Friday, August 31, 2012

குஜராத் தீர்ப்பு - உடனடி வினை

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து மாநிலமெங்கும் நடந்த வன்முறையில் மதவெறிக் கூட்டம், பல முஸ்லிம்களை வெட்டிக் கொன்றது. பல இடையூறுகளுக்கு இடையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் ஒன்று, நாரோடா பாடியா என்ற இடத்தில் 33 குழந்தைகள் உட்பட 97 பேர் கொல்லப்பட்ட வழக்கு.

இந்த வழக்கில் இரு முக்கியக் குற்றவாளிகள், பாஜக எம்.எல்.ஏவாக இருக்கும் மாயா கோட்னானி என்ற பெண் மருத்துவர். மூன்று ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்துள்ளார். மற்றொருவர் பாபு பஜ்ரங்கி என்ற பஜ்ரங் தளத் தலைவர்.

முஸ்லிம்கள்மீதான தாக்குதலில் பாஜகவினர், வி.எச்.பியினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள், பஜ்ரங் தள்காரர்கள் என்று ஒரு பெரும் குழுவே ஒன்று சேர்ந்து, திட்டமிட்டு, கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது வழக்கின் தீர்ப்பில் தெளிவாகியுள்ளது.

இந்த இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் முக்கியமானது. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் (இரண்டு தண்டனைகள் - ஒன்று 18 ஆண்டுகள், அடுத்தது 10 ஆண்டுகள்). பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் முழுதும் சிறையில் இருக்கவேண்டிய தண்டனை.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றமும், அடுத்து உச்சநீதிமன்றமும் செல்வார்கள் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஆனால் தீர்ப்பில் பெரும் மாறுதல் இருக்கச் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.

இந்தத் தீர்ப்புகள் இந்தியாவுக்கும் இந்தியக் குடியாட்சிக்கும் மிக முக்கியமானவை. இந்தியாவில் பல இடங்களில் மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. இனி நடந்தால், சட்டம் மிகக் கடுமையாக நடந்துகொண்டு, சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு, அவர்களுடைய மத, அரசியல் பின்னணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடுமையான, மிக மிகக் கடுமையான தண்டனையைத் தரும் என்ற precedent-ஐ இந்தத் தீர்ப்பு முன்வைக்கிறது.

நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன். ஆனால் இம்மாதிரியான கடுமையான சிறைத்தண்டனையை முழுதாக ஆதரிக்கிறேன். மேலும் பல்வேறு குற்றங்களுக்கும் இதைப்போன்ற கடுமையான, நீண்டகால ஆயுள் தண்டனையைப் பரிந்துரைக்கிறேன்.

அத்துடன், பல குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை தரும்போது அவை ஒரே நேரத்தில் (concurrently) இயங்கும் என்று பொதுவாக அளிக்கப்படும் தீர்ப்புகளுக்கு மாறாக, ஒன்றன்பின் ஒன்றாக (sequentially) இயங்கும் என்ற தீர்ப்பும் வரவேற்கத்தக்கது. இதையும் நீதிபதிகள் குறிப்பாகப் பின்பற்றத் தொடங்கினால், நீதியின்மீதுள்ள பயம், பொது வன்முறை குறைவதிலும், அறவே நீங்குவதிலும் எதிரொலிக்கும்.

7 comments:

  1. //முஸ்லிம்கள்மீதான தாக்குதலில் பாஜகவினர், வி.எச்.பியினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள், பஜ்ரங் தள்காரர்கள் என்று ஒரு பெரும் குழுவே ஒன்று சேர்ந்து, திட்டமிட்டு, கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது வழக்கின் தீர்ப்பில் தெளிவாகியுள்ளது.//

    What about the Islamic murderers who burnt Hindu women and children, and lynched men ? (Total number of Hindus killed in the violence is more than 300 and the total number of Hindus who fled their houses is 10,000)

    What punishment the Supreme Court has given to those who killed Hindus?

    What punishment should be given to them 'also'?

    When both parties involved in violence, giving punishment only to one party is not justice.

    It is a bad precedence, which will make Hindus more angry, and instead of stopping the violence, will create bigger violences.

    You have not covered this aspect in this article.

    .

    ReplyDelete
    Replies
    1. Hey Anand, whats wrong with you man. Get rid of your communal, rightwing backward mentality, and learn to comment without sense.

      Delete
  2. Agree completely. However these imprisonment should involve productive contribution of the imprisoned to social welfare and not treated as political prisioners

    ReplyDelete
  3. நீதிபதியின் லட்சணம் 500 கோடி லஞ்சம் கேட்டது. படித்தவன் ஏமாற்றினால் ஐய்யோ என்று போவான் பாரதி சொன்னது. சில படித்த பொறுக்கிகள் தான் நாட்டை ஏமாற்றுகின்றனர்.

    ReplyDelete
  4. மதுரைவீரன்Sat Sep 01, 03:12:00 PM GMT+5:30

    "குஜராத் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து" - கோத்ரா இரயில் எரிப்பு, கோத்ரா இரயில் எரிப்பு அப்பிடீன்னு குஜராத் கலவரம் பற்றி பேசும் எல்லா முற்போக்காளர்களும் போற போக்குல சொல்லீட்டுப் போறீங்களே? அப்பிடீன்னா என்னா பத்ரீ? அது எதுவும் பண்டிகைக்கு பட்டாசு விட்ட கதையா?

    ReplyDelete
  5. கோத்ரா ரயில் குண்டுவெடிப்பு பார்ப்பனியத் திமிரால்தான் நடந்தது. பார்ப்பனியம் செய்த கொடுமைகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. Mr. Era.Kathirvel, so long as we have morons of first order like you in abundant number, we'll have large number of porukkis as our MLAs, MPs, Ministers, ...

      Delete