Thursday, July 04, 2013

மாரிச்செல்வம்: தொடரும் சாதனை

இரண்டு ஆண்டுகளுக்குமுன், மாரிச்செல்வம் என்ற இளைஞனைப் பற்றி என் பதிவில் எழுதியிருந்தேன். உங்களில் சிலர் அந்தப் பதிவைப் படித்திருக்கலாம். படிக்காதவர்கள் இங்கே சென்று முதலில் படித்துவிடுங்கள்.

மாரிச்செல்வம் - அறிமுகம்
ஒரு நிஜ ஹீரோ (அல்லது) மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை

இதனை எழுதி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட காரணத்தால், இப்போது மாரிச்செல்வம் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அவனைத் தொடர்புகொண்டேன். இப்போது பன்னிரண்டாவது முடித்துவிட்டான்.

மாரிச்செல்வம்
நான் என் வலைப்பதிவிலும் தமிழ்பேப்பர் வழியாகவும் மாரிச்செல்வத்தைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து, பலர் அவனுக்குப் பணம் அனுப்பினர். கிட்டத்தட்ட 1.5 லட்ச ரூபாய் அவனுடைய வங்கிக் கணக்குக்கு உங்களிடமிருந்தெல்லாம் வந்திருக்கிறது. வேறு ஒரு நகரில் உள்ள உயர்மட்டப் பள்ளி ஒன்று அவனைத் தொடர்புகொண்டு, செலவே இல்லாமல் அவனை மேற்கொண்டு படிக்கவைப்பதாகச் சொல்லியுள்ளது. ஆனால் அவன் தொடர்ந்து தான் படிக்கும் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலேயே, தமிழ் மீடியத்திலேயே, +2 படித்து முடித்தான். அவன் வாங்கிய மதிப்பெண்கள்

தமிழ் - 189, ஆங்கிலம் - 183, இயற்பியல் - 195, வேதியியல் - 197, உயிரியல் - 198, கணிதம் - 195.

மருத்துவப் படிப்புக்கான கூட்டுத் தொகை 196.5 என்று வந்திருக்கிறது. கவுன்செலிங்கில் பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது, ஆனால் சென்னைக் கல்லூரிகள் எதிலும் இடம் கிடைக்கவில்லை. எனவே கன்யாகுமரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளான். இந்த மாதம் சென்று சேரவேண்டும்.

மருத்துவப் படிப்பு படித்து முடித்ததும் மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறாய் என்று கேட்டேன். இதய சிகிச்சை பற்றி மேலே படிக்க விரும்புவதாகச் சொன்னான்.

மருத்துவப் படிப்புக்கு நிறையச் செலவாகுமே, கன்யாகுமரியில் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கவேண்டியிருக்குமே என்றேன். மிகவும் அப்பாவியாக, இதுவரை அவனுடைய வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ள ரூ. 1.5 லட்சத்தைக் குறிப்பிட்டு, வேண்டிய அளவு பணம் இருப்பதாகச் சொன்னான்.

நீங்கள் நினைத்தால் அவனுடைய தேவைக்கான பணம் எளிதில் கிடைத்துவிடும். தமிழ் வழிக் கல்வியிலிருந்து தாண்டி மருத்துவக் கல்வி உலகுக்குள் நுழைய நிறையப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும். இதுநாள்வரை இருந்த சிறு கிராமத்திலிருந்து நிறைய மாணவர்களுடன் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

அதையெல்லாம் மாரிச்செல்வம் செய்துவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மருத்துவர்கள், சமீபத்தில் மருத்துவம் படித்தவர்கள் விரும்பினால் மாரிச்செல்வத்துக்கு மருத்துவப் படிப்பு பற்றிச் சொல்லி உதவலாம். உங்களிடம் படித்துப் பயன்படுத்திய பழைய மருத்துவப் புத்தகங்கள் இருந்தால் கொடுத்து உதவலாம்.

(உங்களில் யாரேனும் மாரிச்செல்வத்தை தொலைப்பேசியில் அழைத்துப் பேச விரும்பினால், எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். மாரிச்செல்வத்தின் போன் நம்பரைத் தருகிறேன்.)

12 comments:

 1. Badhri,
  Please update bank account details in your post.
  I will send my part.

  Thanks for sharing this.

  ReplyDelete
 2. Govt college la mbbs padikrathuku romba kammi selavu thaan aagum.. College fees below 10k only per year.. Hostel fees kammiyathaan irukum.. Mess fees ok va irukum. Books thaan romba selavaagum..

  ReplyDelete
 3. Books to buy (mandatory):

  Anatomy - 1.)Gray's Anatomy or its copy-cat(not exactly plagiarised)Indian version - B.D.Chaurasya (three volumes)
  2.) Cunningham's Anatomy (for dissection class) - three volumes.

  Physiology - 1.) Guyton's Physiology
  2.)Ghai's Physiology Practicals

  Biochemistry - 1.) Lippincott's Biochemistry

  Books to avoid/ not to buy / not advisable:
  Gray's Students' anatomy
  Chembulingam's Physiology(low quality; no in-depth knowledge)
  Satyanarayana's Biochemistry(low quality)
  Harper's Biochemistry ( too high, not recommended for UGs)

  Optional:
  Human bone set(available in medical book stores in Chennai)
  Netter's Anatomy (highly recommended)
  Books are costlier online; cheaper at 25% discount at medical book stores opposite to GH, Chennai.

  ReplyDelete
 4. The support Mariselvam received after publishing it in your blog is a good example to illustrate how social media can be used to provoke pro social behavior in the people.Thanks a lot

  ReplyDelete
 5. Dear Badhri,

  Please update bank account details in your post.
  I will send my part.

  Thanks for sharing this.

  ReplyDelete
 6. வணக்கம் சார்!

  ஒருவனது சாதனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை வெளிக்கொண்டு வருவதற்கு சரியான ஊடகம் இருந்தால் மட்டுமே அது அங்கிகரிக்கப்படும் என்பதற்கு தங்களது பதிவும் அதன்மூலம் மாரிச்செல்வம் அடைந்த பயன்களும் எடுத்துச் சொல்லுகின்றது...தனது மகனின் கல்வி பற்றி ஏக்கத்தோடு இறந்து போன தந்தையின் வேண்டுதலாய்க் கூட இது இருந்திருக்கலாம்..

  நன்றிகள் பல....

  ReplyDelete
 7. Badri,

  Pls update his bank ac details. Besides, is there a note on him that can be circulated among docs at Apollo - my cousin is closely connected with the hospital and one may get some docs to open their considerably mighty wallets.

  ReplyDelete
  Replies
  1. I have asked for complete and current details of his bank account. I will get it soon and will post it here.

   I will put a note in English and mail you over the weekend. A few doctors who I know have already responded and I have shared Marichelvam's phone number to them. They are in direct touch with him.

   Delete
 8. லீனஸ் லிSat Jul 06, 12:09:00 AM GMT+5:30

  பத்ரி சாரி, வணக்கம்

  எத்தனையே மாரிச்செல்வங்கள் கவனிப்பார் இன்றி காலத்தின் ஓட்டத்தில் மறைந்து போகிறார்கள். மாரிச்செல்வத்தை எங்கள் முன் நிறுத்தியதற்கு நன்றி. மாரிச்செல்வத்தை தங்கள் நினைவில் வைத்து, இரண்டு வருடங்களுக்கு பிறகும் அவரைப்பற்றி அறிந்து எழுதியதற்கு மனமார்ந்த பாரட்டுக்கள். உங்களைபோலவே மாரிச்செல்வத்தை அனைவரும் நினைவில் கொண்டு, வருடம் வருடம் அவருடைய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி மாரிச்செல்வம் ஆசைப்பட்டதுபோல் சிறந்த இருதய சிகிச்சை மருத்துவராக வர நம்மாலான உதவியை செய்வோம்

  ReplyDelete
 9. Congrats Marichelvam for a great accomplishment. He will definitely need a lot of help studying in English. Hope he doesn't lose his mojo in that process. Thank you Badri for checking with him and upating us..

  -Narayanan

  ReplyDelete
 10. Dear Sir,

  Thanks for the initiative.I'm willing to help.My Mail ID - msnnazar@gmail.com.

  Thank you.

  Regards,

  Nazar

  ReplyDelete