Tuesday, July 24, 2012

ஆறுமுகனேரி ஆண்டோ பீட்டர்

சாஃப்ட்வியூ நிறுவனத்தை உருவாக்கி நடத்திவந்த, 45 வயதான ஆண்டோ பீட்டர், இரு வாரங்களுக்குமுன் அகால மரணம் அடைந்தார். ஞாயிறு அன்று இரங்கல் கூட்டம் ஒன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற்றது.

ஆண்டோ பீட்டரை எனக்குக் குறைந்தது பத்து வருடங்களுக்கு மேலாகத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் இணைய மாநாடுகளில் சந்திப்பது மட்டுமின்றி, அவ்வப்போது வேறு இடங்களிலும் சந்தித்துக்கொள்வதுண்டு. கணித்தமிழ் சங்கத்திலும் நான் உறுப்பினர். அவர் அழைத்து இருமுறை கணித்தமிழ் சங்கத்தில் பேசியிருக்கிறேன். அவருக்குத் தெரிந்த பலரில் நானும் ஒருவன். ஆனால் நெருக்கமான நண்பர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவருடைய நிறுவனத்தைப் பற்றியோ, அவருடைய வேலைகளைப் பற்றியோ, கனவுகளைப் பற்றியோ அவர் என்னிடம் பேசியது கிடையாது. நானும் அவரிடம் கேட்டது கிடையாது. அவருடைய சொந்த வாழ்க்கை, மனைவி, மக்கள் என்று எதுபற்றியும் எனக்குத் தெரியாது.

சாஃப்ட்வியூ நிறுவனம் தமிழ் எழுத்துருக்களைத் தயாரித்துவந்தது. தமிழ் ஊடக நிறுவனங்கள் பலவும் அவருடைய மென்பொருளையும் எழுத்துருக்களையும் பயன்படுத்திவந்தன. ஆண்டோ பீட்டருக்கு தமிழ் ஊடகங்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.

எழுத்துருவில் ஆரம்பித்த ஆண்டோ பீட்டர் விரைவில் DTP எனப்படும் தொழிலை இளைஞர்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கினார். அதன்மூலம் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெற உதவினார். பேஜ்மேக்கர் போன்ற மென்பொருளைக் கொண்டு தமிழில் புத்தகங்கள், செய்தித்தாள் போன்றவற்றை அச்சுக்குத் தயாராக்குவதுதான் இந்த வேலை. இதன் தொடர்ச்சியாக, CSC என்ற கணினிப் பயிற்சி நிறுவனமும் ஆண்டோ பீட்டரின் சாஃப்ட்வியூ நிறுவனமும் இணைந்து பல மையங்களில் வரைகலைப் பயிற்சியைத் தர ஆரம்பித்தனர். இது இன்றும் தொடர்கிறது.

தமிழ்க் கணிமை, தமிழ் வழிக் கணினிப் பயிற்சி ஆகியவற்றில் ஆண்டோ பீட்டர் ஆர்வமாக இருந்தார். கணினி தொடர்பான பல தமிழ்ப் புத்தகங்கள் அவர் பெயரில் வெளியாகியுள்ளது. தமிழ்க் கணிமை தொடர்பாக இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் வழியாகக் கணினி மென்பொருள்களைக் கற்றுக்கொள்வது பற்றித் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். தினமணி செய்தித்தாளில் அவருடைய நடுப்பக்கக் கட்டுரைகளை நான் படித்துள்ளேன்.

அவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்சிக்காகப் பதிந்திருந்தார் என்று தகவல்.

புத்தகக் கண்காட்சிகள், கணினிக் கண்காட்சிகள் அனைத்திலும் சாஃப்ட்வியூ நிறுவனத்தையும் ஆண்டோ பீட்டரையும் நீங்கள் கட்டாயம் பார்த்திருப்பீர்கள். இந்நிறுவனம் ஆத்திச்சூடி, திருக்குறள் என்று தொடங்கி, மென்பொருள்களைக் கற்றுக்கொள்வதற்கான குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் கணினி மென்பொருள்களின் பயன்பாட்டைக் கற்றுக்கொடுக்கும் பல அச்சுப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

ஆண்டோ பீட்டர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்துதான் நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக அவர் பதற்றமடைந்தோ, கோபமடைந்தோ நான் பார்த்ததில்லை. அரசின் பல்வேறு அலுவலர்கள், அமைச்சர்கள், அறியப்பட்ட கல்வியாளர்கள் ஆகியோருடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. கணித்தமிழ் சங்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். உத்தமம் (INFITT) அமைப்பின் செயற்குழுவில் இருந்தார். தானாகவே முன்வந்து வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யக்கூடியவராகவே அவர் என் நினைவுக்கு வருகிறார்.

கணினியில் தமிழ் வருவதற்காகப் பாடுபட்ட பலரில் அவரும் ஒருவர். கணினியில் தமிழிலேயே புழங்கலாம் என்பதைப் பரப்புவதில் ஈடுபட்ட சிலரில் முக்கியமானவர்.

ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிவிட்டதென்றால் உடலில் பல்வேறு கோளாறுகள் தோன்றுவது இயற்கை. தன் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு, நண்பர்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டு, தன் உடலை அலட்சியப்படுத்தியிருக்கிறார் ஆண்டோ பீட்டர்.
தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகனேரி என்ற சிற்றூரிலிருந்து சென்னை வந்து, தன் வாழ்க்கையில் வெகுவாக முன்னேறியவர் ஆண்டோ பீட்டர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘களம் இறங்கியவர்கள்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பங்குகொண்ட காணொளியை இரங்கல் கூட்டத்தின் தொடக்கத்தில் போட்டுக் காட்டினார்கள். வெகு இயல்பான திருநெல்வேலிப் பேச்சு. அதிலிருந்துதான் அவரைப் பற்றிப் பலவற்றை நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.

இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட பெருந்திரளைக் கொண்டு ஒன்றைக் கண்டிப்பாகச் சொல்லலாம். ஆண்டோ பீட்டர் தமிழ்க் கணிமைக்காக என்ன சாதித்தாரோ இல்லையோ, பெரும் நண்பர் குழாமைச் சாதித்திருக்கிறார். அவர்கள் அவரைத் தொடர்ந்து நினைவில் வைத்திருப்பார்கள்.

[சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில பகுதிகளை நீக்கியிருக்கிறேன். --பத்ரி]

13 comments:

  1. அவருடைய ஆன்மா அமைதியடைய ஆண்டவனை வணங்குகிறேன்.

    இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றும் யாரோ ஒருவர் அல்லது பலரது உழைப்பினால் கிடைத்தது என்பதை நாம் உணர்வதுதான் ஆண்டோ பீட்டர் போன்றவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

    உண்மைதான். உடல் நலம் பேணுவது மிகமிக அவசியம். இப்பொழுதெல்லாம் முப்பது வயதைத் தாண்டி விட்டாலே ஆண்டுக்கொருமுறை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது இன்றியமையாதது.

    ReplyDelete
  2. நீங்க ஒரு avid ப்லாகர்னு தெரியாமப் போச்சே!

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை சார்..
      தமிழ்மணத்தில் இணைக்காத வலைப்பூ'வாளர்கள் நிறைய உண்டு !
      :))

      Delete
    2. உங்களைக் காணோமேனு தேடிக்கிட்டிருந்தேன்.
      recently மோகன்ஜியைச் சந்திச்சப்போ உங்களைப் பத்திப் பேசினோம்..

      தமிழ்மணம் சமாசாரமா இதெல்லாம்? good to know.

      Delete
  3. || பெரும் நண்பர் குழாமைச் சாதித்திருக்கிறார் ||

    ஆண்டோ பீட்டரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது;ஆனால் குடிப் பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு அதிக நண்பர்கள் வாய்ப்பதில் இக்காலத்தில் வியப்பதற்கு ஒன்றுமில்லை !

    100 ல் 97 சதவிகிதப் பேர் இன்று கொண்டாட்டத்தை குடிப்பதில்தான் அடைவதாக நினைப்பதன் விளைவு இது !!!!

    ReplyDelete
    Replies
    1. [சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில பகுதிகளை நீக்கியிருக்கிறேன். --பத்ரி]

      97 சதவிகிதப் பிரிவில் இருந்தாலும்,அதைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதில்,பிரபலமாக இருப்பவர்களுக்கும் பிரச்னை இருக்கிறது...

      :))

      Delete
  4. Very unfortunate a good man left so early. It's very tough on his family; his spouse got to compensate for his absence, and his kids got to grow without father's love, guidance, and protection. Family men should know their health is their family's health.

    In the west many alcoholics live longer. I think our "modern" life-style is terrible. Most of the married folks don't do regular physical exercises. All sit on soft-chairs from the morning to evening at work, or watch TV, and browse internet. For all needs we have machines like washing machine, dish-washer etc. Hardly we have any physical activity. We don't even walk to bus-stand, we use cars form our door-step to office. We also consume lots of junk food. Our traditional rasam, vatha-kulambu, sambar, thuvaiyal don't match our status; we want western junk.

    When I travelled in europe, I saw 55-year old Cambridge professors cycle to work wearing helmut - daily 5-10 miles. They say it keeps them physically fit, lowers pollution, keeps roads safer, and saves energy & money. The Nobel Laureate Venki Ramakrishnan cycles to work and he doesn't own a car. Can we see a local school teacher in bicycling to work here - his wife won't allow him and neighbours won't respect him.

    We gave up our traditional healthy living, and in the name of silly "modern" life-style we blindly copying few aspects of western junk (which they have started giving up) without realizing the truth. Many in the west start using indian spices as they have lot of medicinal values.

    Folks over thirty need to be encouraged to help their spouses in the kitchen & shopping, to play with kids, to do some stretchings once an hour in their work places. Atleast every two hours and jump few times - a good healthy exercie.

    My prayers to GOD for strength and care to Mrs. Peter, the kids, and his family.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை, வெள்ளையர்களே சொன்னால்தான் நமது மதிப்பு நமக்கு புரியும் போல.

      Delete
  5. I agree with Narayan Viswam.

    Kumar.

    ReplyDelete
  6. //Very unfortunate a good man left so early. It's very tough on his family; his spouse got to compensate for his absence, and his kids got to grow without father's love, guidance, and protection. Family men should know their health is their family's health.

    In the west many alcoholics live longer. I think our "modern" life-style is terrible. Most of the married folks don't do regular physical exercises. All sit on soft-chairs from the morning to evening at work, or watch TV, and browse internet. For all needs we have machines like washing machine, dish-washer etc. Hardly we have any physical activity. We don't even walk to bus-stand, we use cars form our door-step to office. We also consume lots of junk food. Our traditional rasam, vatha-kulambu, sambar, thuvaiyal don't match our status; we want western junk.

    When I travelled in europe, I saw 55-year old Cambridge professors cycle to work wearing helmut - daily 5-10 miles. They say it keeps them physically fit, lowers pollution, keeps roads safer, and saves energy & money. The Nobel Laureate Venki Ramakrishnan cycles to work and he doesn't own a car. Can we see a local school teacher in bicycling to work here - his wife won't allow him and neighbours won't respect him.

    We gave up our traditional healthy living, and in the name of silly "modern" life-style we blindly copying few aspects of western junk (which they have started giving up) without realizing the truth. Many in the west start using indian spices as they have lot of medicinal values.

    Folks over thirty need to be encouraged to help their spouses in the kitchen & shopping, to play with kids, to do some stretchings once an hour in their work places. Atleast every two hours and jump few times - a good healthy exercie.

    My prayers to GOD for strength and care to Mrs. Peter, the kids, and his family.//

    Well said sir

    ReplyDelete
  7. //ஆண்டோ பீட்டர் தமிழ்க் கணிமைக்காக என்ன சாதித்தாரோ இல்லையோ, //

    //கணினி தொடர்பான பல தமிழ்ப் புத்தகங்கள் அவர் பெயரில் வெளியாகியுள்ளது. //

    உமது உள்ளத்தின் அடியில் என்ன எண்ணம் என்பது இந்த வரிகளில் இருந்து வெளியாகிறது.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete