Thursday, October 26, 2006

சென்னை மாநகராட்சி தேர்தல்

இரா.செழியன் 'தி ஹிந்து'வில் சென்ற வாரம் எழுதியிருந்த கட்டுரை.
Electronic voting machines can help prevent rigging, which Chennai witnessed on a shocking scale on October 13. But to ensure fair and free elections, we need persons in office with credibility and commitment to implement justly the rules of law and order.
நான் ஏற்கெனவே எழுதியிருந்ததுபோல மிகக் குறைந்தது மின்னணு வாக்குப்பதிவையாவது அடுத்த தேர்தலுக்குக் கொண்டுவரவேண்டும். வேறு பல விஷயங்கள் - தமிழகத் தேர்தல் ஆணையகம் நியாயனமானவர்கள் நிரம்பியதாக, தமிழகக் காவல்துறை ஆட்சியாளர்களின் கையாள்களாக இல்லாமல் நடந்துகொள்வது ஆகியவை நடக்க இன்னமும் 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

பஞ்சாயத் ராஜ் சட்டத்துக்குப் பிறகு இப்பொழுது தமிழகத்தில் நடந்துள்ளது மூன்றாவது உள்ளாட்சித் தேர்தல். மாநிலத் தேர்தல் ஆணையங்கள் இந்த மூன்று தேர்தலிகளின்போதும் சரியாக நடந்துகொள்ளவில்லை. மத்தியிலும் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கையாளாகத்தான் பலமுறை நடந்துவந்துள்ளது. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், எமர்ஜென்சியை ஒட்டி, பின்னர் என்றுகூடப் பார்த்தால் மிக மோசமான நிலைமை இருந்து வந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல் ஆணையத்தின் கலாசாரம் மாறி வந்துள்ளது. பல அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் சில நெருக்கடி உத்தரவுகள் வெறுப்பைத் தந்தாலும் எந்த அரசியல்வாதியுமே இன்றைய நிலையில் மத்திய தேர்தல் ஆணையத்தை பக்கச் சார்புள்ளது என்றோ, ஒருவருக்கு மட்டும் ஊழல் செய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றோ சொல்லமாட்டார்கள்.

குடியாட்சி முறையில் தேர்தல்மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கவேண்டும். அது உள்ளாட்சித் தேர்தலில் இல்லை. இத்தனைக்கும் ஆளும் கட்சிக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. எந்தத் தில்லுமுல்லும் செய்யாமலேயே உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பிடித்திருக்க முடியும். அப்படியும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை அந்தக் கூட்டணி. அஇஅதிமுகவின் அராஜகத்துக்குச் சற்றும் சளைத்ததல்ல எங்களுடையது என்றே செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

அடுத்தமுறை அஇஅதிமுகவுக்கு வாய்ப்பிருந்தால் இதே மாதிரியான ரவுடித்தனம்தான் தலை தூக்கும். இது ஓரளவுக்கு ஒழுங்கு வரத்தொடங்கியிருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களையும் பாதிக்கும்.

மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனத்திலேயே சில பிரச்னைகள் உள்ளன.
Under the Tamil Nadu Panchayats Act, 1994, the State Election Commissioner shall hold office for a term of two years and shall be eligible for re-appointment for two successive terms provided that no person shall hold office of the State Election Commissioner for more than six years in the aggregate; provided further that a person appointed as State Election Commissioner shall retire from office if he completes the age of 62 years during the term of his office.
இதை மத்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
The President appoints Chief Election Commissioner and Election Commissioners. They have tenure of six years, or up to the age of 65 years, whichever is earlier. They enjoy the same status and receive salary and perks as available to Judges of the Supreme Court of India. The Chief Election Commissioner can be removed from office only through impeachment by Parliament.
மாநிலத் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் சில மாறுதல்களைச் செய்யவேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையரது பதவிக்காலம் இரண்டாடுகளுக்கு ஒருமுறை என்பதற்குபதில், நேரடியாக ஆறு ஆண்டுகள் என்று மாற்றப்படவேண்டும். ஒருமுறை அவரை நியமித்தபின் இம்ப்பீச்மெண்ட் முறையில் மட்டும்தான் அவரை வெளியேற்றலாம், இஷ்டத்துக்கு துரத்தமுடியாது என்ற நிலை வரவேண்டும். ஓய்வு பெறும் நிலையில் உள்ள - அதாவது 56 வயதைக் கடந்தவராகப் பார்த்து நியமிக்கலாம். மேலும் மாநிலத் தலைமை ஆணையருக்கு தேர்தல் நேரத்தில் காவல்துறையினைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களை மாற்றக்கூடிய அதிகாரமும் வழங்கப்படவேண்டும் (இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதுபோல).

இப்படியான அதிகாரங்கள் இருந்தால் ஓரளவுக்கு, நாளடைவில், தமிழகத் தேர்தல் ஆணையகத்திலும் தரமானவர்கள் அமர்வார்கள் என்று நினைக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலும் நியாயமான முறையில் நடக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இவையெல்லாம் ஒரு பக்கம் நடக்கும்வரையில் மின்னணு வாக்குப்பதிவு என்பதைக் கட்டாயமாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

3 comments:

 1. EVM வந்துவிட்டால் மட்டும் பிரச்சினை சரி ஆகிவிடும் என நான் நினைக்கவில்லை. 100 வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஒரு பூத்துக்கு 4 EVM வைத்துத் தொலைக்கவேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு அவ்வளவு செலவு செய்ய முடியுமா?

  பிரச்சினை என்னவென்றால் பிணைத்தொகை குறைவாக இருப்பதால் கண்டவனும் பிணைத்தொகை கட்டிவிட்டு வேட்பாளர் ஆகிவிடுகிறான். அவனுக்கு ஒரு பூத் ஏஜெண்ட் பூத்தில் வந்து உட்காருவான்.

  உதாரணத்துக்கு 30 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் 30 பூத் ஏஜெண்டுகள் வரை ஒரு பூத்தில் அமர சட்டத்தில் இடம் உண்டு. கள்ள ஓட்டு மற்றும் முறைகேடுகள் தொடங்குவது பூத் ஏஜெண்டுகளிடமிருந்தே என்பது தேர்தலில் வேலை செய்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

  ஒரு முறை உக்கம்சந்துக்கு கட்சித் தலைமை சீட்டு கொடுக்கவில்லை என்ற கோபத்தில் மதுராந்தகத்தில் 99 வேட்பாளர்களை சுயேச்சையாக நிறுத்தி அத்தனை பேருக்கும் பூத் ஏஜெண்டுகளை நியமித்து தேர்தலில் குழப்பம் விளைவித்ததை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

  என் அனுபவத்தில் சொல்கிறேன்... உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வேட்பாளர்களின் எண்ணிக்கையால் தான் தொல்லை... இதை கட்டுப்படுத்த ஏதாவது செய்யவேண்டும்....

  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நான் பூத் ஏஜெண்டாக ஒரு வார்டுக்கு உட்கார்ந்தேன்... அந்த வார்டில் மொத்தம் 29 வேட்பாளர்கள்...

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. (My previous comment had few spelling mistakes)
  மணி கட்ட வசதியும் தகுதியும் அனுமதியும் உள்ளவர்களுக்கு மணி கட்டப்படாத பூனைதான் வசதி என்ற சூழ்நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது..........

  //மாநிலத் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் சில மாறுதல்களைச் செய்யவேண்டும். //

  ஆட்சியில் இருக்கும் யார் தான் தங்கள் அதிகாரத்தை குறைக்க முன் வருவார்கள். வருமான வரியும், 400 ருபாய் செல்பேசியில் பேசி விட்டு 48 ருபாய் சேவை வரியும் செலுத்தும் நான் மாறுதல்களைச் செய்யவேண்டும்
  என்று கூறுவேன். ஆனால் நானே முதல்வர் ஆன பின் இதை கூறுவேனா என்றால் கேள்விக்குறி.

  பூனைக்கு யார் மணி கட்டுவது.... அதுவும் மணி கட்ட வசதியும் தகுதியும் அனுமதியும் உள்ளவர்களுக்கு மணி கட்டப்படாத பூனைதான் வசதி என்ற சூழ்நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது

  This is a vicious cycle. http://en.wikipedia.org/wiki/Vicious_cycle

  ReplyDelete