Wednesday, March 21, 2012

கூடங்குளம் போராட்டம்

நான் அணு மின் நிலையங்களை ஆதரித்தே வந்திருக்கிறேன். இன்றைய நிலையில் நமக்கு அணு மின்சாரம் அவசியத் தேவை என்று கருதுகிறேன். ஆனால் உடனடியாகவே சூரிய ஒளி மின்சாரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு, அணு, அனல் மின் நிலையங்களைக் குறைக்க அல்லது நீக்க வகை செய்வது சரியான பாதையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

இப்போது மாநில அரசு, கூடங்குளம் மின் நிலையத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் அதனைச் செயல்படுத்த உச்சபட்ச பலத்தைப் பிரயோகிக்கும் என்று தெரிகிறது. கடுமையான போலீஸ் குவிப்பு இதனைத்தான் காட்டுகிறது. அணு மின் நிலையங்களை எதிர்க்கும் சாதாரண மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பர். அதுவும் முக்கியமாக மீனவர்கள்.

எந்த மின் நிலையமாக இருந்தாலும் அது பெருமளவு சூடான நீரைக் கடலுக்குள் அனுப்பத்தான் செய்யும். அப்படிச் செய்யும்போது அந்தப் பகுதியில் மீன் வளம், கடல்சார் உயிரின வளம் பாதிக்கப்படத்தான் செய்யும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்கான மாற்று பற்றியும் மீனவர்களுக்கான இழப்பீடு பற்றியும் யாரும் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 500 கோடி ரூபாய் பேக்கேஜில் மீனவர் வாழ்வு தொடர்பான தெளிவு ஏதும் இல்லை. சாலைகள் போடுவதாலோ, கோல்ட் ஸ்டோரேஜ் கட்டுவதாலோ, நேரடியாக வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்களுக்கு நன்மை ஏதும் வந்துவிடாது.

உதயகுமார் போன்றோர் தங்கள் முக்கிய இலக்காக அணு உலையை நிறுத்துவது தொடர்பாகத்தான் போராடினர். இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் சார்பாகப் போராடி இழப்பீடு வாங்கிக் கொடுக்க அவர்களால் இனி முடியாது. அதற்கு வேறு யாரேனும் தலைமை தாங்கவேண்டியிருக்கும்.

இந்த அணு உலை எனக்கு ஏதோ ஒருவிதத்தில் உறுத்தலாகவே உள்ளது. அது அணு உலை பாதுகாப்பு பற்றி அல்ல. அங்குள்ள மக்களுக்கான நியாயமான இழப்பீடு பற்றியது.

51 comments:

 1. உங்களை போன்ற மெத்தப் படித்தவர்களும் இது போன்ற பாதுகாப்பற்ற அணு உலைகளை ஆதரிப்பது வேதனையாக உள்ளது. இதில் நீங்கள் எந்த பாதுகாப்பை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம், அவர்கள் வாழ்வாதாரத்தின் பாதுகாப்பாகவும் இருக்கலாம். வெளிநாட்டு முதலீடுகளுக்கு நம் இயற்கை வளங்களை கூட்டி கொடுப்பதுதான் வளர்ச்சி என்றால். அந்த மதி கெட்ட வளர்ச்சி எங்களுக்கு தேவையில்லை. உங்களின் அடுத்த தலைமுறைக்கு இந்த வறண்ட. சுரண்டப்பட்ட, கழிவு கூலமான பூமியை நீங்கள் பரிசளிக்க விரும்பினால் ... தாரளமாக செய்யுங்கள்.

  உங்கள் பொருளாதார கொள்கைகள், புள்ளி விவரங்களை கடை கோடியில் உணவுக்காக கையேந்தி நிற்கும் பாமரனின் தட்டில் போடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பொருளாதாரக் கொள்கையை வைத்துக்கொண்டு இந்தியர்களையெல்லாம் கடைகோடியில் உணவுக்காக கையேந்தி நிற்க வைத்துவிட்டீர்களே...அதையே வைத்துக்கொண்டு இன்னும் நாக்கு வழிப்பதற்கா இங்கு வந்துள்ளீர் ?

   நீங்கள் மறித்துப்போகமாட்டீர்கள் என்பதற்காக உங்களையெல்லாம் சூனாமி தூக்காமல் விட்டுவிட்டதோ!

   Delete
  2. திரு. அநாமதேயர், பெயருடன் வந்து கமெண்ட் போடா வக்கில்லை, இதில் என்னை வேறு சுனாமி தூக்க வேண்டுமா,,, கேட்கிற கேள்வியை அல்லது சொல்கிற பதிலை தெளிவா சொல்லணும்... பொத்தாம் பொதுவா நானும் சமுதாயத்துக்காக போரடநேனு வந்து கமெண்ட் போட்டுட்டு போககூடாது...

   Delete
 2. When ATPPs are unsafe, how come Kalpakkam is functioning smoothly all these years without any incidents?

  ReplyDelete
  Replies
  1. "நான் அணு மின் நிலையங்களை ஆதரித்தே வந்திருக்கிறேன். இன்றைய நிலையில் நமக்கு அணு மின்சாரம் அவசியத் தேவை என்று கருதுகிறேன்."

   Why there is so much contradictions in your articles? Your earlier articles were supporting the needs of nuclear energy. In the later part you reverted your opinions by stating about safety, disposal of nuke waste, etc. Now again the need?.

   I understand the other resources are still in the budding stage. Should we really consider nuclear energy when is potentially riskier and expensive?

   Delete
  2. I don't know where you see any contradiction. Show me the link where I have said I have reverted my opinions. I am in favour of Nuclear power today. At the same time, I believe that there are concerns in disposal of nuclear waste and that there is always a looming safety concern which puts us under tremendous strain in maintaining the plant at very high safety levels. Therefore, if there are other forms of safe and sufficient energy in future, the first thing we should do is de-commision the nuclear power and then the thermal power. I believe my stand is very consistent.

   Delete
 3. Govt and KKNP's authorities should clearly state the liabilities, if and when any accident happen. Severe and enforced liability will force even the Govt. to do it safe. But reality is always different though.

  ReplyDelete
 4. In an "Energy School" I attended sometime in 1999-2000, there was a debate about "Steps needed to make Solar Power Generation affordable/possible by public". The news about solar power used by Mr. Sridhar Murthy, (I got link frm ur tweet) proved someone has to take a step. Now that ppl have example to follow, I m sure progress will be good. Although it took 12 years for me to see the that talk turn into reality. The talk was by Managing Director of Solkar Industries (http://www.solkar.in/company-information/onboard.html). Nice Article. I support the view. Heaps and heaps of money spent on N-Plant (All the best to them in the name of God). I would be happier if same amount of determination and effort will be put to achieve Solar Power Generation

  ReplyDelete
 5. I AM A THERMAL POWER ENGINEER WITH 35 YEARS OF EXPERIENCE.
  THE INLET / OUTLET CONDENSER WATER DIFFERENCE WILL NOT EXCEED NORMALLY FIVE DEGREES. (TERMINAL TEMP DIFFERENCE)
  MOREVER THE CONDENSER OUTLET WATER WILL GO THRO OUTLET CHANNEL AND JOIN WITH SEA. AGAIN TEMP WILL BE FURTHER REDUCED. I SAW SO MANY TIMES ALOT OF FISH IN THE SEA WHERE OUTLET CHANNEL JOINS.
  ABOUT NUCLEAR STATION SAFETY, WE HAVE TO BELIEVE THE SCIENTISTS/ENGINEERS.
  IF SOME PEOPLE ARE HAVING CHANCE TO APPEAR IN TV OR TO WRITE IN MAGAZINES, WE CAN NOT TAKE THEIR WORDS AS FINAL ONE.
  GOPALASAMY SAUDI ARABIA

  ReplyDelete
  Replies
  1. MR Gopalsamy
   Is there any difference between the outlet water of a Thermal Plant and an N plant?

   Delete
  2. Any small temperature change can cause drastic changes in the fauna. Sometimes it may help in some species thrive while hurting other species. We cannot simply state that ocean is a big reservoir and the volume of water we add is very minuscule. Everything we do to the environment subtly affects it.

   All that I am saying is that it is important to understand the impact and adequately compensate the players who are affected by this.

   Delete
 6. Will Govt publish the cost of production of power prodcued at various atomic power stations across India and the selling price to various states?

  Will Jayalalithaa move her residence and office to Koodankulam and live there permanently? she will not.

  As usual, only the common man is affected.

  ReplyDelete
 7. Mr. Simulation

  Who told you that Kalpakkam is functioning smoothly all these years without any incidents?
  Kalpakkam is functioning smoothly all these years without any incidents?
  http://tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp

  Go and search in google

  ReplyDelete
 8. மிகக்குறைந்த சதவீத தேவை மட்டுமே அணு உலைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிகிறது. அப்பிடி இருக்கையில் ஏன் அணு உலை.

  அதுவும் தமிழ் நாட்டிலேயே ஏன் இரண்டு இடங்களில்??

  http://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_India

  இந்த லின்க் படி இந்தியாவின் மொத்த அணு மின் உற்பத்தியில் 44% தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. (புது projects சேர்த்து)

  இது ஏமாற்று வேலையாகத் தெரியவில்லையா??

  ReplyDelete
 9. மன்னிக்கவும் 44% அல்ல 26%. 26 சதவீதம் ஒரே மாநிலத்தில் என்பது அதிகமல்லவா??

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே இரண்டு அனு உலைகள் மஹாராஷ்டிரத்தில் உள்ளன. மூன்றாவது கட்டப் போகிறார்கள். மூன்று அனு உலைகள் ஒரே மாநிலத்தில் அதிகம் இல்லையா ?

   ராஜஸ்தான் சைஸில் இருக்கும் ஃபிரான்ஸில் 21 அனு உலைகள் உள்ளன. அண்டை நாடான ஜெர்மனியில் 17. அதில் சமீபத்தில் சில பழைய அனு உலைகளை மூடியுள்ளனர்.

   என்றைக்குத் தான் நமது கிராமங்களில் எல்லாம் 24/7 மின்சாரம் கிடைக்கப்போகிறது ? தர்பொழுது தேவை உள்ளது. ஆகவே அனு உலையை ஆதரிக்கவேண்டும். நீண்ட கால நோக்கில் மாற்று வழிகளை யோசித்து திட்டங்களை செயல்படுத்திவிடவேண்டும்...ஒரு 50-60 ஆண்டுகளில் அனு உலைகளை டிகமிஷன் செய்துவிட யோசிக்கவேண்டும். அப்படிப்பட்ட நீண்ட கால நோக்குடன் யோசிக்கும் தலைவர்களும் வேண்டும்.

   Delete
  2. அணு உலையை ஆதரிக்கும் அனைத்து மனிதநேய கனவான்களுக்கும் ஒரு கேள்வி (பத்ரியையும் சேர்த்துதான்) இன்று சிப்காட் மற்றும் SEZ - ல் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் TNPCB மற்றும் Inspector of Factories வகுத்துள்ள அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டுதான் இயங்குகின்றனவா ??? இதை மட்டும் எந்த ஒரு அறிவு ஜீவியாவது நிரூபித்து விடுங்களேன் ... சத்தியமாக என் தலையை எடுத்து கொள்கிறேன் அல்லது அணு உலைகளை ஆதரிக்கிறேன் (இரண்டும் ஒன்றுதான்) ...

   Delete
  3. நீ உன் தலையை எடுத்துக்கொள்வதனால் எவனுக்கும் 10 பைசா பிரயோசனம் இல்லை. நீ அனு உலையை ஆதரிப்பதாலும் அதே தான். பைசா பிரயோசனம் இல்லாத செயல். இப்ப இருக்குற மாதிரியே நீ வெளிநாட்டு முதலாளிக்கு வாலாட்டு அதுவே போதும்...

   Delete
  4. கேள்வி கேட்டா பதில் சொல்லணும், பதில் தெரியலேனா தெரிஞ்சுக்க முயற்சி பண்ணனும் ... உன்ன மாதிரி பொத்தாம் பொதுவா நானும் ஜெயிலுக்கு போறேன்னு கமெண்ட் போடற நெறைய அனானிமிங்க இங்க மண்டை காஞ்சி சுத்திநிருக்குதுங்க...

   Delete
 10. Here , who ever opposing the atomic plants points are right. They would have done this protest at the time commisioning the plant in that region.At the time barely 10-500 ppl lived nearby plant. Now , many ppl moved nearby area to do the work/business as this become industry.One mooe thing, ppl were not there in that region ( around 15 years before) when KNPP started.Now, people came and settled near by areas in the mean time of construction and shouting like , it will spoil their life. First , they should done this protest/strike and all initially and now after investing around 15k crores , who will bear that amount. If the protestors are ready to collect that amount from nearby areas and also they should use one tubelight&fan per house. KArvind79

  ReplyDelete
 11. திரு கோபால் சாமி, கூடங்குளம் பற்றிய பாதுகாப்புக்கு நீங்கள் அந்த அறிவாளிகளை நம்ப சொல்கிறீர்கள்.இதை விட வேடிக்கை வேறெதுவும் இருக்காது. இந்தியாவில் மனித உயிர்கள் மலிந்து விட்டன. உலகின் குப்பைத்தொட்டி என்று தான் இனி இந்தியாவை அழைக்க வேண்டி வரும். இங்கே எதிர்பவர்கள் எல்லோரும் கை நாட்டு என்று நினைத்தீர்களா ?... அதே போன்ற அணு விஞ்ஞானிகள் தான் இந்த எதிர்பாளர்களுக்கும் ஊக்கமளிக்கிறார்கள் என்று தெரியுமா ?

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர் மானங்கெட்டவன், உதயகுமார் அனுவிஞ்ஞானியா ? சர்ச் பாதிரியார்கள் அனு விஞ்ஞானிகளா ?

   Delete
  2. அப்துல்கலாம் அணு விஞ்ஞானியா ?

   Delete
  3. அப்புதுல் கல்லாம் கூடங்குளத்தில் இறங்கி குட்டையைக் குழப்பி மீன் பிடித்தாரா ? மானங்கெட்டவனே! சர்ச்சு கைக்கூலி சொல்வது நம்புவீர்கள், அரசு அனுப்பும் விஞ்ஞானிகளை (அப்துல் கலாம் அல்ல...மற்றவர்கள்) நீங்கள் நம்ப மாட்டீர்கள். கேட்டால் ஃபூக்குசீமா, செருநோபில் என்பீர்கள்!

   இவ்வளவு நடந்துள்ளதே, ஃபூக்குசீமா அனு உலையை மூடிவிட்டார்களா ? யோசிக்கனும் மிஸ்டர் மானங்கெட்ட மரமண்டை...

   Delete
  4. என் பெயரை சொல்லி அழைத்ததற்கு நன்றி. நீங்கள் தான் இன்னும் அனாதையாகவே மன்னிக்கவும் அநாமதேயராக உள்ளீர்கள். அப்துல் கலாம் குட்டைய குழப்புனாரான்னு தெரியாது, ஆனா மத்திய அரசு சொல்ற அதே பொய்யை சொல்லி பல கோடி மக்கள் அவர்மேல வைச்சிருந்த நம்பிக்கையை இழந்துட்டாரு.

   ///இவ்வளவு நடந்துள்ளதே, ஃபூக்குசீமா அனு உலையை மூடிவிட்டார்களா ? யோசிக்கனும் மிஸ்டர் மானங்கெட்ட மரமண்டை...///

   மேதாவித்தனமா கேள்வி கேக்கறோம்னு நெனைப்பா... நான் மரமண்டையாவே இருந்துட்டு போறேன் ஆனா இந்த BBC - அப்படியில்லைன்னு நினைக்கிறேன்...

   http://www.bbc.co.uk/news/world-asia-17508657

   Delete
  5. மானம், உதயகுமாருக்கு அப்துல் கலாம் அனு விஞ்ஞானி தான்யா...அவர் ராக்கெட் விஞ்ஞானி, குறைந்தபட்சம் அவர் ஒரு விஞ்ஞானி! உதயகுமார் யார் ? ஒரு வெளிநாட்டுக் கைக்கூலி!

   Delete
  6. மறுபடியும் மரமண்டையென நிரூபிக்கிறீரே மானம்,
   Residents have demanded reactors not be turned back on after routine maintenance due to safety fears.

   அப்படி யென்றால் ரொட்டீன் மெயிண்டனென்ஸுக்காக மூடியிருக்கிறார்கள் என்று அர்த்தம். கூடங்குளத்தையும் மெயிண்டனென்ஸுக்காக மூடினால் உதயகுமாரும் அவனது உருத்துக் குமாரான மானங்கெட்ட மாங்காவும் பொத்திக்கொள்வார்களாக்கும் ?

   Delete
 12. அணு உலையிலிருந்து வெளிப்படும் சூடான நீரினால் மீன் வளம் பாதிக்கப்படலாம் என்பதாக் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில்-- குறிப்பாக அமெரிக்காவில் இப் பிரச்சினை உண்டு.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மித வெப்ப மண்டலத்தில் உள்ளவை. அவ்விடங்களில் கடல் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.ஐரோப்பிய நாடுகள் அருகே கடலில் ஒருவர் விழுந்தால் விறைத்த் உயிரிழக்கலாம்.

  இப் பின்னணியில் அந்த நாடுகளில் அணு உலைகளிலிருந்து வெளிப்படுகின்ற நீரின் வெப்பத்துக்கும் குளிர்ந்த கடல் நீருக்கும் இடையில் வெப்ப வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். கோடை காலத்தில் கடல் நீர் வெப்பமடையும். அவ்வித கால கட்டங்களில் கடல் நீர் வெப்பம் சற்றே உயரும் போது அணு உலைகளிலிருந்து நீரைக் கடலில் விடுவது குறித்து கட்டுப்பாடுகள் உள்ளன. இக் காரணத்தாலேயே சில சமயங்களில் வெப்ப நீரை விடுவதைக் குறைக்க அணு மின் உற்பத்தியையே குறைப்பது உண்டு. இதெல்லாம் அனல் மின் நிலையங்களுக்கும் பொருந்தும்
  இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கடல் நீர் அந்த அளவுக்கு மிகவும் குளிர்ச்சியானது அல்ல. அணு உலைகளிலிருந்து வரும் வெப்ப நீருக்கும் கடல் நீரின் வெப்பத்துக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமிராது. தவிர, அணு உலை நீர் கடலில் கலப்பது என்பது க்டலில் கரைத்த பெருங்காயம் மாதிரி.அணு உலையிலிருந்து அப்பால் பல கிலோ மீட்டர் தொலைவில் இந்த வித்தியாசம் எல்லாம் மறைந்து போய் விடும். அணு உலைக்கு மிக அருகில் கடல் க்ரை ஓரமாக மீன் குஞ்சுகள் பாதிக்கப்படலாம். அணு உலை கூடாது என்பதற்கு இது ஒன்று மட்டுமே காரணமாகக் கூற முடியாது. இந்தியாவில் மட்டும் ஏராளமான அளவுக்கு எரிவாயு கிடைக்குமானால் அணு உலைகளே தேவையில்லை. எரிவாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.அனல் மின் நிலையம், சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் அணு மின்சாரம் ஆகியவற்றில் உள்ள எந்த குறைபாடும் எரிவாயு மின்சாரத்தில் கிடையாது. எரிவாயு தேவையான அளவில் கிடைக்கவில்ல என்பது நமது துரதிருஷ்டமே

  ReplyDelete
 13. Foreign countries have Nuclear Plants, I agree.

  But both Foreign countries and we run Trains,
  What is the Accident rate there and in India???

  The have and they maintain properly.,
  We will have and we leave it to God to save us...

  ReplyDelete
  Replies
  1. Does it mean that we should stop running trains and go in bullock carts ?

   You have to make a choice. If you do not like it in India you are welcome to leave to whichever country you wish. Do not try to impose your stupid ideals on gullible indians. We wish to live in peace with 24X7 electricity and high speed trains. If you have problem with that you can G.T.F.O my country.

   Delete
  2. Mr.Anony, you don't have the rights to say to leave from the country... you guys can lick like a dogs for MNC's flesh...

   Delete
  3. GTFO my country...
   How dare u would say? Its my country.

   Try to understand what I'm trying to say.,
   Other countries run trains but they take "Safety Measures" and follow it properly.
   But we run trains and never care about the necessary "Safety Measures" which is more and more important than running faster trains....
   Just think if those safety measures are ignored as usual in the Nuclear plants?

   Delete
  4. I'm not a nuclear scientist, but I know the history, I have seen lot's of accidents because of carelessness. My only worry is if the same carelessness go in to this nuclear plants what will happen. These politicians will only say condolence after everything had happened. They don't care before something happens unless and otherwise it affects their vote bank.

   Delete
  5. guys understand something, The impact of nuke accident and train accident are totally different. The impact can stay for generations. please see the history.

   Delete
  6. mr. not a nuclear scientist,

   So what you say is, if safety measures are taken, its ok to run nuclear plant. is that right ?

   Accidents happen. What people should fight for is to put the responsibility on the proper place. If russia builds a nuclear plant, the russians should be responsible for accidents. The nuclear liability bill should be modified to make sure villagers feel safe. These are worthy causes to fight for. Elect your MP's and MLA's carefully and make them responsible in the event of accidents. You had more than a decade time. You did nothing. Now for the past 250 days you try and use church funds to whip up discontent in the minds of people against elected government.
   That is why, I have every right to say to you to get the F out of my country. You do not deserve to be treated as a citizen of my country. Let me tell you one more thing. The people like udhayakumar are alive just because its illegal to shoot them.

   Delete
  7. And you guys can lick like pigs the shit of church and who knows which country MNC's excreta...veli naattuk kuNdi nakkigal ellaam tamil nattil vanthu uyiredukkiraargal.

   Delete
 14. கூடுதலாக ஒரு ஆயிரம் கோடியை செலவழித்தால் இருக்கிற கூடங்குளம் உலையையே இயற்கை எரிவாயு முறையில் மின் உற்பத்தி செய்யும்படி மாற்றிக்கொள்ளலாம் என்கிறார்களே.. உண்மையா... அப்படியானால் ஆபத்தான அணுமின்சாரத்தை கைவிட்டு இந்த நடைமுறையை பின்பற்றலாமே!

  ReplyDelete
  Replies
  1. இல்லை. அப்படியெல்லாம் செய்ய முடியாது. மேலும் தேவையான எரிபொருள் கையில் இல்லை. அப்படியே வேண்டிய அளவு எரிபொருள் இருந்தாலும் அதைக்கொண்டு மற்றொரு அனல் மின் நிலையத்தைத்தான் கட்டவேண்டும். ஏனெனில் நம் மின் தேவை அவ்வளவு அதிகம்.

   Delete
 15. BULK PRODUCTION ( GENERATION ) OF ELECTRICITY IS POSSIBLE ONLY IN THERMAL / NUCLEAR / HYDEL POWER STATIONS ONLY.
  I DO NOT KNOW HOW PEOPLE ARE TALKING ABOUT ALTERNATIVE SOURCE. SOLAR, TIDAL, TEMP DIFFERENCE BETWEEN INNER AND OUTER SEA WATER ARE SO FAR NOT USED FOR BULK GENERATION.
  OUR EXPENDABLE RESOURECES LIKE COAL /OIL /GAS ARE VERY LIMITED. IF WE WANT TO APPROACH THE MATTER HONESTLY, WE ARE HAVING ONLY TWO SOLUTIONS.
  GO FOR NUCLEAR POWER
  OR TAKE STRONG STEPS TO REDUCE THE ELECTRICITY CONSUMPTION.
  WE ARE DECEIVING OURSELVES WHEN WE TALK ABOUT ALTERNATIVE RESOURCES.

  GOPALASAMY SAUDI ARABIA

  ReplyDelete
 16. //மொத்தத்தில் இங்கே இருப்பது, கையில் இருக்கும் இயற்கை வளங்கள் அனைத்தையும் நக்கி நக்கிக் கடைசித்துளிவரை தின்கிற, சந்ததிகளுக்கு விஷத்தையும் பாலைவனத்தையும் விட்டுச்சென்றாலும் சரி என எண்ணுகிற, லாபவெறி பிடித்த, மத்தியவர்க்கம். அவர்களின் அரசு.

  குட்டிபோட்டதுமே வேட்டைக்குப் போகமுடியாவிட்டால் பன்றி சொந்தக்குட்டியைத் தின்னும். சோம்பலால் சொந்தக்குழந்தையைத் தின்கிறது நம் சமூகம்.//

  ReplyDelete
 17. AGAIN ABOUT SEA WATER TEMPERATURE.
  SEA WATER TEMPERATURE IS NOT CONSTANT THROUGHOUT THE YEAR.
  IN GULF,(MIDDLE EAST)AT WINTER, SEA WATER TEMP DROPS TO
  10°C. IN SUMMER IT REACHES MORE THAN 40°C. NATURE ITSELF NOT MAINTAINING CONSTANT TEMP AND THE LIVING BEINGS IN SEA WATER ADJUST THEMSELVES TO THE CHANGING ENVIRONMENT.
  WHAT Mr. RAMADURAI WROTE IS CORRECT. THAT SHOWS WE HAVE TO LISTEN FIELD EXPERTS ONLY.
  GOPALASAMY SAUDI ARABIA

  ReplyDelete
 18. சி. ஜெயபாரதன் சொல்கிறார்:
  ஜப்பானின் 50 அணுமின் உலைகள் சோதிக்கப்பட்டு செம்மையா கின்றன நிறுத்தப்பட்ட அணு உலைகள் தீய்ந்த எருக்கோல்களை வெப்பத் தணிப்பு செய்து இயங்கிக் கொண்டுதான் உள்ளன. நிரந்தரமாய் நிச்சயம் அவை மூடப்படா.

  சி. ஜெயபாரதன்.


  How are they compensating the deficit? Cola based plants or Hydro power plants? Can you please share deatils?

  //1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?//

  ReplyDelete
  Replies
  1. ஜப்பானின் மின் தேவையில் 30 முதல் 50 சதவிகிதம் அனு உலை கொடுத்துவந்துள்ளது. எங்கிருந்து வெறும் 2% தான் தற்பொழுது கொடுக்கிறது என்ற புள்ளிவிபரம் கிடைத்தது ?

   Delete
 19. One more to go in Japan...

  http://www.bbc.co.uk/news/world-asia-17508657

  Japan has shut down another nuclear power station, bringing it a step closer to suspending atomic energy, following the Fukushima disaster.

  Only one of the 54 nuclear reactors remains in operation, and it is due to be switched off in May.

  ReplyDelete
 20. japan did not closed its reactors but its has temporarily shut down its reactors for the maintenance .

  its planning to have stress test on all its reactors before it resumes the operation.

  Japan may face power shortage shortly. till now they are able to manage it with planning wtih 150% production.

  Mr Gnani is spreading false news about the japan reactors.

  ReplyDelete
 21. //How are they compensating the deficit? Cola based plants or Hydro power plants? Can you please share deatils?//

  Japan production ratio is 150 %. they always maintain this ratio so there is no big impact on after temporarily shutting down the nuclear reactors. at the same time japan is planning to restart its old fossil fuel based power stations. but doubts are not yet cleared about the efficiency of those stations. because it all closed before a decade and not maintained properly.

  japan power commission is expecting some severe power shortage in coming days and its requesting all the users to follow strict procedures to save power.

  ReplyDelete
 22. Japan shuts down another nuclear reactor, only one of 54 left post Tsunami
  Mon, March 26, 2012 19:21 IST

  http://businesstoday.intoday.in/story/japan-tsunami-earthquake-effects-nuclear-plants-reactors/1/23477.html?google_editors_picks=true

  Another Japanese nuclear reactor was taken off line for maintenance on Monday, leaving the country with only one of its 54 reactors operational following last year's devastating earthquake and tsunami.

  The last reactor is expected to be shut down by early May, raising the possibility of power shortages across the nation as demand increases in the hot summer months.

  The No. 6 reactor at the Kashiwazaki-Kariwa complex was taken off line early Monday by the Tokyo Electric Power Co. The utility also runs the plant in Fukushima, northeast of Tokyo, that suffered meltdowns, explosions and radiation leaks after the March 11 quake and tsunami.

  Japanese reactors are taken off line every 13 months for regular checks. With concerns over nuclear safety high following the Fukushima crisis, none of the reactors that have been shut down for checks, and none that were already off line at the time of the disaster, have been allowed to restart.

  The last reactor, on the northern island of Hokkaido, will be shut down in May. The timing for when any reactors will be restarted remains unclear.

  Before the crisis, Japan depended on nuclear power for one-third of its electricity. Japan's government wants to restart reactors as soon as "stress tests" prove they are safe, but faces strong public opposition. Local leaders, fearing a political backlash, are reluctant to give their approval.

  Authorities have required all reactors to undergo the stress tests and make necessary modifications to improve safety. The stress tests, similar to those used in France and elsewhere in Europe, are designed to assess how well the plants can withstand earthquakes, tsunamis, storms, loss of power and other crises.

  Prime Minister Yoshihiko Noda has promised to reduce Japan's reliance on nuclear power over time and plans to lay out a new energy policy by the summer.

  In the meantime, Japan has temporarily turned to oil and coal generation plants to make up for the shortfall, and businesses have been required to reduce electricity use to help with conservation efforts.

  ReplyDelete
 23. //
  மீனவர்கள் சார்பாகப் போராடி இழப்பீடு வாங்கிக் கொடுக்க அவர்களால் இனி முடியாது. அதற்கு வேறு யாரேனும் தலைமை தாங்கவேண்டியிருக்கும்.
  //

  உண்மை தான். போராட்டம் ஞாயமான போராட்டமாகவும் இருக்கும். இதை இந்துத்வா சக்திகள் செய்தால் சர்ச்சுப் பாதிரியார்களுக்கு இரட்டை அடியாகவும் அது விழும்.

  ReplyDelete
 24. கை கூலிகள்…….
  தனக்கு வந்தால்தான் வலியும் நலியும் அவரவர்களுக்கு தெரியும்.
  தன் வீட்டில் ஒரு இழப்பு ஏற்பட்டால்தான் இழப்பின் அருமை ஒவ்வொருவருக்கும் புரிகிறது.
  எங்கெங்கு எந்தெந்த பிரச்சினைகள் வருகிறதோ, அதில் சம்பந்த படாதவர்களுக்கு மற்றவையெல்லாம் பொழுதுபோக்கு.
  எந்த பிரச்சனைகளையும் எதிராளியின் நிலையிலிருந்து சீர்தூக்கி பார்த்துவிட்டு, மனிதன் என்று செயல்படுகிறானோ அன்று தான் உலகம் சிறக்கும்.
  அணு உலையிலும் இதுதான் நடக்கிறது. வாதம். எதிர்வாதம். நான் என்ன நினைக்கிறேனோ, அதுதான் சரி. எவன் செத்தால் எனக்கென்ன, எவன்- எவள் அடி வாங்கினால் எனக்கென்ன, எவன் பசியால் வறுமையால் ,கொடுமையால் பாதிக்கப்பட்டால் எனெக்கென்ன…, எனக்கு என் நலம், சுயநலம் முக்கியம். எனக்கு என் சந்தோசம் மட்டுமே முக்கியம்.இது தான் இங்கு நடக்கிறது.
  பிழைப்பு வாதம் ஒன்றை தவிர யாரிடமாவது, அது தலைவர்களாகட்டும், அல்லது தொழில் அதிபர்களாகட்டும் அல்லது தனி மனிதர்களாகட்டும் யாரிடமாவது நல்ல பண்புகள் நிறைந்து இருக்கிறதா?
  காஷ்மீர் பண்டிட்கள் அகதிகலாகும்போது ஏற்படும் வருத்தம், ஈழ தமிழர்கள் அகதிகளாகும் போது வரமாட்டேன்கிறது. பார்பான்- பாப்பாத்தி -பூணூல் என்று பேசினாலே கோவம் சிலருக்கு மூக்கு மற்றும் சூத்துவரை வருகிறது. ஆனால் ஈழத்தமிழன் மட்டும் இலங்கையின் இறையாண்மையை ஒற்றுமையை காக்க, இனவெறி மற்றும் அடக்குமுறை, பாலியல் வன்முறை சித்ரவதை உட்பட எல்லாவற்றையும், சோ அங்கிள் சொல்வதைபோல, அடி உதை வாங்கி கொண்டு அடங்கி நடக்க வேண்டும்.
  ஒரு நண்பர் தலையை எடுத்து கொள்வதால் பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் யாருக்கும் இல்லை என பதிவிடும் போது, சோ அங்கிள், இந்து ராம் போன்றவாலேல்லாம் இலங்கைக்கு ஆதரவா இருப்பதால் மட்டும் எத்தனை பத்து பைசாக்களுக்கு பிரயோஜனமாக ஆக போகிறது ? இந்தியாவுக்கோ அல்லது தமிழனுக்கோ என்ன பிரயோஜனம் இருந்து விடபோகிறது?
  சிலர் கலாம் பெஸ்ட் என்கிறார்கள். இதே கலாம் இந்த நாட்டின் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு என்ன கிழித்திருக்கிறார் என சொல்லமுடியுமா?
  சுதந்திர நாட்டில் கருத்துரிமை எல்லோருக்கும் இருக்கிறதென்றால் போராடும் உரிமை உதய குமாருக்கும் உண்டு . உதயகுமாருக்கு என்ன தெரியும் என ஒரு பிடுங்கி கேட்கிறார். அவருக்கு என்ன தெரியுமோ அதைவிட அறிவுஜீவிகள் என சொல்லப்படுகிறவர்கள் வரை ஒப்பிட்டால் உதயகுமார் பெஸ்ட் என்பதே என் கருத்து.
  நேற்று வரை விஜயகாந்த்- கருணாநிதிக்கும் ராமதாசுக்கும் எதிரி என்பதால் பார்பனீயம் , இட்லிவடை, தின மலம் வரை கருணாநிதியையும் செயலலிதாவையும் உண்டு இல்லன்னு கேக்கிறார் பார் -அவன் வீரன்யா என புகழ்ந்தோமே அது உண்மையெனில் உலகமே உற்று நோக்கும் விஷயத்தில் வல்லரசான, டு ஜி முதல் பல்லாயிரம் கோடிகள் வரை நடந்த ஊழல்களை வழிநடத்தும், யாருமே அசைத்து பார்க்க முடியாத லட்சோப லட்சம் மக்களை கொன்று குவித்ததற்கு உடந்தையாக இருந்த, அகிம்சை இந்தியாவை எதிர்த்து, மக்கள் பலம் இல்லாவிட்டால் உதயகுமாரால் நிற்க முடியுமா ? எதையும் கூசாமல் கொச்சை படுத்துவது நம் மக்களுக்கு இயல்பான ஒன்று. தமிழகத்தில் எல்லா பத்திரிக்கைகளும் கூடங்குளம் பிரச்சனைகளையும் ,உதயகுமாரையும் எப்படி செய்தி வெளியிடுகின்றன என்பதும் தினமலம் எப்படி செய்தி வெளியிடுகிறது என்பதும் ஒவ்வொருவரும் அறிவர். யோசித்து பாருங்கள் …, மக்களிடம் அகிம்சையை போதித்து அதன்படி கொத்தடிமையாய் மட்டுமே வாழுங்கள்… என போதிக்கும் ஒரு பத்திரிகை, பத்திரிக்கா தர்மத்துக்குட்பட்டு செயல்படுகிறதா என்பதை அவாள் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம். தான் எழுதும் எல்லா புழுதிகலுமே அங்காரம் பெறுவதாக நினைத்துகொள்ளும் கர்வமும், எதிராளிகளிடம் அத்தகைய மீடியாவை வெல்லும் வலு இல்லாததால் மட்டுமே-அக்ரகாரத்தில் தான் மட்டுமே தனித்து நிற்கிறோம் என்பதை மறந்து , தினமலம், திமிருடன் தினம் தினம் குசு விட்டு நாற்றத்தை கிளப்புகிறது. அதனால்தான் கூடம்குளம் பிரச்சினைக்கு செலவழிக்கப்பட்ட தொகை பத்தாயிரம் கோடி வீணாகலாமா என வருத்தப்படுகிறது. படுகிறார்கள் . ஆனால் அதே அளவுகோல் சேது சமுத்திர திட்டத்தில் செலவழிக்க பட்டால் மட்டும் எடுத்துகொள்ளமாட்டார்கள்.

  ReplyDelete
 25. இங்கு மட்டும் உதயகுமார் தூக்கிலிடபடவேண்டும் . செலவழித்த தொகை போராடும் மக்களிடம் வசூலிக்க படவேண்டும் . ஆனால் சேது திட்டத்தை பாழ் படுத்தும் சுப்பிரமணிய சாமி, ராம கோபாலன் போன்றோர்கள் புனிதர்கள். இந்துத்வா கும்பலை எவனாவது தூக்கிலிடவேண்டும் என நியாயமாக குரல் கொடுக்கிறார்களா? உதயகுமார் கிறிஸ்டின் என்றும் அமெரிக்க கைக்கூலி என்றும் கிளப்பி விடுகிறார்கள். அப்படியெனில் தினமலம் யாருடைய கைக்கூலி? மற்றவர்கள் நிதானித்து இந்த பிரச்சினைகளை அனுஹும்போது இது மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு கூவுகிறதே , ஏன்? யாருக்காக …?
  மின்சார பிரச்சனைகளுக்கு கூடங்குளமே தீர்வு என்கிறார்கள். மின்சார தேவையை திட்டமிட தெரியாத, சிக்கனமாக பயன் படுத்த தெரியாத, பயன்படுத்த கற்று தராத அறிவுஜீவிகள்தான், அவாள்கள்தான் இந்த நாட்டை வழி நடத்துகிறார்கள். இன்னமும் ஆட்சி செய்கிறார்கள். மின்சாரத்தை கிரிக்கெட் மற்றும் ஹோர்டிங்க்ஸ் எனப்படும் அட்வர்டைஸ்மென்ட் உட்பட, பல வழிகளிலும் உறுஞ்சி –திருடி, விவசாயத்தை வஞ்சிக்கிறார்கள். கோடி கணக்கான ஏழைகள், விவசாயிகள் மின்சாரம் இல்லாமல், பேன் இல்லாமல், ஏசி, இன்டர்நெட் இல்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் மின்சாரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த, மேற்கண்ட வசதிகளை, துறக்க , சுற்றுப்புற சூழலை காக்க, அவாள் ரெடியா ?
  மக்களே ஒன்று மட்டும் நிச்சயம். அனல் மின் நிலையங்கள் எல்லாம் மற்ற மாநிலங்களில் தூக்கி அடிக்கப்பட்ட போது , அவை கடந்த ஆட்சியில் இரத்தின கம்பளங்கள் விரித்து வரவேற்கப்பட்டன. அனல் மின் நிலையங்களின் பாதிப்புகள் இனிதான் தெரிய போகின்றன. இதுவே இப்படியெனில் அணு மின் பாதிப்புகள் வந்த பின் தான் தெரியும். ஒரு போபாலின் பிரச்சினைகளையே தீர்க்க முடியாத, இந்த இந்திய அரசியல் வர்க்கம், ஊழலில் மட்டும் கை கோர்த்துக்கொண்டு நாடாளு மன்றத்தில் நாடகமாடும். உங்களை இதிலிருந்தோ அல்லது வேறு பிரச்சனைகளிலோ எங்கிருந்து காப்பாற்ற போகிறது? . அப்போது உங்களின் ஒப்பாரி சத்தமும் , ஓலமும் மட்டுமே கேட்க்கும்.
  இப்போது உதய குமார் தோற்றிருக்கலாம். ஆனால் இனி மீண்டும் ஒரு அணு உலை தமிழகத்தில் அமைக்கும் எண்ணத்தை- தமிழகத்தை சுடுகாடாக்கும் திட்டத்தை நினைக்க கூட பார்க்க முடியாத சூழலை உருவாக்கியிருகிறது. அந்தவகையில் தமிழ் மண்ணிற்கும் உதயகுமாருக்கும் இது மாபெரும் வெற்றிதான். அதுவரை நரிகளின் ராஜியங்களுக்கு கொண்டாட்டம்தான். தைரியம் இருந்தால் கேரளாவிலோ, கர்நாட்டகாவிலோ, வங்காளம், ஆந்திரம் ,ஓடிஷாவில் ஒரே ஒரு அணு மின்சார நிலையத்தை துவக்க அறிவிக்குமா இந்த அரசாங்கம்?
  பத்ரி கூட மீனவ மக்களின் நல வாழ்வு பற்றி கொஞ்சம், பெரியமனசு பண்ணி இழப்பீடு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார் .பரவாயில்லை . அம்மா கூட போடியில் கல்லூரி அமைத்து அங்குள்ள மக்களுக்கு நல்லது செய்துள்ளார்கள் .ஆனால் வட மாவட்டங்களில் அம்மாவுக்காக பஸ்ஸை கொளுத்தி தூக்கு மேடைக்கு காத்திருக்கிறார்களே அந்த மக்களுக்கோ அல்லது நெய்வேலி மின்சாரத்துக்காக தங்களது வாழ்வாதாரங்களை இழந்து இன்னமும் பிச்சை காரர்களாகவும் , நெய்வேலிக்கு பஞ்சம் பிழைக்க வந்த அதிகாரிகளிடம் உரிமைக்கு பிச்சை எடுக்கிறார்களே, அந்த மக்களுக்காக பரிந்து பேசத்தான் இப்பூஉலகில் யாருமே இல்லை-தினமும் முடை நாற்றத்தை தவிர .
  அணுவின் பேராலும் அனல் மின் பேராலும் நிலக்கரியின் பேராலும் இங்கு அடிக்கப்படும் கொள்ளைகள் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அதேபோல் ட்டு ஜி ஊழலை எதிர்த்துவிட்டு அதனால் விளைந்த லூப், யுனினார் போன்ற கம்பெனிகளின் விளம்பரங்கள் எந்த ஊடகங்களுக்கும் கசக்கவில்லை. ஏனெனில் அது வேறு . இது வேறு. நாய் விற்ற காசு குலைக்குமா...? பட்ட காலிலே படும் . கெட்ட தமிழ் மண்ணே கெடும். தமிழன் விதி நொந்து சாவதை தவிர வேறு என்ன சொல்ல? தர்மம் ஒரு நாள் வெல்லும் .

  ReplyDelete
 26. இவரைப் போன்றவர்கள் எண்ணங்கள் ஒரே திசையில் பயணிக்கின்றன நாட்டுக்கு நல்லதல்ல உடனே அமெரிக்காவிற்கு சென்று படித்துவிட்டு வரட்டும் எங்கு அணு ஆயுதங்கள் இல்லை உதயகுமாரைத் தவிர மற்றவர்கள் மனிதர்களிலையா வாழ்க ஜனநாயகம்

  ReplyDelete