Thursday, February 07, 2013

ஆங்கில மாயை

ஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80 நலங்கிள்ளியின் மின்னஞ்சல் முகவரி enalankilli@gmail.com

விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா?’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்?’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா?’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட்டுரை எழுதுகிறார்.

அந்தக் கட்டுரைத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, மேலும் சில மாற்றங்களுடன் உருவானதே இந்தப் புத்தகம் ‘ஆங்கில மாயை’.

நலங்கிள்ளி பல தமிழர்களிடமும், அதுவும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வருவோரிடமும், ஆங்கிலம் தொடர்பாக உள்ள நம்பிக்கைகளை இவ்வாறு பட்டியலிடுகிறார்:
 • தமிழ்போலன்றி, கற்றுக்கொள்ள எளிதாக 26 எழுத்துகள் மட்டுமே உள்ள மொழி.
 • தமிழ்போலன்றி, உலகப் பொதுமொழி.
 • தமிழ்போலன்றி, மனிதர்களிடம் உயர்வு, தாழ்வு கற்பிக்காத சனநாயக மொழி
 • தமிழ்போலன்றி, பாலியல் வேற்றுமை கற்பிக்காத பெண்ணிய மொழி
 • தமிழ்போல் பழமை பேசும் காட்டுமிராண்டி மொழியன்று, நவீன காலத்துக்கான அறிவியல் மொழி
 • தமிழ்போல் பத்தாம்பசலி மொழியன்று, மூட நம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவு மொழி
 • அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த மொழி
இந்தக் கருத்துகளை எதிர்கொள்வதே புத்தகத்தின் பெரும் பகுதி. இதில் மூன்று கருத்துகளை மட்டும் விரிவாக எடுத்துக்கொண்டு தனித்தனி அத்தியாயங்களை அவற்றுக்காகச் செலவிடுகிறார். ஆங்கிலம் ஜனநாயகத் தன்மை கொண்ட மொழியா? ஆங்கிலம் பெண்ணிய மொழியா? ஆங்கிலம் அறிவியல் மொழியா?

இவை பற்றி உண்மையிலேயே நீட்டி முழக்கவேண்டுமா என்று சிந்தித்தால் இந்த விவாதம் சில நேரங்களில் அவசியமே என்று படுகிறது. ஆங்கிலம் உண்மையிலேயே ஜனநாயகத் தன்மை கொண்ட மொழி என்றால், ஆங்கிலம் பேசும் பகுதிகளில் இனவேற்றுமை சமீப காலங்கள் வரை பரவியிருந்தது ஏன் என்பதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். அந்தக் கருத்துகள் மொழியிலும் பரவியிருப்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதேபோல பெண்ணடிமைக் கருத்துகளில் ஆங்கிலேயர்கள் எந்த அளவிலும் பின்தங்கி இருக்கவில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் பெண்கள் தமக்கான உரிமைகளை அந்நாடுகளில் பெற்றார்கள். இருப்பினும் பெண்ணடிமைக் காலத்தில் அக்கூறுகள் ஆங்கில மொழியில் பரவி, இன்றளவும் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம். இதேபோல ஆங்கிலம் பல்வேறு சொற்களை உருவாக்குவதற்கும் ரோம, கிரேக்க, நார்டிக் புராணங்களின் கட்டுக்கதைகளை நம்பியிருப்பதையும் நலங்கிள்ளி சுட்டிக் காட்டுகிறார்.

தமிழகத்தில் ஆங்கில மொழிமீதான மோகம் ஏன் ஏற்பட்டது என்பதை நலங்கிள்ளி இவ்வாறு விளக்குகிறார். மெகாலே இந்திய மொழிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலத்திலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து...
உடல் உழைப்பு செய்யாது ஒடுக்குண்ட மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திவந்த பார்ப்பனர்கள் பிரித்தானிய ஆட்சியில் ஆங்கில முகமூடியை மாட்டிக்கொண்டு தங்களைப் பெரும் அறிவாளிகள்போல் காட்டிக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு நன்கு சேவகம் செய்யத் தொடங்கினர். இந்தப் போலி முகமூடியைக் கிழித்தெறிந்து பார்ப்பனர்களின் மூடத்தனங்களை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, அதே முகமூடியைத் தமிழர்களும் அணிந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டார் பெரியார். (பக்கம் 132)
தொடர்கிறார் நலங்கிள்ளி.
உழைக்கும் மக்களை ஊருக்கு வெளியே துரத்தியடிக்கும் பார்ப்பனியந்தான் அம்மக்களின் தாய்மொழியாம் தமிழையும் கல்வி நிலையங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் இருந்தும் துரத்தியடித்தது. ஆனால் மக்களின் மொழியைப் புறந்தள்ளுவதற்கு மெகாலேயும் பார்ப்பனர்களும் சொன்ன அதே காரணங்களைப் பெரியாரும் சொன்னார்.
1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். 2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும். 3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது. (பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)
இதில் பார்ப்பனர்களைப் பற்றியும் பார்ப்பனியம் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ள விவரணங்களை இப்போதைக்கு விட்டுவிடுவோம். தமிழர்களின் ஆங்கில மோகம் இப்படியாக வந்தது: முதலில் மெகாலே அறிமுகப்படுத்துகிறார். அடுத்து பார்ப்பான் இறுக்கிப் பிடித்துக்கொள்கிறான், பிறகு பார்ப்பானை எதிர்க்கும் பெரியாரும் அதே கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார். எனவே தமிழகம் ஆங்கில மோகம் கொள்கிறது.

பெரியாரின் மேற்படிக் கருத்துகளை நலங்கிள்ளி விவரமாக மறுக்கிறார்.

“ஆங்கிலந்தான் உலகத்தின் ஒரே மொழி என்று நம்பி ஆங்கிலத்தின் பின்னாலேயே தமிழர்கள் ஓடியதால்தான் தமிழர்கள் விசாலமான அறிவின்றித் தரந்தாழ்ந்து வாழ்ந்துவருகிறார்கள்” என்கிறார் நலங்கிள்ளி. (பக்கம் 137). இது முழுதான உண்மையாக எனக்குத் தெரியவில்லை. இதுவும் விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒரு கூற்று. மேலும், “ஆங்கிலம் ஒன்றே அறிவின் ஒளி என நம்பித் தமிழர்கள் பல பத்தாண்டுகளாய் ஓடினார்கள். நடந்தது என்ன? இன்று உலக அறிவு எதையும் அதைப் படைத்தவர் எழுதிய மூல மொழியிலிருந்து நமக்கு நேரடியாக மொழிபெயர்த்துத் தருவதற்கு ஆளில்லை” என்கிறார் நலங்கிள்ளி. (பக்கம் 137).

ஆனால் இன்று உலக மொழிகள் பலவற்றுக்கும் இதே நிலைதான். இந்திய மொழிகள் அனைத்திலும் இதே நிலைதான். பல மொழிகளையும் மதிக்காத எல்லாச் சமுதாயங்களிலும் இந்நிலைதான் இருக்கும். எனவே இதனைத் தமிழுக்கு மட்டுமான குறையாகக் காட்ட முடியாது.

***

புத்தகத்தின் அடிப்படைக் கருத்து எனக்கு ஏற்புடையதே. எம்மொழிக்கும் தனியான ஏற்றம் என்பது எதுவும் இல்லை. ஒரு மொழி, அதனை உருவாக்கிய மக்களின் அன்றைய கலாசாரத்துக்கு ஏற்ப சொற்களை உருவாக்கிக்கொண்டது. அந்தச் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளும் ஒவ்வாத கருத்துகளும் இருந்தால் அது அம்மொழியில் பிரதிபலித்தது. காலப்போக்கில் அக்கருத்துகள் தவறு என்று அச்சமுதாயம் கருதும்போது, அச்சொற்களை நீக்கும், அல்லது அவற்றின் பொருளை மாற்றும்.

சில மொழிகளின் சில கூறுகள் கற்க எளிதாக இருக்கும், ஆனால் வேறு சில கூறுகள் கற்கக் கடினமாக இருக்கும். ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான், ஆனால் உச்சரிப்புக்கு ஏற்ப ஸ்பெல்லிங்கைச் சரியாக எழுதுவது கடினம். தமிழில் ஹிந்தி அல்லது பிற இந்திய மொழிகளில் இருப்பதுபோல அதிக எழுத்துகள் இல்லாவிட்டாலும் ஆங்கிலத்தைவிட அதிகம் (உயிர்மெய் சேர்த்து). ஆனால் ஸ்பெல்லிங் என்ற சிக்கல் இல்லை (ன-ண-ந, ர-ற தவிர்த்து). இலக்கணங்களின் நிறைய மாறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் பல தனித்தன்மைகள் உள்ளன. ஒரு மொழி நம் தாய்மொழியாக அமைந்துள்ள ஒரே காரணத்தாலேயே அந்த மொழி வளம் பெறவேண்டும் என்று நாம் உழைக்கவேண்டும். ஒரு மொழியை விடுத்து இன்னொரு மொழியைக் கற்பது எளிதல்ல. அப்படியே ஒரு சிலருக்கு அது எளிதாகிவிட்டாலும், ஒரு சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அது எளிதல்ல. இதில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தம் தாய்மொழியைக் கைவிடும் பட்சத்தில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கடும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தில் உலக அறிவு அனைத்தும் வருகிறது என்றால் ஆங்கிலேயர்கள் ஆரம்பக் கட்டத்தில் உலக அறிவு அனைத்தையும் முயற்சி செய்து ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றார்கள். அதேபோலவே ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும், ரஷ்யர்களும், கொரியர்களும், சீனர்களும் செய்தார்கள். தமிழர்கள் அதனைச் செய்யாமல் எளிதாக ஆங்கிலத்துக்குத் தாவிவிடலாம் என்று நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். தனிப்பட்ட முறையில் சில பல தமிழர்கள் தப்பிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் பல மொழிகளைக் கற்றுக்கொண்டுவிட முடியும். ஆனால் அனைத்துத் தமிழர்களாலும் முடியாது. ஒரு மொழியை ஒட்டுமொத்தமாகத் துடைத்துவிட்டு மற்றொரு மொழியை அந்த இடத்தில் விதிப்பது எளிதான காரியமல்ல. அப்படிப்பட்ட செயல்களால் மக்கள் இரண்டுங்கெட்டானாக அலையவேண்டியிருக்கும்.

இந்தப் புத்தகத்தின் குறைபாடுகளாக நான் காண்பது கீழ்க்கண்டவற்றை:

(1) பார்ப்பனியம் - பார்ப்பனர் என்பதாகப் பிரித்து, பார்ப்பனியம்தான் கொடியது, அதனை பார்ப்பனர்கள் அல்லாதோரும் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லிவிட்டு, பின்னர் பார்ப்பனியம் என்ற ஆதிக்கக் கருத்தியலை எதிர்ப்பவர்கள் சிலர். ஆனால் நலங்கிள்ளியைப் பொருத்தமட்டில் அந்த வித்தியாசமே தேவையில்லை. பார்ப்பனர்கள் நயவஞ்சகர்கள். பார்ப்பனர்கள் அடாவடி செய்பவர்கள் என்று தொடங்கி பக்கம் பக்கமாக எழுதுகிறார். அவருடைய அரசியல் கருத்தாக்கத்துக்கு இவையெல்லாம் அவசியம். இவை தொடர்பாக அவருடன் ஓர் உரையாடலை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றால் அவரிடம் நான் விவாதிப்பதாக உள்ளேன். பார்க்கலாம்.

(2) ஆங்கிலத்தின் உயர்ச்சி என்று பிறர் சொல்வதாகச் சில கருத்துகளை முன்வைத்து, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஆங்கில மொழியும் குப்பைதான் என்பதாக நிறையப் பக்கங்களைச் செலவழிக்கிறார். ஆனால் உண்மையில் எந்த மொழியும் அந்தக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் குறை குற்றங்களுக்குப் பொறுப்பாக முடியாது; அவர்களுடைய உயர்வுக்கும் பொறுப்பாக முடியாது. இந்தக் கருத்தை நலங்கிள்ளி வெளிப்படுத்துகிறார். என்றாலும், அவர் ஏன் இத்தனை பக்கங்கள் ஒதுக்கி ஆங்கில மொழியைக் கிண்டல் செய்யவேண்டும்?

(3) எத்தனையோ காரணங்களால் இன்று ஆங்கிலம் முன்னணி மொழியாக இருக்கிறது. தமிழ் அப்படி இல்லை. எப்படி தமிழின் நிலையை உயர்த்தி, தமிழில் கலைச் செல்வங்களைப் பல மொழிகளிலிருந்தும் கொண்டுவந்து சேர்ப்பது, அதற்கான உணர்வை தமிழ் கல்விப்புலத்தில் எப்படிக் கொண்டுவருவது என்பது பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.

(4) இப்போதைய ஆங்கில மோகத்துக்கான அடிப்படைக் காரணம், நடைமுறை வாழ்வியல்; ஒரு நல்ல வேலை கிடைக்க அரைகுறை ஆங்கில அறிவாவது வேண்டும் என்ற தவறான கருத்தை மக்கள் மனத்திலிருந்து எப்படிப் போக்கடிப்பது என்று எந்த விவாதமும் இல்லை. ஆங்கிலத்தைக் கீழ்மைப்படுத்தி மக்களை அதனிடமிருந்து பிரிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழில் படிப்பது எளிது, அதன்மூலம் ஆங்கிலத்தில் ஒன்றைத் தெரிந்துகொள்வதைவிட வேகமாகத் தெரிந்துகொள்ள முடியும், எனவே வேலையிலும் சிறந்து விளங்கலாம் என்பதை வெறும் வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. அதற்கான அடிப்படைச் செயல்முறை வேலைகளில் இறங்கவேண்டும். அதற்கு அரசியல் அதிகாரம் இல்லாமல் முடியாது. அதற்கான செயல்திட்டம் பற்றி அனைவரும் யோசிக்கவேண்டும்.

15 comments:

 1. பத்ரி மிக ஆழமாக ஆங்கில மாயை வாசித்துள்ளார் அந்த வகையில் ஆரோக்யமான ஒரு விவாத கலத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்.நலங்கிள்ளி, பத்ரி அவர்களின் 4வது பத்தி குறித்து அளிக்கும் பதிலில்தான் விரிவான விவாத கலம் ஆரம்பாமாக உள்ளதாக கருதுகிரேன்.

  ReplyDelete
 2. There is a popular notion that education in India was monopolized by the Brahmins; but the British data itself destroys this myth completely. This interested lie was first spread by the missionaries and the British rulers and the colonized mind of many Indian intellectuals still continue to sing their tune. But the data reveals a different story. It tells us that out of the total number of 175,089 students, both male and female, elementary and advanced, only 42,502 were Brahmins (24.25%); 19,669 were Vaishya students (about 11%); but 85,400 were Shudras (about 48.8%); and still 27.516 more were "all other castes", meaning castes even lower than the Shudras including the pariahs (15.7%). Thus the higher castes were only about 35% and the Shudras and other castes were about 65% of the total Hindu students. If we also include the Muslims who were about 7% of the total Hindu and Muslim students, then the share of the Brahmins was even less.

  We have a table showing the caste-wise division of all male school students, both in absolute numbers and in percentage, of all the 20 districts of Madras Presidency. The data shows that the share of the Brahmins in certain areas was indeed very low. For example, in Seringapatam, it was only 7.83% in Madura 8.67%; in North Arcot, Brahmin boys were 9.57%, while the Shudras and "other castes" were 84.46%.

  Even in higher learning, non-Brahmins were not unrepresented. In Malabar, out of 1,588 scholars of Theology, Law, Astronomy, Metaphysics, Ethics and Medical Science, only 639 were Brahmins, 23 Vaishyas, 254 Shudras and 672 "other castes". Only in the Vedas and Theology did the Brahmins have a near-monopoly, as the Shudras and the "other castes" had in other branches of advanced learning like Astro-nomy and Medical Science. In Astronomy, out of a total of 806 scholars, Brahmins were only 78, Vaishyas 23, Shudras 195, and other lower castes 510. In Medical Science, the share of the Brahmin scholars was only 31 out of a total of 190. The rest belonged to the Shudras and "other castes".

  According to the Survey of Indigenous Education in the Province of Bombay (1820-1830), Brahmins constituted only 30% of the total scholars in that province.

  Adam tells the same story about Bengal and Bihar. In the five districts he investigated, the total number of Hindu students was 22,957. Out of these 5,744 were Brahmins, or about 25%. Kayasthas were about 12%. Students belonging to 95 castes find representation in his Report. It includes 66 ChanDals, 20 Muchis, 84 Doms, 102 Kahars, and 615 Kurmis.

  As teachers, the Brahmins were even less represented. Out of a total of 2,261 teachers in these districts, Brahmins were only 208, or about 11%. In this region Kayasthas were the teachers par excellence. They were 1,019 in number, or a little less than half the total. Other teachers belonged to other 32 castes. ChanDals had six, Goalas had five, Telis had eleven; while Rajputs had only two, and Chhatri and Kshetriya taken together had only three.

  ReplyDelete
 3. Sir Thomas Munro, Governor of Madras, ordered a mammoth survey in June 1822, whereby the district collectors furnished the caste-wise division of students in four categories, viz., Brahmins, Vysyas (Vaishyas), Shoodras (Shudras) and other castes (broadly the modern scheduled castes). While the percentages of the different castes varied in each district, the results were revealing to the extent that they showed an impressive presence of the so-called lower castes in the school system.

  Thus, in Vizagapatam, Brahmins and Vaishyas together accounted for 47% of the students, Shudras comprised 21% and the other castes (scheduled) were 20%; the remaining 12% were Muslims. In Tinnevelly, Brahmins were 21.8% of the total number of students, Shudras were 31.2% and other castes 38.4% (by no means a low figure). In South Arcot, Shudras and other castes together comprised more than 84% of the students!

  In the realm of higher education as well, there were regional variations. Brahmins appear to have dominated in the Andhra and Tamil Nadu regions, but in the Malabar area, theology and law were Brahmin preserves, but astronomy and medicine were dominated by Shudras and other castes. Thus, of a total of 808 students in astronomy, only 78 were Brahmins, while 195 were Shudras and 510 belonged to the other castes (scheduled). In medicine, out of a total of 194 students, only 31 were Brahmins, 59 were Shudras and 100 belonged to the other castes. Even subjects like metaphysics and ethics that we generally associate with Brahmin supremacy, were dominated by the other castes (62) as opposed to merely 56 Brahmin students. It bears mentioning that this higher education was in the form of private tuition (or education at home), and to that extent also reflects the near equal economic power of the concerned groups.

  ReplyDelete
 4. Sir Alfred Lyall (1796 - 1865) was unhappy and he wrote:

  “…more persons in India become every year Brahmanists than all the converts to all the other religions in India put together... these teachers address themselves to every one without distinction of caste or of creed; they preach to low-caste men and to the aboriginal tribes… in fact, they succeed largely in those ranks of the population which would lean towards Christianity and Mohammedanism if they were not drawn into Brahmanism…”

  So much for the British public denunciation of the exclusion practiced by Brahmins!

  ReplyDelete
 5. ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில் ஆங்கிலம்தான் இன்று உலகில் அறிவியல் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் உள்ளது.ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆங்கிலத்தில் ஆய்வேடு எழுதலாம் என்று நிலை மாறிவிட்டது.சீனாவிலும்,ஜப்பானிலும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி ஆங்கிலம் அறிந்த ஒருவரைக் கொண்டு நடை,சொற்பிரயோகங்களை சரி பார்த்து திருத்தி பின் ஜர்னல்களுக்கு அனுப்புகின்றனர்.அவர்கள் ஆங்கிலம் தேவையில்லை தங்கள் தாய்மொழியில் எழுதினால் போதும் என்று கருதவில்லை. இதை உணராமல் நூற்கள் எழுதுவதால் என்ன பயன. நல்ல தரமான கல்வியில் தமிழுக்கும் இடம் உண்டு ஆங்கிலத்திற்கும் இடம் உண்டு.அதனதன் இடமும்,பயன்பாடும் குறித்த குழப்பமே இந்த நூல்களை எழுதுபவர்களுக்கு இப்படியெல்லாம் எழுதத்தூண்டுகிறது.

  ReplyDelete
 6. தேவையின்றி மூளைச் சோம்பலால் ஆங்கிலச்சொற்களை மிகுதியாகப் புகுத்தியே நம்மால் தமிழில் உரையாட முடிகிறது. இதனால் நாளடைவில் தமிழ் மறைந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
  பார்ப்பனர்களின் பாதிப்பு இருந்திருக்கிறது. தமிழின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவோ சாதிகளின் செல்வாக்கை நீட்டிப்பவர்களாகவோ அவர்கள் இல்லை. பாக்கிஸ்தான் தன்கேடுகளுக்கெல்லாம் இந்தியா , அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேலின் மீது பழிபோடுவதுபோல்தான் இதுவும்.
  ரா. நரசிம்மன்

  ReplyDelete
 7. வாழ்கையே போராட்டமாக இருக்கும் பல மக்களுக்கு, ஆங்கிலம் மூலமாக ஒரு நல்ல வாழ்வு அமைந்தால் அதை எடுத்துக்கொண்டு மேலே செல்வது தான் அவர்கள் செய்வதாக இருக்கும். செய்ய வேண்டியதும் அதுவே.
  அதை விடுத்து அவர்களை தமிழில் படி, தமிழ் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று பொய்யுரை சொல்லி, வார்த்தை விளையாட்டுக்களால் மயக்கி,அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்வது என்ன வகையில் சரி ?
  "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்று பாரதி சொன்னார். கலைச்சொல் கண்டு பிடி என்று சொல்லித் தமிழனை சாகடிக்கவில்லை.
  தாம் வயிறும் வங்கிக் கணக்கும் வளர்ப்பதற்காக மொழி வெறி வளர்த்து அதன் மூலம் அரசியல் செய்தார்கள் தமிழ் இனத் தலைவர்கள். கவிஞர் இளம்பிறை சொல்வது போல் "அம்மா அடுப்பைப் பற்றவை குளிராவது காய்வோம் " என்று உணவுக்கே அல்லாடும் தமிழனை பகுத்தறிவு பேசி, வாத்தைகளால் மயக்கி ஒரு கார்த்திகை சொக்கப்பானை போலே வேண்டும்போது கொளுத்தி விட்டுக் குளிர் காய்வதே இந்த தனித்தமிழ் ஆதரவு எழுத்தாளர்களின் வேலையாகப் போய் விட்டது.அவர்களுக்கு ஆதரவாக அப்போது உள்ள அரசியல் தலைவர்களும்.
  இது தமிழ் நாட்டின் சாபக்கேடு போலும்.

  ReplyDelete
 8. Well written blog Dr. Badri. Even when we are highly harsh on brahmins for various reasons, you do not get offended. When we express our anger and some times even hatred against brahmins due to their attitude, and disrespect to our way of life, you genuinely try to understand our side and treat us with respect. In some of your blogs, I even found you leaning towards our side. It is nice to see brahmins like you who are free from prejudice, and petty caste feelings.

  ReplyDelete
  Replies
  1. Mr. Pandian should also accept the fact there are always a considerable number of persons in the Brahmin community like Badri who don't have caste prejudice whereas that is not in the case of other 'caste hindus' and minorities in TN w.r.t. their attitude towards SC/STs, thanks to dravidan & caste parties in TN.

   Delete
 9. If you know few words (budler English) then it is enough in U.S. I am here for 15 years and I have still issues English Grammer, but everybody here understand it and I worked as a sales person too. (!!!!).

  If you talk English with out grammer it is a great mistake in India but not in U.S.

  As per Bernard Shaw - If you wan to know the route for Railway station only 2 word or even one word is important "Railway Station" and the second word is "Which way"

  ReplyDelete
 10. I think Nallangili should read Beautiful Tree . It is available free in Internet. I think Badri has wasted his time.

  ReplyDelete
 11. எந்த ஒரு மொழியும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உலகின் அனைத்து இலக்கியங்களும், தினச் செய்திகளும், அறிவியல் கண்டுப்பிடிப்புகளும், உடனுக்குடன் அந்த மொழியில் மொழிப்பெயர்க்கப்பட வேண்டும். இல்லாவிடில் அந்த மொழி அழிந்துவிடும். ஆங்கிலம் இதை செய்வதால் அது வளர்கிறது. தமிழ் இதை செய்யாததால் அழிகிறது.

  ReplyDelete
 12. எனது முதல் பதிவில் எழுத்துப்பிழை உள்ளது ” களம் ” என்பதற்கு கலம் என உள்ளது, மேலும் “ கருதுகிறேன் “ என்பதற்கு பதிலாக கருதுகிரேன் என தவறாக உள்ளது திருத்தி வாசிக்கவும். ஆங்கில மாயை குறித்த விவாதம் தடம் மாறிச்செல்வதாக தெரிகிறது.

  ReplyDelete
 13. ஒரே நூலை ஆங்கிலத்தில் படிப்பதை விட தமிழில் படிப்பது எளிதாக உள்ளது. வாசிப்பனுபவம், புரிதல் கூடுதலாக கிடைக்கின்றன. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு நூல் கிடைத்தால், தமிழில் படிக்கவே விரும்புகிறேன்.

  ஆனால், தமிழ் புத்தகங்கள் இலக்கியம், சமூகம் என குறுகிய வட்டத்துக்குள் உள்ளதாக நினைக்கிறேன். உலகம் தழுவி பயன்படுத்தப்படும் ஆங்கிலத்தில் பரந்துபட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, சமீபத்தில் நான் படித்த மூன்று புத்தங்கள் பற்றி கூறலாம்.

  ஒன்று Fallen Giants என்ற புத்தகம். பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி தொடங்கி சமீப காலம் வரையான இமய மலை சிகரங்கள் மீது மலையேறல் வரலாற்றை நுணுக்கமாகவும், அதே சமயம் எளிதில் புரியும் படியும் பேசுகிறது. மலையேறலில் ஆர்வம் கொண்ட இரண்டு அமெரிக்க வரலாற்று பேராசிரியர்களால் எழுதப்பட்டது. முப்பது பக்க அடிக்குறிப்புகள், பத்து பக்க bibliography என விரிந்த புத்தகம். இரண்டாவது Annapurna. உலகில் 8000 மீட்டருக்கும் மேலே உயரம் கொண்ட 14 சிகரங்களில் முதலாவதாக வெற்றி கொள்ளபட்ட சிகரம் அன்னபுர்ணா. இதன் மீது முதலில் ஏறிய மௌரிஸ் ஹெர்சாக் என்ற பிரான்ஸ் நாட்டவரால் தனது அனுபவப் பதிவுகளாக எழுதப்பட்ட புத்தகம். பின்பு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. மூன்றாவது Neutrino என்ற புத்தகம். இது நியூட்ரினோ என்ற அணுத்துகள் கண்டறியப்பட்ட சுவாரசியமான வரலாற்றை எளிய முறையில் விளக்குகிறது.

  இது போன்ற புத்தகங்கள் தமிழில் எப்போது கிடைக்கும்? ஆங்கிலத்தின் மீது வயிற்றெரிச்சல் படுவதற்கு பதிலாக நலங்கிள்ளி ஏதாவது நல்ல நூலை தமிழ்ப்படுத்தி இருக்கலாம். அல்லது தமது துறை சார்ந்து நூல் கலை நூல் எழுதி இருக்கலாம். தமிழுக்கு ஆற்றிய தொண்டாக இருந்திருக்கும். எனெக்கென்னவோ, "தமிழ், தமிழ்" என்று கூவிக்கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் வாய்ச்சொல் வீரர்களாகவே தென்படுகிறார்கள்.

  ReplyDelete
 14. Badri,

  why only Mr. Nalangkilli on bashing of some other language / society for all the shortcomings. If you happen to watch Prof Mr. Maa. Nannan in any of the TV shows conducting Tamil classes / giving some sort of speech, you will be laughing or get irritated seeing him bashing Sanskrit for all the problems and the words he use for the same are also not sophisticated ones. It is a pity that the fate of Tamil will be destined by these persons - New age Macauleys and Caldwels - instead of the so called Paarpanargal Kabilar, U.Ve.Sa, Bharathi etc.,

  ReplyDelete