Monday, April 06, 2015

மின்வணிகம்

எங்கள் அலுவலகத்தில் சென்ற வாரம் சேல்ஸ் மீட்டிங் நடந்தது. விற்பனை அணியில் மொத்தம் 16 பேர். நான்கு பேர் சென்னைக்காரர்கள். மீதம் 12 பேர் தமிழகத்தின் வெவ்வேறு நகரத்தில் இருப்பவர்கள் - கடலூர், வேலூர், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, இப்படி நகரம் அல்லது அதை ஒட்டி இருக்கும் பகுதியாக இருக்கும். அவர்கள் மின்வணிகத் தளம்மூலம் பொருள்களை வாங்குகிறார்களா என்று ஒரு சின்ன ‘கருத்துக் கணிப்பு’ நடத்தினேன்.
  • அனைவரும் மொபைல் மூலம்தான் (3ஜி அல்லது 2ஜி) இணைய இணைப்பு பெறுகிறார்கள். வீட்டில் டி.எஸ்.எல் அல்லது ஃபைபர் இணைப்பு இல்லை.
  • 16 பேரில் 9 பேர் மட்டுமே இணையம் மூலம் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். மீதி 7 பேர் இதுவரை வாங்கியதில்லை.
  • இணையம் மூலம் பொருள்களை வாங்குபவர்கள் கணினி அல்லது மொபைல் இரண்டையும் பயன்படுத்திப் பொருள்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
  • வாங்கியுள்ள அனைவருமே (9 பேருமே) COD முறைமூலம் மட்டுமே பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். ஒருவர்கூட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் ஆகிய முறைகளைப் பயன்படுத்தவில்லை.
  • அவர்கள் பொருள்களை வாங்கப் பயன்படுத்தியுள்ள தளங்கள்: flipkart.com, snapdeal.com, zovi.com, jabong.com ஆகியவை. இதுவரை ஒருவரும் amazon.com தளத்தில் ஒன்றையும் வாங்கவில்லை.
  • வாங்கியுள்ள பொருள்கள்: பென்-டிரைவ், மொபைல் போன், ஷூ, துணி ஆகியவை. (புத்தகங்களை ஒருவர்கூட வாங்கவில்லை:-)
  • வாங்குவதற்கான முக்கியக் காரணங்கள்: விலை மலிவு (ஆஃபர்), மொபைல் போன்றவற்றில் கிடைக்கும் ரேஞ்ச் (கடைகளில் காணக் கிடைக்காத பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன).
  • பிரச்னைகள்: COD முறையில் வாங்கும்போது பொருள்களைக் கொடுக்க வருபவர் பேக்கேஜைத் திறந்து பார்க்க அனுமதிப்பதில்லை. பணம் வாங்கிக்கொண்டு, டப்பாவைக் கொடுத்துவிட்டு உடனடியாக ஓடுவிடுகிறார். ஒருமுறை முற்றிலும் உடைந்த பொருள் ஒன்று உள்ளே இருந்தது... ஷூ அளவு சரியாக இல்லை. மாற்றுவதற்குபதில் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டேன்... இப்படி.
அடுத்து அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் விரிவான சில கருத்துக் கணிப்புகளைச் செய்யலாம் என்றிருக்கிறேன். மின்வணிகம், செல்ஃபோன் பயன்பாடு, இணையப் பயன்பாடு, ஸ்மார்ட்ஃபோன் குறுஞ்செயலிகள் பயன்பாடு... இப்படி.

5 comments:

  1. மின் வணிக வாடிக்கையாளர்கள் , பெரும்பாலும் நடுநிலை சம்பள வர்க்கம்.
    பணத்திற்காக ஒரு ஜன்னலில்/திரையில் அலுவலக வேலையும்
    மனதிற்காக இன்னொரு ஜன்னலில்/ திரையில் கணினி/அலைபேசி புரட்சி செய்யும் மாவீரர்கள், மாவீரங்கனைகள் தாம் .
    கடை வர செல்லும் அலைச்சல், பார்க்கிங் எரிச்சல் இவற்றைத் தவிர்க்க
    ப்ளிப்கார்ட் , ச்னாப்டீல் , அமேசான் , கோக் டு ஹோம் , பிக் பாஸ்கட் , KFC ஆகியவை .

    அதுவும் அந்த டெலிவரி பாய்க்கு 50/ 100 டிப்ஸ் வழங்குகையில்
    மொத்த ரோமானிய சாம்ரஜ்யதிற்கே தான் அதிபதி என்ற மன நிறைவு
    ஒரு 26 வயது மென்பொருள் பொறியாலினி மனதில் தோன்றுமே .
    அதை வார்த்தைகளாலோ , வண்ண தாசன் களாலோ விவரிக்க முடியாது

    ReplyDelete
  2. இணையம் மூலம் பொருட்கள் வாங்க ஆரம்பித்த பின்னர் எனது அனைத்து தேவைகளுக்கும் இணையம்தான். முக்கியமான காரணம் அனைத்து பிராண்டுகளையும் அலசி நமக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கும் வசதி. விலை குறைவு இரண்டாவது. இதுவரை ஏமாற்றம் அடைந்ததில்லை. சிஓடி வசதி இருந்தாலும் ஏதோ நம்பிக்கையில் வங்கி மூலம் முன்னரே செலுத்தி விடுகிறேன். சில சமயங்களில் பொருட்கள் ஸ்டாக் இல்லையென்றால், ஒரு வாரத்தில் நம் கணக்கில் பணம் திருப்பிச் செலுத்தி விடுகிறார்கள். பொதுவாக நமது குறைகளை கேட்டு பதில் கூறுகிறார்கள். நான் குறிப்பிட்ட பொம்மை வராததில், உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டார்கள். டிரெட்மில், 55' டிவியில் இருந்து பென் டிரைவ் புத்தகங்கள் வரையும் பஸ், விமான டிக்கட் மற்றும் ஹோட்டல் புக்கிங்கும் இணையம் மூலமே செய்கிறேன். மொத்தத்தில் இதுவரை திருப்திதான். இபே க்ளோபல் மூலம் இங்கு சந்தைக்கே வராத ஹெட்போன், ஆம்ப்ளிபயர், கிண்டில் போன்றவற்றை அமெரிக்காவில் இருந்து நேரடியாக வாங்கும் பொழுதும் பிரச்னை ஏதும் ஏற்ப்பட்டதில்லை. ஆனால் பொருள் வரும் வரை கொஞ்சம் டென்சனாக இருக்கும். அவ்வளவுதான்.

    ReplyDelete
  3. இபேயை விட்டு விட்டீர்களே.இபே(eBay) தரக்குறைவான சைனா பொருட்களை விற்கிறது.அரைகுறையாக டெலிவரி செய்கிறார்கள்.பைசாபே(paisapay) இபேகேரன்டி(eBay guarantee) என்பதெல்லாம் சும்மா ஹம்பக்.ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அவர்கள் நம்மை செல்பேசியில் தொடர்புகொண்டதாகவூம் நம் செல்பேசி தொடர்பு எல்லைக்குள் இல்லை என்பதால் இதனை இத்துடன் முடித்துக் கொள்வதாகவூம்(issue closed) மின்னஞ்சல் தந்து விடுகிறார்கள்.அவர்களது கால்சென்டரில் தொடர்பு கொண்டால் மணிக்கணக்காக நம்மை திரும்பத் திரும்ப பேச விடுகிறார்கள்.இபே என்பது மோசடி சைனாபஜார்.இதற்கு ஃபிளிப்கார்ட் எவ்வளவோ பரவாயில்லை.

    ReplyDelete
  4. amazon and flip kart are doing well. we can trust these sites

    ReplyDelete
  5. அமசான்,பிலிப் காரட்போன்ற நிறுவனங்கள் நன்றாக

    வே விற்கிறார்கள். நம்பலாம்

    ReplyDelete