவிகளின் ஆன்மா சாந்தியடையுமா ? அந்த மூன்று மாணவிகளின் குடும்பம் பெரும் மகிழ்ச்சி அடையுமா ? (அடையும் என்று சொல்கிறார்கள் சில பதிவர்கள், அவர்கள் குடும்பத்தினர் மனிதர்களா இல்லை பிணம் தின்னிகளா ?)

    முகமது அப்ஸலுக்கு ஆதரவாக எழுந்த குரல் ஏன் இப்போது எழவில்லை ?

    சலிப்பாயிருக்கு பத்ரி..

    ReplyDelete
  4. கொலைகாரங்களை எல்லாம் செலவு பண்ணி ஜெயில்ல வச்சி சோறு போடனுமா?? 3 பேரை உயிரோட எரிக்கும் போது வலிக்காத மனுஷங்க எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும்?? இப்படி எல்லாம் பேசுற உங்க மாதிரி சில பேரால தான் இன்னும் பல உயிர் பறி போகுது. இந்த 3 பேரை 10 வருஷம் உள்ள வச்சா, வெளிய வந்து, தலைவிக்கு தலைவலின்னு சொல்லி உங்க வீட்டு பொண்ணுங்க போற பஸ்ஸுக்கும் தீ வைப்பாங்க.. அவங்க சாகனும்னும் நினைக்கிறது செத்துப் போன பொண்ணுங்களுக்காக இல்ல. உயிரோட இருக்கிற மக்களுக்காக. உங்களை எல்லாம் திருத்த முடியாது. அடிபடும் போது வலிக்கும் அப்போ புரியும்.

    ReplyDelete
  5. கொள்கைப்படி, அனு ஆயுதம் தயாரிப்பது கூடத்தான் தவறு,

    எந்த நாடாவது அப்படிச் செய்யாமல் இருக்க முடியுமா ?

    கொள்கைப்படி மரணம் சரியான தண்டனை அல்ல. ஆனால், அப்படி மரணதண்டனை இல்லாமல் எல்லாம் இருக்க முடியாது.

    இன்று, ஐரோப்பிய நாடுகள் பல மரண தண்டனை இல்லாமல் இருக்கின்றன, நாளையே, பேரிஸில் தீவிரவாதத்தாக்குதல் நடந்து 10,000 பேரைக் கொல்லட்டும்! தூக்கு என்ன, முஸ்லீம்களை gas chamber களுக்கே கூட அனுப்புவார்கள்.

    We must think what is practical and not what is ideal as selvan says.

    If you see today, Advani once recommended Death sentence be abolished on Mahavir jeyanthi day (a day commemorating the Birth of Thirthankara who preached non violence against all life forms). But, he himself is taking a stand contrary to his ideal.

    The changing political climate now demands a more ruthless approach towards people who want to destroy the democratic system and bring a feudal system namely sharia. And they are not ashamed in doing so.

    ReplyDelete
  6. முகமது அப்ஸலுக்கு ஆதரவாக எழுந்த குரல் ஏன் இப்போது எழவில்லை ?

    They are not Muslims and Kashmiris.
    They are members of a party headed
    by a brahmin lady.So how will they be supported by people like Su.Ba.Vee or A.Marx or by Dravida
    Tamils or by left.

    ReplyDelete
  7. மன்னிக்கவும் திரு.ரவி அவர்களே,

    முதலில் நீங்கள் ஒரு விஷயங்களை புரிந்து பேசுங்கள். மூன்று இளம் உயிர்களை, கேவலம் ஒரு அற்ப காரணத்திற்காக உயிருடன் எரித்துக் கொன்ற 3 கொலைகாரர்களை தூக்கிலிட சொல்லி வந்த தீர்ப்புக்கு சந்தோஷப்படும் நாங்கள் பிணம் திண்ணிகளா?

    கண் முன்னே, ரத்தமும் சதையுமாக அம்மா நான் போய்ட்டு நாளைக்கு வந்துடறேன், என்று சொல்லி விட்டு போய், கரிக்கட்டையாக திரும்பி வந்த மகளை பார்த்து கதறும் தாயின் வலியை எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா நீங்கள்?

    ஓருவேளை, உங்களது பார்வையில் உணர்ச்சிகள் என்பது தீவிரவாதிகளுக்கும், கொலையாளிகளுக்கும் மட்டுமே உரித்தானதுவோ என்னவோ?

    இந்த 3 பேர் மட்டுமல்ல, அந்த பெண்களின் கொலையில், நேரடியாக மற்றும் மறைமுக தொடர்பு கொண்ட அத்தனை மனிதர்களையும் தூக்கிலிட்டால் கூட அவர்களது இழப்பை ஈடு செய்ய முடியாதுதான். ஆன்மா சாந்தியடையாதுதான். குடும்பம் மகிழ்ச்சி அடையாதுதான். (அப்படி ஒன்று இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறதா என்ன அவர்களது குடும்பத்திற்கு?)

    என்ன செய்யலாம்? மன்னிச்சு விட்டுட்டு, மலர் மாலை போட்டு, போங்கடா, போய் அடுத்த முறை உங்க தலைவனையோ தலைவியையோ கைது செய்யும் போது இன்னும் 4 பேரை சேர்த்து எரிங்கடா ன்னு சொல்லிடலாமா?

    அவங்க வேற குடும்ப தலைவர் ஆச்சே. இத்தனை நாள் கோர்ட் கேஸ் ன்னு அலைஞ்சு ரொம்ப அவஸ்தை பட்டிருப்பாங்களே. மன உளைச்சல் வேற அடைந்திருப்பாங்களே. வேணும்னா நாம எல்லாம் ஒண்ணா அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டிடலாமா?

    அந்த கயவர்களும், அவர்களை ஆதரிக்கும் நீங்களும் தான் பிணம் திண்ணிகள் என்று என்னாலும், கண்மூடித்தனமாக சொல்ல முடியும்.

    ஆனால் அந்த 3 கொடிய மனிதர்களை தூக்கிலிட வேண்டாம் என்பது உண்மையில் தூக்கு தண்டனையை எதிர்க்கும் ஒரு செயலே அன்றி, அவர்களை, அவர்களது செயலை ஆதரிக்கும் மடத்தனம் இல்லை என்ற உங்களது உணர்வுகளை மதிக்கிறோம்.

    ஆனால் நாங்களும் காட்டு மிராண்டிகள் அல்ல என்பதை உணர்ந்து பேசவும்.

    ReplyDelete
  8. சட்டப்படியான விசாரணைக்குப் பிறகு நடைமுறையில் இருக்கும் சட்டங்களின்படி தரப்படும் தூக்கு தண்டனை போன்ற தீர்ப்புகளை எதிர்ப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

    தண்டனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்வது மட்டுமல்லாது வேறு விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கு அரசின் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கையை நிலை நிறுத்துவது, எதிர்காலத்தில் இவைபோன்ற குற்றங்கள் நடைபெறுவதை குறைக்க முனைவது போன்ற விளைவுகளை இந்த தீர்ப்புகள் ஏற்படுத்துகின்றன.

    தனிமனிதர்களை பாதிக்கும் குற்றங்களுக்கான பர்வையை சமூக நலத்தை பாதிக்கும் குற்றங்களுக்கும் செலுத்துவது சரியாகப் படவில்லை.

    சமூக நலனை பாதிக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளில் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்க வேண்டும். அவ்வகையில் இந்தத் தீர்ப்பு சமுதாய ஒப்புதலைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யுமென்றே நம்புகிறேன்.

    பார்க்க:

    ReplyDelete
  9. //Posting from outside .. Not able to type in tamil.. SOrry//

    While I am of the opinion that State has no right to take away the life a person, (and hence there is no need for capital punishment), I would like to say few points

    In Afzal and other cases, we were NOT SURE OF THE role played by the particular person. We have to believe the police version that Afzal took part in the act (not that I refuse that or have proof against that)

    The same with Nalini Murugan etc

    Though the magnitude of the crime committed in parliament attack case and Rajiv Gandhi Murder was bigger, the role played by the guys whom we have sentenced to death is "UNCERTAIN"

    But the same Cannot be told of Dharmapuri Bus Burning.... Would Rajendran, Madu etc burned the bus had their daughter or son were inside ?????

    ReplyDelete
  10. //ஆனால் அந்த 3 கொடிய மனிதர்களை தூக்கிலிட வேண்டாம் என்பது உண்மையில் தூக்கு தண்டனையை எதிர்க்கும் ஒரு செயலே அன்றி, அவர்களை, அவர்களது செயலை ஆதரிக்கும் மடத்தனம் இல்லை என்ற உங்களது உணர்வுகளை மதிக்கிறோம்.//

    Well said...... judging the crime based on the person committed and not on the magnitude of the crime or more importantly the ROLE PLAYED BY THE INDIVIDUAL is more important.....

    Remember that they had even given death sentence for the unsuspecting landlord who had given his home for rent to militants !

    ReplyDelete
  11. புருனோ அவர்களே,

    மூன்று வழக்குகளிலும் போலிசார் அளித்த சாட்சியங்களின் படி நீதிபதிகள்தான் தீர்ப்புகளை வழங்கினார்கள்.

    தர்மபுரி வழக்கிற்கு நீங்களும் சாட்சியம் அளிக்கிறீர்கள். (// the role played by the guys whom we have sentenced to death is "UNCERTAIN"

    But the same Cannot be told of Dharmapuri Bus Burning.... //) அதனால் அதை மட்டும் உங்களால் ஒப்புக் கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  12. Badri

    You don't have to blog, as a reaction to Selvan's blog. If you belive in something you just blog your thoughts. Sometimes because of your workload or someother reason you cannot blog about an current affair. During that time other people (like Selvan) will write something, for that at the maximum you can write an comment at their blog, you don't have to blog an extension of that comment in your blog.

    The reason for my sugesstion is that if you blog now for Selvan's blog then you may have to blog for some X's blog on some Y matter. It will go on....

    ReplyDelete
  13. //தர்மபுரி வழக்கிற்கு நீங்களும் சாட்சியம் அளிக்கிறீர்கள்.//

    SO you say that you believe that the bus was burnt only because the police tell so....

    (Without any one from Police telling that) don't you know whether three students were burnt alive by miscreants..

    This is the difference between this case and so many cases where we are not sure about the role of the accused.

    I did not justify death sentence, but I just pointed out that this case is not like the cases you compare.

    If you want to compare this case, compare this with the Assasination of Mahatma Gandhi where there was no doubt as to who did that.

    Or the attack of Rajiv gandhi during the parade at Colombo where there was no doubt as to which soldier in the Parade attacked him...

    ReplyDelete
  14. //தர்மபுரி வழக்கிற்கு நீங்களும் சாட்சியம் அளிக்கிறீர்கள். அதனால் அதை மட்டும் உங்களால் ஒப்புக் கொள்ள முடிகிறது. //

    I am not sure that you have got my point . May be I did not express my self with clarity....

    In any Case, I am against Capital Punishment.

    Man has NO POWER to give life and hence he cannot have a power to take life....

    There are umpteen number of cases where the Police have hanged the wrong person.

    What I was trying to tell is that Dharmapuri Bus Burning Case is different from other high profile cases in the fact that I am convinced that the accused are guilty.

    In other cases, I am not convinced that the accused are guilty as potrayed (that is... I feel that they have been charged dispropotionately)

    In both cases, I am against Capital Punishment....

    Few weeks ago, police arrested a Psychopathic Serial Rapist and Killer and he confessed that he had previously killed one Mrs.Alamelu

    The interesting fact is that Police have already put Alamelu's husband in the jail for this crime saying that he killed his wife as she was having illicit relationships (Character "Assasination")

    Imagine the poor husband being hanged and this Ramesh arrested after the hanging... Can we bring back one life ???? (this case was reported in Junior Vikatan, Kumudam Reporter Etc)

    How are we certain that such cook-ups did not occur in other cases also !!!

    ReplyDelete
  15. //......I am convinced that the accused are guilty.

    In other cases, I am not convinced that the accused are guilty as potrayed //

    இதையேதான் நான் 'நீங்களும் சாட்சியம் அளிக்கிறீர்கள்' என்று கூறுகிறேன். அதாவது காவல் துறையினரோடு ஒத்து போகிறீர்கள்.

    காவல் துறையின் செயல்பாடுகள், நீதித்துறை, வழக்கு விசாரணை இவற்றிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அரிதான சமயங்களிலோ அல்லது அடிக்கடியோ தீர்ப்புகள் தவறாகப் போகும்போதும் கூட நீதி விசாரணைகள் வெளிப்படையாக நடக்கின்றன என்பதையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் மறுக்கலாகாது.

    high profile cases என்று நீங்கள் அழைக்கும் வழக்குகளில் பத்திரிக்கைகளும் பொது மக்களும் எந்த அளவுக்கு ஈடுபாடும் கவனமும் கொண்டிருப்பார்கள் என்பதையும் இவற்றை மீறி இவ்வழக்குகளின் தீர்ப்புகளில் எவ்வளவு தவறு நடந்துவிட முடியும் என்ன்பதையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்.

    என் சொந்த விருப்புகளை தீர்ப்புகளோடு கலந்து அவற்றின் தராதரத்தை நான் நினயிப்பதில்லை.

    ReplyDelete
  16. //இதையேதான் நான் 'நீங்களும் சாட்சியம் அளிக்கிறீர்கள்' என்று கூறுகிறேன். அதாவது காவல் துறையினரோடு ஒத்து போகிறீர்கள்.//

    நான் நேரடியாக பஸ் எரிவதை பார்த்ததால் சாட்சி அளிக்கிறேன் !!!!

    //தீர்ப்புகளில் எவ்வளவு தவறு நடந்துவிட முடியும் என்ன்பதையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்.//

    தீர்ப்புகளில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு கம்மி. ஆனால் விசாரணையில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

    கேஸ் முடியவேண்டும் என்பதற்காக சில நேரங்களில் நிரபராதி தண்டிக்கப் படுகிறார்.... அல்லது சிறியதவறு செய்தவர், அவர் செய்யாத பெரிய தவறிற்கும் சேர்த்து தண்டிக்கப்படுமிறார்..... இதை மறுக்க முடியுமா...

    ReplyDelete
  17. இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன், பல ஆயிரம் (மூன்று ஆயிரம் என்று அரசு சொன்னது) அப்பாவி சீக்கியர்கள் டெல்லி மற்றும் இந்திய எங்கும் கொல்லப்பட்டார்கள். அப்பொழுது, ராஜீவ் காந்தியிடம் கேட்ட பொழுது, ஒரு பெரிய ஆலமரம் விழும்பொழுது, அதன் கீழ் இருக்கும் பல உயிரினங்கள் சாகும் என்றார். இது என்ன நியாயமோ ? கொல்லப்பட்ட பல சீக்கியர்களில் எத்தனை மன்மோகன் சிங்குகள், எத்தனை மோன்டேக் சிங் அலுவாளியாக்கள் இருந்தார்களோ ?
    சீக்கியர்களை கொன்ற அத்தனை பேருக்கும் தூக்கு தண்டனை கொடுத்து விட்டீர்களா ?

    Kumaran

    ReplyDelete