Saturday, July 29, 2006

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

டெண்டர் முடிந்து மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட எண்ணிக்கையில் அவை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்.

வீடியோகான் - 15,000
கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா - 7,500
டிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா - 7,500

ஒரு பெட்டிக்கு ரூ. 2,965 விலை என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நான் ஒரு பெட்டி ரூ. 3,333 ஆகும் என்று கணித்திருந்தேன். எனவே இப்பொழுது கிடைத்திருப்பது நல்ல விலைதான்.

ஆக 30,000 பெட்டிகள் வாங்க ஆகும் செலவு = ரூ. 8.895 கோடி

அடுத்த கட்டத்தில் சர்வதேச அளவில் டெண்டர் என்று வரும்போது மேலே குறிப்பிட்ட தொகையைவிடக் குறைவாகவே கிடைக்கலாம். ஒரு பெட்டிக்கு ரூ. 2,800 என்று வைத்துக்கொள்வோம். அதற்குக்கீழே போவது கடினமாக இருக்கும். அப்படியானால் மீதமுள்ள ரூ. 741.105 கோடியில் நிச்சயம் 26.4 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்கும்.

கலர் டிவியினால் உபயோகமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.

கலர் டிவி விஷயத்திலேயே பல பிரச்னைகளை இந்த அரசு சமாளிக்கவேண்டிவரும். கலர் டிவி ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் சப்ளையரே தனது வாரண்டி காலத்தில் தனது செலவில் சரிசெய்து தரவேண்டும். அடுத்து டிவி சரியாக இயங்க தரமான மின்சாரம் வேண்டும். ஸ்பைக் பஸ்டர் வேண்டும். கேபிள் இணைப்பு இருந்தால்தான் கொஞ்சமாவது உருப்படியான content கிடைக்கும். மக்களுக்கு கலர் டிவி தரும் கேளிக்கை வேண்டும் என்பதால் அதற்குத் தேவையானவற்றைத் தாங்களே செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் கலர் டிவி விநியோகம் எந்த அளவுக்கு வெற்றி என்று ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல நாளைக்கு குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.

எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.

6 comments:

 1. // எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.

  Badri,

  Is this becaz of reduction in estimated costs??. Anyways would be interesting if u could explain more on this !!

  // குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க

  I'm also really wondered people started talking abt this quite earlier IMO. Is it the immediate requirement??. If they are very particular let them first concentrate in High schools level and then move on. Anyways would like to hear ur stand on this ..

  ReplyDelete
 2. நாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.//

  இணைய தொடர்பு இல்லாத கணினியால் ஏதாவது பிரயஜோனம் உண்டா?வேப்பமரத்தடியில் உட்கார்ந்து சீட்டு விளையாடுவதற்கு பதில் கம்ப்யூட்டரில் ஆடுவார்கள்.அல்லது மார்வாடி கடையில் அடகு வைப்பார்கள்.

  அரசு பள்ளிக்கூடங்களில் கம்ப்யூட்டர் வாங்கி கணிணிப்பயிற்சி அளித்தால் ஏதாவது நல்லது நடக்கும்.செலவும் குறையும்.

  /எனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்./

  எம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் கடைபிடித்த இலவச அரசியலை கலைஞரும் கடைபிடிக்கிறார் என்பதை தவிர நிலையை மாற்றிக் கொள்ள இதில் என்ன இருக்கிறது?

  இதெல்லாம் வரியாக அதே ஏழைகள் தலையில் தான் விழும்.

  ReplyDelete
 3. ஏங்க இந்த கலர் டீவி தேவையாங்க...?

  இன்னொறு Statistics..!!
  ஒரு 4 பேர் கொண்ட குடும்பம் அதில் வோட்டளிக்கும் வயதுடயவர்கள் இரண்டுபேர் என்று வைத்துக் கொண்டால்..இரண்டு வோட்டுக்கு ரூ. 2,965.

  இதில் எதிர்கட்சி வோட்டுகள், அப்படி இப்படி என்று கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த விலை 2 வோட்டுக்கு மிகக் குறைவு தான்...

  பிரியாணிக்கும், குவாட்டருக்கும் வோட்டு விழுந்த காலம் போய்...கலர் டீவிக்கு வோட்டு...அடுத்து என்ன....வீட்டுக்கு ஒரு கார்?
  வீட்டுக்கு ஒரு ஹீரோ ஹோண்டா?!!

  சத்தியமா சொல்றேன்... நான் நிச்சயம் வரி ஏய்ப்பு தான் செய்வேன்..!!

  ReplyDelete
 4. ரூ. 5,000-ல் கணிணி சாத்தியமே. பார்க்க http://laptop.media.mit.edu/
  கூடிய விரைவில் சன் ஆரம்பிக்கவிருக்கும் சன் ISP மூலம் இவ்வகை மலிவு விலைக் கணிணிக்கு மட்டும் இலவசமாக இணைய வசதி செய்து கொடுக்கக்கூடும்.

  ReplyDelete
 5. 30,000 தொலைகாட்சி பெட்டி போதுமா? என்ன இருந்தாலும் சிக்கல் தான்

  ReplyDelete
 6. உண்மையிலேயே இந்த டிவியை உருப்படியாக
  பயன்படுத்த வேண்டுமென்றால், ரோடு சைட் தேர்தல்
  பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு வேட்பாளர்கள் லோக்கல்
  கேபிளில் பிரச்சாரம் செய்ய்லாம்.

  அல்லது
  தெனாலி ராமன் கதையைப் போல ஆறு மாதத்திற்கு
  ஒரு முறை அதிகாரிகளுக்கு டிவியை காண்பிக்க
  வேண்டுமோ?


  இங்கு டிஸ்னி போன்ற தனியார் சேனல்கள் கூட ஒரு நாளைக்கு
  3 மணிநேரம் educational program கொடுக்க வேண்டும் என்று
  சட்டமே இருக்கிறது. இது போன்ற ஒரு சட்டத்தை தமிழக
  அர்சு போடுமா?

  ReplyDelete