Monday, July 09, 2012

கேணி - கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் ஒரு சந்திப்பு

பத்திரிகையாளர் ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இணைந்து கேணி என்ற நிகழ்வை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை நடத்திவருகிறார்கள். தொடர்ந்து மூன்றாண்டுகளாக நடந்துவரும் நிகழ்வு இது. நான் இதுவரையில் மூன்றே மூன்று நிகழ்வுகளுக்குத்தான் போயிருக்கிறேன். கே.கே.நகரில் ஞாநியின் வீட்டின் பின்புறம் ஒரு கேணிக்கு அருகில் திறந்த வெளியில் மரங்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடல் நிகழ்ச்சி இது.


நேற்று நடந்த நிகழ்வில், உயிர்மை இதழின் ஆசிரியர், உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளர், கவிஞர் மனுஷ்யபுத்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் பேசிய சிலவற்றை மட்டும் நான் சிறு வீடியோ துண்டுகளாக எடுத்தேன். கீழே நீங்கள் காணப்போவது கொஞ்சம் மட்டுமே. அதற்குமேல் பல கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

இதுபோன்ற நிகழ்வுகளை அங்கே நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து வரும் பல நூறு வாசகர்களில் யாரேனும் தொடர்ச்சியாக ஒலி/ஒளிப்பதிவு செய்து இணையத்தில் சேர்க்கலாம். ஆனால் யாரும் செய்வதாகத் தெரியவில்லை.

***

மனுஷ்யபுத்திரனின் அறிமுக உரையிலிருந்து ஒரு பகுதி




நவீன கவிதைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்விக்கு




எழுத்தாளனுக்கு ஏன் சமூகப் பார்வை இருக்கவேண்டும் என்ற கேள்விக்கு




உங்கள் கவிதைகள் புரிவதில்லையே என்பதற்கான பதில்




எழுத்தாளர் என்பவர் யார் என்ற கிளைக்கேள்விக்கு பதில். ஜெயமோகன்-மனுஷ்யபுத்திரன் மற்றும் சாரு நிவேதிதா-மனுஷ்யபுத்திரன் இடையேயான பிரச்னைகள் பற்றி. எழுத்தாளர்களுக்கான தளம் சுருங்குகிறதா என்பது பற்றி.




எழுத்தாளர்களுக்கான தளம் சுருங்குகிறது என்றால், அதனை எப்படி விரிவாக்குவது? எழுத்தாளர்களுக்கு இடையேயான உறவு.




தமிழ் இலக்கியத்தில் சுஜாதாவின் இடம் எது?




மார்க்ஸியம், கேபிடலிசம் தொடர்பாகப் பேசப்பட்ட பலவற்றை நான் பதிவு செய்யவில்லை.

இறுதியாக, கவிதை வாசிப்பு. ‘நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?’ என்ற கவிதை:



12 comments:

  1. I was looking for the videos of this meeting.
    Thanks, thanks a lot

    ReplyDelete
  2. someday we must have these functioned broadcast live on net

    ReplyDelete
  3. வாத்தியாரை பற்றி நச்சென்று நாலு வார்த்தை சொன்ன மனுஷ் அவர்களுக்கு நன்றி.... இனியாவது இலக்கிய நச்சர்கள் அடங்கவேண்டும்...

    ReplyDelete
  4. நன்றிகள் பல பல...பங்கேற்க முடியாத என் போன்றவர்களுக்கு இந்த வீடியோக்கள் பார்த்து ஒரு மன மகிழ்வு....
    well done...

    ReplyDelete
  5. Thanks a lot for sharing. Those were very original, deep answers from the writer. Response on Sujatha is class.

    ReplyDelete
  6. தவிர்க்கமுடியாத ஒரு கவிதையோடு நிறைவுசெய்திருக்கிறார். ஒருநாளில், ஒரு மனிதனுக்கு, இதைவிடவும் செய்வதற்கு என்ன மிச்சமிருக்கமுடியுமென்று யோசித்தால், கவிதையின் நோக்கம் புரியும். கலந்துகொள்ள முடியாத வருத்தத்தை உங்கள் பதிவு கொஞ்சம் குறைத்திருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  7. ’இதுபோன்ற நிகழ்வுகளை அங்கே நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து வரும் பல நூறு வாசகர்களில் யாரேனும் தொடர்ச்சியாக ஒலி/ஒளிப்பதிவு செய்து இணையத்தில் சேர்க்கலாம். ஆனால் யாரும் செய்வதாகத் தெரியவில்லை.’

    talksintamil.com அல்லது கிட்டதட்ட இதே பெயர் கொண்ட ஒரு தளத்தில் சில நிகழ்வுகளின் ஒலிப்பதிவு உள்ளது. அவ்வாறு இவற்றை ஒலி/ஒளிப்பதிவு செய்து இணையத்தில் சேர்க்க வேண்டுமா என்று கூட சிலர் கேட்கலாம்.ஏனெனில் இவை ஆய்வு உரைகள் அல்ல,இவற்றில் பேசுபவர்கள் இது போன்ற கூட்டங்களுக்காக பிரத்தியேகமாக உரை தயாரித்து வாசிப்பது இல்லை.recycle செய்யப்படுவதே அதிக்ம்.கேணி கூட்டங்களில்
    வ.கீதாவின் உரை விதிவிலக்காக உள்ளது.அரைத்த மாவை அவர் அங்கே அரைக்கவில்லை.
    ஒருவர் பேசலாம்,வந்திருப்போர் கேள்வி கேட்கலாம் என்ற அளவில்தான் அவற்றின் தரம் உள்ளது.ஜெயமோகன்,ஞாநி,மனுஷ்யபுத்திரன்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இது போன்ற கூட்டங்களில் என்ன சொல்வார்கள்,என்ன கருத்துக்களை முன் வைப்பார்கள் என்பதை வாசகர்கள் ஊகிக்க முடியும்.எனவே இவற்றை இணையத்தில் சேர்க்க தேவை என்ன, இவர்கள் அச்சு ஊடகம் போன்றவற்றில் தொடர்ந்து கருத்து சொல்லிவரும் போது எதற்காக அவர்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  8. someday we must have these functioned broadcast live on net

    that will sheer wastage of bandwidth.

    ReplyDelete
  9. Sad to note the animosity between these litterateur. When you involve in reading, thinking, & writing, in other words when you involve in producing literature, and the pursuit of knowledge, naturally it would reflect in the way you conduct yourself. You would have the maturity and wisdom to appreciate the differences of opinions & views, the clash of ideas and certainly you won't let them affect your personal relationships or friendship. When you get wise due to your literary work you would lose all the illusions about yourself and become humble and tolerant. On the contrary our litterateur show stupid ego, pride & prejudice, rudeness and what not. I'm wondering if litterateur is the right term to address our folks or should we need to coin a new term to portray them more accurately.

    ReplyDelete
  10. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?
    கவிதையில் ஒரு வரி மிஸ்ஸிங்??
    "சுஜாதா இலக்கியவாதியா இல்லையா என,
    ஒரு கால நூற்றாண்டிற்கும் மேலாக
    ஆராய்ந்துகொண்டு!!"

    ReplyDelete