சென்ற மாதம், வேம்பார் என்ற இடத்தில் PAD என்ற தொண்டமைப்பின் பணியாளர்களுக்கு இணையம் பற்றி இரண்டு நாள் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினேன். அவர்கள் தினம் தினம் சந்திக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத சரியான களம் வலைப்பதிவுகள்தான் என்பதை எடுத்துச்சொன்னடதோடு, எப்படி எழுதுவது என்பதைப் பற்றியும் ஓரளவுக்கு விளக்கினேன். அதன் விளைவாக உருவானதுதான் மன்னார் வளைகுடா வாழ்க்கை என்ற வலைப்பதிவு. அதில் அவர்கள் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆவல்.
இன்று வந்திருக்கும் ஒரு பதிவு நெஞ்சைத் தொடக்கூடியது.
மாரிச்செல்வம் என்ற பத்தாம் வகுப்புச் சிறுவனின் கதை இது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலாவதாக வந்திருக்கும் இந்த மாணவன் எந்த மாதிரியான சூழ்நிலையில் பரீட்சை எழுதவேண்டிவந்தது, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவன் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளான் என்பதை நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த மாணவன் எதிர்காலத்தில் பெரிய சாதனைகளைச் செய்ய என் வாழ்த்துகள்.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
6 hours ago
Dear Badri,
ReplyDeleteபடித்து விட்டு மனம் கனத்துப்போனேன்
நீங்கள் செய்து வரும் தொண்டு மிகவும் போற்றத்தக்கது.
பதிப்பகத்தில் சாதனை புரிந்துள்ள நீங்கள்,
ஏழை எளியோருக்கு கல்வி கற்பிக்கும் பணியிலும் புதிய உயரங்களைத் தொட என் வாழ்த்துக்கள்.
ராமருக்கு அணில் உதவியது போல இயன்ற உதவியை செய்ய தயாராக உள்ள என்னைப்போன்ற பல வாசகர்களையும் தக்க வகையில் பயன் படுத்திக்கொள்ளவும்.
நன்றி வணக்கம்
நல்ல சேவை பத்ரி, தமிழ் பேப்பரிலும் இம்மாணவனைப் பற்றி வெளியிட்டதற்கு. அரசே ஸ்காலர்சிப் வழங்க முன் வர வேண்டும். என்னால் ஆன உதவியைச் செய்ய தயாராக உள்ளேன்.
ReplyDeleteSix children for someone who does not know where his next meal is coming from? Somebody should introduce condoms to this group of people. Why do poor people have so many children? Of course, this not to take the credit from this boy whose achievement is even more commendable given the heavy odds against him?
ReplyDelete