நண்பர்களுக்கு வணக்கம்.
வருகிற சனிக்கிழமை, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம் முதல் தமிழ் பேப்பர் என்னும் இணைய இதழைத் தொடங்குகிறேன். இது எங்களுடைய New Horizon Mediaவின் மற்றொரு மின்வெளி முயற்சி. இணைய எழுத்து – அச்சுப் பத்திரிகை எழுத்து இரண்டுக்குமான இடைவெளியை மேலும் சற்றுக் குறைக்க எங்களால் ஆன எளிய முயற்சி.
இது தினசரியா, வார இதழா, மாதம் இருமுறையா, மாதம் ஒருமுறையா என்கிற கேள்விகளுக்கு இடமில்லை. ‘பீரியாடிஸிடி’ என்னும் பத்திரிகை உலக ஒழுக்கத்தை நிராகரிப்பதுதான் இணைய ஒழுக்கம். நிகழும் கணத்தில் வாழும் கலைக்குப் பழகிவிட்டோம். தமிழ் பேப்பரும் அப்படியே. இதன் ட்விட்டர் பக்கத்தை நீங்கள் பின் தொடர்வதன்மூலம் எதையும் தவறவிடாதிருக்க இயலும்.
அது சரி, எதற்கு இது?
மிகத் தீவிரமாக, முகத்தை உர்ர்ரென்று வைத்துக்கொண்டுதான் வாசிக்கவேண்டும் என்று ஒரு தரப்பும், தீவிரத்துக்கு வாழ்வில் சற்றும் இடமில்லை என்ற பிரகடனத்துடன் முழு மொக்கை விருந்தளிக்கும் மறு தரப்பும், எழுத்து என்னும் கலை தொடங்கிய நாளாக என்றுமுள்ளது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தளம் ஒன்று உண்டு. நல்ல எழுத்து. முக்கியமான எழுத்து. கவனிக்கப்படவேண்டிய எழுத்து. அதுவே படிக்க சுவாரசியமாகவும் ஏன் இருக்கக்கூடாது? நகைச்சுவைக்கும் கேளிக்கைக்கும் கொண்டாட்டங்களுக்கும் குதூகலங்களுக்கும் இடமில்லா வாழ்க்கையில் ரசமில்லை. அதே சமயம் அது மட்டுமே வாழ்க்கையுமில்லை.
எழுத்தென்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது. தமிழ் பேப்பர் அதைச் செய்யப்போகிறது.
வரலாறு, இலக்கியம், அனுபவங்கள், திரைப்படம், செய்திகள், சிந்தனைகள், கதைகள், கவிதைகள், நகைச்சுவை, ஆன்மிகம் அனைத்தும் தமிழ் பேப்பரில் உண்டு. அனைத்தும் தரமானதொரு வாசிப்பு அனுபவம் தரக்கூடியவையாக மட்டுமே இருக்கும். வாசகர்களும் எழுத்தாளர்களும் நெருங்கி உறவாடும் தளமாக இது அமையும். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள். அபிப்பிராயங்களை, விமரிசனங்களைத் தயங்காமல் முன்வையுங்கள். மாற்றமென்பதும் வளர்ச்சியென்பதும் இரு கட்சிக்கும் பொதுவானவையே அல்லவா?
இன்னும் இரு தினங்கள். சனிக்கிழமை தமிழ் பேப்பர் பிறக்கிறது. வாசிக்க வாருங்கள்.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
1 hour ago
நல்ல முயற்சி வாழ்த்துகள், பத்ரி.
ReplyDeleteசார் ! இது நிச்சயம் எல்லா தரப்பினருக்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇந்த சஞ்சிகைக்காக , தனியே ஆசிரியர் குழு வெல்லாம் அமைதுள்ளிர்களா ?
vaazhthukkal.
ReplyDeleteநல் வரவு... வாழ்த்துக்கள் ...
ReplyDelete-விபின்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்... வரவேற்கிறேன்... ஆனா இதையும் தமன்னா வந்துதான் சொல்லணுமாங்கிறப்போ பயமா இருக்கு. வெபுலகம், தட்ஸ் தமிழுக்கு மாற்றாக ,ஆக்க பூர்வமாக இருக்கவும், நடுநிலை கடைப்பிடிக்கவும், விரும்பி வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteநல்ல முயற்சி.வாழ்த்துகள், பத்ரி.
ReplyDeleteதமிழ் பேப்பரில் தொழில்நுட்பமும் வருமா?
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteபேஸ்ட், பிரஷ், காப்பி, டிபன், தமிழ் பேப்பர் - ஆறு சொற்களில் ஒரு தமிழ்ச் சொல். ஜனரஞ்சகம் என்ற பெயரில் இவ்வளவு கலப்படம் தேவையா? இதைக் கூடிய வரை குறைக்க முயலலாமே.
ராமதுரை எழுதியது
ReplyDeleteதமிழ் பேப்பர் முய்ற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இது மிகவும் புதுமையான ஏற்பாடாகும்.பீடியாடிசிடி இராது என்பதால் இப்போது ஒன்று அப்போது ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது. எப்படியும் ஒவ்வொன்றும் தனி இதழாக இருக்க வேண்டும். தேதியிட்டு வரவேண்டும். எழுத்தாளர்கள் இப்போது பெருகிவிட்டனர். வார மாத இதழ்கள் எல்லாம் சர்க்லேஷனை மனதில் கொண்டு ஒரு குறிப்பிட்ட துறைக்கு--சினிமா அல்லது அரசியல் -- முக்கியத்துவம் கொடுப்பதால் வேறு பல துறைகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. அக் குறையை தமிழ் பேப்பர் ஈடு செய்வதாக இருக்க வேண்டும்.தமிழ் பேப்பரில் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும். அது கருத்து மேடையாக விளங்குமா என்று தெரியவில்லை. கருத்து மேடை இருந்தால் வசவுகள் இருக்கக்கூடாது.
தமிழ் பேப்பரில் ” கதைகள், கவிதைகள் நகைச்சுவை ஆன்மீகம் ...... ” என்றெல்லாம் குறிப்பிட்ட நீங்கள் அறிவியலைக் குறிப்பிடாதது ஏமாற்றத்தை அளித்தது. அறிவியலுக்கு இடம் இராதா?
ராமதுரை
உண்மையிலே ஒரு நல்ல முயற்சி
ReplyDeleteவாழ்த்துகள் ! வாழ்த்துகள் ! வாழ்த்துகள் !
WELCOME TO REVOLUTION
ReplyDeleteவாழ்த்துகள் பத்ரிசார்.
ReplyDeleteவாழ்த்துகள்.. சார்..
ReplyDeleteMost of the news contents of daily newspapers are found to be simple hand outs of Police, PIB (both State and Central). Your Tamil Paper should have a feature "Daily Digest of News" and this feature should be so developed that the reading of daily newspapers becomes redundant. May be a tall proposition; but an attempt can be made.
ReplyDeleteS. Krishnamoorthy