Monday, March 25, 2013

முதலைப் பண்ணை

சில ஆண்டுகளுக்குமுன் மிகவும் தொடர்ச்சியாக, ஒவ்வொரு வார இறுதியிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை சென்றுவருவேன். அங்கு முதலைகள் மட்டுமின்றி, உள்ளே நுழைந்ததுமே பாம்புகள் பராமரிப்பகம் ஒன்று இருக்கும். பானைகளில் நான்கு விதப் பாம்புகள். நாகம், விரியன் வகைகள்.

முதலைகளில் பல வகைகள் உண்டு. ஆலிகேட்டர், குரொகடைல் என இரண்டு பெரும் வகைகள். ஆலிகேட்டரின் முகப்பகுதி வடகலை நாமம் போல U மாதிரி இருக்கும். குரொகடைல் முகப்பகுதி தென்கலை நாமம் போல இருக்கும். (முதலைப் பண்ணையில் ஓரிடத்தில் படம் போட்டு விளக்கியிருப்பார்கள். இங்குதான் முதலை முட்டைகள், வளர்ந்துவரும் சிறு முதலைகள் ஆகியவை இருக்கும்.)

இந்திய இனமான மகர் முதலைகள் எண்ணற்றவை முதலைப் பண்ணையில் உள்ளன. அதேபோல கொஞ்சம் கரியால் முதலைகளும் உள்ளன. கரியாலுக்கு நீண்ட வாயும், அதில் ஊசிபோலப் பற்களும் இருக்கும். ஆண் கரியால்களுக்கு வாய்க்குமேல் முடிச்சு மாதிரி இருக்கும்.

முதலைகள் தவிர, பலவித ஆமைகள், மீன்கள், மலைப்பாம்புகளையும் இங்கு காணலாம். இவைதவிர பல்வேறு பறவைகள் தாமாகவே இங்கு வருகின்றன.

நேற்று அங்கு எடுத்த சில புகைப்படங்களையும் மூன்று வீடியோ துண்டுகளையும் மட்டும் இங்கே சேர்த்துள்ளேன்.

படங்கள்:


பாம்பிலிருந்து விஷம் எடுப்பது:


ஒரு முதலை (மகர்) ஆடி அசைந்து நடந்து வருவது.


மலைப்பாம்பு ஒன்று அலைபாய்கிறது.



8 comments:

  1. இது கிழக்கு கடற்கரைச் சாலையில் எங்க இருக்குங்க? இந்த விடுமுறையில பசங்கள அழைச்சுட்டு போலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. முத்துக்காடு படகு சவாரி தாண்டி, திருவிடந்தை திவ்யதேசம் தாண்டி, மகாபலிபுரத்துக்கு முன்னாலேயே, இடது பக்கமாக வரும். பெரியவர்களுக்குக் கட்டணம் 35 ரூ. 10 வயதுக்கும் கீழான சிறுவர்களுக்கு ரூ. 10. படம் எடுக்க கேமராவுக்கு ரூ. 20. பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்ல ஆளுக்குத் தனியாக ரூ. 10 கட்டணம். அங்கு படம்(!) எடுக்க ரூ. 25 தனியாக.

      Delete
  2. மிக்க நன்றி, நிச்சயம் சிறுவர்கள் குதூகலமடைவார்கள்.

    ReplyDelete
  3. --ஆலிகேட்டரின் முகப்பகுதி வடகலை நாமம் போல U மாதிரி இருக்கும். குரொகடைல் முகப்பகுதி தென்கலை நாமம் போல இருக்கும்.--
    I laughed my heart out after reading these lines :)

    ReplyDelete
  4. ஐயங்கார்கள் முதலைகள் என்று எழுதாதவரை சரிதான் :). இருப்பினும் இவ்வாறு எழுதுவதை தவிர்ப்பது நல்லது.ஏனெனில் அப்புறம் முதலைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஐயங்கார்கள் நினைவில் வந்து நிற்பார்கள் :).அடுத்து மதிமாறன் வடகலை ஐயங்கார் அந்த வகை முதலை,தென்கலை ஐயங்கார் இந்தவகை முதலை என்று எழுதுவார்.

    ReplyDelete
  5. நாங்கள் சக்கர நாற்காலியில் வந்தால் காணும் வகையில் இவ்’விடங்கள்’ இருக்கின்றனவா? மிருகக்காட்சி சாலைகள் மற்றும் இவை போன்ற இடங்களில், பெரும்பாலும் அமர்ந்தபடி எட்டிப் பார்த்தாலும் தெரியாத வகையிலேயே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் சக்கர வண்டியில் வருவோருக்கு இந்த இடம் அவ்வளவு ஏற்றதாக இருக்காது என்றே நினைக்கிறேன். நீங்கள் எட்டிப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல, வண்டியைத் தள்ளிக்கொண்டு/ஓட்டிக்கொண்டு போவதிலும் கஷ்டங்கள் உண்டு. சில இடங்களில் ராம்ப் கட்டாயமாக இல்லை. ஓரிடத்திலாவது படி ஏறித்தான் வெளியேறவேண்டியிருக்கும்.

      இதுதான் இன்றைய நிலை.

      Delete
  6. சென்னையில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களில் இந்தப்பண்ணையும் ஒன்று.
    பல வருடங்களாக இருக்கிறது.
    கிண்டியிலும் ஒன்று இருக்கின்றது, ஆனால் அது இந்த அளவிற்கு பெரிதாய் கிடையாது.

    ReplyDelete