Saturday, October 28, 2006

தேர்தல் அலசல் பற்றிய கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக Rajaji Centre for Public Affairs என்ற அமைப்பு 24 அக்டோபர், செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ராஜாஜி மையத்தின் தலைவராக இருப்பவர் B.S.ராகவன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, 80 வயதுக்கு மேற்பட்டவர். இன்னமும் ஆர்வமுடன் குடிமைச் சமூக மேம்பாட்டுக்காக தமிழகம் முழுவதும் சென்று பேசுவது, தி ஹிந்து, பிசினஸ் லைன் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுவது என்று இருப்பவர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தவர்கள் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, முன்னாள் தமிழக காவல்துறை தலைமை ஆணையர் (Director General of Police) வி.ஆர்.லட்சுமிநாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் ஆகியோர்.

செவ்வாய்க்கிழமை மியூசிக் அகாடெமி அரங்கில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு நானும் செல்வதாக இருந்தேன். ஆனால் அன்று இருந்த வேலை நெருக்கடியால் போகமுடியவில்லை. புதன் தினமணியில் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததைக் கண்டித்து வைகோ ஓர் அறிக்கை விட்டிருந்தார்.
மண்டபங்களில் நடைபெறும் இப்படிப்பட்ட சிறப்புக் கூட்டங்களுக்கு வழக்கமாக காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது இல்லை.

...

விமர்சனங்களைச் சகிக்கும் மனநிலையை அடியோடு முதல் அமைச்சர் இழந்துவிட்டதால்தான், புதன்கிழமை பிரசுரமாக உள்ள முரசொலி உடன்பிறப்பு மடலில், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பற்றி ராஜாஜி மையத்தின் சார்பில் நடத்த அர்ச்சனை ஒத்திகையுடன் தயாராகும் தினமணி கூட்டத்து நண்பர்கள் என்று ஏளனம் புரிந்து எழுதி, ஏடுகளுக்கும் அனுப்பி உள்ளார்.
ஏன் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அன்றே தினமணி இணைய இதழில் காவல்துறை தரப்பிலிருந்து மறுப்பு அறிக்கை ஒன்று இருந்தது.
மழை மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ராஜாஜி பொது விவகார மையத்தினர் ரத்து செய்தனர். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால்தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் உண்மைக்குப் பிறம்பானதாகும். இக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுக்கவில்லை.
சரி, வைகோ ஏதோ அரசியல் செய்கிறார், நாம் இதைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் வியாழன் அன்று 'தி ஹிந்து'வில் வந்த செய்தியில் இரா.செழியன் 'அனுமதி மறுப்பை'க் கண்டித்துப் பேசியது வந்திருந்தது.
In his statement issued on Wednesday, Mr. Sezhian said that it was unfortunate that the police had refused permission though it was not required for hall meetings in Chennai. According to him, on the day before the meeting, the police told the organisers that the meeting would be allowed only if they had police permission; the organisers gave the application to the local police station as per the direction of the City Police Commissionerate; but even by Tuesday noon police permission was not forthcoming. As the organisers did not want to conduct the meeting and give room for any law and order problem they announced the cancellation of the meeting, Mr.Sezhian added.
இன்று இட்லிவடை பதிவில் ஜூனியர் விகடன் சோவுடன் நடத்திய பேட்டி வந்துள்ளது. அதிலிருந்து முக்கியமாக இரு மேற்கோள்கள்:
ஜூ.வி: நீங்கள் பேசவிருந்த கூட்டத்தை போலீஸ் ரத்து செய்ததன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

சோ: ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடுதான். அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசவிருந்த சப்ஜெக்ட் 'தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்' என்பது. ஒருவேளை இந்த அரசாங்கத்தைப் பற்றியும், அண்மையில் சென்னை மாநகரில் நடந்து முடிந்த கேலிக்கூத்தான தேர்தல் முறையைப் பற்றியும் நாங்கள் கடுமையாகப் பேசக்கூடும் என்று நினைத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதி மறுத்திருக்கலாம். 'கூட்டத்துக்கு முறையான அனுமதி பெறவில்லை. குறைந்த கால அவகாசத்தில் அனுமதி கேட்கப்பட்டதால் தர முடியவில்லை' என்று போலீஸ் அதற்குக் காரணங்கள் சொல்லலாம். ஆனால் குறைந்த கால அவகாசத்தில் எத்தனையோ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் போலீஸ் அனுமதி கொடுத்திருக்கிறது.
தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் துரைராஜ் கொடுத்த பதில்:
அந்தக் கூட்டம் ரத்தானதுக்கு எந்த வகையிலும் காவல்துறை பொறுப்பில்லை என்பதைக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 'மழையின் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை' என்று அறிவித்தார்கள். அடுத்து அந்தக் கூட்டத்துக்கு அவர்கள் முறையாக அனுமதி பெறவில்லை. அனுமதி கேட்டு அவர்கள் கொடுத்த மனு உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு வந்து சேரவில்லை. அவ்வளவுதான்.
இந்த ஒரு கூட்டம் ரத்தாவது பெரிய விஷயமில்லை. மீண்டும் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்திவிடலாம். ஆனால் ஒரு குடிமகனாக எனக்குப் பல கேள்விகள் எழுகின்றன.

1. நான் பல கூட்டங்களை நடத்துகிறேன். முக்கியமாக புத்தகங்கள் தொடர்பான கூட்டங்கள். இவை எவற்றுக்கும் முன்னதாக அனுமதி ஏதும் யாரிடமும் இதுவரை பெற்றதில்லை. எந்த மாதிரியான கூட்டங்களுக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்?

2. உள் அரங்குகளில் நடைபெறும் கூட்டங்கள், வெளியிடங்களில் நடைபெறும் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளனவா?

3. எந்தெந்தச் சட்டங்களின், அரசாணைகளின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதி கொடுத்தல்/மறுத்தல் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன?

தகவல் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும். நானும் வெளியே விசாரித்து, தகவல் பெற்றவுடன் அதை வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.

22 comments:

 1. நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் மருத்துவ கருத்தரங்கிற்கு (வழமையாக தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும்) தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவலுக்காக ஒரு கடிதம் அளிப்போம். மற்றபடி அனுமதியெல்லாம் வாங்குவதில்லை. (எப்படியும் ஒரிரு போலீஸ்காரர்கள் வந்து கருத்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்காக வழங்கப்படும் bag போன்றவற்றை பெற்றுச் செல்வார்கள்.)

  ReplyDelete
 2. 2001ல் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் இவர்கள் எங்கே போனார்கள்?. கூட்டம் போட்டு குறை சொல்ல முடியவில்லை. ஐயா ராகவன் , இரா.செலியன் போன்றவர்கள் இதை பெரிதுபடுத்தவில்லை. சோ, வைகோ போன்ற வயித்தெரிச்சல் கும்பல் தான் கூப்பாடு போடுகிறார்கள்.

  ReplyDelete
 3. 2001-ல் கூப்பாடு போட்டால்தான் 2006-ல் குற்றம் சொல்ல அனுமதி உண்டு என்று குடியாட்சியில் நாம் சொல்லக்கூடாதல்லவா?

  மியூசிக் அகாடெமி கூட்டத்துக்கு அனுமதி தேவையா இல்லையா என்பது முதல் கேள்வி. அதற்கு சரியான பதில் வரும்வரை, மற்ற விவாதங்கள் எல்லாம் சரியானவையாக இருக்க முடியாது.

  ReplyDelete
 4. என் கேள்விகள்:
  1.வலைப்பதிவர்கள் கூட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டுமா ?

  2.எத்தனை பேர் கூடியிருந்தால் கூட்டமாகக் கருதப்படும் ?

  3. Music Academy போன்றவற்றிற்கு வழங்கப் படும் உரிமம் கச்சேரி, நாடகம் இவற்றுக்கு மட்டும்தானா?

  4.தெருமுனையில் ஒரு மெகாபோனை வைத்துக் கொண்டு நான் அரசியல் பேசலாமா ? இலண்டனில் ஹைட் பார்க்கில் Speaker's corner என்று இருப்பது போல் சென்னையில் ஏதாவது இடம் உண்டா ?

  ReplyDelete
 5. As Police said that They did not apply for Meeting.
  that's true.

  Blue Cat

  ReplyDelete
 6. நடைபெறும் விஷயங்களைப் பார்த்தாஅல் கேவலமாகத் தானிருக்கிறது. பொதுவாகவே திமுக ஆட்சி வந்தால் பத்திரிக்கைகள் குறை சொல்வது அதிகமாக இருக்கும் என்ற வாதமும், அதிமுக செய்யாததையா திமுக செய்துவிட்டது என்ற கேள்வியும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பில்லாமல் இதைப் பற்றி பேசவே கூடாது என்ற விதத்தில்தான் இந்த விஷயம் அணுகப்படுகிறது. கட்சியிலே வளர்ந்து வரும் இளவட்டங்கள் ஆர்வக்கோளாறில் சென்னையைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்து செய்து தொலைத்திருந்தால், அதற்கு கருணாநிதி சப்பைக்கட்டு கட்டாமல் தன் கண்டணத்தை தெரிவித்து மறுதேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தால் போகும் காலத்த்ற்கு கொஞ்சம் மரியாதையாவது மிச்சப் பட்டிருக்கும். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டிய இறுகிய முகமும், வாய் குழறலும் நடந்தது என்ன என்பதை உணர்த்தி விட்டன.

  மக்களுக்கு இலவச திட்டங்களை அள்ளி வழங்கி விட்டு அரசியல்/அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ஓட்டுக்கு பாதிப்பில்லை என்று நினைத்து இருந்தால், பாவம் கருணாநிதி, அதற்கெல்லாம் மச்சம் வேண்டும்.

  விஜயகாந்த் காம்ப்ளான் பையனைப் போல வளர்வதற்கு அம்மாவும் தாத்தாவும் போட்டி போட்டுக் கொண்டு ஏற்பபடு செய்கிறார்கள்.

  மற்றபடிக்கு, கூட்டம் கூட்டவும், குறை சொல்லவும் சோவுக்கு உள்ளாட்சி தேர்தல் அராஜகம் ஒரு வாய்ப்பு. இது நடக்காது இருந்தால் அவருகு வேறு காரணமா கிடைக்காது..???

  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.தமிழன் கொஞ்ச காலம் கழித்து தேமுதிகவின் லீலைகளையும் பார்க்கும் பாக்கியம் கிட்டும். :-)

  ReplyDelete
 7. சாம்பார்: நான் நடுநிலைவாதியில்லை, ஒருபக்கச் சார்புடைய அயோக்கியன் என்றே வைத்துக்கொள்வோம்.

  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கூட்டங்கள் அனைத்தும் நடக்காமலா போய்விட்டன? கூட்டங்களும் நடந்து, வீடியோ எடுக்கப்பட்டு, யூட்யூப் மூலம் ஒளிபரப்பப்படுகின்றனதானே? வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசிவருகின்றனர்தானே?

  இங்கு என் கேள்வியே வேறு. "ஐயோ, சோ கூட்டம் இப்படி ஆகிவிட்டதே" என்ற ஆற்றாமை இல்லை. ஏன் ஒரு கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது? என்னென்ன சட்டங்கள் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை தர அல்லது மறுக்க வகை செய்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நோக்கி எழுப்பப்பட்ட பதிவு இது.

  ReplyDelete
 8. கல்யாணம் நடத்துவதற்கும் போலீஸ் அனுமதி தேவையா. ஒரு வேளை நேரத்திற்கு அனுமதி வரவில்லை என்றால் தாலி கட்டாமல் நல்லா சாப்பிட்டு விட்டு இன்னொரு நாள் வந்து தாலி கட்டனும்மா. (கல்யாணம் என்பதற்கு பதில் ஞானஸ்நானம், பூப்புனித நீராட்டு விழா, புது நன்மை என்று உங்கள் வசதிக்கேற்ப வாசிக்கலாம்)......

  ReplyDelete
 9. //கல்யாணம் நடத்துவதற்கும் போலீஸ் அனுமதி தேவையா.//
  கல்யாணம் நடத்த அனுமதி தேவையா என்று தெரியாது, ஆனால் கல்யாண ஊர்வலம் நடத்த கண்டிப்பாக காவல்துறை அனுமதி வேண்டும், இதை 99% பேர் அனுமதி வாங்காமல் தான் செய்கின்றனர், ஆனால் அதை காவல்துறை கண்டுகொள்வதில்லை... உள் அரங்கு விழாக்களுக்கும் அனுமதி வாங்கவேண்டுமென்று தான் நினைக்கிறேன், பெரும்பாலான நேரங்களில் அதை யாரும் எடுப்பதில்லை, ஆனால் சரியாகத்தெரியவில்லை

  ReplyDelete
 10. தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் மகளிர் கூட்டங்களுக்கும், பொங்கல் விழாக்களுக்கும் கூட அரசு அனுமதி பெற்று தானே நடத்த வேண்டும் குழலி? (இது வரை அப்படி அனுமதி பெற்றதில்லை என்பது உண்மை)

  ReplyDelete
 11. ஈழத் தமிழர் பிரச்னை குறித்து மீட்டிங் போட, பேச எந்த பிரச்னையும் இல்லை. அங்கு பிரிவினைவாதம், ஒன்றுக்கும் உதவாத ஒன்றுபட்ட தமிழக கோஷம், புலிகள் ஆதரவு கூப்பாடு போன்றவை இல்லாவிட்டால் அதற்கு அனுமதி அளிப்பதில் அரசுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு. அதை ஆதரித்து பேசி சம்பாதிக்கும் அல்லக்கைகள் இன்னும் இருக்கிறார்களே.

  அதையும், இப்போது அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் கூட்டத்தையும் ஒன்று என்று கருதும் சாம்பார் போன்றவர்களை என்ன சொல்ல?

  ReplyDelete
 12. //திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பில்லாமல் இதைப் பற்றி பேசவே கூடாது என்ற விதத்தில்தான் இந்த விஷயம் அணுகப்படுகிறது.//
  என்ன செய்வது சுந்தர் அண்ணே, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிலரின் யோக்கியதை அப்படி இருக்கின்றது, 2006ல் உள்ளாட்சி தேர்தல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருத்தரங்கு நடத்த தெரிந்த 'சோ' போன்றவர்களுக்கு 2001ல் நடத்த தெரியலையே(எனக்கு தெரிந்து அப்படி எந்த கருத்தரங்கும் 'சோ' நடத்தவில்லை), அப்படி பார்த்தால் இவர்களுக்கெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வன்முறை பிரச்சினையில்லை, ஆனால் அந்த வன்முறையை திமுக நடத்துவது தான் பிரச்சினை என்னும் பொழுது எதிர்ப்பாளர்களின் மீதும் ஒரு அலுப்பு வருவது சகஜம்தான் விடுங்க....

  //மக்களுக்கு இலவச திட்டங்களை அள்ளி வழங்கி விட்டு அரசியல்/அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ஓட்டுக்கு பாதிப்பில்லை என்று நினைத்து இருந்தால், பாவம் கருணாநிதி, அதற்கெல்லாம் மச்சம் வேண்டும். //
  ஜெயலலிதாவிற்கு 2006 சட்டசபை தேர்தலில் சென்னையில் இருந்த மச்சம் கருணாநிதிக்கு இல்லாமலா போய்விடும்? விடுங்கண்ணே....

  ReplyDelete
 13. //அதையும், இப்போது அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் கூட்டத்தையும் ஒன்று என்று கருதும் சாம்பார் போன்றவர்களை என்ன சொல்ல?//

  மாட்டுக்கால் பிரியணி அய்யா,

  என்ன சொல்வது..சாம்பார் சாதாரண சாம்பார் அல்ல; பகுத்தறிவு சாம்பார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  பாலா

  ReplyDelete
 14. பத்ரி
  கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி வேண்டுமா என்ற கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.பொதுவாகவே 10க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் கூட்டங்கலில் அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனடி மருத்துவ உதவி போன்றவை முன்கூட்டி ஏற்பாடு செய்வதில்லையா? எனக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இங்கே எந்த கூட்டமானாலும் காவல் துறைக்கு அனுமதி வாங்கவேண்டும். உணவு தயாரிப்பார்களேயானால் பொதுநலதுறை உணவு காவலர்கள், தீயணைக்கும் வீரர்கள், மற்றும் காவல்துறை, அவசர உதவி துறை, HAZMATஆகிய அனைவரும் ஒருவாரம் முன் சென்று ஒரு சான்றிதழ் தருவார்கள். பிறகு கூட்டம் நடக்கும் நன்று மேலே கூறியுள்ள துறைகளில் oncall இல இருப்பவர்கள் தயாராக இருப்பார்கள். வருடா வருடம் இங்கே நடக்கும் நவராத்திரி போன்ற நிகழ்ச்சிகளில் இது பழகிப்போன ஒன்றூ. நம் நாட்டிலும் பொதுமக்கள் நலன் கருதியாவது இதை செய்ய வேண்டாமா? பதிவுக்கு தொடர்பில்லாத சில கேள்விகள்.

  ReplyDelete
 15. //உணவு தயாரிப்பார்களேயானால் பொதுநலதுறை உணவு காவலர்கள், தீயணைக்கும் வீரர்கள், மற்றும் காவல்துறை, அவசர உதவி துறை, HAZMATஆகிய அனைவரும் ஒருவாரம் முன் சென்று ஒரு சான்றிதழ் தருவார்கள்.//
  இங்கும் அப்பிடித்தான். கிராமப்புறங்களில் நடக்கும் கோவில் விழாக்களுக்கு காவல்துறை, தீயணைக்கும் துறை, பொதுசுகாதாரதுறை ஆகியவற்றின் அனுமதி பெறப்படவேண்டும்.

  ஆனால் விண்ணப்பம் அளிப்பது மற்றும் தான் நடக்கும். பொதுவாக எழுத்து மூலம் அனுமதி வழங்கப்படுவது கிடையாது.

  நாங்கள் பல்ஸ் போலியோ சமயத்தில் ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்வதற்கும் தெருமுனை கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி வேண்டி காவல் நிலையத்தில் ஒரு விண்ணப்பம் கொடுப்பதுடன் சரி. வேலையை ஆரம்பித்து விடுவோம். கடந்த 1996 முதல் பல்ஸ் போலியோ நடைபெற்றூ வருகிறது. எனக்கு தெரிந்து எழுத்து மூலம் அனுமதி கடிதம் (முகாம் முடிந்தபின் கூட) வந்தது கிடையாது.

  ReplyDelete
 16. இதுக்கு சொக்க தங்கத்தை சோவை மீட்டிங்கிலேயெ கத்த விட்டு வேடிக்கை பார்த்திருக்கலாம். சுவாரசியமாக இருந்திருக்கும்:))

  சென்னையில் இனி பழிக்குபழி காட்சிகள் நடந்தேறியபடி தான் இருக்கும்.அம்மாவின் சித்தம்.

  எப்போது போலீஸ் வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவுக்கு அம்மா வந்தார்களொ அப்பவே புரிந்துவிட்டது எனக்கு.திமுக காரனுங்க இன்னும் விவரம்.அவங்க ஆட்சியில் இன்னும் கலக்குவானுங்க என்று.

  கண்டிக்கப்படவேண்டியது.(எலக்சன் வன்முறையும் கூட்டத்தடையும்)  வாழ்க தமிழகம்.

  ReplyDelete
 17. "எப்போது போலீஸ் வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவுக்கு அம்மா வந்தார்களொ அப்பவே புரிந்துவிட்டது எனக்கு.திமுக காரனுங்க இன்னும் விவரம்.அவங்க ஆட்சியில் இன்னும் கலக்குவானுங்க என்று."
  1971-76ல் அரங்கேறாத வன்முறையா,கலைஞர் ஆடாத ஆட்டமா.அவர் செய்தது முன்னால் ஜெ செய்தது ஜுஜுபி.அப்போதும் சோ கலைஞரை எதிர்த்தார்.இப்போதும் எதிர்க்கிறார்.நாஞ்சில் மனோகரன் விமான நிலையத்தில் தாக்கப்பட்டார், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்,
  படம் திரையிடும் திரையரங்குகளில் ரகளை செய்தார்கள், திரைகளை கிழித்தார்கள். கருணாநிதி இப்போதும் அப்போதும் எப்போதும் அப்படியே.1989- 91, 1996- 2001ல் கொஞசம் அடக்கி
  வாசித்தார்.மற்றப்படி ஊழல்,லஞ்சம்,வன்முறை இவற்றில் அவர்தான் முன்னோடி.ஆட்சிக்கு
  வரும் முன் கட்சியில் அவர் செய்த வன்முறைகளை கண்ணதாசன் தன் நூல்களில் எழுதியிருக்கிறார்.
  சம்பத் இந்த அட்டூழியங்கள் பொறுக்க முடியாமல் திமுகவிலிருந்து வெளியேறினார். திராவிடத்
  தமிழர்களுக்கு திமுக,முகவின் உண்மை வரலாறு தெரியாது.

  ReplyDelete
 18. வனவாசம் என்ற நூலை கிழித்தெறிந்த உருப்படியான நூல்களை படித்தாயிற்று.

  67 என்று எதற்கெடுத்தாலும் பேசுவது காமெடி.நன்றி.

  ReplyDelete
 19. >> சாம்பார்: நான் நடுநிலைவாதியில்லை, ஒருபக்கச் சார்புடைய அயோக்கியன் என்றே வைத்துக்கொள்வோம்.

  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கூட்டங்கள் அனைத்தும் நடக்காமலா போய்விட்டன? கூட்டங்களும் நடந்து, வீடியோ எடுக்கப்பட்டு, யூட்யூப் மூலம் ஒளிபரப்பப்படுகின்றனதானே? வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசிவருகின்றனர்தானே? >>

  பத்ரி அவர்களே,

  உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

  ReplyDelete
 20. //இதுக்கு சொக்க தங்கத்தை சோவை மீட்டிங்கிலேயெ கத்த விட்டு வேடிக்கை பார்த்திருக்கலாம். சுவாரசியமாக இருந்திருக்கும்:))//

  முத்து,

  உங்களுடைய பண்பாட்டை என்னென்று சொல்லுவேன்?

  ReplyDelete
 21. //முத்து,

  உங்களுடைய பண்பாட்டை என்னென்று சொல்லுவேன்? //

  சின்ன சோ ஓகைக்கு கோபம் வருவதில் உள்ள நியாயம் புரிகிறது.
  இன்னும் கடுமையாக சொல்ல ஆசைதான்.  என் பண்பாட்டை பற்றி கவலைப்பட்டதற்கு நன்றி. இது போன்ற நண்பர்கள் எனக்கு நிறைய தேவை.

  ReplyDelete
 22. //அவர் செய்த வன்முறைகளை கண்ணதாசன் தன் நூல்களில் எழுதியிருக்கிறார்.//

  அதே கண்ணதாசன் ஏராளமான நூல்களில் கலைஞருக்கு ஜிங்குச்சாவும் அடித்திருக்கிறார் :-)

  ReplyDelete