Thursday, March 14, 2013

பணச்சலவை

கோப்ராபோஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் கருப்புப் பணத்தைச் சலவை செய்யும் வேலையை ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய மூன்று வங்கிகளும் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்குச் சான்றாக, அதன் நிருபர்கள் ரகசியமாகப் பிடித்த ஒளிப்பதிவுகளைக் காட்டியுள்ளது.

இந்த வங்கிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அல்லது அனைத்துத் தனியார் வங்கிகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். பொதுத்துறை வங்கிகள் இச்செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது குறைவாக இருக்கலாம். அல்லது ஒருசில அரசியல்வாதிகளுக்காக மட்டும் பொதுத்துறை வங்கிகளின் கதவுகள் இதற்கெனத் திறந்திருக்கலாம்.

நம் நாட்டில் எக்கச்சக்கமான கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. (1) ரியல் எஸ்டேட் துறை, (2) அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பெறும் லஞ்ச, ஊழல் பணம், (3) கடத்தல், திருட்டு, கஞ்சா, கொலை, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கப்படும் கருப்புப் பணம், (4) சினிமாத் துறையில் புழங்கும் பெருமளவு பணம், (5) தொழில் நிறுவனங்கள் இரண்டு கணக்குகள் வைத்துச் சம்பாதிக்கும் கருப்புப் பணம் என்று பலதைச் சொல்லலாம்.

ரிசர்வ் வங்கி இந்தக் கருப்புப் பணத்தின்மீது அழுத்தம் தரத் தர, இதனை வெள்ளையாக ஆக்குவதற்கு யாராவது முன்வரத்தான் வேண்டும். அதைத்தான் இந்தத் தனியார் துறை வங்கிகள் செய்கின்றன.

இந்தக் கருப்புப் பணம் நாட்டைவிட்டு வெளியே போய், பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்னும் முறை வழியாக இந்தியாவிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்று சுப்ரமணியன் சுவாமி கூறுகிறார். இந்த முறையைக் கொண்டுவந்தது பாஜக ஆட்சியின்போது யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்த காலத்தில் என்று ஞாபகம்.

இதற்கெல்லாம் முன்னர் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து ஒருமுறை அரசுக்கு வரி கட்டிவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளையாக ஆக்கிக்கொள்ளலாம் என்றார். அதன்படிக் கொஞ்சம் பணம் வெளியே வந்தது. ஆனால் மிகப் பெரும் தொகை வெளியே வரவே இல்லை.

சில அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. கருப்புப் பணம் இருக்கும்வரையில் கருப்பை வெள்ளையாக்கும் ஆசாமிகள் வந்துகொண்டே இருப்பார்கள்.

என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்?

1. ரியல் எஸ்டேட் டிரான்சாக்‌ஷனில் ஸ்டாம்ப் கட்டணத்தையும் லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியையும் கடுமையாகக் குறைக்கலாம். அதன்பிறகும் பொய்யாகப் பணத்தைக் குறைத்துச் சொல்பவர்களுக்குச் சிறை தண்டனை என்று சட்டத்திருத்தம் செய்யலாம். உதாரணமாக ஸ்டாம்ப் கட்டணத்தை வெறும் 1% என்றோ அல்லது 0.5% என்றோ ஆக்கிவிடலாம். தமிழகத்தில் 12% என்று இருந்தது இப்போது 8% என்று ஆகியுள்ளது. இதுவே மிக அதிகம். அதேபோல வீடு விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு 2% வருமான வரி கட்டினால் போதும் என்று சொன்னால் பெருமளவு கருப்புப் பணம் ஒழிந்துவிடும். இன்று கேபிடல் கெயின்ஸ் வரி (இண்டெக்சேஷனுக்குப் பிறகு) 20% என்று உள்ளது. (அல்லது உடனேயே அந்த லாபத்தை இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்யவேண்டும், அல்லது குறிப்பிட்ட சில கடன்பத்திரங்களை வாங்கி வரித்தொல்லையிலிருந்து மீளலாம்.) காசோலை, வரைவோலை வாயிலாக மட்டும்தான் ரியல் எஸ்டேட் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யமுடியும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

2. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.

3. அரசியல் கருப்புப் பணம் போலவே, கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கும் பணமும் கருப்பாகவே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது. வரி கட்டி, வெள்ளையாகப் பணம் வைத்திருக்கும் கெட்ட காரியர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலர் லெஜிடிமேட் கம்பெனிகளையும் கூடவே வைத்து பணத்தை உள்ளே வெளியே செய்துகொண்டிருக்கலாம். அனைத்துவித கிரிமினல் தண்டனைகளுடன் அந்தக் கெட்ட காரியங்களைச் செய்பவர்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் இங்கு நல்ல பலன் கிடைக்கலாம்.

4. சினிமாத் துறையை நிஜமாகவே ஒழுங்குபடுத்த முடியும். அரசு மனது வைத்தால். இதுதான் உள்ளதிலேயே மிகவும் எளிதான ஒன்று. ஆனால் சினிமாத் துறையினரின் பலம் காரணமாக அவர்களுக்கு எந்தச் சிக்கலும் நேர்வதில்லை. தனிப்பட்ட முறையில் நடிகர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடப்பதாக ஒரு செய்தி வரும். அப்புறம் எல்லாம் அடங்கிவிடும். ஒவ்வொரு படக் கம்பெனியும் செய்யும் ஒவ்வொரு துண்டு துணுக்குச் செலவையும் ஒழுங்காக ஆடிட் செய்தாலே போதும். தவறு செய்பவர்களைத் தண்டிக்க என்று தனியான வருமான வரி தீர்ப்பாயங்கள் இருந்தாலே பிரச்னை ஓவர்.

5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.

வங்கிகளை நெருக்கிப் பிடிப்பதன்மூலம் அவர்கள் பணச்சலவை செய்வதை நிறுத்தலாம். அப்படியானால், அந்தக் கருப்புப் பணம் அதற்கான தனியான பொருளாதாரச் சுற்றில் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். கருப்புப் பணத்தின் ஊற்றையே ஒழிப்பதுதான் (அல்லது குறைப்பதுதான்) சரியான தீர்வு.

18 comments:

  1. It was VP Singh as FM started the scheme called VDS (voluntary disclosure scheme).
    -surya

    ReplyDelete
  2. Badri, basically i think with Adhar and eventual computerization, black money will be slowly eliminated. Controlling real estate is the key as thats the only way to park black money for most people (except the few super rich who can go the offshore route). If there is no way to store the black money except for cash people will be discouraged to deal in black.

    Also for companies to deduct business expenses they should file forms showing each expense went to who (vendor pan number). This will be like the 1099 reporting in US. Thus the tax dept knows who received how much and can tally it with their tax returns.

    Also the govt should keep the tax as low as possible, i think long term capital gain of 10% is fine (2% is too low) and the top income tax should be around 25%. But stamp duty should go below 1%

    ReplyDelete
  3. If we can recharge mobiles through prepaid card, Why can't government introduce those kind of cards( like cc, dc) and no paper money.govt may have to invest some money for initial setup and later , will get lot of profit.No salary and money will be credited into that card.like that for all the work in the country and money transfer with card numbers.Make only coins like 1,2,5,& 10 avbl. - BOSS

    ReplyDelete
  4. திரு.பத்ரி,
    பலர் எழுத விரும்பாத தொனி இது. கருப்புப் பணம் என்றாலே பணக்காரன் அவ்வளவு பேரும் அயோக்கியர்கள், தூக்கில் போட வேண்டும் என்ற ரீதியில்
    எழுதுவதுதான் ஃபேஷன். ஆனால் நிதான தொனியுடன் எழுதியதற்கு முதலில் பாராட்டுகள்.

    ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே நான் கூடுதலாக கூற விரும்புகிறேன். இந்தியாவில் ஏழைகளுக்கான பிரச்சினைகளை அனைவரும் பேசுகிறார்கள். ஆனால்
    பணக்காரர்களுக்கான பிரச்சினைகளும் உள்ளன. அதாவது, பணக்காரர்கள் தாங்கள் தொழில் செய்து, வரி கட்டி, பின்னர் சேர்த்த பணத்தை ஒரு அளவிற்கு
    மேல் முதலீடு செய்யும் கட்டமைப்புகள் இந்தியாவில் இல்லை. உதாரணமாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்பும் ஒருவருக்கு சில கட்டமைப்புகள்
    தேவை. பல்வேறு முதலீட்டு முறைகள், சொத்து, தங்கம், வங்கி, ம்யூச்சுவல் ஃபண்ட், வேறு கம்பெனிகளில் முதலீடு என்று எதை செய்ய நினைத்தாலும்,
    அவர் ஒரு அரசாங்க அதிகாரியையோ, ஒரு அரசு அமைப்பையோ கவனிக்காமல், பொய் சொல்லாமல், முதலீடு செய்ய முடிவதில்லை. மேலும் அந்த
    முதலீடு இரகசியமாக வைக்கப்பட வேண்டிய அவசியத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. அந்த முதலீட்டிலிருந்து கிடைக்கும் உபரி வருமானத்திற்கான
    வரியும், நீங்கள் குறிப்பிட்டதைப் போல் மிக அதிகமாக உள்ளது. உலகளாவிய சூழலில், பிற நாட்டை விடவும் குறைவாகவும் பாதுகாப்பாகவும்
    இருந்தால்தான், அவர் இந்தியாவில் முதலீடே செய்வார். இது போன்று என்னால் கூறிக்கொண்டே போக முடியும்.

    அடிப்படையில், இந்தியா போன்ற நாடுகளில், தற்காலத்தில் அமேரிக்காவில் கூட, பணக்காரர்களை ஏசுவதை ஒரு குலத்தொழிலாகவே கொண்டுள்ள பலர்
    உருவாகியுள்ளனர்.

    Cobrapost வெளியிட்டுள்ள சில காணொலி காட்சிகளை கண்டேன். முதலீடு பல இலட்சங்கள் முதல் சில கோடி ரூபாய்கள் வரை உள்ளது. ஆகவேதான்
    இந்தியாவிலேயே இதை வெள்ளைப் பணமாக மாற்ற முயல்கின்றனர். அவர்களை விட பணக்காரர்கள் வேறு நாடுகள் சிலவற்றிற்கு எடுத்துச்செல்கின்றனர்.

    அடுத்து, வருமான வரித்துறையில் அதிக ஆட்கள் எல்லாம் தேவையே இல்லை. முதலில் அடிப்படையில், பணக்காரர்கள் தொழிலில் சம்பாதிக்கும்
    பணத்தை முதலீடு செய்து, பெருக்கிக் கொள்ள வசதிகளை தந்து விட்டாலே, பெரும்பான்மையான பணக்காரர்கள் கருப்புப் பணத்தை வைத்திருக்க
    மாட்டார்கள். எஞ்சியிருக்கும் சிலரை பிடிக்க எளிய வழி உள்ளது.

    உதாரணமாக, ஓட்டல்களில் சுகாதாரம் பேணப்படுகிறதா என்பதை கண்காணிக்க பெரிய படைகள் தேவையில்லை. ஒவ்வொரு தர வரிசையிலும் உள்ள
    ஓட்டல்களில் மாதத்திற்கு ஐந்து ஓட்டல்கள் என்று ரெய்ட் செய்து, தவறு நடக்கும் ஓட்டல்களை மூடி விட்டாலே போதும். மற்ற ஓட்டல் முதலாலிகள்
    சரியாகி விடுவார்கள். அனைத்து மனிதர்களும் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கவே போவதில்லை. இதையெல்லாம் தாண்டியும் சிலர் ஏமாற்றுவார்கள்தான்.
    அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். எல்லா துறைக்கும் இதுவே வழி. ஆனால் தவறு செய்பவர்கள் பயந்து கொண்டே இருப்பார்கள்.
    தண்டனை முறையின் அடிப்படை இது.



    ReplyDelete
    Replies
    1. அருமையான ஆலோசனை செயல் படுத்த வேண்டியவர்கள் செய்ய வேண்டுமே .............?

      Delete
    2. வருமான வரியை யாருக்கும் கட்ட மனமில்லை உழைத்து பெற்ற வருவாயை அரசுக்கு தானமாக கொடுக்க யாருக்கும் மனமில்லை
      அதனால் தான் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் முதல் பெரும் தொழில் அதிபர்கள் வரை வரியெஇப்பு செய்ய பல வழிகளை தேடுகின்றார்கள் அரசு ஊழியர்கள் தேவை இல்லாமல் லோன் போட்டு வட்டி கட்டுகின்றார்கள் ஆனால் வருமான வரி கட்ட அஞ்சுகின்றார்கள் இதற்க்கு ஒரே தீர்வு ஒரு குடும்ப அட்டைக்கு இவ்வளவு ஆண்டு வரி கட்டாயம் நீ எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து கொள் அதற்க்கு கணக்கு காட்டிவிடு வரி இல்லை என்ற நிலை வரவேண்டும்
      எந்த முறையில் வரி என்றாலும் பணக்காரர்கள் பெரிய நிறுவன அதிபர்கள் அதற்கும் சேர்த்தே லாபம் வைக்கின்றார்கள் அதற்க்கு பேசாமல் நேரடியாக மக்களிடமே வசூலித்து விடலாமே

      சாதாரணமாக் 4 பேர் வசிக்கும் சாதாரண ஏழை குடும்பத்தினர் மறைமுக வரியாக ஆண்டுக்கு அவர்கள் வாங்கும் பொருட்கள் மூலம் சுமார் 10000 ரூபாய் அரசுக்கு செல்கின்றது விற்பனை வரி எய்ப்பு மூலம் வியாபாரிகள் அடிப்பது 10000 ரூபாய் 70 சதவீத மக்கள்

      நடுத்தர மக்கள் ஆண்டுக்கு 75000 முதல் 1 லட்சம் வரை விற்பனை வரி எய்ப்பு மூலம் வியாபாரிகள் அடிப்பது சுமார் 40000 ரூபாய் 25 சதவீத மக்கள்

      பெரிய பணக்காரர்கள் 3லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை 5 சதவீத மக்கள்
      இந்த மறைமுக வரியை நேரடியாக மக்களிடமே நேரடியாக வசூளித்துவிடலாமே

      உண்மை தெரிந்து விடுமோ

      Delete
  5. Most of the coop banks are managed by politicians and they are used for conversion of black into white.Many of the cooperative banking transactions are not monitored.The need not even detect TDS if your interest earnings goes above the prescribed limit

    ReplyDelete
  6. Can you advise, WHY the series on BLACK MONEY, that was appearing in TAMIL PAPER, was stopped ?

    It was interesting and USEFUL.

    Pl Explain. !

    ReplyDelete
  7. Let me check with the editor. I thought that series got over in the normal course of time.

    ReplyDelete
  8. பத்ரி,
    தமிழில் பேச்சிலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாற்றுவதற்கான மென்பொருள் ஏதும் இருக்கிறதா?
    என்எச்எம்' இந்த திசையில் ஏதும் முயற்சிகளில் இருக்கிறதா?

    (உங்களுக்கு)தெரிந்த தகவல்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
    மின்மடல் nanbann@gmail.com
    நன்றி.

    ReplyDelete
  9. Hi Badri,
    That Tamil Article on Black money was in-depth and touched many vital aspects. Its style was also very captivating. I hope, you will check with the Editor and enable resuming it, at WHATEVER costs.
    Hope and pray there were NO threats involved for the author.
    Let us know, if you can.
    Good wishes.
    Srinivasan. V.

    ReplyDelete
  10. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.

    அரசு அலுவலகங்களில் இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டும்

    இதற்க்கு ஒரே வழி ஒவ்வொரு அரசு அலுவலகங்களின் வாயிலிலும் அறிவிப்புப் பலகை கட்டாயம் வேண்டும்
    1 சம்பந்தப்பட்ட அந்த அலுவலகத்தின் என்ன என்ன கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மனுக்கள் அளிக்கலாம் என்று

    2 கோரிக்கை பெரும் அலுவலர் பெயர் மற்றும் பதவி, புகார் பெரும் அலுவலர் பேயர் பதவி அலுவலகத்தில் எங்கு உள்ளார் எந்த அரை, தரை தளமா அல்லது முதல் தளமா என்ற விபரம்

    3 சம்பத்தப்பட்ட அலுவலர்கள் பெரும் புகார் மற்றும் கோரிக்கை விண்ணப்பங்களை தீர்வு செய்யும் அலுவலர் பெயர் பதவி அவர் அலுவலகத்தில் எங்கு உள்ளார் என்ற விபரம்

    4 சம்பந்தப்பட்ட அலுவலரால் தீர்வு கிடைக்க வில்லை எனில் மேல் நடவடிக்கை புகார் யாரிடம் தரவேண்டுமோ அந்த அலுவலக முகவரி மற்றும் அலுவலர் பெயர் தீர்வு செய்யாத அலுவலருக்கு அளிக்கப் படும் தண்டனை விபரம்

    ஒன்னும் தெரியாத அப்பாவி மக்கள் அலுவலகம் வந்தால் வெளியில் அந்த மரத்தடியில் இருப்பவரைப் பாருங்கள் நீங்கள் வந்திருப்பது எதற்கென்றே தெரியவில்லை என்று சொல்லி நடிக்கும் லஞ்சப் பேய்களும் ஒழுங்காய் தன வேலையை செய்யும்

    இதை ஓரளவு சரியாக செயல் படுத்திவிட்டால் அலுவலகங்களில் உள்ள இடைத் தரகர்கள் இருக்க மாட்டார்கள் இடைத் தரகர்களில் பெரும் பாலும் கச்சி காரர்களே இருப்பார்கள்
    இது நடைமுறைக்கு வரும்போது கட்சி தொண்டர்களுக்கு கருப்பு பணம் கிடைக்கும் பாதை அடைபடும் அவனும் வேறு வேலை அல்லது தொழிலுக்கு போய்விடுவான் கட்சித் தொன்ன்டன் என்று சொல்லும் இது போன்ற கருப்பு பணத்தை நம்பி இருக்கும் ஆட்கள் காணாமல் போவார்கள் அட கடைசியில கட்சியில பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஒரு தொண்டனைப் பார்க்க முடியாது

    உண்மையான நேர்மையானவர்கள் மக்களுக்காக உழைப்பவர்கள் கட்சியில் இருப்பார்கள் கட்சிகளும் உருப்படும் நாடும் உருப்படும் இதைச் செய்யா இந்த கருப்பு பண பேய்களால் முடியுமா?
    மக்கள் தான் போராடி உரிமையை பெற வேண்டும்
    குறிப்பு; மின் வாரிய அலுவலகங்களின் வாயிலில் இந்தியன் குரல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபோது குண்டர்களால் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் மிரட்டப்பட்டும் சில பகுதியில் கைகலப்பும் நடைபெற்றது தற்காலிகமாக பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது உரிய பாதுகாப்பு கிடைத்தால் மட்டுமே எங்களது பிரச்சாரம் தொடரும் வாய்ப்பு இருப்பவர்கள் தொடைபு கொண்டால் பெரும்பான்மை மக்களுக்கு நலனை அமையும்.

    ReplyDelete
  11. வியாபார நிறுவனங்கள்
    5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.

    வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் ஆட்களை நம்பியே இயங்குகின்றன இரட்டைக் கணக்கு முறை வைத்துக் கொள்வது சிரமம் ஆனாலும் சிலர் செய்யக்கூடும் அதற்கு திடீர் சோதனை நடவடிக்கை மூலம், உரிய சட்ட திருத்தங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

    வணிகம் செய்பவர்களுக்கு இப்போதுள்ள அனைத்து சட்டங்களும் வேஸ்ட் நடைமுறையில் எந்த சட்டத்தையும் முழுமையாக பின்பற்ற முடியுமா என்பதே கேள்விக்குறி அதற்கு மாற்று வேண்டும் அந்த மாற்றம் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில்இருக்க வேண்டும். அலுவலர்கள் தேவையில்லாமல் வணிகர்களை மிரட்டும் படி(பொய்யான குற்றச்சாட்டுக்கு ) இருக்கக் கூடாது

    என் நண்பர் சொல்கிறார் நான் வேலை ஆட்கள் பதிவேடு சம்பளப் பதிவேடு உள்ளிட்ட அனைத்தையும் சரியாக பராமரிக்கின்றேன் ஆயினும் ஆறு மாதம் ஒருமுறை தொழிலாளர் கண்காணிப்பு அலுவலருக்கு 500 ரூபாய் தர வேண்டி இருக்கின்றது. நான் மறுத்தால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி காம்பௌண்டிங் அல்லது வழக்கு போடுவார்கள் அதற்க்கு உண்மை இருக்க வேண்டும் என்று அவசியம்( தீர்ப்பு வரும் வரை ) இல்லை நாம் தான் தினமும் அலைய வேண்டியிருக்கும் . பொய்வழக்கு போட்டால் தண்டனை இல்லை எல்லாம் சரியாக வைத்திருந்தாலும் நினைத்தால்( லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக ) நடவடிக்கை எடுக்கலாம் என்றால் அது சரியா

    சரியான சட்டம் இருந்தால் அல்லது சட்டம் பற்றிய தெளிவு இருந்தால்
    இந்த ஊரில் நிறையக் கிடைக்கும் என்று நம்பி லஞ்சம் கொடுத்து மாற்றல் வங்கி வரும் நிலை ஒளியுமே அந்த துறை மேல்மட்டம் வரை ஏன் மந்திரியே கூட லஞ்சம் பெற வழி இல்லாமல் போகுமே பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஒருவன் தேர்தலில் நின்றால் அவனால் அந்த பணத்தை சம்பாதிக்க முடியாது என்ற நிலை வர வேண்டும் அதற்கு பொது மக்கள் விழிப்படைய வேண்டும்
    அரசுத் துறைகளின் நடைமுறை அறிந்திருக்க வேண்டும் முடிந்தால் பள்ளியில் அரசுத் துறைகள் செயல்பாடு குறித்து ஒரு பாடம் கொண்டுவரலாம்
    இது நடக்க வேண்டும் அதுவரை இந்தியன் குரல் அமைப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பயிற்சி என்று செயல்பட்டுக் கொண்டே இருக்கும். எங்களின் தோழர்கள் லஞ்சத்திற்கு எதிராக போராடியமைக்காக உயிரை இழந்திருக்கின்றார்கள். அதையும் தாண்டிய சேவை இந்தியன் குரல் அமைப்பினுடையது.
    இந்தியன் குரல் தமிழக முக்கிய நகரங்களில் இலவச உதவி மையங்களை நடத்திவருகிறது அலுவலக நடைமுறை விண்ணப்பங்கள் எழுத பயிற்சி மற்றும் உதவி பெற விரும்புபவர் கலந்து பயன் பெறலாம் இந்தியன் குரல் எந்த உதவிக்கும் கட்டணம் பெறுவதில்லை நன்றி எதிர்பார்ப்பதில்லை மாலை மரியாதை ஏற்பதில்லை எவ்வித நன்கொடையும் பெறுவதில்லை அமைப்பில் உறுப்பினர் சந்தா இல்லை
    உதவி மையங்கள் பற்றிய தகவல் அறிய தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 9444305581 போன் மூலம் கல்விக்கடன் உதவி தொடர்புக்கு தீபக் 9994658672 இந்தியன் குரல் அமைப்பு மூலம் உங்கள் ஊரில் தகவல் உரிமைச் சட்டம் குறித்த முழு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க 9443489976 மேலும் விபரங்களுக்கு இந்தியன் குரல் உதவி மையங்களில் தொடர்பு கொள்ளவும் சென்னையில் பிரதி மாதம் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்
    - பாலசுப்ரமணியன்
    இந்தியன் குரல்
    சென்னை
    9444305581--
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
  12. If a person puts black money in to a bank then the black comes in to circulation. It also gives a trace to the IT department to go after. Now what is the problem with that ?. Why CobraPost is making a big deal? In fact Govt should reward the Bank Managers for bringing the money back in to circulation and easy tracebility of IT dept.

    The media is the real problem for this country.


    ReplyDelete
  13. Anotehr point to be added, Income tax administration , may please stop pursuing nil returns and measly 10,000 rupees tax payers return, and concentrate on bigger offenders. That will give them time and manpower to sweep good amount of unpaid tax.

    ReplyDelete
  14. நல்லதொரு இடுகை. வாழ்த்துக்கள். வங்கிகளில் போடப்படுவதால் மட்டும் கருப்பு பணம் சலவை செய்யப்பட்டு வெண்மை ஆவதில்லை. அதாவது வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணம் அனைத்தும் வருமானம் அறிவிக்கப்பட்டு வரி செலுத்தி white money ஆகி விட்ட பணமல்ல. a good part of it is undisclosed/untaxed money as taxmen could not lay their hands on them yet . நீங்கள் cobrapost காணொளியை கூர்ந்து கவனித்தால், broadly bank officials நடைமுறையில் உள்ள data capture for reporting முறைகளை விளக்கி அவற்றில் மாட்டாமல் இருக்கும் வழி முறைகளை தெரிவு செய்ய உதவுகிறார்கள். But in any case, when the final cash flow comes into the customer's account, if he prefers to show it as white money, he needs to establish to the tax man as to how he built it.
    One of the main tool for black money generation, is the quantum of currency in circulation.Given the present growth in technology there is no need for printing the present quantum of currency. Many of the transactions can be settled electronically.It is to hide ill-gotten money, not just avoid tax alone,that people resort to black money generation.

    ReplyDelete
  15. PAN number should be mandatory for all real estate transactions above certain limit (say, 1 crore). Real estate is the major source of black money circulation

    ReplyDelete