Thursday, April 09, 2015

ஜெயமோகனின் ‘பிரயாகை’

ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதிவருகிறார். இந்த மீளுருவாக்கம் பல நாவல் தொகுதிகளாக வெளிவரப்போகிறது. இந்த வரிசையில் அவர் எழுதிய முதல் நான்கு நாவல்கள் - முதற்கனல்,  மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் - நற்றிணை வாயிலாக வெளியாயின. இப்போது ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாக உள்ளது. ஏற்கெனவே வெளியான நான்கு நாவல்களும்கூட இனி கிழக்கு பதிப்பகத்தின் மறுபதிப்புகளாக வெளியாகும்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இரு வடிவங்களில் வெளியாகின்றன. ஒன்று, வண்ணப்படங்களுடன் கூடிய கெட்டி அட்டை செம்பதிப்பு. இரண்டாவது படங்கள் ஏதுமின்றி சாதா பைண்டிங் பதிப்பு. பிரயாகையின் கெட்டி அட்டை செம்பதிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 1088 ராயல் சைஸ் பக்கங்கள் + 92 வண்ணப் பக்கங்கள். விலை ரூ. 1,500/-


இந்த நாவலின் மையச்சரடு திரௌபதி. புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:
ஒரு சிறு வஞ்சத்திலிருந்து மாபெரும் வஞ்சங்கள் முளைத்தெழுவதை, அவை ஒன்றிலிருந்து ஒன்றெனப் படர்ந்து பெரும் மானுடத்துயரம் நோக்கிக் கொண்டுசெல்வதைச் சித்திரிக்கும் நாவல் இது. மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு ஓர் உச்சம். எரிதழலில் பிறந்த கன்னி அவள் என்கிறார் வியாசர். சிறுமைக்கு ஆளான துருபதனின் வஞ்சமே திரௌபதியாக முளைத்தது. அது சிறுமைப்படுத்தப்பட்ட துரோணரின் வஞ்சத்தின் விளைவு. வஞ்சம் என்பது ஒரு விதை. காடாகும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டது.

பிரயாகை என்பது நதிச்சந்திப்பு. ஐந்து நதிகள் இணையும் பெருநதியான கங்கைக்கு நிகராக இந்நாவலில் திரௌபதி நிறைந்திருக்கிறாள். பேரழகும் பெருங்கருணையுமாகப் பிறந்த பேரழிவின் தெய்வம் அவள். இது அவளுடைய பிறப்பின் வளர்ச்சியின் கதை. ஐங்குழல் கொற்றவையாக அவள் ஆகி நிற்கும் முழுமையில் முடிவடைகிறது.
இந்தச் செம்பதிப்பை முன்பதிவு செய்வதற்கான சுட்டி.

No comments:

Post a Comment