Monday, July 31, 2006

Podcast xml - வலையொலிபரப்பு ஓடை

இனி தொடர்ச்சியாக வலையொலிபரப்பைச் செய்யப்போகிறேன் என்பதால் அதற்கென ஓர் ஓடையைத் தயார் செய்துள்ளேன்.

Itunes அல்லது அதுபோன்ற பிற podcast ஓடையைப் படிக்கக்கூடிய செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தலாம்.

http://thoughtsintamil.blogspot.com/podcasts/badripodcast.xml

13 comments:

 1. Can you embed the flash player (like YouTube/Google Video for easy listening?

  ReplyDelete
 2. Badri,

  kattayamaa blogger service thaan vupayOkkikkaNumaa, podcast panna.

  romba slow-aa irukku. iraNdu naaLaikku munnaadi I tried that hisbullah version. too slow.

  if it is possible use some fast servers. I think bandwidth problem with blogger. But I dont know exactly.

  If it is possible you can explain.

  Regards

  ReplyDelete
 3. (1) பரி: பார்க்கிறேன்.
  (2) மோகன்தாஸ்: வேறு என்ன serverகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லுங்கள், முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 4. தங்களின் வலை ஒலிபரப்பு சேவைக்கு நன்றி. நல்ல முயற்சி. படித்து புரிந்து கொள்வதை விட கேட்டு புரிந்து கொள்வது சுலபமாக இருக்கிறது. உபயோகமான கலந்துரயாடல்கள். எளிதில் புரியும் வண்ணமிருந்தது.

  வலையொலிபரப்பை தொடரப் போவதாக நீங்கள் கூறியிருப்பது நல்ல செய்தி. மீண்டும் நன்றி.

  ReplyDelete
 5. I hope you already know about podbazaar.com. Otherwise, it's a good place to advertise your podcasts, Badri.

  ReplyDelete
 6. நல்லது பத்ரி,

  ஆனால் File size 19-20 MB என்று பெரிய் சைசில் இருப்பதை குறைக்க முயற்சி செய்ய முடியுமா?

  நன்றி,
  ஷங்கர்.

  ReplyDelete
 7. அடப்பாவீ...கலக்குறீங்களே அப்பு...சூப்பரா இருக்குது...

  தொடர்ந்து பல மேட்டர்களை போடுங்க ராசா..

  ReplyDelete
 8. வஜ்ரா: 128 kbps Mp3 என்றால் ஒரு நிமிடத்துக்கு 1 MB தேவைப்படும். 64 kbps என்றால், அதில் பாதி. அதற்குக் கீழே (32 பிட்) என்றால் தரம் அவ்வளவு நன்றாக இருக்காது. முதல் இரண்டும் 128-ல் செய்தேன். மூன்றாவதை 64-ல் செய்துள்ளேன்.

  உட்பொருந்திய ஒலிப்பானைச் சேர்த்தால் கோப்பின் அளவு பற்றி அவ்வளவாகக் கவலைப்படவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 9. பத்ரி,
  நல்ல முயற்சி. நீங்கள் கோப்பின் அளவைக் குறைக்க முனைந்தால் Speex என்ற codecஐ பயன்படுத்தவும்.

  எல்லோருக்கும் புரியும் வண்ணம் கேள்விகளை அருமையாகக் கேட்கிறீர்கள். தன்னையறியாமல் வந்து விழும் ஆங்கில வார்தைகளுக்குப் பதில் தமிழ் வார்த்தைகளை உபயோகித்தால் இன்னும அருமையாக இருக்கும்.

  நன்றி

  ReplyDelete
 10. "தன்னையறியாமல் வந்து விழும் ஆங்கில வார்தைகளுக்குப் பதில் தமிழ் வார்த்தைகளை உபயோகித்தால் இன்னும அருமையாக இருக்கும்."

  உரையாடும்போது முன்னேற்பாட்டுடன் செயல்படுவதில்லை. Spontaneity-க்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். மொழி அடுத்ததுதான்.

  என் தமிழ் சொற்புழக்கம் அதிகமாகும்போது இந்தப் பிரச்னைகள் ஓரளவுக்குக் குறையலாம்.

  இப்பொழுதைக்கு வலிந்து மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

  நன்றி.

  ReplyDelete
 11. பத்ரி அண்ணே, இந்த மாதி பொட்காஸ்ட் செய்யும் முறையை பற்றி எங்களுக்கும் புரிகிறமாதி ஏதாவது எழுதி அதை பொதுவுடைமையாக்க முடியுமா?


  அட்வான்ஸ் நன்றி.

  ReplyDelete
 12. பத்ரி,

  speex வடிவம் மிகத்துல்லியமான அதே நேரம் மிக சிறிய கோப்புக்களை உருவாக்க வழிதரும்.
  உங்களுடைய கோப்புக்களை நான் ogg வடிவத்துக்கு மாற்றிப்பார்த்தபோது (எந்தவித நெருக்குகையும் இல்லாமல்) ஏறத்தாழ பாதியளவாக குறைந்தது.

  இவ்விரு வடிவங்களையும் சோதனை செய்யவும்.

  இன்னுமொரு நன்மை இவை இரண்டும் திறந்த் வடிவங்கள்.

  ReplyDelete
 13. கார்த்திக்: தனிப்பதிவாகவே பதில் சொல்லியிருக்கிறேன்.

  மயூரன்: ogg வடிவம் பார்த்தேன். Audacity-க்குள்ளிருந்தே ogg vorbis கோப்பாகச் செய்யமுடியும். ஆனால் Windows Media Player வைத்திருப்பவர்கள் (அதாவது பெரும்பாலானவர்கள்) அதற்கென தனி plugin ஒன்றைப் பெறவேண்டும். Quicktime போன்றவை ogg-ஐப் புரிந்துகொள்ளுமா என்று பார்க்கிறேன்.

  Speex - எனக்குப் புதிது. முயற்சி செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete