சில நாள்களுக்கு முன் கர்நாடகத்தின் ஆளும் காங்கிரஸ் + ஜனதா தளம் (எஸ்) கூட்டணியிலிருந்து சித்தராமையா என்னும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜனதா தள எம்.எல்.ஏ துணை முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்டது பற்றி செய்தித்தாளில் படித்திருந்தேன்.
ஆனால் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைக்கவில்லை. சித்தராமையா என்ன தவறு செய்துவிட்டார் என்பது சரியாகப் புரியவில்லை. ஏதோ பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மாநாடு நடந்தது என்றும் அதற்கு சித்தராமையா தலைமை தாங்கினார் என்றும் இந்த மாநாடு கட்சிச் சார்பற்று கட்சிகளுக்குக் குறுக்காக நடைபெற்றது என்று மட்டும் புரிந்தது. அது எந்த வகையில் தேவ கவுடாவைப் பாதித்தது என்று புரியவில்லை.
இன்று, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் கர்நாடகத்தின் ஜாதி அரசியல் பற்றிய ஒரு கட்டுரை படிக்கக் கிடைத்தது.
இப்பொழுது ஓரளவுக்கு அங்குள்ள அரசியல் நிலைமை புரிகிறது. குறைந்தபட்சம் இனி அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டுக்களை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது. ஆனாலும் சில விஷயங்கள் என்னைக் குழப்பிவிட்டன.
கர்நாடகத்தில் அரசியல் வலு பெற்ற இரண்டு முக்கிய ஜாதிகள் - லிங்காயத்கள், வொக்கலிகர்கள். காங்கிரஸ், ஜனதா தளம், பாஜக என்று மூன்று பெரும் கட்சிகள் அங்கு இருந்தாலும் ஜாதி அடிப்படையில்தான் பல விஷயங்கள் நடைபெறுகின்றன. பிற வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (பிற மதமோ அல்லது பிற ஜாதிகளோ), காங்கிரஸில்தான் ஓரளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. பாஜக தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் அனந்த் குமாரைத் தவிர பிறர் அனைவரும் லிங்காயத்கள்.
தேவ கவுடா வொக்கலிகர். சித்தராமையா குருபா என்னும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஒரு கட்டத்தில் சித்தராமையா தனியாக, தன்னளவிலேயே முதல்வர் பதவியை நோக்கிப் போய்விட்டால் என்ன செய்வது என்பதற்காக அவரைக் கீழே இறக்கிவிட்டு MP பிரகாஷ் என்னும் லிங்காயத்தை துணை முதல்வராக ஆக்கியுள்ளார் தேவ கவுடா. சித்தராமையா துணை முதல்வராகத் தொடர்ந்தால் வொக்கலிகர்களின் வாக்குகள் ஜனதா தளத்துக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதால் அவரைப் ப்தவியிலிருந்து வெளியேற்றினார் தேவ கவுடா என்று கட்டுரை ஆசிரியர் சொல்கிறார். ஆனால் வொக்கலிகர்களை மகிழ்விக்க வேண்டுமென்றால் ஏன் தேவ கவுடா தனது மகன் குமாரஸ்வாமியை துணை முதல்வராக்கவில்லை? அந்தப் பதவியை ஒரு லிங்காயத் (பிரகாஷ்) தலைவருக்கு ஏன் கொடுத்தார்?
லிங்காயத் தலைவர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவியது பற்றி கட்டுரை ஆசிரியர் ஓரிடத்தில் தகவல் தருகிறார். ஆனால் அப்படி இருக்கும்போது ஏன் வொக்கலிகரான தேவ கவுடா, கடந்த சட்டசபையில் முதலமைச்சராக இருந்த வொக்கலிகரான SM கிருஷ்ணாவை ஒழித்துவிட்டு வெளி வகுப்பினரான தரம் சிங்கை உள்ளே கொண்டுவந்தார் என்று புரியவில்லை.
-*-
தமிழகத்தில் மேலோட்டமாகப் பார்க்கும்போது தேவர், வன்னியர் என்ற இரண்டு குழுக்களும் பெரும் எண்ணிக்கையில் இருப்பது போலத் தெரிகிறது - கிட்டத்தட்ட கர்நாடகத்தில் லிங்காயத், வொக்கலிகர்கள் போல. முதலியார்கள், நாடார்கள், ஷெட்யூல்ட் இனத்தவர், பழங்குடியினர், இன்னபிறர் ஆகியோர் மேலே உள்ள இரண்டு குழுக்கள் அளவுக்கு இல்லை.
அதிமுகவில் தேவர்கள் செல்வாக்கு அதிகம் என்று தெரிகிறது. வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் தனியாகத் தெரிந்தாலும் திமுக, அதிமுக என்று இரண்டிலும் ஓரளவுக்கு இருக்கிறார்கள். தலித்துகளுக்கு என்று இப்பொழுது தனிக்குரல் வெளிவரத் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் வரும் காலங்களில் கர்நாடகத்தைப் போலவே வன்னியர், தேவர் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜாதி வகையில் மட்டுமே அரசியல் நடத்தும் காலம் வருமா?
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
18 hours ago
//தமிழகத்திலும் வரும் காலங்களில் கர்நாடகத்தைப் போலவே வன்னியர், தேவர் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜாதி வகையில் மட்டுமே அரசியல் நடத்தும் காலம் வருமா?
ReplyDelete//
அப்படி வருமென தெரியவில்லை,
முதலில் வன்னியர்களும், தேவர்களும் பூகோள ரீதியாகவும் பிரிந்துள்ளனர், இவர்களுக்கிடையே எந்த அரசியல் போட்டியும் வருவது போல தெரியவில்லை
ஒரு 5 ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் நிச்சயம் இது மாதிரியான நிலை வரும் என்று சொல்லியிருப்பேன், கட்சி வித்தியாசமின்றி எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு வேலை செய்ததும், திருமாவும் பொன்னுசாமியும் சிதம்பரத்தில் போட்டியிட்டபோது கட்சி, கூட்டணி வித்தியாசமின்றி சாதி ரீதியாக தேர்தல் வேலைகள் செய்ததும் நடந்தேறியது, ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவிற்காக வன்னியர்கள் பலர் தேர்தலில் ஆதரவு தந்ததும், விடுதலை சிறுத்தை அமைப்பின் சார்பாக வன்னியர் பாராளுமன்ற தேர்தலுக்கு (பாண்டிச்சேரி பாராளுமன்ற வேட்பாளர்) போட்டியிட்டதும், டாக்டர் கிருஷ்ணசாமிக்காக சென்ற தேர்தலில் சில தேவரினத்தவர்கள் தேர்தல் வேலைசெய்ததும் கட்சி தாண்டி சாதி ரீதியாக வேலை செய்யும் கலாச்சாரம் தற்போதைக்கு தமிழகத்தில் வராது என்றே கருதுகின்றேன்.
நன்றி
Deve Gowda is trying to project his son as the successor but he does not want him to become a deputy C.M now. at this juncture
ReplyDeletehe would try to eliminate any powerful competitor emerging in
the party so that his son can
gain a strong foothold in karnataka
politics. Siddaramaih tried to emerge as an alternate power centre that could become a threat to Gowda and family in J.D(S). So
Deve Gowda cut him to size. he does not want a very strong congress party in karnatka as that would diminish the political space of JD(S) which for all practical purposes is a regional party now. He is giving enough headache to Dharam Singh. I am told that he is trying to block major projects in bangalore.
In the future BJP and JD(S) may
come together if BJP is willing to
concede C.M post to J.D(S). It is a question of time and if J.D(S) has sufficient no of MLAS to dictate terms to BJP or Congress then Kumaraswamy will be 'chosen' as C.M. But this may end up as wishful thinking as i think BJP is
Karnataka is poised for growth and will emerge stronger than J.D(S)
in the years to come.
வணக்கம் பத்ரி,
ReplyDeleteநல்ல பதிவு.
குழலி சொன்னதில் எனக்கு உடன் பாடு உள்ளது.
தமிழ்நாட்டில் திரு இராமதாசு வன்னிய ஓட்டுகளை ஒருமுக படுத்தி தன் கட்டுபாடுக்குள் கொண்டு வந்து விட்டார். அதுப் போல் தலித் ஓட்டுகளை திருமா கிட்டதட்ட கொண்டு வந்துவிட்டார்.
(எடுத்துகாட்டு, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாசக, பாமக ஆதரவு இல்லாமல் அவர் வாங்கிய ஓட்டுகள் கிட்டதட்ட 3 லட்சம்).
ஆனால் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான தேவர் ஒட்டுகள் பிரிந்து உள்ளது. திமுகவிலும், அதிமுகவிலும், இதர
அமைப்புகளிலும் பிரிந்து உள்ளது. தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் அரசியல் நடத்துவதும் அதன் மூலம் ஆட்சியை பிடிப்பதும் இயலாத காரியம் என்றே தோன்றுகிறது. ஆனால் இராமதாசும், திருமாவும் சேர்ந்து இருந்தால் நிச்சயம் அந்த
கூட்டணி வலு பெரும் என்று எனது நம்பிக்கை.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
குழலி, சிவா இருவரும் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மருத்துவரும் திருமாவும் இந்தப் பகுதியில் மட்டுமே செல்வாக்குப் பெற்றவர்கள். சாதிரீதியில் அரசியல் தமிழ்நாட்டில் வலுப்பெறாது என்றே தெரிகிறது. காமராஜ், ஓபிஎஸ் தவிர தமிழக முதல்வர்கள் அல்லது பிரதான நீரோட்டத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் சிறுபான்மை சாதிகளைச் சார்ந்தவர்களே. எம்ஜிஆர், ஜெயலலிதா,விஜயகாந்த் போன்றவர்களின் ஆளுமை சாதி ரீதியான அணி சேர்க்கைக்கு எதிராகவே இருக்கிறது.
ReplyDeleteprobably no way. becuse 'thevar' caste is divided by subsets like mukkulattoor, kallar , agamudiayaar, except south districts all other part of tamilnadu thevar's are supporters of all parties.(more for DMK). example - thanjavor based dinakaran contesting madurai periyakulam consituncey. Only south thevars are supporting ADMK more than DMK. and still DMK and MDMK having good vote bank in south thevars too. like kulzhi said the total atmoshphire is changed now thatn 5 years back. now caste factor is deteroid than before. election time some people will show some jimmics. but it won't be a big impact.
ReplyDeleteHow do you post comments in tamil?
ReplyDeleteAmong tamils of all castes, the linguistic identity has always had a much biger pull than the caste identity. People from all castes in tamil nadu, except Brahmins, Pillais, Mudaliars and Chettiars, tend to be more closer to their caste identity in the beginning. Once they gain acceptance among their caste members as an important person, politically or econmically or educationally, then they graduate automatically to a pan-tamil identity. The pan-tamil identity has been in existence for a very long time among tamils, more than two thousand years, compared to the neighbours like Kannadiagas or Telegus. Hence, tamil from any caste, feels a little shy to speak like Mayawati or Lalu, when they are growing in stature. Also, it is important to note that no caste, not even thevars, vanniars or kongu velalars, in tamil nadu has the numbers to dominate more than a village, on their own.
ReplyDelete