(சரியான உச்சரிப்பா?)
நேற்று தியாகராய நகர் மலேசிய உணவகம் பெலித நாசி கந்தரில் சாப்பிட்டேன்.
மலேசிய ரொட்டிகள், (வட) இந்திய தொட்டுக்கொள்ளும் பதார்த்தங்கள். காரணம் மலேசிய சைட் டிஷ் எதுவும் மரக்கறி உணவாக இல்லை என்றார்கள்.
நம்மூர் பரோட்டாவைப் போல, ஆனால் அதைவிட மென்மையாக ஒரு ரொட்டி வகை. வட இந்திய பராத்தாவைப் போல, நடுவில் வெங்காயத் துண்டுகளை வைத்த ஒரு ரொட்டி.
நல்ல சுவை, சுமாரான விலை.
Sunday, September 11, 2005
Subscribe to:
Post Comments (Atom)
Pelita Nasi Kandar (பெலித்தா நாசி காண்டார்)என்றதும், ஏது பத்ரி அவர்கள் மலேசியா - பினாங்கிற்கு வந்துள்ளாரா என்று எண்ணிவிட்டேன். பிறகு, விவராமாக வலைப்பதிவை வாசித்த பிறகுதான் அது சென்னையில் உள்ள கிளை உணவகம் என்றறிந்தேன். மலேசியாவில் 'நாசி காண்டார்'க்கு பினாங்கு மாநிலம் தான் பிரசித்தம்! பினாங்கிற்கு சென்று வந்தவர்களை பெரும்பாலும் ஒரு பேச்சுக்காகவாவது 'நாசி காண்டார்' சாப்பிட்டீர்களா ? என்று கேட்பார்கள். "பெலித்தா" என்றால் ஒரு வகை விளக்கைக் குறிக்கும் (சம்பந்தப்பட்ட உணவகத்தின் சின்னத்தைப் பார்க்கவும் ); "நாசி" - என்றால் சாதம்/ சோறு , பிறகு "காண்டார்" என்பது காண்டா கம்பு. அந்த காலத்தில் இந்த காண்டா காம்பை தோலில் மாட்டிக் கொண்டு அதன் இரு நுணியிலும் வெறும் சோற்றையும் மற்றும் கொழி, ஆட்டிறைச்சி, இறால், மீன் மற்றும் நண்டு போன்ற பல்வகை குழம்பையும் கட்டிக் கொண்டு உணவு விற்பனை செய்துள்ளனர் முன்னோடிகள். அது ஒரு வகை " mobile " உணவு விற்பனை முறை. இதில் என்ன விசெஷம் என்றால், அந்த சோற்றில் அனைத்து வகை குழம்பையும் கலந்து கொடுப்பார்கள். இன்றும் தொடர்கிறது 24 மணி நேரமும் திறந்திருக்கும் உணவகங்கள்.
ReplyDeleteநன்றி வாசுதேவன் லெட்சுமணன்.
ReplyDelete