Wednesday, February 13, 2013

நீயா, நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள்

சென்ற ஞாயிறு அன்று காட்டப்பட்ட நீயா, நானா நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன். பார்க்காதவர்கள் நேரம் செலவழித்துப் பார்த்துவிடுங்கள்.

http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc&list=ELCGfx6tAff04&index=46

கல்லூரிகளில் இளநிலை படிக்கும் மாணவர்கள் ஒருபக்கம். பத்திரிகையாளர்கள், களப்பணியாளர்கள், அரசியல்வாதி(கள்) மறுபக்கம். இன்றைய மாணவர்கள் சமூக, அரசியல் நிகழ்வுகளை எந்த அளவுக்குப் புரிந்துவைத்துள்ளனர், அவர்களுடைய அரசியல், சமூக நிலைப்பாடுகள் என்னென்ன என்பது தொடர்பான விவாதம்.

இளைய மாணவர்கள் யாரும் ஆழமான புரிதலைக் காண்பிக்கவில்லை. இதில் வியப்பு ஏதும் இல்லை. மாணவர்களின் பேச்சிலிருந்து கீழ்க்கண்ட விஷயங்கள் தெரியவந்தன.
  1. அவர்கள் தமிழ் தினசரி, வார, மாத இதழ்களைப் படிப்பதில்லை.
  2. அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்கள் எவற்றையும் படிப்பதில்லை. தமிழ் எம்.ஏ படிக்கும் ஒரு மாணவர் மு.வரதராசனார் தாண்டி யாரையும் சொல்லவில்லை.
  3. இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவோர்கூட அதுகுறித்த தாழ்வு மனப்பான்மையையே கொண்டிருக்கிறார்கள்.
  4. அரசியல் என்றால் சாக்கடை என்ற பொதுவான கருத்து அவர்களிடம் நிலவுகிறது.
  5. தொலைக்காட்சி ஊடகங்கள் பெரிதாக்கும் விஷயங்களைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
  6. அடிப்படை விஷயங்கள் தெரியாத காரணத்தால் கொஞ்சம் தீவிரமாகக் கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது என்று பின்வாங்கிவிடுகின்றனர்.
  7. அரசியல் தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை, அல்லது அவர்களுக்கு எந்தக் கருத்துமே இல்லை.
மறுபக்கம் களப்பணியாளர்கள் மிகவும் அதீதமான முகபாவங்களைக் காட்டி அதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு சில களப்பணியாளர்களாவது, தாம்தாம் மாணவர்களிடம் சென்று சேராமல் ஒரு சிறு குழுவாக இருந்துவிட்டோமோ என்ற தம் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

களப்பணியாளர்களாக அங்கு வந்திருந்த அனைவருமே திராவிட அல்லது இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்கள். பிற களப்பணியாளர்களே தமிழகத்தில் ஒருவேளை இல்லை போலிருக்கிறது. எனவே இவர்கள் அனைவரிடமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கருத்துகள்தான் நிலவின.

இளைஞர்கள் எம்மாதிரியான புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த பரிந்துரை கீழே:
இளைஞர்கள் எம்மாதிரியான புரிதலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த அறிவுரைகள் இதோ:
  1. பல இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வுச்சாலை, இப்போது தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களாவது அது பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.
  2. சாலையோரக் கழிப்பறைகள், பெண்கள் எவ்வாறு இதனால் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  3. மேற்குத் தமிழகத்தில் பல இடங்களில் இரண்டு டம்ளர்கள் அல்ல, நான்கு டம்ளர்கள்வரை டீக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
  4. வீட்டின் பக்கத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள். உதாரணமாக வட சென்னைக்குச் செல்லுங்கள்.
  5. அரசு மருத்துவமனை சென்று பாருங்கள்.
  6. (அரசியல்ரீதியாக) உங்கள் சுயசரிதையை எழுதுங்கள்.
இட ஒதுக்கீடு, சமூக நீதி தொடர்பான என் கருத்துகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

33 comments:

  1. படிக்க வேண்டிய நிலையில் இன்றைய இளைஞர்கள் / மாணவர்கள் இல்லை... (சிலரைத் தவிர) அதை ஊக்குவிக்க பெற்றோர்களோ / துணைவியோ இல்லை என்பதே உண்மை... சுயமாக ஆர்வத்துடன் முயன்றால் தான் இந்நிலை மாற வாய்ப்புள்ளது...

    ReplyDelete
  2. இந்தக் ’களப்பணியாளர்கள்’ யார், இவர்கள் அப்துல் கலாமை திட்டுவார்கள்,அப்சல் குருவுக்கு தூக்கு கூடாது என்று வாதாடுவார்கள்,காஷ்மீரில் ஜிகாதிகளை ஆதரிப்பார்கள்,பாகிஸ்தான் குறித்து விமர்சிக்கமாட்டார்கள்- தேச துரோகிகள், தேசத்தின் எதிரிகளுக்கு வால் பிடிப்பவர்கள்தான் இவர்கள்.அ.முத்துகிருஷ்ணன், ஆளூர் ஷாநாவாஸ் போன்றவர்களை படித்து தேச விரோதியாக மாறுவதை விட படிக்காமலே இருப்பது நல்லது. இவர்கள் காந்தி, நேருவின் எழுத்துக்களை பரிந்துரைக்க மாட்டார்கள்.இவ்ர்களையெல்லாம் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதே தவறு.

    ReplyDelete
    Replies
    1. Was not disappointed with the youngster's lack of social awareness but yes thoroughly disappointed with the socially-active group.

      Periyar's thoughts, Communism etc. seems to be the only articles that will be considered as qualification in the other group. To an extent communism is acceptable but DK's thoughts will only help understanding TN politics.

      Glad someone mentioned S.Ramakrishnan's thunaiezhuthu. Was waiting for someone to mention Jeyamohan or JK's writings. As usual disappointing.

      Delete
    2. இந்தக் ’களப்பணியாளர்கள்’ யார், இவர்கள் அப்துல் கலாமை திட்டுவார்கள்,அப்சல் குருவுக்கு தூக்கு கூடாது என்று வாதாடுவார்கள்,காஷ்மீரில் ஜிகாதிகளை ஆதரிப்பார்கள்,பாகிஸ்தான் குறித்து விமர்சிக்கமாட்டார்கள்- தேச துரோகிகள், தேசத்தின் எதிரிகளுக்கு வால் பிடிப்பவர்கள்தான் இவர்கள்.அ.முத்துகிருஷ்ணன், ஆளூர் ஷாநாவாஸ் போன்றவர்களை படித்து தேச விரோதியாக மாறுவதை விட படிக்காமலே இருப்பது நல்லது..//////

      அண்ணே. சரியா சொன்னிங்க. இவர்கள் தாங்கள் மட்டும் அழியறதுக்கு வழி சொல்லாமல் நம் அழிவுக்கும் சேர்த்து வழி சொல்கிறார்கள். துஷ்டனை மட்டுமல்ல இவர்களை கண்டாலும் தூர விலகுவது நமக்கும், நம் மாணவ செல்வங்களுக்கும் நல்லது.

      Delete
    3. இவர்கள் களப் "பிற" பணியாளர்கள் என்றழைக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்...இவர்கள் நம் நாட்டுக் களத்தில் பிறருக்காக (பிற நாட்டுக்காக) பணி செய்வதால்!

      Delete
  3. ஊழலை எதிர்க்க அன்னா ஹசாரே போராடினால் அதை கொச்சைப்படுத்தி எழுதிய பேர்வழிகள்தான் இந்தக் கணப்பணியாளர்கள்.

    ReplyDelete
  4. இந்நிகழ்ச்சியில் (இன்னும் முழுவதுமாகப் பார்க்கவில்லை) தொனித்த condescending tone, அதன் பின்னாலுள்ள அரசியல், கோபிநாத்தின் தலைமுறை எப்படி இவ்வாறான நிகழ்ச்சிகளின் மூலம் தங்கள் மேலுள்ள பொறுப்புகளைத் தட்டிக்கழித்து, தங்கள் தவறுகளைக் கைகழுவி, அடுத்த தலைமுறையின்மேல் பழிபோட்டுவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறது என்பதைப்பற்றி ஒரு பதிவு போடலாமென்றிருக்கிறேன்.

    ReplyDelete
  5. இதனை ஆவணபடிதியதற்கு நன்றி!

    ReplyDelete
  6. நியூட்ரினோ தீமையானதா? அது பற்றி விபரங்களை எங்கே தெரிந்து கொள்ளலாம்.. லிங்க்கள் கொடுங்களேன்.. எங்க பகுதியில் தான் அதை ஆரம்பிக்கின்றார்கள்.

    ReplyDelete
    Replies

    1. http://en.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory

      http://www.ino.tifr.res.in/ino/

      http://www.ino.tifr.res.in/ino/faq.php

      http://www.ino.tifr.res.in/ino/docs/inofaq_mal.pdf

      http://wikimapia.org/15934218/POTTIPURAM-Neutrino-Project-in-India

      http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/site-work-for-neutrino-observatory-to-kick-off-in-february/article4321885.ece

      http://dailypioneer.com/nation/95244-achuthanandan-opposes-centres-bid-to-build-neutrino-observatory.html

      Delete
  7. தன் முன்னோர் செய்த தவறுக்கு
    நாம் தண்டனை அனுபவிக்க வேண்டும்
    என்னும் கருத்துக்கும் தாங்கள் பதிலை
    வெளியிடவும்.

    ReplyDelete
  8. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பார்மெட் நியூமரலாஜி தொடர்பான ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மிகவும் அருமையாக இருந்தது. ரசித்துப்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற நிகழ்ச்சிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும். தூங்கப் போகும் முன் எதையும் சிந்திக்காமல் மனம் அமைதி அடைந்துவிடும். பாட்டியிடம் கதை கேட்டு தூங்குவது போன்ற ஒரு உணர்வு.

      Delete
  9. இந்நிகழ்ச்சி சமூக-அரசியல் சார்பாக இருந்ததால் இப்புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதன் காரணம் புரிகிறது. ஆனால் பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என எல்லாரும் ஏன் இலக்கியம், சமூக-அரசியல் ஆகியவற்றுக்கு வெளியே எதையும் பரிந்துரைக்க மறுக்கிறார்கள்? அறிவியல், அரசியல் சாராத வரலாறு (உதாரணமாக நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு) போன்ற பொது தளங்களில் அமைந்த புத்தகங்கள் பற்றி பேசப்படுவதில்லை. போன ஆண்டு அவ்வளவு பெரிய புத்தக கண்காட்சி முழுதும் தேடி பார்த்தேன். இது போன்ற தலைப்புகளில் சொல்லிக் கொள்ளும் படியாக தமிழ் புத்தகம் எதுவும் தென்படவில்லை.

    ReplyDelete
  10. படிக்கின்ற காலத்தில் சென்ற தலைமுறை,அல்லது களப்பணியாளர்கள் தலைமுறை அறிவு களஞ்சியமாக விளங்கியது போல பலர் பேசுவது,வருந்துவது வியப்பு தான்
    தாம்பரத்தில் ஹிந்து முன்னணி கூட்டங்கள் அதிகம் நடக்கும்.சுவற்றில் கூட ஹிந்து கடைகளிலேயே பொருட்களை வாங்கு என்று எழுதி வைத்திருப்பார்கள்.தமிழ்நாடு மெடிகல்ஸ் ,துணிக்கடை என்று பெயர் வைத்திருந்தால் அது இஸ்லாமியர் கடைகளாக தான் இருக்கும்.அங்கு பொருள் வாங்காதீர்கள் என்று மேடை போட்டு பேசுவார்கள் இன்னும் ஹிந்துக்கள் சுதாரிக்க வில்லை என்றால் இன்னும் பத்து,இருவது வருடங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மை ஆகி விடுவர் என்று அடித்து விடுவார்கள்.அதை எல்லாம் உண்மை என்று தான் நம்பி கொண்டிருந்தேன்.
    ஹிந்து மிசன் மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்கள் தெருத்தெருவாக சென்று பணம் சேகரித்து கொடுத்தோம்.VHP மணியன் கையால் மகாபாரத கேள்வி பதில் போட்டியில் பரிசு வாங்கி இருக்கிறேன் .இன்றும் அந்த சான்றிதழ் என்னிடம் உள்ளது
    அப்போது ஏதாவது தொலைகாட்சியில் என்னை அழைத்திருந்தால் முக்கிய பிரட்சினையாக ஹிந்து முன்னணியினர் பேசி வந்த இஸ்லாமியர் ஆக்கிரமிப்பு,மத மாற்றம் தான் என்பதை தான் கிளிபிள்ளை போல ஒப்பித்திருப்பேன்.மதம் மாறியவர்கள் தேச விரோதிகள் எனபது ஆழ பதிந்திருந்தது.கல்லூரியில் கூட நானும் சில நண்பர்களும் சான்றிதழில் ஹிந்துவாகவும் தீவிர இறைபக்தி கிருதுவனாகவும் இருந்த நண்பனை அதை வைத்தே கிண்டல் செய்து கொண்டிருப்போம்.
    வீட்டில் பெற்றோர் மற்றவர்களை/சமூகத்தை பற்றி வைத்திருக்கும் எண்ணம் தான் பெரும்பான்மையான மாணவர்களிடம் வெளிப்படும்.
    ஆசிரியர் ,நண்பர் புலால் உண்பது பாவம் என்றால் உடனே புலால் உண்ணும் போது மிகவும் குற்ற உணர்ச்சி வரும்.
    தானாக இவற்றை ஆராய்ந்து சரி,தப்பு அறிய சொந்தக்காலில் நிற்கும் காலகட்டம் தான் முக்கியம்.சென்ற தலைமுறையில் சிறு வயதில்,பள்ளி படிப்பு முடித்த உடனே வேலைக்கு சென்றவர் அதிகம்.அதனால் இங்கு பேசிய மாணவர்களின் வயதிலேயே அவர்கள் களப்பணியாளர்கள் ஆக கூடிய தகுதியை அடைந்தனர்.
    இந்த மாணவர்களும் பெற்றோர்களின் பாதிப்பில் இருந்து மீளும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும்.சொந்தமாக உழைத்து அதில் வாழும் போது களப்பணியாளர்களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு அனைத்து பிரட்சினைகளையும் அலசுவர்.எதிர் கொள்வர்

    ReplyDelete
  11. WHY YOUNGER GENERATION NOT INTERESTED IN READING BOOKS?
    1. MOST OF THE STUDENTS INCLUDING LOWER MIDDLE CLASS ARE STUDYING IN ENGLISH MEDIUM. MOST OF THEM ARE NOT FLUENT EITHER IN ENGLISH OR TAMIL.
    2. TV AND COMPUTER OCCUPIES MOST OF THE TIME.MOST OF THE CHILDREN ARE PLAYING GAMES IN COMPUTER OR WATCHING TV.
    3. IN OLODEN DAYS, WHEN WE WERE IN SCHOOLSD, WE CROSSED STEP BY STEP, LIKE RS MANI, TAMIL VANAN, KALKI, RA.KI, ASP, SUJATHA. AT THE AGE OF 20, MOST OF THEM WERE SELECTIVE ACCORDING TO THEIR INTEREST.
    4. THERE WERE GOOD GOVT LIBRARIES. UPTO 1967, IN LIBTRARY ALL MAGAZINES/DAILIES WERE PURCHASED. THEN POLITICS ENTERTED.

    I DID NOT SEE THE DEBATE. BUT THE SO CALLED SOCIL WORKERS ARE HAVING NEGATIVE APPROACH.

    GOPALASAMY

    ReplyDelete
  12. "பல இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” என்ற வாசகத்தைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால் யாருக்கும் தீங்கு கிடையாது. தினமும் இரவு பகல் 24 மணி நேரமும் பல கோடி நியூட்ரினோக்கள் நமது உடலை துளைத்துச் செல்கின்றன. இது பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.சூரியனில் ஏற்படும் அணுச்சேர்க்கையின் போது இந்த நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன. பல பூமிகளை அடுக்கி வைத்தாலும் இந்த் நியூட்ரினோக்கள் துளைத்துச் சென்று விடும். இப்படித் துளைத்துச் செல்லும் நியூட்ரினோக்களை ஆராய ஒரே முழுப் பாறையினால் ஆன குன்று தேவை. நீலகிரியில் அப்படிப்பட்ட குன்று முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு ஆய்வுக்கூடம் அமைத்தால் விலங்குகள் நடமாட்டம் பாதிக்கப்படலாம் என்பதால் நீலகிரியில் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. தேனி அருகே அப்படியான் குன்று இருப்பதால் அங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. வ்ட இந்தியாவில் இப்படியான பாறைக் குன்று இல்லை.
    ஆகவே பிற இடங்களில் விரட்டியடிக்கப்பட்ட என்ற வாசகம் தவறு. தவிர நியூட்ரினோவினால் எந்த பாதிப்பும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. I am an experimental physicist. I did my Ph.D. in IISc 17 years ago. Anyday I would say that establishing a Neutirno research enter in Theni, or any part of India, is a colossal waste. I wish people in Theni district will chase those "scientists" out.

      Delete
    2. I think the harm is not because of Neutirno particle. Destorying the rocks is the issue here. I heard it will creat large amount of dust. Can anybody tell why Kerala didnt accept this project

      Delete
    3. //Anyday I would say that establishing a Neutirno research enter in Theni, or any part of India, is a colossal waste.//

      Could you please elaborate?

      Delete
    4. //
      I am an experimental physicist. I did my Ph.D. in IISc 17 years ago.
      //

      Nobody is asking your credentials here. It only shows that you lack any valid counter point. It is easy to say I have a certificate so what ever i say is right. Its like I am the prophet that god has appointed and what ever i say is your religion!

      I am sure even nutrinos cannot enter your brains...because nothing goes in there.

      Delete
    5. //வ்ட இந்தியாவில் இப்படியான பாறைக் குன்று இல்லை.//

      தமிழ் நாடு மட்டும் தான் தென் இந்தியாவா????? :-))))))


      ----Maakkaan.

      Delete
    6. எப்படி மும்பைக்குத் தெற்கே எல்லாமே மதராஸ் தான் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதே மாதிரி தமிழர்களைப் பொருத்தவரை சென்னைக்கு வடக்கே எல்லாமே வடஇந்தியா தான்...

      இது தெரியாதா உங்களுக்கு ?

      Delete
  13. I would think this is silent majority that can't do anything but still part of leading normal life. It's going to be increasing in future that no one predict how it will end-up. Politicians on one side and these socio-economic reformers on the other side will continue to run their own land.. is this survival of fittest?

    ReplyDelete
  14. https://www.youtube.com/watch?v=gyZHXgqtYFw

    ReplyDelete
  15. manithargal thaniyangalakkappaduvadan adaiyalam?

    ReplyDelete
  16. Wonderful to know that the younger generation is not corrupted by communism/EVR thoughts. The future is bright for Tamil Nadu.

    ReplyDelete
  17. Amusing to see this. Neo Brahmins Vs Neo Intellectuals. I wish Gopinath calls the young college lecturers and ask them the same questions.

    The type of books these guys suggested shows their level of intellectual curiosity.

    ReplyDelete
  18. 1967 ற்குப் பிந்தைய கல்வி முறையின் தாக்கம் என்று கொள்ளலாம்.மக்களை முற்போக்குவாதிகளாக மாற்றுகிறோம் என்று சொல்லி வாசிக்கும் பழக்கத்தையே அடியோடு விரட்டி அடித்து விட்டார்கள்.அனைவரும் சினிமா மோகம் பிடித்து அலையும் ஒரு ஆட்டுமனதைக் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்கள்.இபோதைய பொங்கல் மற்றும் தீபாவளி சிறப்பு நிகழ்சிச்சிகள் இதற்கு சான்று.

    ReplyDelete
  19. ஒவ்வொரு கள பணியாளரும் தம் அறிவுக்கு எட்டிய வரையில் எது சரி என்று தோன்றுகின்றதோ அதை சொன்னார். மிக சொற்பமானவர்கள் இஸ்லாமிய சமுதாயம் புறம் தள்ள படுவதாக குற்றம் கூறினார். மதத்தை உள்ளே இழுத்து நியாய தர்மம் எதுவென்று கூறினார். அதை அவர் ரியாத்தில் மற்றும் சில துலுக்க நாடுகளில் நியாயபடுத்துவார். என் நிறுவனத்தில் நூற்றுகணக்கான இஸ்லாமியர் பணி செய்கின்றனர் அதில் சரி பாதி உயர் மட்ட அளவில் இருப்பவர். இதில் நான் மகிழ்ச்சி அடையும் விஷயம், அத்தகைய சரி பாதியில் அநேகம் இந்தியாவை சார்ந்தவர். தன்னை ஒரு இந்தியனாக காட்டி கொள்வதில் பெருமை கொண்டவர் (மற்ற நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு வேற்று நாடு செல்லும் பொழுது, எவனாவது உதவி செய்தால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "நீ ஒரு முஸ்லிமா?").

    சரி அடுத்த விஷயம். என் மனைவி அக்காள் மகள் ஒரு சமூக பிரஞ்யையுள்ள (மன்னிக்கவும் ... கூகிள் இண்டிக் ) உள்ள ஒரு பெண். அவர் ஆட்டோ ஓட்டுனர் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டி சில ஆட்டோ ஓட்டுனர் அணுகி அவர்கள் வாழ்க்கையை உலகத்துக்கு சொல்ல விரும்பினார். அவர் அவர்கள் வாழ்க்கை முறையை உலகத்துக்கு சொல்ல விரும்பினார். சில பிரச்சனைகளுக்கு பிறகு, அவருக்கு காதல் ஆஸிட் வீச்சு கிடைக்கும் முன்பு அவரை "நல் வழிக்கு" திருப்பினேன். எங்கே சென்றார்கள் கள பணியாளர்கள் இங்கே.

    கள பணியாளர்கள் உண்மையிலேயே செய்ய வேண்டிய விஷயம் "சமூக தளைகளை உடைத்தெறியும் வண்ணம் ஒரு கல்வியை" தயார் செய்தல் மற்றும் அதை புகுத்துதல்.

    மற்றபடி இந்த வெண்ணை கோபிநாத் ஒரு வெங்காயம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

    ReplyDelete
  20. I did not see the entire episode. Saw only the portion related to reservation.

    Thought the students lack in understanding of reservation and its social impact(which even i lack) the "So called" experts failed to see the hidden message/question from the students.

    Students by asking "I dont care about others but why should i be let down" have a hidden message that "Reservation as a policy has failed to hasten the social economic development of the downtrodden.

    Unfortunately the "Chosen Ones" owing to their narrow minded approach failed to get the message

    ReplyDelete
  21. Another view of mine is that the so called "Experts" rely heavily on books. Most books try to influence others with the authors thoughts sometimes lacking facts, statistics and reason. Unfortunately these so called "Experts" rely heavily on the books. Mostly they ask "Did you read this book and did you read that book".

    These so called experts dont have a view of their own. They rely on the views from the books. And they will never be able to substantiate their views. So India-TamilNadu as a country lacks Original Thinkers.

    ReplyDelete