Monday, July 31, 2006

Podcast xml - வலையொலிபரப்பு ஓடை

இனி தொடர்ச்சியாக வலையொலிபரப்பைச் செய்யப்போகிறேன் என்பதால் அதற்கென ஓர் ஓடையைத் தயார் செய்துள்ளேன்.

Itunes அல்லது அதுபோன்ற பிற podcast ஓடையைப் படிக்கக்கூடிய செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தலாம்.

http://thoughtsintamil.blogspot.com/podcasts/badripodcast.xml

தமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்

தமிழக சட்டமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் கண்ணியமான முறையில் நடைபெறவில்லை. நடைபெறும் விவாதம் 'உன் ஆட்சியில் நீ என்ன செய்தாய்', 'என் ஆட்சியில் நான் என்ன செய்தேன்' என்பதுமாகவும் அடுத்தவரை கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் மட்டுமே உள்ளது.

குறைந்தபட்சம், வெளியிலாவது பட்ஜெட்டின் சில முக்கியமான பகுதிகள்மீது தீவிரமான விவாதம் நடக்கவேண்டியது அவசியம்.

தொடரும் என் வலையொலிபரப்பில் Dr. A.M.சுவாமிநாதன், ஓய்வுபெற்ற IAS, முன்னாள் தமிழக நிதித்துறைச் செயலருடன் பட்ஜெட் பற்றிய சிறு விவாதம் இங்கே.



பட்ஜெட் 2006 பற்றிய என் பதிவு

Sunday, July 30, 2006

இந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு

இந்திய அமெரிக்க அரசுகளுக்கிடையே அணு ஆற்றல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பயன், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எப்படிப் பார்க்கிறது போன்ற விஷயங்கள் பற்றி எல். வி. கிருஷ்ணனுடன் (முன்னாள் இயக்குனர், கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்) உரையாடினேன். அந்த வலையொலிபரப்பு இங்கே, உங்களுக்காக.



நியூ யார்க் டைம்ஸ் கருத்துப்பத்தி இங்கே.

[பி.கு: Quicktime player இருந்தால் முழு ஒலித்துண்டும் இறங்குவதற்கு முன்னமேயே ஒலி கேட்கத் தொடங்கிவிடும். நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கத் தேவையில்லை. Amplitude குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வால்யூம் அதிகமாக இருந்தால்தான் நன்றாகக் கேட்கிறது. இதை இனி வரும் நாள்களில் சரி செய்கிறேன்.]

Saturday, July 29, 2006

சென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்

கே.எம்.விஜயன் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்:

1. K.வெங்கடராமன்
2. K.சந்துரு
3. V.ராமசுப்ரமணியன்
4. S.மணிகுமார்
5. A.செல்வம்

புகைப்படங்களும் செய்தியும் இங்கே.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

டெண்டர் முடிந்து மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட எண்ணிக்கையில் அவை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்.

வீடியோகான் - 15,000
கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா - 7,500
டிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா - 7,500

ஒரு பெட்டிக்கு ரூ. 2,965 விலை என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நான் ஒரு பெட்டி ரூ. 3,333 ஆகும் என்று கணித்திருந்தேன். எனவே இப்பொழுது கிடைத்திருப்பது நல்ல விலைதான்.

ஆக 30,000 பெட்டிகள் வாங்க ஆகும் செலவு = ரூ. 8.895 கோடி

அடுத்த கட்டத்தில் சர்வதேச அளவில் டெண்டர் என்று வரும்போது மேலே குறிப்பிட்ட தொகையைவிடக் குறைவாகவே கிடைக்கலாம். ஒரு பெட்டிக்கு ரூ. 2,800 என்று வைத்துக்கொள்வோம். அதற்குக்கீழே போவது கடினமாக இருக்கும். அப்படியானால் மீதமுள்ள ரூ. 741.105 கோடியில் நிச்சயம் 26.4 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்கும்.

கலர் டிவியினால் உபயோகமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.

கலர் டிவி விஷயத்திலேயே பல பிரச்னைகளை இந்த அரசு சமாளிக்கவேண்டிவரும். கலர் டிவி ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் சப்ளையரே தனது வாரண்டி காலத்தில் தனது செலவில் சரிசெய்து தரவேண்டும். அடுத்து டிவி சரியாக இயங்க தரமான மின்சாரம் வேண்டும். ஸ்பைக் பஸ்டர் வேண்டும். கேபிள் இணைப்பு இருந்தால்தான் கொஞ்சமாவது உருப்படியான content கிடைக்கும். மக்களுக்கு கலர் டிவி தரும் கேளிக்கை வேண்டும் என்பதால் அதற்குத் தேவையானவற்றைத் தாங்களே செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் கலர் டிவி விநியோகம் எந்த அளவுக்கு வெற்றி என்று ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல நாளைக்கு குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.

எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.