Thursday, March 22, 2012

Lose-Lose deal

ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில், போரின்போது இலங்கை மனித உரிமைகளுக்கு எதிராக நடந்துகொண்டதாக அந்நாட்டைக் கண்டித்து, அந்நாடு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. பெரும்பான்மை நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சில நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன.

இந்தியா முக்கியமாக இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. பொதுவாக இந்தியா இலங்கையின் பக்கம் இருக்கும். ஆனால் இம்முறை தமிழகக் கட்சிகளின் இடைவிடாத நெருக்குதலால் இந்தியா வேறு வழியின்றி இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது. ஆனால் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கை இல்லாத காரணத்தால் இந்த வாக்களிப்பால் இந்தியாவுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதே சமயம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

திமுகவைத் திருப்திப்படுத்த என்று இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால் இதற்காக திமுகவைத் தவிர யாரும் அரசைப் பாராட்டப் போவதில்லை. இலங்கை கோபித்துக்கொண்டுவிடக் கூடாதே என்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அவசர அவசரமாக வெளியிட்ட அறிக்கையைப் படிக்கும் எந்தத் தமிழுணர்வாளரும் இந்திய அரசை எப்போதும் திட்டுவதுபோலத் தொடர்ந்து திட்டுவார். அதே சமயம் அந்தக் கடிதத்தை சாதாரண சிங்களவர் யாரும் பார்க்கப் போவதே இல்லை. இலங்கை அரசோ, இந்தியா தன்னை முதுகில் குத்திவிட்டது என்று கோபத்தில் இருக்கும். எனவே இலங்கை அரசும் இலங்கையின் மக்களும் இந்தியாவை எதிரியாகப் பாவிப்பார்கள். சில வன்முறை நிகழ்வுகளும் நடக்கலாம்.

இந்திய அரசு எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கலாம். இலங்கையை ஆதரிப்பது என்ற முடிவை எடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வது என்று யோசித்திருக்கவேண்டும். உதாரணமாக திமுக ஆட்சியிலிருந்து விலகினால் அதற்கு பதிலாக என்ன செய்வது என்பதை யோசித்திருக்கவேண்டும்.

மாறாக, நிஜமாகவே மனம் உறுத்தி, மனித உரிமையை முன்வைப்பதாக முடிவெடுத்திருக்கலாம். அப்படியென்றால், தெளிவாக, ஆணித்தரமாக தன் வழியைத் தான் மாற்றிக்கொள்வதாகச் சொல்லியிருக்கலாம். முதலில் நாட்டு மக்களிடம் தன் வழிமாற்றத்தைப் பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டு, அதற்கு ஏற்றாற்போல மாறப்போகும் புவி அரசியல் விளையாட்டில் எப்படிக் காய் நகர்த்துவது என்பதைத் தெளிவாக யோசித்திருக்கலாம்.

இப்படி இதையும் செய்யாமல், அதையும் செய்யாமல், எல்லோருக்கும் முன் ஜோக்கராக நிற்பதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

14 comments:

 1. சரியான கருத்து..

  நம் வெளியுறவுக்கொள்கை பெரும்பாலும் வணிகம்,சுயலாபம்,ஆட்சியில் அமரும் கட்சிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது..இல்லை..மாற்றப்படுகிறது..

  அடுத்த நாட்டின் உரையை வாசிக்கும் அறிவுள்ள அமைச்சர்களையும், Pornகளை சட்டசபையிலே பார்க்கும் பெற்றுள்ளது நம் நாடு..:(:(

  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் சொன்ன கருத்து..

  "உலகில் 80 நாடுகளில் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.ஆனால் ஒரு சிங்களவர் கூட அவ்வாறு இல்லை"..

  ReplyDelete
 2. இந்த UN resolutionஆல ஒண்ணும் ஆவப்பொறதில்லங்கறது தெரிஞ்ச விஷயம்... ஒரு உப்பு போறாத resolutionக்கு எதிரா ஓட்டு அளிக்கறது இன்னிக்கு தேதில இந்தியாவுக்கு வெளி நாடுகள்ள கெட்ட பேர் வாங்கி தரும்... ஆதரவா ஓட்டளிச்சா ஒண்ணும் பெரிசா ஆயிடாது... இதுதான் இங்க லாஜிக்.... இதுல ஒரு lose-lose dealஉம் இல்ல.... இது உலக நாடுகள் எடுக்கும் cheap moral escape route... இந்தியாவும் அதுல ஒரு அங்கம்... அவ்வளவுதான்... இந்த meaningless resolutionல இந்தியா மட்டும் meaningfulla ஒண்ணும் செஞ்சிருக்க முடியாது...

  ReplyDelete
 3. Cho has clearly stated in Deccan Herald Interview (which has reappeard in the latest Thuglak) that the motion by UNHRC will not have any impact on Sri Lanka and it cannot impose any strict action on it. He has also told that only India can force Sri Lanka for proper resettlement of Tamils of the island.

  ReplyDelete
 4. A country's foreign policy should be dictated by its long term and strategic security interests. For a country of its size, india appallingly lacks such a policy. This is the main reason why we are not taken seriously on many international fora. The astonishing aspect of this is, our IFS is always populated by the creme of the UPSC. If our foreign ploicy (or the lack of it) is the work of this crowd, then it is both astonishing and appalling.

  ReplyDelete
 5. இந்தியாவிற்கு தேவைப்படும் இலங்கை நட்பை விட இலங்கைக்கு தேவைப்படும் இந்திய நட்பு ரொம்ப முக்கியம். ஆகையால் முதுகில் குத்தினாலும் வாலை ஆட்டிக்கொண்டு இந்தியா பின்னாடி இலங்கை வரும். இந்தியாவும் தோள்மேல் கை போட்டுக்கொண்டும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் 'ஸ்டெடியாக' ஈடுபடுவார்கள்.
  அனேகமாக இன்று இல்லை நாளை தமிழக மீனவர் மேல் ஒரு தாக்குதல் எதிர் பார்க்கலாம் என் எண்ணுகிறேன்.

  ReplyDelete
 6. //ஒரு உப்பு போறாத resolutionக்கு எதிரா ஓட்டு அளிக்கறது இன்னிக்கு தேதில இந்தியாவுக்கு வெளி நாடுகள்ள கெட்ட பேர் வாங்கி தரும்...//

  மிஸடர் சாமி நீங்கலாம் குழந்தை குட்டி பெத்தவங்க தான... ?குழந்தைகள, பெண்கள, முதியவர்கள, கொன்று குவித்த ஒரு நாடு செய்தது தப்புன்னு சொல்றதுக்கு இந்த ஐ.நா அறிக்கைன்னு நிணைச்சு இந்த கருத்த நீங்க அமோதிக்க கூடாதா...?

  ஆனா நானும் கண்ல விளக்கெண்ணெய் விட்டு எல்லா இணையபகுதிகள்ல.. பாக்குறேன் சாமி இந்த படித்த பார்ப்பன கூட்டம் இருக்கே ஈழ விஷயத்துல மிக கீழத்தரமான அரசியல பிரமாதமா எழுதுறாங்க.. கருத்து சொல்றாங்க.. உங்கள சொல்லி ஒரு குத்தம் இல்ல தமிழகத்துல உறுதியான கொள்கை பிடிப்பு உள்ள ஓரு தலைவன் இல்லாத வரை நரமாமிசம் தின்கிறவர்கள் போல நீங்கள் பேச வேண்டியதுதான். மனசாட்சியில்லாத மனித பிண்டங்களா வாழுறதுல நமக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் காட்டாது.

  ReplyDelete
  Replies
  1. Why don't you read the article fully and comment? You people are trained to pick certain lines out of context and then pass the judgement as per your preconceived notion.

   Delete
 7. இலங்கை சீனா பக்கம் சாயும். ஆகவே இத் தீர்மானத்தை இந்தியாஆதரிக்கலாகாது என்று ஒரு தரப்பினர் வாதித்து வந்தனர்.இந்த வாதம் அர்த்தமற்றது.ஏனேனில் இலங்கை ஒவ்வொரு பிரச்சினையிலும் ‘ சீனா பக்கம் போய் விடுவோம்’ என்று சொல்லி மிரட்டிக் கொண்டிருப்பார்கள்.
  இந்திரா காந்தி இருந்தவரை சரியானதொரு கொள்கையைப் பின்பற்றி வந்தார்.அதன் பிறகு வந்த ம்த்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு இலங்கை அரசு, இந்திய அரசு, பிரபாகரன் கையாண்ட கொள்கை, தமிழக அரசியல் கட்சிகளின் போக்கு என பல காரணங்கள் உண்டு. அயர்லாந்துப் பிரச்சினை தீரப் பல ஆண்டுகள் ஆகியது போலவே இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர மேலும் பல ஆண்டுகள் ஆகலாம்.

  ReplyDelete
 8. This is truly a political stand by TN parties. Plain stupid vote bank politics.
  If they really wanted to anything to the people, one example I could give is force Navy to patrol our waters better, to protect our fishermen. Did they do? I do not mean, writing letter, and just making statements through paper or stage. there are many ways to force the central government to act decisively.
  2nd example that can given is help Sri Lankan government with aid, specifically targeting the Tamil population and their areas to create infrastructure, job opportunities etc. And TN parties, could have really came out with positive actions.
  But these wont get them votes, as it could take a longer time, hard work, and could happen behind the glaring eyes of media. Whereas, a vote at UNHRC is glaring media grabbing opportunity by US, India and other countries, and TN parties simply are suckers to such action. Nothing more.

  ReplyDelete
 9. tamilnadu parties never stand united for tamilnadu ppls basic needs. for example the railway dept has granted only 60cr for the much needed double gauge conversion line Vilupuram to dindukal via tichy, virudhachalam. the project cost is arroudn 1100 Cr. if this project goes on this phace the estimate would be doubled and the project would be completed on 2024.

  these tamil nadu parties never fight for the basic need of tamilnadu and poking nose in the srilankan issue.

  ReplyDelete
 10. //இந்த படித்த பார்ப்பன கூட்டம் இருக்கே ஈழ விஷயத்துல மிக கீழத்தரமான அரசியல பிரமாதமா எழுதுறாங்க.. கருத்து சொல்றாங்க.. உங்கள சொல்லி ஒரு குத்தம் இல்ல தமிழகத்துல உறுதியான கொள்கை பிடிப்பு உள்ள ஓரு தலைவன் இல்லாத வரை நரமாமிசம் தின்கிறவர்கள் போல நீங்கள் பேச வேண்டியதுதான். மனசாட்சியில்லாத மனித பிண்டங்களா வாழுறதுல நமக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் காட்டாது.// very much untrue. wherever you put your opinions without face that will be against parpanar!!! it is like lunatic and highly objectionable. //நமக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் காட்டாது//you said it correctly, without us.

  ReplyDelete
 11. தமிழ்க மீனவர் பிரச்சினை ஓயாத துயரமாக இருந்து வருகிறது.முதலாவதாக இந்திய ஆதிபத்தியத்துக்கு உட்பட்ட கடல் எல்லைகள் மீறப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். இந்திய எல்லைக்குள்ளான கடல் ப்குதியில் இலங்கை ரோந்துப் படையின்ர நுழையாதபடி தடுக்கப்பட வேண்டும்.
  1957ஆம் ஆண்டாக இருக்கலாம். பிரிட்டனுக்கும் நார்வேக்கும் மீன் பிடி தகராறு ஏற்பட்ட போது பிரிட்டன் தனது போர்க் கப்பல்களை அனுப்பி மீனவர் பக்கம் நின்றது. அவ்வளவு தான் பிரச்சினை விரைவில் தீர்ந்தது.

  ReplyDelete